Monday, July 15, 2013

தயிர் வடை - Curd Vadai


உளுந்து வடை தமிழ் நாட்டின் பாரம்பரிய மாலை நேர சிற்றுண்டியும் காலை நேரம் டிபனும் ஆகும். இதை தயிர் வடை, சாம்பார் வடை, மோர் குழம்பு வடை, ரசம் வடை,கீரை வடை என பல வகைகளாக தயாரிக்கலாம்.

இந்த வருடம் நோன்பில் இங்கு துபாயில் சரியான வெயில், வெளியில் சென்றால் குற்றலத்தில் குளித்து விட்டு வந்தது போல் வேர்வையில் நனைந்து வரலாம்.
பிரியாணி தாளித்து வெயிலில் வைத்தால் கூட தானே தம் ஆகிடும் அந்த அளவுக்கு கோடை வெயில்இங்கு கொளுத்துகிறது.
 இந்த நோன்பு நேரத்தில் நோன்பு திறக்க கஞ்சியுடன்  பல சிற்றுண்டிகள் செய்வோம். அடிக்கிற இந்த வெயில் நேரத்தில் குளு குளுன்னு இந்த தயிர் வடை செய்து சாப்பிட அருமையாக இருக்கும்.


தயிர் வடை
தேவையான பொருட்கள்
 வடைக்கு

உளுந்து பருப்பு =‍  ஒரு  டம்ளர் (200கிராம்)
உப்பு = முக்கால்  தேக்கரண்டி
இஞ்சி - ஒரு சிறியதுண்டு பொடியாக அரிந்தது
ச்சமிளகாய் = இரண்டு பொடியாக அரிந்தது
ஆலிவ் ஆயில் ‍ = அரை தேக்கண்டி
கருவேப்பிலை பொடியாக அரிந்தது - சிறிது
வெங்காயம் (பொடியாக அரிந்தது 4 மேசைகரண்டி)





யிர் தாளிக்க



யிர்  300 கிராம்
பால் ‍ =  அரை டம்ளர்
எண்ணைஅரை தேக்கண்டி
டுகு = அரை தேக்கண்டி
ருவேப்பிலை = சிறிது
பெருங்காயம் = ஒரு பின்ச்
மோர் = டை தோய்க்க
அலங்கரிக்க

ஓம பொடி ,காராபூந்தி


 செய்முறை

1. உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

2. ஊறிய உளுந்தை தண்ணீரை வடித்து அதில் உப்பு, ஆலிவ் ஆயில், சேர்த்து அரைத்து கொள்ளவும். ஆலிவ் ஆயில் சேர்ப்பதால் ஈசியாக அரையும்.
இஞ்சி பச்சமிளகாய் கருவேப்பிலை,வெங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

3.
எண்ணையை காயவைத்து அரைத்த உளுந்து மாவை வடைகளாக தட்டி பொரிக்கவும்


4. வடைகளை திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.



5.
சூடான வடைகளை எடுத்து மோரில் நனைக்கவும்.(வெண்ணீரிலும் நனைத்து எடுக்கலாம்)






6.ஒரு சிறிய கிடாயில் எண்ணை ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து தயிர் நன்கு கலக்கி சிறிது பால் சேர்த்து உடனே அடுப்பில் இருந்து இரக்கவும்.தேவைக்கு உப்பு சேர்த்து கொள்ளவும்.மோரில் னைத்தடைகளை தாளித்தயிர் வையில் சேர்க்கவும்.10 நிமிடம் ஊறவைக்கவும்.

பவுளில் இரண்டு இரண்டு வகைகளாக வைத்து தேவைக்கு சிறிது தயிர் கலவையும் சேர்த்து ஓமபொடி ,கொத்துமல்லி தழை,காரா பூந்தி தூவி பரிமாறவும்.
சுவையான தயிர் வடை ரெடி
கொளுத்தும் வெயிலுக்கு இதமான உணவு. உடலுக்கு குளிர்ச்சி தர கூடியது.
நீங்களும் சுவைத்து மகிழுங்கள்



சென்னை ப்ளாசா பேஸ் புக் பேஜ் லைக் பண்ணுங்கோ... 




15 கருத்துகள்:

Mahi said...

வடை சூப்பரா இருக்கு ஜலீலாக்கா!

திண்டுக்கல் தனபாலன் said...

ஓமபொடி, காரா பூந்தி யுடன் சுவையுடன் தயிர் வடை சூப்பர்... ஸ்ஸ்...

நன்றி சகோதரி...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

ஸாதிகா said...

இஃப்தாருக்கு செய்யணும்.சூப்பராக வந்திருக்கு ஜலி.

சாந்தி மாரியப்பன் said...

பிடிச்ச அயிட்டம். இங்கே காராபூந்தி இல்லாமல் ஓமப்பொடி, கொத்தமல்லித்தழை தூவித்தருவார்கள். அதுவும் நல்லாத்தான் இருக்கும்.

Jaleela Kamal said...

வாங்க மகி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Jaleela Kamal said...

தனபாலன் சார் உங்கள் தொடர் வருகைக்கைக்கும் , கருத்திற்கும் , ஓட்டு இணைத்தமைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க ஸாதிகா அக்கா ஆமாம் வடை தயிரில் மிதக்கும் படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நல்ல வந்துள்ளது.

Jaleela Kamal said...

சாந்தி , தயிர் வடை செய்யும் போது காரா பூந்தி அல்லது ஓமப்பொடி என இருக்கோ அதை சேர்த்து கொள்வது,
என் பையனுக்கு காராபூந்தி ரொம்ப் பிடிக்கும், எனக்கு ஓமப்ப்பொடி பிடிக்கும்
ஆகையால் இரண்டும் சேர்த்து கொள்வது
வருகைக்கு மிக்க நன்றி

Menaga Sathia said...

சூப்பரா இருக்குக்கா...

மனோ சாமிநாதன் said...

தயிர்வடை குறிப்பு மிகவும் பிரமாதம் ஜலீலா!

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு.

Divya A said...

I love vadai akka.. plain a tea kuda vachu sapida romba pudikum.. Thayir vadai paka arumaya iruku :)

Vijiskitchencreations said...

சூப்பரான தயிர் வடை ரெடி. நேர அங்கேயே வந்துடறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://blogintamil.blogspot.in/2013/07/3_25.html

வாழ்த்துக்கள்...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா