Tuesday, September 2, 2014

ராஜ்மா புரோக்கோலி & வெஜ் புலாவ் /Rajma Broccoli & Veg Pulav





குழந்தைகளுக்கு பள்ளிக்கு மற்றும் பெரியவர்களுக்கு ஆபிஸ் கொண்டு செல்ல கட்டு சாதங்களானா தயிர் சாதம், தக்காளி சாதம், புளிசாதம் போன்றவை செய்து போரடத்து விட்டதா? இப்படி ஈசியாக குக்கரில் 10 நிமிடத்தைல் செய்து முடித்து விடலாம்.
ஹாக்கிங்ஸ்  குக்கர் பயன் படுத்துவதால், மிக குறைந்த நேரத்தில் செய்து முடித்துவிடுவேன். வெயிட்டும் சீக்கிரம் ரீலீஸ் ஆகிடும்.
படங்கள் ஸ்டெப் பை ஸ்டெப் எடுக்க முடியவில்லை இந்த படமும் சரியாக வரவில்லை..


ராஜ்மா புரோக்கோலி & வெஜ் புலாவ்

ஆயத்த  நேரம் - 10 நிமிடம்
சமைக்கும் நேரம் : 10 நிமிடம்
பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு

ஜலீலாவின் டிப்ஸோ டிப்ஸ்

புரோக்கோலியில் விட்டமன் டி சத்து அதிகமாக உள்ளது, ராஜ்மாவில்  கேன்சர் நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது. 

 புரோக்கோலி  சாப்பிடுவதின் பயன்கள்: கேன்சர் நோய் வராமல் தடுக்கவும், கண்பார்வை அதிகரிக்கவும், எலும்புகள் வலுவடையவும் செய்கிறது. ஆகையால் கூடுமானவரை இது போல புலாவ், பிரியாணி செய்யும் போது தானிய வகைகளும், புரோக்கோலியையும் சேர்த்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

ராஜ்மா ‍ 150 கிராம் (புரோஜன்)
பாசுமதி அரிசி  ‍ 300 கிராம்
சென்னா ‍ 50 கிராம் ( வேகவைத்தது)
வெங்காயம் ‍ 1 
இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ 1 மேசை கரண்டி

அரைக்க‌

தக்காளி ‍ - 1
கொத்துமல்லி புதினா இலை ‍ - சிறிது
ரெட் சில்லி பவுடர் ‍ - 1தேக்கரண்டி (அ) சிவப்பு முழு மிளகாய் ‍ 2


புரோக்கோலி ‍ 100 கிராம்
கேரட் ‍, பீன்ஸ்,கார்ன், பீஸ் ‍ 100 கிராம்
பச்சமிளகாய் ‍ 1

கரம் மசாலா தூள் ‍- 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் ‍ - 1/4 தேக்கரண்டி

சர்க்கரை ‍- 1/4 தேக்கரண்டி
உப்பு தேவைக்கு 



செய்முறை

அரிசியை களைந்து ஊறவைக்கவும்.

புரோக்கோலியை பூவாக பிரித்து கழுவி வைக்கவும்.

தககாளி ,கொத்துமல்லி , புதினா, மிளகாயை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.


அடுப்பில் குக்கரை ஏற்றி காயவைத்து எண்ணையை ஊற்றி வெங்காயம் ,இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு சிவற வதகக்வும்.

பிறகு காய் கறிகளை மற்றும் ராஜ்மா (கிட்னி பீன்ஸ்) சென்னா சேர்த்து வதகக்வும்.
அடுத்து சேர்க்கவேண்டிய தூள் வகைகள், மஞ்சள், கரம் மசாலா, உப்பு சர்க்கரையை சேர்த்து நன்கு வதக்கி அரைத்த விழுதை சேர்த்து சிறிது நேரம் சிறிய தீயில் வேக விடவும்.

தண்ணீர் ஒரு கப் அரிசிக்கு ஓன்னறை கப் அளவு அளந்து ஊற்றி கொதிக்கவிட்டு அரிசியை வடித்து போட்டு நன்கு கொதிக்க விட்டு குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இரக்கவும்.

பிறகு ஆவி அடங்கியதும் நன்கு கிளறி வேறு பாத்திரத்தில் மாற்றவும்.

மிக அருமையான சத்தான ராஜ்மா புலாவ் ரெடி.

Tips:

புரோக்கோலியில் விட்டமன் டி சத்து அதிகமாக உள்ளது, ராஜ்மாவில்  கேன்சர் நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது. 

 புரோக்கோலி  சாப்பிடுவதின் பயன்கள்: கேன்சர் நோய் வராமல் தடுக்கவும், கண்பார்வை அதிகரிக்கவும், எலும்புகள் வலுவடையவும் செய்கிறது. 

********

முகநூல் பேஜ்: https://www.facebook.com/Samaiyalattakaasam
முகநூல் ஐடி : https://www.facebook.com/jaleela.kamal

வெஜிடேபுள் புலாவ், ராஜ்மா புலாவ்/பிரியாணி //
Lunch box recipe/One Pot Meal


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

2 கருத்துகள்:

Menaga Sathia said...

^^சத்தான ப்ரோக்கலி புலாவ் அருமையாக இருக்கு...

கோமதி அரசு said...

அருமையான ராஜ்மா புரோக்கோலி புலாவ்.
நன்றி ஜலீலா.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா