Monday, May 13, 2013

என் பொருள் தான் எனக்கு மட்டும் தான்
என் பொருள் தான் எனக்கு மட்டும் தான் தொடர் பதிவுக்கு ஆசியா சில தோழ தோழியர்களை அழைத்து இருந்தார்கள் அதில் என்னையும் அழைத்து இருந்தார்கள், எல்லாருமே இந்த பதிவு எழுதி மறந்தும் போய் இருப்பார்கள்.

என்னை பொருத்தவரை நான் பயன்படுத்தும் எல்லா பொருட்களும் என் பொருள் தான் எனக்கு மட்டும் தான்.

இப்படி லிஸ்டில் நிறைய இருக்கு.ஆனால் போட்டோக்கள் இல்லாததால் நானும் இங்கு பதிவு போடாமல் தள்ளி கொண்டே போய்விட்டேன்.1. சமையல் டைரி 
2. குர் ஆன் கல்யாணத்தில் என் தாய் மாமா எனக்கு கொடுத்தது.
3. நான் சேகரித்த சின்ன சின்ன துஆ  புத்தகங்கள்
3. வித விதமான டிரஸுக்கு மேட்சான வளையல்கள்
4.மோதிரம்
5.கம்மல்

இன்னும் லிஸ்ட் நிறைய இருக்கு ..


1. சமையல் டைரி: முதல் முதல் ஒன்றுமே சமைக்க தெரியாத போது அம்மா கிட்ட கேட்டு , பாட்டி கிட்ட கேட்டு பாரம்பரிய குறிப்புகளை எல்லாம் எழுதி வைப்பேன். அடுத்து டிப்ஸ்கள் அப்பவே ரொம்ப வயதானவர்களை பார்த்தால் உடனே டிப்ஸ் கேட்டு எழுதி வைத்து கொள்வேன்.
இந்த டிப்ஸ்கள் என்ககு ரொம்பவே உதவியது,. இங்கு வ்லை தளங்களில் போட்டு நிறைய பேர் பயனடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.இந்த டிப்ஸ்கள் நான் 25 வருடம் முன் அவர்களிடம் கேட்டது, அவர்க்ள் எனக்கு சொல்லும் போது அவர்கள் வயது எப்படியும் 50, 55 இருக்கும். அப்ப இங்குள்ள என் டிப்ஸ 75 வருடமுன் உள்ள மிக அருமையான் டிப்ஸ்கள்.சில டிப்ஸ்கள் என் சொந்த அனுபவத்தில் எழுதி இருக்கிறேன்.
இன்னும் பல டிப்ஸ்கள் இங்கு நான் பகிரவில்லை. முடிந்த போது  பகிர்கிறேன்.டைரி ஊரில் இருந்து வரும் பிறகு பதிவு எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் வரவில்லை. 

ஆரம்பத்தில் தேவை பட்டது இப்ப கண் அளவு கை அளவில் என் இஷ்டத்துக்கு போடுவது, நிறைய பேருக்கு செய்வதாக இருந்தால் தான் சரியான அளவை அந்த டைரியில் பார்ப்பேன், இபப்  அந்த டைரி என் தங்கை மகளுக்கு கொடுத்து  இருக்கிறேன், அளவுகளை எழுதி விட்டு கொடுக்க சொன்னேன்.


2.குர் ஆன்.:கல்யாணத்தில் தாய் மாமா வாங்கி கொடுத்த குர் ஆன் அதில் ஓதி பழகிய பின் அதில் ஓதினால் தான் நல்ல திருப்தியாக இருக்கும்.

அந்த குர் ஆனில் -  என் கிரான்மா 1986  சில முக்கியமான சூராக்கள் அவங்கள் கையால் குறித்து கொடுத்தது 

1985 - என் கிரான்மா  இரவில் ஓதவேண்டியவை. என்று எனக்கு சொல்லி கொடுத்தவை.


இது 1984 ரில் ரமலான் அட்ட்டையில் வந்த துஆ.


சுட்டியை சொடிகி பார்க்கவும்.

இது என் பெரிமா பையன் ஏரோ ட்ராவல்ஸில் வேலைக்கு சேர்ந்த போது அங்கு ஓவ்வொரு வருடமும் பெருநாளுக்கு துஆ புக் போடுவார்கள் அதில் இருந்து முன்பு எடுத்து வைத்தது 
3. துஆ புத்தகங்கள்: சின்ன வயதில் இருந்து எங்கு எப்ப து ஆ புக் கிடைத்தாலும் அதை எடுத்து வைத்துகொள்வேன்.அதில் கிடைத்த ஒருசின்ன புக் தான் முத்தான துஆக்கள்
லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
அந்த பெயரையே பிலாக்குகும் வைத்து விட்டேன்.

எப்ப எங்கு போனாலும் ஹாண்ட் பேகில் சின்ன யாஸின் சூரா (அ) மன் ஜில் புக், சிறிய துஆ புக் இருக்கும். அப்படி தான் ஊரில் பல் டாக்டர் கிட்ட போன போது கூட என் தங்கை துணைக்கு வந்ந்தாள். எனக்கு பல் பரிசோதனை நடந்து முடிய 45 நிமிஷம் ஆச்சு அது வரை என் ஹாண்ட் பேக்கை  வைத்திருந்த என் தங்கை  அதில் இருந்து நான் வைத்திருந்த துஆ புக் எடுத்து ஓதி கொண்டு இருந்தால் , நான் பல் பரிசோதனை முடிந்து வரும் போது அப்பா நீ பேக்கில் இந்த புத்தகங்கள் வைத்திருந்தது ரொம்ப நல்லதா போச்சு நானும் எல்லாவற்றையும் ஓதி முடிச்சேன். உன்னை போல் தான் பேக் கில் இது போல் துஆ புத்தகங்கள் வைத்து கொள்ளவேண்டும் என்று சொன்னாள்.

குர் ஆன் முன்புபோகும் போது வரும் போது எடுத்து போய் வந்து கிழிந்தே போய்விட்டது  ஒரு இட்மா இருக்கட்டும் என்று இங்கே நான் எங்கு இருக்கிறேனோ அங்கேயே வைத்து கொள்வ்து.

பீரோவில் துணி வைக்கிறேனோ இல்லையோ முதலில் ஒரு அடுக்கு துஆ புத்தகங்களை வைத்து கொள்வேன்.


என்னை போலவே  என் பையனும் காலேஜ் படிக்க போகும் போது சில துஆக்கள் பிரிட்ன் எடுத்து கொடுத்தேன், எங்க டாடி அவனுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்துள்ள சிறிய கு ஆன் வாங்கி கொடுத்தார்கள். அதை எல்லாம் அவர் எந்த ஊருக்கு கடந்த 4 வருடமாக போனாலும் ஒரு ஸ்கூல் பேக்கில் வைத்து என்னேரேமும் மாட்டி கொண்டி தான் செல்கிறார்.4. வளையல்:  பள்ளி செல்லும் காலம முதல் டிரஸுக்கு மேட்சாக வளையல் கண்டிப்பாக இருக்கனும். அது யாருக்கும் கொடுக்க மாட்டேன், எல்லாம் கண்ணாடி வளையல். ரொம்ப வருடம் வரை பத்திரமாக பாதுகாத்து வந்தேன், இப்ப தான் 3 வருடம் முன் எல்லா பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்தேன்.
சில வளையலகள் இங்கும் வைத்துள்ளேன்.இது படங்கள் பிறகு சேர்க்கிறேன்.
4.மோதிரம்: என் கணவர் முதல் முதல் என்னை பார்த்த போது போட்ட மோதிரம் கல்யாணத்தில் எங்க டாடி எனக்கு  போட்ட அந்த கம்மலுக்கு மேட்சாகவே அமைந்து விட்டது.சிவப்பு வெள்ளை கல் மோதிரம்.5.கம்மல்

5. கல்யாணம் ஆன புதிதில் என் கணவர் முதல் முதல் சவுதி போய் வந்த போது வாங்கி வந்த கம்மல்.எவ்ளோ கம்மல் இருந்தாலும் இது தான் எனக்கு ரொம்ப பிடிச்சது. இது அப்படியே இன்னும் என் காதில் ஊஞ்ச்ல் ஆடி கொண்டு இருக்கிறது, இப்படி வருசையாக சொல்லனும் என்றால் சீப்பு, எண்ணை, டவல் , சோப்பு எல்லாமே என் பொருள் எனக்கு மட்டும் தான்..... 
மற்றவர்களுக்கு ஏதாவது கேட்டால் உடனே கொடுத்து விடுவேன், சாப்பாடு கூட பசி என்றால் எனக்கு ஏதும் வைத்துகொள்ள மாட்டேன், ஆனால் நான் பயன் படுத்தும் பொருட்கள் அது எனக்கு மட்டும் தான், பச்சை டைரி எல்லாம் எழுதி விட்டு எனக்கு திருப்பி கொடுத்து விடனும் என்று சொல்லி இருக்கிறேன்.

அன்னையர் தினத்துக்கு எனக்கு தெரிந்த சின்ன கவிதையை எனக்கு தோன்றியதை என் அம்மாவுக்கு போன் செய்து படித்து காண்பித்தேன். நீ சொல்ல சொல்ல ரொமப் நல்ல இருக்கு என்றார்கள்.பிறகு இங்கு பகிர்கின்றேன்.10 கருத்துகள்:

கோமதி அரசு said...

ஜலீலா , உங்கள் முத்தான து ஆக்கள்
படித்து இருக்கிறேன். சமையல் குறிப்புகள் சேகரிப்பு நானும் சிறுவயது முதல் எழுதி வைத்து இருக்கிறேன் உங்களை போல்.
உங்கள் மகனும் து ஆக்கள் புத்தகம் கையில் எடுத்து போவது மகிழ்ச்சி. அவருக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் கணவர் வாங்கி கொடுத்த கம்மல், மோதிரம் எல்லாம் அழகு.
பொக்கிஷ பகிர்வு அருமை.
என் அப்பாவின் படம் பொக்கிஷ பகிர்வில் பகிரவில்லை, இப்போது அன்னையர் தின பதிவில் அப்பாவின் படம் போட்டு இருக்கிறேன் நேரம் இருக்கும் போது பாருங்கள் ஜலீலா முன்பு அப்பாவைப ப்ற்றி பகிர்வு என்று அப்பாவை பார்க்க வந்தீர்கள் அல்லவா?
அதனால் சொல்கிறேன்.

உங்கள் சமையல் குறிப்பு சேகரிப்புகள் எல்லோருக்கும் பயன்படுவது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் பொக்கிசங்கள் தான்...

எல்லாவற்றையும் நீங்களே பாதுகாத்து வைச்சிக்குங்கோ... ஆனால் உங்கள் சமையல் குறிப்புக்கள் மட்டும் எங்களுக்குத் தான்... ஹிஹி...

வாழ்த்துக்கள்... நன்றி...

வெங்கட் நாகராஜ் said...

இனிய பொருட்கள் தான்....

Asiya Omar said...

மிக பாதுகாக்க வேண்டிய பொருட்கள்.தொடர் அழைப்பை ஏற்று போட்டோவுடன் பொக்கிஷங்களை பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி ஜலீலா.

angelin said...

அனைத்துமே அருமையான பொக்கிஷங்கள் .
அந்த ரெட்டை குடை ஜிமிக்கி சூப்பர் :))நானும் வச்சிருக்கேன் அதே போல ..அப்பாவின் பரிசு அது .

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பொக்கிஷங்கள் ..பாராட்டுக்கள்..

Mahi said...

அருமையான பொக்கிஷங்கள்! கம்மல் ரொம்ப அழகா இருக்கு ஜலீலாக்கா! :)

ஸாதிகா said...

பொருட்கள் அனைத்தும் சூப்பர்.ஜலி அந்த சமையல் புத்தகத்தை நான் நேரில் வந்தால் காட்டுவீர்களா?

மாதேவி said...

உங்கள் பொக்கிஷங்களைப் பார்த்து மகிழ்ந்தோம்.

இமா said...

சேகரிப்புகள் அருமை ஜலீ.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா