Friday, April 5, 2013

குழந்தைகள் தவழ நிற்க ஆரம்பிக்கும் போது

குழந்தைகள்  எழுந்து நிற்க, .தவழ, நடக்க ஆரம்பிக்கும் போது  அவர்களை  இந்த ஸ்டேஜில் மிகவும் ஜாக்கிரதையா பார்த்து கொள்ளனும்.


நிற்க  நடக்க ஆரம்பிக்கும் போது பெட்டில் குதிப்பது விளையாடுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விஷியம். அந்த நேரத்திலும் அடிபடும்.பிறந்ததில் இருந்து முன்று மாதம் வரை பிரண்டு படுக்கும் வரை பெட்டில் தனியாக போடலாம். இல்லை பெட்டுக்கு கிழே இரங்கும் இடத்தில் ஒரு திக்கான பிளாங்கெட் கூட போட்டு வைக்கலாம்.

அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நகர ஆரம்பிப்பார்கள்.

ஆனால் பிரண்டு படுக்க ஆரம்பித்து தவழும் போது குழந்தை தூங்க தானே செய்கிறது என்று தனியாக விட்டு விட்டு போய்விடாதீர்கள்.

பெட்டில் இருந்து கீழே விழுந்து கண்ட மட்டுக்கும் மண்டை வீங்கி விடும்.

இது எல்லா வீட்டிலும் என்ன தான் நீங்க நல்ல பார்த்து கொண்டாலும்
கை இமைக்கும் நேரத்திற்குள் இப்படி பெட்டில் இருந்து சோபவில் இருந்து கிழே விழுந்துவிடுவார்கள்.

அப்படியே மண்டை வீங்கினால் உடனே அந்த இடத்தை சுற்றி லேசாக விக்ஸ் தடவி விட்டு ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி வீங்கிய இடத்தில் வைக்கவும்.

அதே போல் அடிக்கடி வாயில் அடிபட்டு ரத்தம் வரும் அதற்கு ஐஸ் கட்டி தான் எப்போதும் பீரிஜரில் ஐஸ் கட்டிகள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
நாம் தேடும் போது ஐஸ் கட்டி கிடைக்காது..

இது எல்லா வீட்டு பிள்ளைகளும் தவழ ஆரம்பிக்கும் போது இப்படி அடி படுவதுண்டு,

இன்னும் உங்களுக்கு தெரிந்த டிப்ஸ்களை (அனுபவ சாலிகள், ஸாதிகா அக்கா, கோமதி அக்கா, மனோ அக்கா எல்லாம் இந்த பதிவின் கீழ் சொன்னால் இதை படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
இது முன்பே போட்ட பதிவு தான் , தமிழ் குடும்பத்திலும் வெளி வந்துள்ளது/

13 கருத்துகள்:

Mrs.Faizakader said...

நல்ல டிப்ஸ் அக்கா என் மகள் அடிக்கடி கீழே விழுந்து தலை விங்கி விடும். கொஞ்சம் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ய் தேய்பேன். விக்ஸ் டப்பாபில் 2 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்த கூடாது என்று போட்டு இருக்கு. ஆனால் எங்க வீட்டில் பிறந்த குழந்தைக்கு கூட யூஸ் பண்ணுவாங்க

Jaleela said...

ஆமாம் பாயிஜா விக்ஸ் யுஸ் பண்ண கூடாது என்கிறர்கள் நாங்க டைகர் பாம் தான் ஆனால் அது குழந்தைகளுக்கு எரியும் மண்டைய சுற்றி வலிக்கும் நான் குழந்தைகளுக்கு உடனே ஐஸ்தான் வைப்பேன், தலை முழுவதும் வலிக்கும், அதுக்கு ஆள் காட்டி விரல் பெருவிரலால் தைலத்தை நம் இரண்டு விரலாம் எடுத்து தேய்த்து கொண்டே இருந்தால் அது கை சூட்டில் உருகி எண்ணை போல் வரும் பிறகு தேய்க்கனும்.

திண்டுக்கல் தனபாலன் said...

பல பேர்கள் இருப்பதால் விழ வாய்ப்பில்லை... டிப்ஸ்களுக்கு நன்றி...

jai said...

Hello,

My baby is 5 months old,here in US doctors said u can use Vicks for new borns also,if they have cold&cough apply little bit in the foot & cover it with socks,it really works.

Regards
jayanthivinay

jai said...

Hello Jaleela,

My baby is 5 months old,here in US My pediatrician said u can use Vicks for newborns also,if they have cold&cough,apply some on thir foot and cover it with socks,it really works well.

கோமதி அரசு said...

என் மகள் தவழும் போது விழுவதை விட நடக்கும் போது தான் அதிகமாய் விழுந்தாள்.(நடப்பதை விட ஓடுவாள் அதனால் கீழே விழுவாள் நெற்றியில் அடிபடும்)

அதற்கு ஒருதடவை டாகடரிடம் ஓடினேன், அடுத்தமுறை பக்கத்து வீட்டு மாமி சொன்ன வைத்தியம், மஞ்சள் பொடியை நல்லெண்ணையில் போட்டு சூடு செய்து பொறுக்கும் சூட்டில் பத்து போடுவது.
உப்பு மூட்டை கட்டி அதை தோசைக் கல்லில் நல்லெண்ணை தடவிஅதில் உப்பு மூட்டையை சூடு செய்து ஒத்தடம் கொடுக்க சொன்னார்கள்.
ஈரத்துணி ஒத்தடம்கொடுக்க சொன்னார்கள்,அப்படித்தான் செய்து இருக்கிறேன்.

கிராமபுரங்களில் பசுஞ்சாணத்தை மண்சட்டியில் நல்லெண்ணைவிட்டு வதக்கி துணியில் வைத்துக் கட்டி ஒத்தடம் கொடுப்பார்கள்.
அது எல்லாம் இப்போது நடை முறைக்கு ஒத்து வராது.

நீங்கள் சொல்லும் ஐஸ் ஒத்தடம், தான் சிறந்தது. இப்போது எல்லாம் பேரன், பேத்திகளுக்கு உடனே டாகடரிடம் தான் போகிறோம்.
என்னை அழைத்து மருத்துவ குறிப்பு கேட்டதற்கு நன்றி ஜலீலா.

enrenrum16 said...

என் மகனும் அடிக்கடி கீழே விழுவான்... தேங்காய் உடைப்பது போல் பலமாகச் சத்தம் கேட்டு மிகவும் பயந்திருக்கிறேன்... அதைவிட, கீழே விழும்போது நாக்கைக் கடிப்பதால் நாக்கில் ரத்தம் வருவதும் அடிக்கடி நடக்கிறது... ஐஸ்கட்டிதான் உபயோகிக்கிறேன். ஜெயந்தி, கோமதி அக்காவின் டிப்ஸுகளும் அருமை.

ஸாதிகா said...

இளம் தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ள குறிப்பு.அருமையான தகவல்கள்.

Jaleela Kamal said...

தனபாலன் சார் இது யாரும் எதிர் பார்ப்பது கிடையாது,
சில முன்னெச்சரிக்கை.

Jaleela Kamal said...

ஜெய் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

கோமதி அக்கா வருகைக்கும் உங்கள் டிப்ஸ்க்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

பானு கீழே விழுவது பத்தாதுன்னு நாக்கையும் கடித்தால் ரொம்ப சிரமம் ஆச்சே..

Jaleela Kamal said...

ஸாதிகா இளம் தாய்மார்களுக்கு உதவும்,.
எங்கே உங்கள் டிப்ஸ்??

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா