Friday, February 7, 2014

கார்ன் பீஸ் மணி பேக் - Corn Peas Money Bag என் சிறப்பு விருந்தினர் பதிவாக தோழி ஆசியா வின் சமைத்து அசத்தலாமில்  => இங்கு சென்று படிக்கவும்.கார்ன் பீஸ் மணி பேக்
Corn Peas Money Bag/Wontons/Potli


வித்தியாசமான அருமையான ஸ்டாடர் உணவு, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் ஏன் நாமும் தான். இது ஒரு இத்தாலி உணவு வகை.

இதை நம் சுவைக்கு ஏற்ப வித விதமான பில்லிங் வைத்து தயாரிக்கலாம்.

பள்ளிக்கு செல்லும் குழந்தகள் கொண்டு போகும் மதிய உணவு அப்படியே திரும்பி கொண்டு வருவது கண்டு கவலை படும் பெற்றோர்கள் இது போல் ஒரு அழகிய மூட்டை போல் செய்து அவர்கள் விருப்பப்படி , சிக்கன் மட்டன், முட்டை , காய் கறி வகைகளை வைத்து செய்து கொடுத்தால் சத்தமில்லாமல் காலி ஆகும் உங்கள் பிள்ளைகளின் டிபன் பாக்ஸ்.தேவையானவை

மாவு குழைக்க

மைதா மாவு  -ஒரு டம்ளர் (200கிராம்)
உப்பு - கால் தேக்கரண்டி 
சர்க்கரை - அரை தேக்கரண்டி
வெது வெதுப்பான வெண்ணீர் -கால் டம்ளர்
என்ணை - ஒரு தேக்கரண்டி


செய்முறை வெண்ணீரில் உப்பு சர்க்கரை எண்ணை சேர்த்து மாவில் ஊற்றி நன்கு குழைக்கவும். குழைத்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.பில்லிங் ரெடி செய்ய

ப்ரோஸன் ,ஸ்வீட் கார்ன்  (சோளம்)  - அரை கப்
ப்ரோஸன் பட்டாணி -  கால் கப்
முட்டை கோஸ் - துருவியது கால் கப்
கேரட் - பொடியாக அரிந்தது - ஒரு தேக்கரண்டி
கேப்சிகம் - பொடியாய அரிந்தது  - இரண்டு மேசை கரண்டி
பச்சமிளகாய் - பொடியாக அரிந்தது - ஒன்று
சர்க்கரை - 2 சிட்டிக்கை
வெங்காயம் - பொடியாக அரிந்தது - ஒரு மேசை கரண்டி
உப்பு - தேவைக்கு
ஒன்றும் பாதியுமாக தட்டிய - கருப்பு மிளகு தூள் - அரை தேக்கரண்டி
லெமன் சாறு  - அரை தேக்கரண்டி
பொடியாக அரிந்த பூண்டு - இரண்டு பல் 
எண்ணை - இரண்டு தேக்கரண்டி
செய்முறை

ஒரு வாயகன்ற நான்ஸ்டிக் பேனில் எண்ணை ஊற்றி காயவைத்து வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்து பட்டாணி மற்றும் கார்ன் சேர்த்து வதக்கி 1நிமிடம் வேக விடவும்.
பிறகு முட்டை கோஸ், கேரட், கேப்ஸிகம் சேர்த்து வதக்கி  உப்பு சேர்த்து இரண்டு ஸ்பூன் தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வேகவிடவும்.

கடைசியாக மிளகு தூள், சர்க்கரை, லெமன் சாறு சேர்த்து பிரட்டி அடுப்பில் இருந்து இரக்கி ஆறவிடவும்.

குழைத்த மாவை சிறிய பூரி அளவு உருண்டைகளாக்கி ஓவ்வொரு உருண்டையையும் வட்ட வடிவமாக பூரிக்கு திரட்டுவது போல் திரட்டி நடுவில் ஒரு ஸ்பூன் அளவு வைத்து எல்லாபக்கமும் ஒன்று சேர்த்துமூட்டை போல் பிடித்து அழுத்தி விட்டு மேலே சிறிது பூ போல பிரித்து விடவும்.


அதே போல் எல்லா உருண்டைகளையும் செய்து முடிக்கவும்.

இரும்பு வானலியில் எண்ணையை காயவைத்து எல்லா மணி பேக் களையும் கருகாமல் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.How to make Money bag/Won tons/Potli - Step by Step
இது பார்க்க பாட்டிகள் அந்த காலத்தில் பயன் படுத்து சுருக்கு பை போல் இருக்கும்.

சுருக்கு பை கயிறு தயாரிப்பதாக இருந்தால் ஸ்பிர்ங் ஆனியனின் நீட்டான பச்சை நிற இலையை பொடியாக நூல் போல அரிந்து பில்லிங் வைத்து முடித்து மூட்டை போல் கட்டி முடிச்சி போட்டு வைக்கலாம்.
இது பார்க்க வித்தியாசமான ஷேப்பில் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதே போல் உள்ளே வைக்கும் பில்லிங் சிக்கன் , மட்டன் , மற்றும் உங்கள் விருப்பம் போல் என்ன வைத்து கொள்ளலாம்.

Chinese Cabbage Money Bag/Wontons/Potli  @ Cook book Jaleela

*********************
இன்று எங்கள் திருமண நாள் , எங்களுக்கும் எங்கள்குடும்பத்தினர்களுக்கும் துஆ செய்யுங்கள்.Chennai plaza <= Honey Comb Burka/Abaya

Chennai Plaza => Wholesale & Retail 
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

9 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

இத்தாலி உணவு செய்முறையை குறித்துக் கொண்டாயிற்று... நன்றி சகோதரி...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் +1 இணைத்தாகி விட்டது... நன்றி...

Asiya Omar said...

மிக அழகான அருமையான குழந்தைகளைக் கவரும் குறிப்பு.இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொண்டு அசத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றி.

apsara-illam said...

அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய குறிப்பு அக்கா.பார்க்கும்போது அகர்தலா இருக்கு.செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் அக்கா.
தங்கள் இருவருக்கும் உடல்நலத்தையும்,நீண்ட ஹயாத்தினையும் தர எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆஸ் செய்கிறேன்.

Cherub Crafts said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஜலீலா .

நல்ல அருமையான குறிப்பு .பார்ட்டி களில் செய்து வைக்க நன்றாக இருக்கும் .

ஹுஸைனம்மா said...

”மணி பேக்” பேரே பிரமாதம் அக்கா. இதை சமோசா ஷீட்டில் செய்ய முடியுமா அக்கா?

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மா ஆஹா ரொம்ப நாள் கழித்து இங்கு வந்து இருக்கீங்க, ஆஹா அதான் இன்று துபாயில் மழையா, ஹிஹி

இதை சமோசா ஷீட்டில் வைத்து பேக் செய்தும் எடுக்கலாம், டயட்டும் ஆச்சு..

Jaleela Kamal said...

டைமிங் பார்த்துங்கங்க எப்படின்னு

Jaleela Kamal said...

நன்றி தனபாலன் சார்
நன்றி ஆசியா
நன்றி அப்சரா

மிக்க நன்றி ஏஞ்சல்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா