Saturday, February 15, 2014

சுக்கு சோம்பு பொடி & சுக்கு சோம்பு காஃபி



இந்த காஃபியை தினமும் அருந்தி வந்தால் உடல் எடை குறையவும் வாய்ப்பு இருக்கு.சுக்கு சோம்பு காஃபியை  தொடர்ந்து குடித்து வந்தால்  வயிற்றில் உள்ள கழிவுகளை அகற்றும், கேஸ் பிராப்ள்ம் இல்லாமலும் இருக்கும்.மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் இது அருமருந்து.



சுக்கு சோம்பு பொடி

தேவையான பொருட்கள்

சோம்பு 25
சுக்கு 50
காய்ந்த புதினா இலை ஒரு கைப்பிடி
ஏலக்காய் பொடி  10 கிராம்
பனங்கற்கண்டு - 10 கிராம்

செய்முறை

சோம்பை கருகாமல் லேசாக வறுத்து ஆறவைக்கவும்.
சுக்கை வெயிலில் காயவைத்து தட்டி பொடிக்கவும்
புதினா இலைகளை ஆய்ந்து கழுவி வெயிலில் உலர்த்த்வும்.
ஏலக்காய், பனங்கற்கண்டு அனைத்து பொருட்களையும் சேர்த்து மிக்சியில் பொடித்து வைத்து கொள்ளவும்.



சுக்கு சோம்பு காஃபி

தேவையான பொருட்கள்

பால்  - 100 மில்லி
தண்ணீர் - 250 மில்லி 
சுக்கு சோம்பு தூள் - 3/4 தேக்கரண்டி (அ) ஒரு தேக்கரண்டி
காஃபி தூள் - கால் தேக்கரண்டி
சர்க்கரை - தேவைக்கு



செய்முறை

பாலை தனியாக காய்ச்சி வைக்கவும்.
தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு தேக்கரண்டி பொடித்த பொடியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
தண்ணீர் கால் பாகத்தில் இருந்து அரை பாகம் வற்றும் போது பாலை சேர்த்து கொதிக்க வைத்து கடைசியாக சிறிது காஃபி தூள் சேர்த்து சர்க்கரை சேர்த்து கரைத்து வடிக்கட்டி குடிக்கவும்.

குறிப்பு:
இந்த சுக்கு சோம்பு காஃபியை  தொடர்ந்து குடித்து வந்தால்  வயிற்றில் உள்ள கழிவுகளை அகற்றும், கேஸ் பிராப்ள்ம் இல்லாமலும் இருக்கும்.
மோஷன் ப்ராப்ளம் உள்ளவர்களும் இந்த பவுடர் போட்டு குடிக்கலாம். இது வயிறு வலிகேஸ் பிராப்ளம்வயிறு உப்புசம்செரிக்காமல் இருப்பவர்களுக்கு ஏற்ற அரும்ருந்து.

காப்பி தூள் அதிகம் இதில் சேர்க்க தேவையில்லை ஒரு வாசனைக்கு தான்.


கவனிக்க:


என் டிப்ஸ் மற்றும் என் குறிப்புகளை காப்பி செய்து மற்ற தளங்களிலரென் அனுமதி இல்லாமல் போடாதீர்கள். அப்படியே காப்பி அடித்தாலும் என் லின்கை கொடுத்து இங்கிருந்து எடுத்து போட பட்டது என்று தயவு செய்து சொல்லவும்.

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

13 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

பனங்கற்கண்டு இருக்கும் போது சேர்ப்பதுண்டு... காப்பி தூள் சிறிது சேர்ப்பது புதிது... நன்றி சகோதரி...

Asiya Omar said...

அருமை. வித்தியாசமான காபி.எங்கவீட்டில் கருப்பட்டி சாயாவில் சோம்பு சிறிது இஞ்சி தட்டி சேர்ப்பதுண்டு.நல்ல மணமாக இருக்கும்.

கோமதி அரசு said...

நான் காப்பி குடிக்க மாட்டேன் காப்பி பொடி கலக்காமல் உங்கள் சுக்கு சோம்பு காப்பியை செய்து குடிக்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி.

ADHI VENKAT said...

காபி இதுவரை நான் குடித்ததேயில்லை. ஆனால் இந்த பொடி வித்தியாசமாக இருக்கிறது. செய்து பார்க்கிறேன்.

ஹுஸைனம்மா said...

சிம்பிளா சிறப்பா இருக்குக்கா. மொத்தமா அரைச்சு வச்சுகிட்டா வசதியாருக்கும், இல்லியா. நானும் இதேபோல, சுக்கு-ஏலம்-கிராம்பு-பட்டை-மல்லி-சோம்பு-மிளகு சேர்த்து அரைச்சு வச்சிருக்கேன். கருப்பட்டி (மட்டும்) சேர்த்து வாரம் ஒருமுறையாவது குடிக்க வைப்பதுண்டு. இனி புதினாவும் காய வச்சுச் சேத்துகணும். நல்ல டிப்ஸ்க்கா.

Jaleela Kamal said...

தனபாலன் சார் பனங்கற்கண்டு கிடைக்கவில்ல்லை என்றால்,வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.

Jaleela Kamal said...

ஆமாம் ஆசியா கருப்பட்டி சாயா அது வேறு, இது என் மாமியாரின் பக்குவம்.

Jaleela Kamal said...

கோமதி அக்கா இதை பிளாக் டீ அல்லது டீயுடனும் போட்டு குடிக்ககலாம்.

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மா , இது என் மாமியாரின் பக்குவம் சுக்கு இல்லை என்றால் தினம் இஞ்சி சீவும் போது அந்த தோலை சேகரித்து காயவைத்து பொடித்து சேர்ப்பார்கள், ஏற்கனவே அந்த டீ இங்கு போஸ்ட் செய்துள்ளேன்.

Jaleela Kamal said...

ஆதிவெங்கட் காபியில் பிடிக்க விலலி என்றால் பால் அல்லது பிளாக் டீ அல்லது பால் டீயுடனும் சேர்த்து தயாரித்து குடிக்கலாம்.

ஹுஸைனம்மா said...

// தினம் இஞ்சி சீவும் போது அந்த தோலை சேகரித்து காயவைத்து பொடித்து சேர்ப்பார்கள்//

அக்கா, இஞ்சியின் தோல் நல்லதல்ல என்றும், அதைக் கண்டிப்பாக நீக்க வேண்டும் என்று என் மமியார் சொல்வார். ஒரு புத்தக்த்திலும் படித்தேன். அதேமாதிரிதான் சுக்கின் தோலும் - கண்டிப்பாக சுரண்டி எடுக்கணும்.

ஆனா, நீங்க தோலைக் காயவச்சு சேர்க்கச் சொல்றீங்களே?

Jaleela Kamal said...

ஆமாம் சில நேரம் களறிக்கு அதிக இஞ்சி செதுக்கும் போது அது இஞ்சியுடன் இருக்கும், அதை காயவைப்பார்கள். சுக்கு இல்லாத போது அவசரத்துக்கு அதை பயன் படுத்துவார்கள்/.

நான் இங்கு குறிப்பில் சுக்கு தான் கொடுத்துள்ளேன்.

Shama Nagarajan said...

super coffee akka

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா