Monday, September 15, 2014

நினைவலைகள்



ஊரின் நினைவலைகள் 


அஸ்ஸலாமு அலைக்கும் , தோழ , தோழியர்களே அனைவரும் நலமா? ஊர் சென்று துபாய் வந்து சேர்ந்து விட்டோம். இன்னும் ஊர் ஞாபாகமாகவே இருக்கு. அடிக்கடி மழை ஆகையால் எங்கும் போக முடியவில்லை.

( என்னாடா இது போய் வந்து ஒரு மாதம் ஆகபோகிறது இப்ப போடுகிறேன் என்று நினைக்காதீர்கள் முதலே போட்டு வைத்தது. படங்கள் ஏதும் சேர்க்கவில்லை அதான் கொஞ்சம் லேட்.)  ஊர் சென்று வந்த நினைவுகள் தான். கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வைத்து இருந்தேன், இப்ப தான் போஸ்ட் பண்ண முடிந்தது. 

பல வருடங்களுக்கு பிறகு எங்களுக்குன்னு கொடுக்கப்பட்டுள்ள புது வீட்டில் போய் இறங்கினோம். அல்ஹம்து லில்லாஹ்.


 இந்த முறை நோன்பு பெருநாள் எங்கள் இருவீட்டாருடனும் பல வருடங்களுக்கு பிறகு சிறப்பாக சந்தோஷமாக கொண்டாடியாச்சு. எப்போதும் துபாயில் பிள்ளைகளுக்கு ஜூலை ஆகஸ்ட் தான் லீவு வரும் ஆகையால் பெருநாள் கொண்டாட்டத்துக்கு ஊருக்கு செல்ல முடியாது. இந்த முறை தான் நோன்பு + பெருநாள் ஜூலையில் வந்துள்ளது, அதற்கும் மேல் எனக்கு ஆபிஸில் லீவு கிடைச்சது ரொம்ப பெரிய விஷியம். அல்ஹம்து லில்லாஹ் போய் வந்ததில், எல்லோருடனும் கழிந்த ஓவ்வொரு தருணமும் பொன்ன்னானது. மனசும் மிக மென்மையானது.

இரண்டு பக்கமும் போட்டோ எடுத்தால் எந்தபக்கம் பார்பப்தாம்? 


லாபிர். இமாத், பரீத் உடன் என் பையன் ஹனீபுதீன்.

ரொம்ப வருடம் கழித்து முதல் முறையாக நோன்பு திறக்க்கும் போதேல்லாம் நான் வித விதமாக நோன்பு கஞ்சி செய்தாலும் பள்ளிவாசலில் பல பேருக்கு செய்யும் நோன்பு கஞ்சியின் சுவையே தனி தான், பள்ளி வாசல் நோன்பு கஞ்சியையும் ருசி பார்த்தாச்சு .
பெருநாள் அன்று அனைவரையும் போய் சந்தித்தோம்.( என் பையனுக்கு ஒரே ஜாலி)
காலையில் பெருநாள் தொழுகை , மதியம் விருந்து.
மாலை எல்லா சொந்த பந்தங்கள் வருகை, குழந்தைகளுக்கு எல்லாம் பெருநாள் காசு கொடுத்தோம், அதை வாங்கும் போது குழந்தைகள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை பார்க்கனுமே..



இரண்டு திருமணங்களுக்கு சென்றோம்.10.08.14 காலை  பாண்டிச்சேரியில் ஒரு திருமணம்,


அப்ப்டியே வர வழியில் மகாபலிபுரம் பீச் ஒரு விசிட் , வர வழியில் நல்ல மழை.




எனக்கு பிடிச்ச ஆள்வள்ளி(மரவள்ளி) கிழங்கு சிப்ஸ் வாங்கி சாப்பிட்டாச்சு. அடுத்து கரும்பு ஜூஸ்.




 இரவு ஒரு திருமணம், மிக அருமையான விருந்து.


மட்டன் பிரியாணி, எண்ணைகத்திரிக்காய், தயிர் பச்சடி, சிக்கன் 65
இடியாப்பம் , மட்டன் குருமா, பரோட்டா வெள்ளை குருமா, ப்ரட் ஹல்வா.

பிறகு கசாட்டா ஐஸ்கிரிம்.


அண்ணன் கூட போட்டோ எடுத்துக்குடாராம் சிரிப்பு தாங்க  முடியல சின்னவருக்கு


 கிளம்புவதற்கு, அடுத்த நாள் எங்க சாச்சி (சின்னடாடி, அவர்கள் இப்ப இல்லை)  விட்டில்   அவர்கள் மகன் Asif   திருமணம், ஆனால் கலந்து கொள்ள முடியல,

அதற்கு முன்னாடி நாள் , இஸ்லாமிய இல்லங்களில் திருமணத்துக்கு முன் மாப்பிள்ளை வீட்டில் மாலைகளம் என்று ஒரு சாப்பாடு வைப்பார்கள். 15.8.14 அதில் கலந்து கொண்டோம்.



பகாரா கானா, ஆலு கோஷ் குருமா, தால்சா, டுட்டி ஃப்ரூட்டி துல்லி/ கேசரி/ மிக அருமை. ஜாங்கிரி சாச்சி ஏ ஜலி ஊருக்கு போகிறாள் கூட இரண்டு ஜாங்கிரி சேர்த்து கொடுஙக்ள் என்று சொன்னார்கள்.




12.08.14 நாத்தனார் பட்டூரில் வீடு வாங்கி வாங்கி இருந்தார்கள். எல்லாரும் ஒன்றாக சேர்ந்து சென்று பார்த்து வந்தோம், வண்டியில் நாகூர் ஹனிபா பாட்டு கேட்டு கொண்டே வந்தோம். வீட்டுக்கு வந்து நாத்தானார் வீட்டில் அருமையான பிரியாணி , சிக்கன் 65 தயிர் சட்னி, எண்ணைக்காய்.


மாமனார் வீட்டில் ஊருக்கு கிளம்பும் முன் வீட்டில் ஒரு சின்ன கெட்டுகெதர்.






இந்த முறை அன்னுவை தவிர யாரையும் சந்திக்க முடியவில்லை. ஸாதிகா அக்கா , மர்லி, நாங்க முன்று பேரும் சந்திக்க எண்ணினோம் ஆனால் சந்தர்ப்பம் அமைய வில்லை.
 ஸாதிகா அக்கா, கதீஜா, மும்தாஜ், மர்லி, ஆஷிக்தம்பி , சிராஜ் தம்பி  ஆகியோருடன் போனில் பேசி கொண்டேன்.


இங்குள்ள தோழிகள் எங்க Chennai Plaza சென்னை ப்ளாசாவில் ஆர்டர் செய்து புர்கா ஹிஜாப் , ஷேலா வாங்கியமைக்கு மிக்க நன்றி.


மேலும் உங்கள் தோழிகளுக்கு யாருக்கும் தேவை பட்டால் சொல்லுங்கள் அனுப்பி வைக்கிறேன். அல்ஹம்து லில்லாஹ் இந்த முறை பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. எல்லா புகழும் ஏக வல்ல இறைவனுக்கே....

ஊரில் இருந்து திரும்பும் போது அன்புள்ளங்கள் வாங்கி கொடுத்தவை.. 


என் கணவரின் தம்பி ஆசையா வாங்கிகொடுத்த "தில் பசந்"





என் தங்கை பஷீரா வாங்கி கொடுத்த ஹாக்கின்ஸ் ப்ரஷர் குக்கர். அதில் அவள் பெயரையும் பதித்து கொடுத்து இருக்கிறாள். அப்ப தான் சமைக்கும் போதெல்லாம் அவளை நினைத்து துஆ செய்வேனாம்..



எங்க டாடி தங்கை மைம்பாத் தாத்தா , வீட்டில் போட்டு கொடுத்த நார்த்தங்காய் ஊறுகாய்.



என் ஆறவது நாத்தனார் லத்தி வீட்டில் காய்ச்ச மரத்து தேங்காய். 
இங்கு வந்ததும் உடனே வெட்டி துண்டு போட்டு ஃபீரிஜரில் வைத்து விட்டேன்.



அம்மா அன்பாக வாங்கி கொடுத்த மாம்பழம் 




தம்பி மனைவி இங்கு வந்து இறங்கியதும் சாப்பிட இனிப்பு சோமாஸ் கார சோமாஸ், பெட்டியில் வைத்து அழுத்தியதால் இப்படி இருக்கு.. இரண்டு நாள் வைத்து சாப்பிட்டு முடித்தோம்.


பெரிய நாத்தானார் இறால் வாங்கி சுருட்டி கொடுத்தாங்கள்.


இறால் பிரியாணி, இறால் காலிஃப்ளவர்  கூட்டு, இறால் சப்ஜி உப்புமா செய்து சாப்பிட்டாச்சு


என் தங்கை அனிசா செய்து கொடுத்த கறி முட்டை கொத்து பரோட்டா.என் பையனுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு.
எங்குவந்து முட்டை ரொட்டி ( முர்தபா ) செய்ய இருந்தேன், என் பையன் அனிசா ஆன்டி செய்தது போல் செய்து கொடுங்கள் என்றான்.



மேலபாளையம் ஸ்பெஷல் பாரம்பரிய இனிப்பு பணியம் , இது எனக்கு ரொம்ப பிடிக்கும்.இங்கு ஆபிஸில் ஓவ்வொருவரும் அவங்க அவஙக் பாரம்பரிய சிற்றுண்டியான , கேராளா ஸ்பெஷல் , உன்னி அப்பம், நேந்திரம் பழ சிப்ஸ், கீழக்கரை ஸ்பெஷல் தொதல், ஓட்டு மா,  மற்றும் சென்னை ஸ்பெஷல், மேலபாளையம் ஸ்பெஷல் திருநெல்வேலி ஹல்வா, கோதுமை பணியம், சீனி பணியம், சொய் (மடக்கு)பணியம் ஓட்டு மாவு ,  பிலிப்பை ஸ்பெஷல் ட்ரை மேங்கோ, என்று கொண்டு வந்து தரும் போது எனக்கும் ஸ்பெஷலாக இரண்டு பங்கு சேர்த்தே வரும் .

இந்த முறை ஊர் போய் வரும் போது , எனக்கு பிடிச்ச மேலபாளையம் ஸ்பெஷல் பணியம் ப்ரெஷ்ஷாகஆர்டர் செய்து வாங்கி வந்து எல்லாருக்கும் கொடுத்தேன். கூடவே ஆனந்த பவன் கார பூந்தி ஆளுக்கு ஒரு பாக்கெட்.




என் பையன் அவனுடைய நண்பர்களுக்காக டைரி மில்க் சில்க் அது ஊரில் மட்டும் தான் கிடைக்குமாம்  அதை வாங்கி வந்து கொடுத்தான்.





சென்னை ப்ளசா முக நூல் பேஜ் லைக் பண்ணாதவங்க லைக் கொடுங்க, உங்களுக்கு தெரிந்த வர்களுக்குஷேர் பண்ணுங்கள்,  

 , பெருநாள் நெருங்குகிறது. புது புது மாடல் புர்கா வகைகள் பர்தால் , மக்கான்னா , ஷேல ஷால் எல்லாம் வந்துள்ளது. தேவைபடுபவர்கள் சீக்கிறம் ஆர்டர் கொடுங்கள். என் மெயில் அல்லது என் முகநூல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் . துபாயில் இருந்து தைத்து அனுப்புவதால் 10 , 15 நாட்கள் ஆகும். எந்த ஊரில் இருந்தாலும் அனுப்பி வைக்கிறோம்.

feedbackjaleela@gmail.com
kamal10182@gmail.com
chennaiplazaik@gmail.com

என்ற முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

9 கருத்துகள்:

Angel said...

அம்மா அன்பாக வாங்கித்தந்த மாம்பழம் லண்டன் வரை இனிக்குது :)
so sweet of her :)

Angel said...

ஜலீ ஹனீப் பெரிய பிள்ளையா வளர்ந்திட்டார் :) முன்பு சின்னவரா போட்டோவில் பார்த்தது .
பெரியவருக்கு உங்க முக சாடை சின்னவர் அப்பா சாடை .
ஊருக்கு செல்வதே சந்தோஷம் அதில் அங்கே உறவினர் திருமணம்னா ரெட்டை மகிழ்ச்சிதான் :)
அந்த ஜாங்கிரி நல்லா கொழுமொழுன்னு இருக்கு ..
விரைவில் மேலப்பாளையம் பணியம் ரெஸிப்பி எதிர்ப்பார்க்கிறேன் :)

கோமதி அரசு said...

ஜலீலா, படங்கள் எல்லாம் அருமை.உறவுகளுடன் மகிழ்ச்சியாக உறவாடி பெருநாளை கொண்டாடியது மகிழ்ச்சியான தருணம்.

அடுத்தமுறை போகும் வரை இந்த நினைவுகள் நல்ல டானிக்.

Jaleela Kamal said...

வாங்க ஏஞ்சலின், உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

ஆமாம் திருமணங்களில் கலந்து கொண்டது ரொம்பசந்தோஷம். சின்னவர் என்னை மாதிரி. பெரியவரும் கொஞ்சம் என்னை மாதிரி தான் என்ன குழப்பிட்டேனா?

ஆமாம் பணியம் கண்டிப்பாக போடனும்.


Jaleela Kamal said...

வாங்க கோமதி அக்கா , அளவிலா மகிழ்சிளஆமாம் சரியாக சொன்னீர்கள்.

கோமதி அரசு said...



அன்பு ஜலீலா , என் வலைத்தளத்தில் ஒரு விருது உங்களுக்கு பெற்றுக் கொள்ளுங்கள். http://mathysblog.blogspot.com/2014/09/blog-post.html

ஹுஸைனம்மா said...

அந்த பணியம்தான் என் மகன்களின் ஆல் டைம் ஃபேவரைட். செய்முறைதான் தேடிகிட்டிருக்கேன். கண்டிப்பாப் போடுங்க.

Jaleela Kamal said...

வாங்க ஹுஸைன்னாம்மா ஓ உங்கள் மகனுக்கும் பணியம் பேவரிட்டா , கண்டிப்பாக போடுகிறேன்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா