Saturday, May 18, 2013

பயனுள்ள இரவல் டிப்ஸ்கள் - Useful Tips Tips




நான் இங்கு ஏகப்பட்ட டிப்ஸ்களை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.
யார்வீட்டுக்கு போனாலும் என்னை விட சின்னவர்களாக இருந்தாலும் அவர்கள் சொல்லும் டிப்ஸை மிகவும் விரும்பி கேட்டு கொள்வது.

அப்படி கேட்டதில் சில டிப்ஸ்கள் உங்களுக்காக ..

ஜுபைதா - துபாய்

1. பிரியாணிக்கு சாதம் வடிக்கும் போது சிலருக்கு பதமாக முக்கால் பதத்தில் வடிக்க வராது. அதற்கு ரைஸ் குக்கரில் ஒன்றுக்கு ஒன்று தண்ணீர் வைத்து சமைத்து பிரியாணி கறி தாளித்து விட்டு இந்த சாதம் சேர்த்து தம்மில் விட்டால் பிரியாணி ஒன்னு ஒன்னாக உதிரியாக நீட்டு நீட்டாவரும்.
இது தண்ணீர் கொதிக்க வைத்து வடித்து தம் போட தெரியாதவர்களுக்கு உதவும்.



அஜ்ஜா - சென்னை


2. தொடர் இருமல் ,  தொண்டை வலிக்கு வடித்த சுடு கஞ்சியில் சிறிது மிளகு தூள் சேர்த்து குடித்தால் தொண்டை இதம் பெறும். 



சித்திக்கா - அஜ்மான் , யு. ஏ.யி.


3. புறை யேறி புறையேறி இருமல் வருவதற்கு எல்லோரும் கிராம்பை வாயில் அடக்கி கொள்வார்கள், அது கரைந்து இன்னும் தொண்டைக்குள் போய் ரொம்ப பாடுபடுத்தும், அதுவும் நாளெல்லாம் வேலை செய்து கொண்டு இருக்கும் போது ஒன்றும் தெரியாது, பகலில் இருமல் இருந்தால் அந்த அளவுக்கு உங்களுக்கு சிரமமாக இருக்காது. இரவு தூங்க போகும் போது தான்  அதிக இருமல் வரும். அதற்கு 
முன்று மிளகு கிஸ்மிஸ் பழம் 7 சேர்த்து வாயில் வைத்து மிட்டாய் போல் ரொம்ப நேரம் வைத்திருந்து சுவைத்து வாயில் அடக்கி கொண்டு படுத்தாலும் அதன் சாறை முழுங்கினாலும் நிம்மதியாக தூங்கலாம்.
இது ஏற்கனவே இவங்க டிப்ஸும் என் டிப்ஸும் சேர்த்து தொண்டை கரகரப்புன்னு என்று பதிவாக போட்டுள்ளேன்.

தளிகா - அபுதாபி (அறுசுவை தோழி)

4.மீன் பொரிக்கும் போது சில நேரம் பொரிக்கும் தவ்வாவில் போய் ஓட்டி கொள்ளும். அதற்கு கருவேப்பிலையை நீளமான ஆர்க்கோடு எண்ணையில் வைத்து விட்டு அதன் மேல் மசாலா தடவிய மீனை வைத்து பொரித்தால் ஒட்டவும் செய்யாது, மணமும் அபாரமாக இருக்கும்.


இது என்னுடைய டிப்ஸ் 

நான் கருவேப்பிலையை பொடியாக அரிந்தே சேர்த்து மசலாவுடன் பிரட்டி கொள்வது, மணம் அருமையாக இருக்கும்.

மவுலானா - துபாய்
மீனுக்கு மசாலா போடும் போது அதில் எண்ணை சிறிது கலந்து தடவி பொரித்தால் கூட பேனில் ஒட்டாது
(பார்பிகியு செய்யும் போது மீனில் மசாலாவுடன் ஆலிவ் ஆயிலையும் சேர்த்து தான் பிரட்டி வைப்போம்.)

இது என் மாமியார் சொன்னது.
குழந்தைகளுக்கு தொடர் பேதி மற்றும் அதனால் சோர்வடைந்து தெம்பில்லாமல் இருந்தால்
உப்பு சர்க்கரை சேர்த்து தண்ணீர் அதிகமாக கொடுக்கனும். ஆனால் குழந்தைகள் அதை  விரும்ப மாட்டார்கள். அதற்கு டேங்க் லெமன் அல்லது ஆரஞ்ச் ஒரு டம்ளர் கரைத்து அதில் குளுக்கோஸ் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கொடுக்கலாம்.8 மாத குழந்தைகள் முதல் கொண்டு இதை கொடுக்கலாம். பாட்டிலில் ஊற்றியும் கொடுக்கலாம்.
எலலா வயதினரும் இப்படி குடிக்கலாம்.



எப்போதும் நான் கொஞ்சம் கார்ன் மாவு சேர்த்து பொரிப்பேன் ஒட்டாது, முட்டை சேர்த்து பொரித்தாலும் ஒட்டாமல் வரும்

மீனை ஒட்டாமல் பொரிக்க உங்கள் யாருக்கும்  ஏதும் ஐடியா இருந்தால் சொல்லலாம்

USEFUL KITCHEN TIPS

20 கருத்துகள்:

Mahi said...

useful tips!

துளசி கோபால் said...

அருமை.

ரசம், சாம்பார் தாளிக்கும்போது கொஞ்சம் வெந்தியம் சேர்த்துத் தாளிக்கணுமாம். இது உடம்புக்கு நல்லது, மணமும் கூடுதல். சொன்னது என் மாமியார்.

மருமகள் இதை மீறலாமோ? நான் இன்னும் ஒரு படிமேலேபோய் கொஞ்சம் வெந்தியத்தை மிக்ஸியில் பொடிச்சு மசாலா டப்பாவில் வச்சுருக்கேன். பொரியல்களூக்கும் தாளிக்கும்போது ஒரு கால் டீஸ்பூன் சேர்க்கிறேன்:-))))

enrenrum16 said...

சூப்பர் டிப்ஸ்களுக்கு நன்றிக்கா...

கோமதி அரசு said...

பயனுள்ள டிப்ஸ்கள் அருமை.

ஸாதிகா said...

அருமையான குறிப்புகள்:குறிப்புகளை தந்தவர்களின் பெயருடன் குறிப்புகளை பகிர்ந்திருப்பது மேலும் சிறப்பு

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய நல்ல டிப்ஸ்கள்... நன்றி சகோதரி... வீட்டில் படிச்சாச்சி...!

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஹா இரவல் என்றாலும் அத்தனையும் அருமை. கலக்குறீங்க.

Asiya Omar said...

சூப்பர் டிப்ஸ்கள்..

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Manoj Singh said...

Very very nice! Love you lots.

Load Junction, load matching Services, Find Truck Loads, Find Freight and Trucks

ஹுஸைனம்மா said...

நல்ல டிப்ஸ்.

மீன் பொறிக்கும்போது ஒட்டாமலிருக்க, எண்ணை நல்லா ஆவிவர சூடாகணும். மீனைப் போட்டதும், ரெண்டு மூணு தரம் நகட்டி விடணும். (பிரட்டி அல்ல)

இமா க்றிஸ் said...

நல்ல குறிப்புகள் ஜலீ.

Jaleela Kamal said...

வருகைக்கு நன்றி மகி

Jaleela Kamal said...

துளசி கோபால் உங்கள் கமெண்டுக்கு மிக்க நன்றி

வெந்தயம் சேர்ப்பது வயிற்றுக்கு மிகவும் நல்லது.
நான் ரசப்பொடி திரிக்கும் போது கூட கொஞ்சம் வருத்து சேர்த்து திரித்து கொள்வேன்

Jaleela Kamal said...

நன்றி பானு

நன்றி கோமதி அரசு

மிக்க நன்றி ஸாதிகா அக்கா

Jaleela Kamal said...

மிக்க நன்றி தனபாலன் சார்

Jaleela Kamal said...

பூஸாரே உங்களை இங்கு பார்ப்பதில் மிகவும் சந்தோஷம்

Jaleela Kamal said...

நன்றி ஆசியா

தனபாலன் சார் வலைச்சரம் அறிமுகம் பற்றி சொன்னமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஹுஸைன்னாம்மா சமைக்க தெரியாது அப்படி இப்படின்னு ரொம்ப நல்ல டிப்ஸ் எல்லாம் கொடுக்கிறீங்களே.

வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி இமா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா