Wednesday, January 22, 2014

கிங் பிஷ் ரோஸ்ட் - King Fish Roast


கிங் பிஷ் ரோஸ்ட் King Fish Roast

மீன் ரோஸ்ட் என்பது  கேராளாசமையல் , இங்குள்ள கராமா கேராளா உணவகத்தில் ஆப்பமும் மீன் ரோஸ்டும் சுவைத்தோம் , கொஞ்சம் காரம் அதிகமாக இருந்தது, அவர்கள் மெயினாக சேர்ப்பது, சீரகம், தேங்காய் பால், தேங்காய் எண்ணை., , இதை நான் என் சுவைக்கு செய்துள்ளேன். 

தேவையான பொருட்கள்
கிங் பிஷ் - 400 கிராம்
வெங்காயம் - கால் கிலோ (பொடியாக நறுக்கியது)
தக்காளி - ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
சீரக தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
பச்ச மிளகாய் - 2
மீட் மசலா - ஒரு தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட்  - இரண்டு தேக்கரண்டி
எண்ணை - 4 தேக்கரண்டி


மீன் பொரிக்க
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
மீட் மசாலா - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி

அரைக்க
ஒரு தக்காளி
ஒரு தேக்கரண்டி தேங்காய் பவுடர்



செய்முறை
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதில் மீனை பொரிக்க கொடுத்துள்ள மசாலாக்களை சேர்த்து 5 நிமிடம் ஊறவைத்து எண்ணையை காயவைத்து முக்கால் பதமாக பொரித்து எடுக்கவும்.
பொரித்த மீனை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே எண்ணையில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதககவும்.

 வதங்கியதும் தக்களியை கட் செய்து சேர்த்து எல்லா தூள்வகைகளையும் சேர்க்கவும்.தீயின் தனலை மீடியமாக வைத்து 5 நிமிடம் மசலா வாடை போகும் வரை வேகவிடவும்.
பிறகு தக்காளி மற்றும் தேங்காயை அரைத்து சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
தண்ணீர் சிறிது வற்றும் போது பொரித்த மீனை சேர்த்து மீன் உடையாமல் போர்க் கொண்டு கிளறி விட்டு மீண்டும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு இரக்கவும்.

கடைசியாக பச்சமிளகாய் மற்றும் கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.

சுவையான மீன் ரோஸ்ட் ரெடி\ஆப்பம், ரொட்டி, பிளெயின் ரைஸ் போன்றவற்றிக்கு ஏற்ற அருமையான சைட் டிஷ்.மைதா தோசையுடன் இதை சாப்பிட சுவை சொல்லதேவையில்லை , நீங்களும் சமைத்து மகிழுங்கள்.

இதி புளி சேர்க்கவில்லை
King Fish Roast/Side Dish
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

ரோஸ்ட் செம...! நன்றி சகோதரி...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் இணைத்து விட்டேன்... நன்றி...

+1

Asiya Omar said...

சூப்பர்,அதுவும் கிங் ஃபிஷ் சில் செய்தா சான்சே இல்லை.செமை.

ஸாதிகா said...

வாவ்..அசத்தல் ஜலீ.கூடவே இருக்கும் மைதா தோசையுடன் மீன் குழம்பு காம்பினேஷன் செம செம..

Jaleela Kamal said...

மிக்க நன்றி தனபாலன் சார்

Jaleela Kamal said...

ஆமாம் ஆசியா, கொஞ்ச நாட்களாக புளி சேர்ப்பதிலை மீனில் இப்படி ரோஸ்டாக சமைத்து விடுவது வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஆமாம் ஸாதிகா அக்கா மைதா தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா