Tuesday, April 22, 2014

சிறப்பு விருந்தினர் பதிவு- 5 - ஜப்பானீஸ் ஷ்ரிம்ப் அண்ட் வெஜ் டெம்புரா - செய்யது கதீஜா


பாரம்பரிய சமையலுடன் சிறப்பு விருந்தினராக இன்று நம்முடன் ஜப்பானியர்களின் குறிப்பை பகிர இருப்பவர் திருமதி செய்யது கதீஜா.செய்யது கதீஜா காயல் பட்டிணத்தை சேர்ந்தவர், தற்சமயம் வசிப்பது ஜப்பானில் மூன்று பிள்ளைகள் இரண்டு மகன்களும், ஒரு செல்ல மகளும்.


ஒரு அழகான குட்டி பெண் பிள்ளைகளை , குழந்தை பிறந்தால் அதை பார்த்ததும் அந்த காலத்தில் ஜப்பான் பொம்மை மாதிரியே இருக்கு என்று சொல்வார்கள்.
அதே போல் தான் என் சின்ன தங்கையையும் பிறந்திருந்த போது ஜப்பான் பொம்மையே தான் என்று எங்க டாடியின் தோழர் அடிக்கடி சொல்வார். அது போல் கதீஜாவின் அழகு செல்லமும் ஜப்பான் பொம்மையே தான். ஆண்டவன் அவர்கள் விரும்பிய வண்ணம் அவள் நன்றாக வர துஆ செய்வோமாக‌

 கதீஜாவின் முதல் பையன் இன்ஷாப் புகாரி அழகாக தமிழில் பாடி இருக்கிறார்.அதையும் கேளுங்கள்
காயல் பட்டிண ஸ்பெஷல் ரெசிபிகளை செய்து அசத்துவார்கள்.   பல காயல் பட்டின பாரம்பரிய ரெசிபிகளையும், ஜப்பானில் பிரத்தி பெற்ற ரெசிபிகளையும் அறுசுவை டாட் காமிலும் முக நூல் பேஜிலும்  My recipes  என்ற முகவரியிலும் பகிர்ந்து வருகிறார்.எனக்கு கதீஜாவை அறுசுவை டாட் காம் மூலமாக தான் தெரியும் அங்கு கூட்டாஞ்சோறு தோழிகள் குறிப்புகளில் கதீஜாவின் குறிப்புகளும் இடம் பெற்று இருக்கின்றன, அதில் அனைத்து குறிப்புகளும் அருமையாக இருக்கும் , அதில் அவர்கள் செய்துள்ள புதினா ரசம் வித்தியாசமான குறிப்பு.

https://www.facebook.com/katheeja.seyed

Katheeja FB page - My Recipes 

https://www.facebook.com/pages/My-recipes/623293551041855
http://www.arusuvai.com/tamil/node/3106
http://www.arusuvai.com/tamil/expert/1377


ஜப்பானில் தமிழ் பாட்டு  இது அவங்க மகன் இன்சாஃப் புகாரி பாடியது. கேட்டு மகிழுங்கள்.

நான் சமையலில் இந்த அளவுக்கு வர என்  கணவருக்கு முக்கிய பங்கு இருக்கு அவங்க தான் நான் எது சமைத்தாலும் நல்லா இருக்குன்னு பாராட்டி எனக்கு சமையலின் மீது ஆர்வம் வர அவர் முக்கிய காரணமாக இருக்கிறார்.
மையல் புதுசா கத்துகிறவஙளுக்கு என்னுடைய அட்வைஸ் என்ன என்றால் நீங்க எது செய்ய ஆரம்பித்தாலும் நல்லா இருக்குமா?சரியா வருமா? என்று நினைக்காதீங்க சரியா வரும். டேஸ்டா இருக்கும்னு நினைத்து செய்யுங்கள் கண்டிப்பாக நல்லா அமையும். நீங்களும் ஒரு சமையல் வல்லுனராக வரலாம்.என்னுடைய சமையல் திறனை வெளிப்படுத்தியதுக்கு அறுசுவை. காமிற்க்கு பங்கு இருக்கிறது.

செய்யது கதிஜா அவர்கள் நம்முடன் பகிர இருப்பது ஜப்பான் நாட்டு பாரம்பரிய சிற்றுண்டியான ஜப்பானீஸ் ஸ்ரிபம்ப் அன்ட் வெஜ் டெம்புரா.
இது நம்மூர் பஜ்ஜி போல ஆனால் எந்த வித காரமும் இல்லாமல் செய்வது. டெம்புரா பவுடர் என தனியாக கிடைக்கிறது, அது கிடைக்காதவர்கள் கார்ன் ப்ளார் மாவையே பயன் படுத்தலாம்.


 ஜப்பானீஸ் ஷ்ரிம்ப் அண்ட் வெஜ் டெம்புரா
Japanese Shrimp and Veg Tempura

தேவையான பொருட்கள்

 1. ஷ்ரிம்ப் - 15
 2.  முட்டை - 1
 3. மைதா மாவு - 1 கப்
 4. தெம்புரா மாவு (அ) கார்ன்ப்ளார் - 1/4 கப்
 5. எண்ணெய் - பொரிக்க
 6. உப்பு - தேவைக்கு
 7. ப்ரட் க்ரம்ப்ஸ்  - 1 கப்
 8. கத்தரிக்காய் - 1
 9. முள்ளங்கி - 150 கிராம்
 10. வெங்காயம் - பாதி
செய்முறை


 1. ஷ்ரிம்பை சுத்தம் செய்து கட்டிங் போர்டில் வைத்து கத்தியை கொண்டு மேலே மெதுவாக அழுத்தவும்.
 2. இப்படி செய்யும் போது பொரிக்கும் சமயம் ஷ்ரிம்ப் வளையாமல் இருக்கும்.
 3. கத்தரிக்காயை மெல்லியதாக சீவி வைக்கவும்.
 4. வெங்காயத்தையும், முள்ளங்கியையும் தேவையான சைஸில் கட் செய்து கொள்ளவும்.\
 5. ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி 1 கப் ஐஸ் வாட்டர் சேர்த்து நன்கு நுரை பொங்க அடித்துக்கொள்ளவும்.
 6. மாவில் சோடா உப்பு, உப்பு சேர்த்து சலித்து அதில் முட்டை கலவையை  ஊற்றி கட்டிகலில்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
 7. ரஸ்க் தூளை ஒரு தட்டில் போட்டு வைக்கவும்.
 8. ஷ்ரிம்ப்,காய்கறிகள் மீது கார்ன் மாவை டஸ்ட் செய்து வைக்கவும்.
 9. பின் ஒவ்வொரு ஷ்ரிம்பாக மாவுகலவையில் முக்கி ரஸ்க் தூளில் பிரட்டி சூடான எண்ணெயில் போட்டு தீயை மீடியமாகவைத்து பொரித்து எடுக்கவும்.

 1. நூடுல்ஸ், உதோன், சோபா soba உடன் சாப்பிடலாம்.சோயாசாஸ் தொட்டும் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.


மேலே உள்ளது தான் டெம்புரா மிக்ஸ் இது சிக்கன் பஜ்ஜி , வெண்டைக்காய் குர்குரேவுக்கு சிக்கன் ப்ரைக்கு நான் பயன் படுத்துவது  நல்ல கிரிஸ்பியாக வரும்.இது கிடைக்க வில்லை என்றால் கார்ன் மாவு  + மைதாமாவு சேர்த்து கலக்கி டிப் செய்து கொள்ளலாம். 
*******************************************

நீங்களும்  உங்கள் பாரம்பரிய சமையல் குறிப்புகளை இங்கு என்னுடன் பகிர  விரும்பம் உள்ளவர்கள் உங்கள் ஊரின் பாரம்பரிய சமையல் குறிப்புகள் அல்லது நீங்கள் வசிக்கும் நாட்டின் பாரம்பரிய சமையல் குறிப்புகளை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்ன குறிப்பாக இருந்தாலும், அதாவது டிபன் வகைமதிய உணவிற்கு செய்யும் கறி வகைகள்மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு சாப்பாடு வகைகள்.குழந்தைகளுக்கு செய்யும் உணவு, கர்பிணி பெண்களுக்கான உணவு, பூப்பெய்திய பெண்களுக்கான உணவு, பிள்ளை பெற்றவர்களின் பத்திய உணவு, திருமணத்தில் செய்யும் முக்கிய வகை உணவு, விஷேச நாட்களில் செய்யும் பலகாரம்மற்றும் பல.....வகைகளை அனுப்பலாம்.. நானும் சிலரை அழைக்கிறேன்...விருப்பம் உள்ளவர்கள்  இங்கு கிழே என் பதிவின் கீழ் கருத்து தெரிவிக்கலாம்  அல்லது கிழே கொடுக்கப்பட்டுள்ள என் முகவரிக்கு மெயில்  அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.


feedbackjaleela@gmail.com or cookbookjaleela@gmail.com

Burka & Hijab @ Chennaiplaza

https://www.facebook.com/Samaiyalattakaasam


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

13 கருத்துகள்:

Cherub Crafts said...

பொரிக்கும்போது வளையாமல் இருக்க டிப்ஸ் நோட் செஞ்சுக்கிட்டேன் :)
செய்து பார்க்கிறேன் .அருமையான ரெசிப்பி பகிர்வுக்கு நன்றி

Cherub Crafts said...

தமிழ் பாட்டு லிங்க் வேலை செய்யலை ஜலீ ..

Angelin.

Jaleela Kamal said...

வாங்க ஏஞ்சல் வருகைக்கு மிக்க நன்றி, ரொம்ப நாட்களாக ஆளையே காணும் ரொம்ப பிஸியா இருக்கீஙகளா?

இதோ தமிழ் பாட்டு லின்க் மறுபடி இணைத்து விட்டேன்.

Asiya Omar said...

ஜலீலா மிக அருமையான பகிர்வு.அசத்தலான குறிப்பு.அன்புக் குழந்தைகளுக்கும் குறிப்பை பகிர்ந்த இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.செய்து பார்க்க வேண்டும்.

ரூபன் said...

வணக்கம்

அட்டகாசமான விளக்கம்..அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்...


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

திருமதி செய்யது கதீஜா அவர்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள் சகோதரி...

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

Farin Ahmed said...

Masha allah..Jappan dolls are so cute....Nice guest post akka..Recipe looks yumm...

seyedkatheeja said...

என்னுடைய குறிப்பை வெளியிட்ட ஜலீலா அக்காவிற்க்கு என்னுடைய நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன்

seyedkatheeja said...

என்னுடைய குறிப்பை வெளியிட்ட ஜலீலா அக்காவிற்க்கு என்னுடைய நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன்

seyedkatheeja said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஆசியா அக்கா

seyedkatheeja said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி தனபாலன் அண்ணா

balkkisrani said...

அஸ்ஸலாமு அலைக்கும் கதிஜா உங்க குறிப்பு இன்கேயும் இருக்கா மாசாஹ் அல்லாஹ் சந்தோசம் வித்தியாசமான குறிப்பு

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா