Thursday, August 29, 2013

ஓம்ம் & கர்பூரவள்ளி பீட்ரூட் சாலட் - Beetroot Salad with Thyme & Oregano
ஓம்ம் & கர்பூரவள்ளி பீட்ரூட் சாலட்
உடல் ஆரோக்கியம் மற்றும் எடை குறைப்பு ஹெல்தியான உணவுகளில் சாலட் வகைகள் மிகவும் சிறந்த்து.
இதை ஏதாவாது ட்ரெஸ்ஸிங் வகைகள் ( சாஸ்) பயன்படுத்தி சாப்பிட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
அந்த வகைகளில் இதில் ஓம்ம் மற்றும் கர்பூரவள்ளி சேர்த்துள்ளேன்.

பிரியாணி செய்தால் கண்டிப்பாக அதற்கு பக்க உணவாக தயிர் சட்னி  தயாரிப்போம், கூடவே இது போல் சாலட் வ்கைகளும் சேர்த்து கொண்டால் நல்ல செரிமானம் ஆகும். சளியையும் கட்டு படுத்தும்.கர்பிணி பெண்களுக்கும் ஏற்ற சத்தான சாலட்.தேவையான பொருட்கள்
பீட்ரூட் – சிறியது ஒன்று
ஆலிவ் ஆயில் ¼ தேக்கரண்டி
சீரகதூள் – ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு சிட்டிக்கை
ட்ரெஸ்ஸிங் செய்ய:
கர்பூரவள்ளி (காய்ந்த்து) – ¼ தேக்கரண்டி
ஓம்ம்  (காய்ந்த்து)  - - ¼ தேக்கரண்டி
லெமன் ஜூஸ் – ¼ தேக்கரண்டி
மிளகு தூள் – ஒரு சிட்டிக்கை
உப்பு - தேவைக்கு


செய்முறை
பீட்ரூடை தோலெடுத்து இரண்டு இன்ச் நீளத்திற்கு விரல் அளவு மெல்லியதாக அரிந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு பின்ச் உப்பு சேர்த்து பிட்ரூட் முழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடிக்கவும்.
நான்ஸ்டிக் பேனை சூடு படுத்தி ஆலிவ் ஆயில் சேர்த்து சீரகதூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பரிமாறும் பவுளில் ஓம்ம், கர்பூரவள்ளி, லெமன் ஜூஸ்,உப்பு, மிளகு தூள் சேர்த்த்து நன்கு கலக்கி வெந்த பீட்ரூடை சேர்த்து மீண்டும் கலக்கவும்.
ஆரோக்கியமான மருத்துவ குறிப்பு, ஓமம் கர்பூரவள்ளி பீட்ரூட் சாலட்.Oregano - karpuuravalli  கர்பூரவள்ளி


Thyme - Omam - ஓமம்

Linking to virunthu unna vaangka viji SYS  (Beetroot or Spinach )- hosted by Shama


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/SamaiyalattakaasamWednesday, August 21, 2013

அரபிக் குபூஸ்/குபூஸ் செய்வது எப்படி?/குபூஸ் அரபிக் சப்பாத்தி/How to make Kuboos
அரபிக் குபூஸ் என்பது நாம செய்யும் சப்பாத்தி போல் தான். இது இங்கு துபாயில் எல்லா கடைகளிலும் கிடைக்கும். இதை விலையும் ரொம்ப கம்மி தான்.சிறிய வகை குபூஸில் இருந்து பெரிய குபூஸ் வரை எல்லா டிப்பாட்மெண்ட் ஷாப், குரோசரி கடைகளில் எல்லாம் கிடைக்கும். சமைக்காத நேரம் இதை வாங்கி கொண்டு வெங்காய முட்டையோ அல்லது புல்ஜெய் ஆஃப் பாயிலோ போட்டு சாப்பிடலாம் சுலபமாக வேலை முடியும்.ஆனால் வெளியில் வாங்குவது பிடிக்காததால் நானே செய்து கொடுப்பது. இது முன்பே பகிற எண்ணி எடுத்து வைத்த போட்டோக்கள் இப்போது தான் நேரம் கிடைத்தது,

அரபிகளுக்கு சாப்பாடு இருக்கோ இல்லையோ இந்த குபூஸ் கண்டிப்பாக இருக்கனும். நான் இங்கு வந்த புதிதில் இருந்து  செய்து வருகிறேன். ரொம்ப அருமையாக இருக்கும், முன்று நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம், ரொம்ப சாஃப்டாக இருக்கும், க்டையில் வாங்குவது பிரிட்ஜில் வைத்தால் கடக் முடக் என ஆகிவிடும்.

துபாய் மற்றும் சவுதியில் அரேபியர்கள் உடைய பேமஸான ரொட்டி இந்த குபூஸ். இந்தகுபூஸ் இல்லாமல் அவர்களுக்கு சாப்பாடு கிடையாது. எல்லா வகையான சாண்ட் விச்சுக்கும் இந்த ரொட்டி தான் உபயோகபடுத்துவார்கள்.


Wheat Kuboos

தேவையான பொருட்கள்
மைதா - முன்று டம்ளர்
கோதுமை மாவு - அரை டம்ளர்
ஈஸ்ட் - ஒரு பின்ச்
சர்க்கரை - இரன்டு தேக்கரண்டி
சூடான பால் - அரை டம்ளர்
உப்பு - அரை தேக்கரண்டி
பட்டர் - ஐம்பது கிராம்
HOW TO MAKE ARABIC KUBOOS (HOMEMADE ARABIC KUBOOS)
செய்முறை
சூடான தண்ணிரில் உப்பு,சர்க்கரை,சூடான பால் ,ஈஸ்ட்பட்டரை உருக்கி போட்டு கலக்கி கோதுமை,மைதா கலவையில் கலக்கவும்.
ஒரு கட்ட கரண்டி வைத்து கலக்குங்கள் அப்ப தான் கையில் மாவு ஒட்டாது கலக்கி நல்ல குழைத்து முன்று மணி நேரம்
அப்படியே வைக்கவும்.
மாவை சற்று தளர்த்தியாக குழைக்க வேண்டும்.பிறகு பெரிய கமலா பழ சைஸ் உருண்டைகள் எடுத்து திக் சப்பாத்தியாக திரட்டி நான் ஸ்டிக் பேனில் போட்டு இருபுறமும் லேசாக சிவற விட்டு எடுக்கனும்.


நிறைய மாவு தோய்த்து சுடுவதால் பேனில் மாவு ஓட்டி கரிந்து விடும், அடுத்த குபூஸை திரட்டி போடும் போது கரிந்த மாவு அதில் ஒட்டும் ஆகையால் ஒரு ஈர துணி கொண்டு அப்ப அப்ப துடைத்து விட்டு போட்டால் நல்ல ப்ரஷாக போட்டு எடுக்கலாம்.

Maida Kuboosகுறிப்பு:
கிரில்லில் சுடும் சிக்கன் அயிட்டங்களுக்கும்,BBQ அயிட்டங்களுக்கும் தொட்டு சாப்பிடலாம். சில்லி சிக்கன்,பட்டர் சிக்கன் போன்றவைக்கும் தொட்டு கொள்ள நல்ல இருக்கும். குழந்தைகளுக்கு பட்டர் தடவியும் கொடுக்கலாம். 

இதே மாவிலேயே நாண், ரூமாலி ரொட்டி எல்லாம் தயாரிக்கலாம்.

Kuboos with Hamuus.

Kuboos with Grill Fish

இந்த குறிப்பு என் தங்கை பஷீராவுக்காக... 


குபூஸுக்கு மெயிலில் வந்த கமெண்ட்.

ஜலீலாக்கா
உங்க குறிப்பு படிச்சு செஞ்சு கொடுத்த குபூஸ் ரொட்டிக்கு எங்க வீட்ல பயங்கர வரவேற்பு.. தெரியுமோ :-)
--
அறுசுவை தோழி தளி கொடுத்த கமெண்ட்
Salaam Jaleelakka,
  i gave ur kuboos recipe to my mom one day(may be an year ago)..yday she called me and said now she iz preparing kuboos often and frm her my aunt also started preparing it...courtesy to you


Wednesday, August 14, 2013

சிக்கன் சாசேஜ் & வெஜ் ஃப்ரைட் ரைஸ்குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்தது சாசேஜ்,  நூடுல்ஸ் , மற்றும் ப்ரைட் ரைஸ் உடன் சிக்கன் மட்டனுக்கு பதில் சாசேஜ் சேர்த்து சமைத்துகொடுக்கலாம்.

சிக்கன் சாசேஜ் & வெஜ் ஃப்ரைட் ரைஸ்
1.
முட்டை  - 1
மிளகு தூள் – ¼ + ¼ தேக்க்ரண்டி
எண்ணை + பட்டர் – 1 + ¼ + ¼ தேக்கரண்டி
உப்பு தூள் – தேவைக்கு2.
சிக்கன் சாசேஜ் – 2 (Al Kabeer Halal Sausage)
மிளகாய்  தூள் – ¼ தேக்க்ரண்டி
எண்ணை + பட்டர் – ¼ தேக்கரண்டி
உப்பு தூள் – ¼ தேக்கரண்டி
3.
எண்ணை + பட்டர்  - 1  தேக்கரண்டி
சர்க்கரை –1/4 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு – 1 பல்
பொடியாக நறுக்கிய பச்சமிளகாய் 1
பொடியாக நறுக்கிய வெங்காய தாள் – 1
மேகி கியிப் – ¼ துண்டு
சோயா சாஸ் – ½ தேக்கரண்டி
ஃப்ரோஜன் மிக்ஸட் வெஜிடேபுள் – 2 மேசைக்கரண்டி
4.
உதிரியாக வடித்த சாதம் – 1 கப்செய்முறை

1. முட்டையில் ¼ தேக்கரண்டி மிளகு தூள் மற்றும் ¼ தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு நுரை பொங்க அடித்து தவ்வாவில் கால் தேக்கரண்டி எண்ணை + பட்டர் ஊற்றி தோசையாக பொரித்து தூளாக்கி வைக்கவும்
2. குக்க்கரில் சாசேஜை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசிலில் வேக வைத்து பொடியாக ¼ தேக்க்ரண்டி மிளகாய் தூள் ¼ தேக்கரண்டி உப்பு தூள் போட்டு ¼ தேக்கரண்டி பட்டர் + எண்ணையில் வறுத்து எடுத்து வைக்கவும்.
3. ஒரு வாயகன்ற நான் ஸ்டிக் தவாவில் பட்டர் + எண்ணையை சேர்த்து சர்க்கரை, பச்சமிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து வெங்காய தாள் , மிக்ஸ்ட் வெஜிடேபுள் சோயா சாஸ், மிளகு தூள், உப்பு, மேகி கியுப் அனைத்தும் சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்கவும்.
4. பொடித்து வைத்துள்ள் முட்டை, உதிரியான சாதம் , பொரித்து வைத்துள்ள சாசேஜ் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு ஒரு சேர கிளறி இரக்க்வும்.

( அரிசி 75 கிராம் 10 நிமிடம் ஊறவைத்து ஒரு வாயகன்ற சட்டியில் தண்ணீர் கொதிக்க விட்டு அரிசியை சேர்த்து உப்பு + எண்ணை விட்டு உதிரியாக வடித்து ஆறவைத்து வைக்கவும்.
( பச்சரிசி, பாசுமதி அரிசி எல்லாம் உலை கொதித்து 7 நிமிட்த்தில் வெந்துவிடும்) இதை ஒரு நாள் முன்பே செய்து பிரிட்ஜில் வைத்து மறுநாள் ப்ரைட் ரைஸில் சேர்க்கலாம்).
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடலாம்.

பரிமாறும் அளவு : இரண்டு குழந்தைகளுக்கு


ஆக்கம்
ஜலீலாகமால்
துபாய்


Thursday, August 8, 2013

சென்னை ப்ளாசா புதிய வீடு - Chennai Plaza New Website

சென்னையில் உள்ள * சென்னை ப்ளாசா* எங்க கடை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன், தெரியாதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.
சென்னை ப்ளாசா கடைக்கு புதிய வெப்சைட் போட்டுள்ளோம் http://www.chennaiplazaik.com என்பதை www.chennaiplazaki.com ஆக மாற்றி உள்ளோம்.

இதை நல்ல படியாக அமைத்து கொடுத்த அறுசுவை மற்றும் தமிழ் குடும்ப தோழி சுஹைனாவிற்கு என் நன்றிகள். 

சில படங்கள் இணைத்து கொடுத்தார்கள் மீதி படங்கள் இப்போது நான் இணைத்து கொண்டு இருக்கிறேன்.

எல்லா பொருட்களுக்கும் விலை பட்டியல் பிறகு இணைக்கப்படும்.
உங்களது விருப்பமுள்ள பொருட்களுக்கு விலை வேண்டும் என்றால் கிழே எங்கள் ஈ மெயில் முகவரி கொடுத்துள்ளோம். எங்களை தொடர்பு கொள்ளவும்.

 சென்னை ப்ளாசா முக புத்தக சுட்டி இதிலும் இணைந்து கொள்ளுங்கள்.Chennai Plaza FB Page

அனைவரும் இதில் லைக் கொடுத்து இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
Our shop Chennai Plaza web site is now changed from www. Chennai plazaik .com to www.chennaiplazaki.com
We  have updated our product and introduced new items in our website. 

Chennai Plaza Facebook Id


Please give your comments and Likes in the facebook. 

Also inform your known persons.
Price list for the all the Products will be posted later.
Price for any model number will be provided upon request through 

E-mail.

or

அனைவருக்கும் இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள். 

இந்த வருடம் நோன்பு ஏக வல்ல இறைவனின் அருளால் நல்லபடியாக முடிந்தது, இனி வரும் வருடங்களிலும் நல்ல படியாக அனைவரும் நோன்பை நிறைவேற துஆ கேட்போமாக.


சமையல் அட்டகாசங்கள் முகநூலிலும் இணைந்து கொள்ளுங்கள்  https://www.facebook.com/Samaiyalattakaasam


ஈத் ஸ்பெஷல் ஷீர் குருமா  - பாக்கிஸ்தானியர்களின் ரிச் பாயாசம்Saturday, August 3, 2013

மட்டன்கீமா (கொத்துக்கறி) ஹரீஸ் அரபிக் சூப்/கஞ்சி


HOW TO MAKE ARABIC HAREES/HOW TO MAKE MUTTON KHEEMA HAREES

மட்டன் கீமா (கொத்துக்கறி)  ஹரீஸ்  ( அரபிக் நோன்பு கஞ்சி /சூப்)

ஓவ்வொரு வருடமும் நோன்பு மாதங்களில் பல ஊர்களில் அவரவர் பாரம்பரிய உணவு வகைகளை மாலை நேரம் நோன்பு திறக்க தயார் செய்வோம்.
அதில் நோன்பு என்றாலே முதல் முதல் சமைக்கும் உணவு நோன்பு கஞ்சி தான்.
நம் ஊர்களில் அரிசியை உடைத்து அதில் சிறிதுகடலை பருப்பு,பாசிபருப்பு சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து , சில மசாலா வகைகளும் சேர்த்துநோன்பு கஞ்சி தயார் செய்வோம் . ஆனால் அரபு நாடுகளில் காரமிலாமல், மசாலா அதிகம் இல்லாமல் செய்யப்படும் பாரம்பரிய உணவு வகைகளில் கஞ்சி/ சூப்  ஹரீஸும் ஒன்றாகும். இது உடைத்த வெள்ளை கோதுமையுடன் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து செய்வார்கள்.இது குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். டயட் செய்பவர்களுக்கும் எண்ணை அதிகம் சேர்க்காத நோன்பு கஞ்சியாக குடிக்கலாம்.


ஏற்கனவே இங்கு சிக்கன் ஹரீஸ் ரெசிபி போட்டுள்ளேன். அதை இங்கு சென்று பார்க்கவும். 

 தேவையானவை

தாளிக்க 1

பட்டர்  - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1 
பூண்டு - 3 பல்
மட்டன் கொத்தியது (கீமா)  - 150 கிராம்
உடைத்த வெள்ளை கோதுமை - 100 கிராம்
பட்டை தூள்  - கால் தேக்கரண்டி
சீரக தூள் - அரை  தேக்கரண்டி
தண்ணீர் - 600 மில்லி ( தேவைக்கு)

தாளிக்க 2

பட்டர்  - 2 தேக்கரண்டி
பட்டை தூள்  - கால் தேக்கரண்டி
சீரக தூள் - கால்  தேக்கரண்டி

ஆலிவ் ஆயில் - கடைசியாக மேலே ஊற்றHOW TO MAKE ARABIC HAREES/HOW TO MAKE MUTTON KHEEMA HAREES
செய்முறை

1.கோதுமையை 8 லிருந்து 10 மணி நேரம் ஊறவைக்கவும்.

2.குக்கரில் சிறிது பட்டர், வெங்காயம், பூண்டு சேர்த்து தாளித்து மட்டன் கீமாவையும் சேர்த்து ஊறவைத்த கோதுமையையும் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும்.

3.மூன்று  டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து சீரகத்தூள், பட்டை பொடி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு குக்கரை மூடி மிதமான தீயின் நான்கு ஐந்து விசில் விட்டு , தீயின் தனலை குறைத்து வைத்து 15 நிமிடம் வேகவிடவும்.


4.குக்கர் ஆவி வெளியானதும் குக்கர் வெயிட்டை நிக்கிவிட்டு, நன்கு மசிக்கவும். ( பிளண்டரில் அல்லது மிக்சியில் முக்கால் பாகம் அரையும் வரை மசிக்கவும்) ரொம்ப கெட்டியாக இருந்தால் தேவைக்கு வெண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

5.பிறகு சிறிது பட்டரில் சீரகதூளும், பட்டை தூளும் சேர்த்து தாளித்து மசித்த ஹரீஸ் கஞ்சியில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பரிமாறும் பவுலில் ஊற்றி சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி வைக்கவும்.

 6.சுவையான அரபிக் கஞ்சி மட்டன் ஹரீஸ் தாயார்.


இந்த ரெசிபியில் முழு கோழி, கறி எலும்புடன் போட்டு வேக விட்டு நன்கு வேகவிட்டு கலக்குவார்கள். நான் எப்போதும் எலும்பில்லாததே சேர்த்து செய்வது இப்படி செய்வதால் ஈசியாக வேலை முடியும். ஓட்சில் செய்தால் ரொம்ப மசிக்கவோ மிக்சியில் அடிக்கவோ தேவையில்லை. நன்கு மசிந்து விடும்.இதில் சிறிது வித்தியாசமாக சிறிது பட்டை பொடி, சீரகத்தூள் சேர்த்து வேகவைத்துள்ளேன். வெந்ததும் மணம் ஊரையே கூட்டும்..

 இதற்கு பக்க உணவாக ஃப்லாபில், சிக்கன் நக்கெட்ஸ், ஃபில்லெட், வடை வகைகள் செய்யலாம்.