Tuesday, February 4, 2014

முட்டை பால் (ஒல்லியாக இருப்பவர்களுக்கு)


பூபெய்திய பெண்களுக்கு, பிள்ளை பெற்றவர்களுக்கு, வாய் புண் இருப்பவர்களுக்கு, ஆண் குழந்தைகளுக்கும் கூட இதை கொடுக்கலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை குடிக்கலாம்.

ஒல்லியாக உள்ளவர்கள் தடியாகனுமா???உங்கள் குழந்தைகள் புஷ்டியாகனுமா? இந்த முட்டை பாலை தினம் கொடுத்து பாருங்கள்.

((இப்போதைக்கு எங்க வீட்டில் ஒல்லியாக உள்ளவர்கள் யாரும் இல்லை ஆகையால் தேவையான பொருட்களை மட்டும் வைத்து போட்டு இருக்கிறேன்)

தேவையானவை

முட்டை - 1
பால் - கால் டம்ளர்
தேன் - ஒரு மேசை கரண்டி
நெய் - கால் தேக்கரண்டி

செய்முறை

பாலை நன்கு சூடு படுத்தவும்
முட்டையை நுரை பொங்க அடித்து அதில் தேனை கலக்கவும்.
பிறகு பாலையும் சேர்த்து கலக்கி நெய்யை சூடு படுத்தி ஊற்றி குடிக்கவும்.
முட்டைய நல்ல நுரை பொங்க அடிக்கலன்னா குடிக்க முடியாது.

ஒரு மாதமோ அல்லது 40 நாட்களோ குடித்தால் நல்ல பலன் தெரியும்.

டிப்ஸ்: இது குழந்தைகளுக்கும், பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கும், பூப்பெய்திய பிள்ளைகளுக்கும் , பிள்ளை பெற்றவர்களுக்கும் ரொம்ப ஒல்லியாக எலும்பு தோலுமா இருப்பவர்களுக்கும் கொடுக்கலாம்.
நோஞ்சானாக கண் சோர்வடைந்து இருப்பவர்களுக்கு முட்டை பால் அடித்து கொடுக்கலாம்

அதே போல் சூட்டினால் வாய் முழுவது வெந்து புண்ணாகி இருந்தால் இது போல் செய்து முன்று நாட்களுக்கு மருந்து போல் குடிக்கலாம்.

இதை நான் முன்பு  செய்து இருக்கிறேன். பெரிய மகன் சிசேரியன் தான் ஆகையால்
சரியாக மருந்து எடுத்துக்காததால் வாய் புண் அடிக்கடி வரும், அப்போது வாய் புண் போக பல பாட்டி மார்களை அனுகி கேட்ட குறிப்புகள் இதுவும் ஒன்று. அதில் இது என் கிரான்மா சொன்ன குறிப்பு..



ரொம்ப ஒல்லியாக இருப்பவர்கள் இதை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல புஷ்டியாக ஆகிவிடலாம்.
பிள்ளை பெற்றவர்களுக்கு உடம்பு ரொம்ப வீக்காக இருந்தாலும் இதை செய்து கொடுக்கலாம்.

பூப்பெய்திய பெண்களுக்கு கொடுத்தால் பிற்காலத்தில் பிள்ளை பெறும் போது பேறுகால வலியை தாங்கிக்கக்கூடிய சக்தி கிடைக்கும்.


இதே டிப்ஸ் மனோ அக்கா சிறப்பு விருந்தினர் பதிவில் சொல்லி இருக்காங்க  பூப்பெய்தி பெண்கள் முட்டை குடிப்பது பிற்காலத்தில் இடுப்பு எலும்பு பலப்படும் , பிரசவ வலிகளை தாங்கிக்கூடிய சக்தி கிடைக்கும்,

17 கருத்துகள்:

Asiya Omar said...

நாங்களும் முட்டைப் பால் காய்ச்சுவோம், ஆனால் பச்சையாக முட்டையை சேர்க்க மாட்டோம்,முறை வேறு.சத்தான குறிப்பு.

திண்டுக்கல் தனபாலன் said...

பலருக்கும் பயன்தரும் பகிர்வு சகோதரி... நன்றி...

Jaleela Kamal said...

முட்டை பால் காய்ச்சுவது அது ஹரீரா பால் கல்யாண மாப்பிள்ளைக்கும் மற்றவரகளுக்கும் செய்து கொடுப்பது

இது இடுப்பெலும்பு பலம் பெறவும். ஓல்லியானவர்களும் காலை வெறும் வயத்தில் மருந்து போல் குடிப்பது, இந்த முட்டை பால்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

குறிப்பிட்டிருப்பதுபோல், தேவைப்படுபவர்களுக்கு பயன் தரும் நல்ல சத்துணவுக் குறிப்பு சகோதரி!

buhari said...

sudana milk el egg pottal athu vanthu vedatha ?

buhari said...

sudana milk el egg sarthal egg vanthu veduma?

கோமதி அரசு said...

முட்டை சாப்பிடுபவர்கள் இந்த பதிவை பயன்படுத்தலாம்.
அருமையான சத்தான குறிப்பு. நீங்கள் சொல்வது போல் இடும்பெலும்பு பலம் பெற எங்கள் ஊர் பக்கம் எல்லோரும் பெண் குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள்.

கோமதி அரசு said...

முட்டை சாப்பிடுபவர்கள் இந்த பதிவை பயன்படுத்தலாம்.
அருமையான சத்தான குறிப்பு. நீங்கள் சொல்வது போல் இடும்பெலும்பு பலம் பெற எங்கள் ஊர் பக்கம் எல்லோரும் பெண் குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள்.

Saran said...

முட்டையில் நாட்டுக்கோழி முட்டையை சேர்க்க வேண்டுமா அல்லது பிராய்லர் கோழி முட்டையை சேர்க்க வேண்டுமா? என்பதைத் தெளிவுப்படுத்தவும். மேலும் முட்டையை பச்சையாக அடித்து கலந்தால் அதில் கிருமிகள் அதிகம் இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே இது ஆரோக்கியமானதா?

Saran said...

முட்டையில் நாட்டுக்கோழி முட்டையை சேர்க்க வேண்டுமா அல்லது பிராய்லர் கோழி முட்டையை சேர்க்க வேண்டுமா? என்பதைத் தெளிவுப்படுத்தவும். மேலும் முட்டையை பச்சையாக அடித்து கலந்தால் அதில் கிருமிகள் அதிகம் இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே இது ஆரோக்கியமானதா?

Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.ae/2014/01/blog-post_9.html
saran babu
மேலே உள்ள லின்கையும் படிகக்வும்.

Jaleela Kamal said...

நாட்டு கோழி முட்டை நன்கு அடித்து தேன் கலந்து ,சூடான பால் ஊற்றி , ஒரு சொட்டு நெய் ஊற்றி குடிக்கனும்.
சூடான பால் ஊற்றும் போது அது சரியாகவரும்.

Jaleela Kamal said...

நாட்டு கோழி முட்டை கிடைக்காத பட்சத்தில் பிராய்லர் முட்டை பயன்படுத்தலாம்.

Saran said...

நன்றி.

Kabilan Android App Developer said...

nan ithai follow panren

Unknown said...

பச்சையாக இல்லாமல் .வேறு முறை கூறுங்கள்

Unknown said...

I trying

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா