Sunday, July 7, 2013

இனிய ரமலான் வாழ்த்துக்கள்புனித மிக்க ரமலானை வரவேற்க்க நபிகளாரின் வழிமுறை
நம் புனித மிக்க ரமலான் மாதத்தை வரவேற்க்க மிக ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாம்
அறிந்து கொள்ளவேண்டிய சில முக்கிய செய்திகள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:   

நீங்கள் பிறை பார்த்து நோன்பை ஆரம்பியுங்கள், பிறை பார்த்து நோன்பை முடித்துக்கொள்ளுங்கள் மேகம்
(பிறையை மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். 
 (ஹதீஸ் – புஹாரி)
இது போன்று பல ஹதீஸ் காணப்படுகின்றன.   
நாயகம் (ஸல்) அவர்கள் ரமலானில் பிறை தேடினார்கள் ஸஹாபாக்களையும் தேட  துண்டிக்கொண்டிருந்தார்கள்.
ரமலானின் பிறையை பார்ப்பது பிக்ஹ் அடிப்படையில் சில  பேர் மட்டும் செய்தால் போதுமானது என்ற – கிபாயா-
சட்டமாக இருந்தாலும், நபி வழியில் பிறையை அனைவரும் பார்க்க முயற்சிப்பது அவசியமாகும். அப்படி பிறை
காண கிடைத்தால் அந்நேரம் கீழ்கண்ட துஆ ஓதுவது ஸுன்னாவாகும்

الله اكبر ، اللهم اهله علينا بالامن و الايمان و السلامة و الاسلام و التوفيق لما تحب و ترضى ربنا و ربك الله  
அல்லாஹ் அக்பர்,  அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் அம்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ்ல்
இஸ்லாம் வ‌த்த‌வ்ஃபீகி லிமா துஹிப்பு வ‌த‌ர்ளா ரப்பி வ ரப்புகல்லாஹ். 
அல்லாஹ் நீ தான் உயர்ந்தவன்
யா அல்லாஹ்! இந்த‌ பிறையை நிம்மதி உள்ள‌தாக‌வும்ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ
விரும்ப‌க் கூடிய‌வ‌ற்றையும்பொருந்திக் கொள்ள‌க் கூடிய‌வ‌ற்றையும் செய்வ‌த‌ற்கு வாய்ப்பையும் த‌ர‌க்
கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும்உன‌து ர‌ப்பும் அல்லாஹ் தான்!


 -       ஹஸனி


**************************************


1.ரமலான் மாதத்தில் முந்திய பத்தில் ஓதும் தூஆ

"அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்".

அல்லாவே! கிருபையாளர் களுக்கெல்லாம் மாபொரும் கிருபையாளனே!உன்னுடைய கிருபையில் நின்றும் எங்கள் மீது கிருபை செய்வாயாக.


2. இரண்டாம் பத்தில் ஓதும் தூஆ

"அல்லாஹு ம் மக்பிர்லி துனூபனா வக‌ஹ்(த்)தாயானா குல்ல ஹா யாரப்பல் ஆலமீன்".

அல்லாவே!ஆலத்தார்களின் இரட்சகனே!எங்கலுடைய பாவங்களையும் எங்களுடைய தவறுகளையும் மன்னிப்பாயாக.

3. முன்றாம் பத்தில் ஓதும் தூஆ


அல்லாஹு ம்மாதிக்னி மினன்னாரி வ அத்கில்னில் ஜன்னத யாரப்பல் ஆலமீன்.


அல்லாவே!ஆலத்தார்க்ளின் இரடகனே! எங்களை நரத்திலிருந்து விடுதலை செய்து இன்னும் எங்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக!

குறிப்பு

மேற்கண்ட முன்று தூஆக்களையும் எவ்வளவு அதிகமாக ஓத முடியுமோ அவ்வளவு அதிகமாக ஓதுவது சிறந்தது. மற்ற தூஆக்களுடனும் சேர்த்தும் ஓதலாம்.

ஏக வல்ல இறைவனில் அருளால் நாம் ரமலான் மாதத்தை உடல் ஆரோக்கியத்தோடு அடைவதற்க்கு அல்லாஹ் உதவிபுரிவான்.

11 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் இணைத்து விட்டேன்... (+1) நன்றி...

கோமதி அரசு said...

ஜலீலா, இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

இறைவனின் அருளால் எல்லோரும் உடல் நலத்துடன் இருக்க இறைவனை வேண்டிக் கொள்வோம்.
எல்லோர் இல்லங்களில் மன்நிறைவு என்ற ஆரோக்கிய வாழ்வு கிடைக்க பிராத்திப்போம்.
வாழ்க வளமுடன்.

சே. குமார் said...

இனிய ரமலான் வாழ்த்துக்கள்...

இமா said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள் ஜலீலா.

Jaleela Kamal said...

மிக்க நன்றி தனபாலன் சார்
மிக்க நன்றி கோமதி அக்கா

Jaleela Kamal said...

//இறைவனின் அருளால் எல்லோரும் உடல் நலத்துடன் இருக்க இறைவனை வேண்டிக் கொள்வோம்.

மிக்க நன்றி கோமதி அக்கா

Jaleela Kamal said...

ரமலான் வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சே குமார்

enrenrum16 said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா அக்கா
உங்களுக்கும் எங்கள் ரமழான் வாழ்த்துக்கள்.

/எங்களை நரத்திலிருந்து விடுதலை செய்து இன்னும் எங்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக!/ஆமீன்.

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம் பானு
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா