Monday, December 28, 2015

ராகி பீட்ரூட் தோசை & புதினா துவையல்



Healthy Diet Ragi Beet Dosa & Mint Chutney.
ராகி பீட்ரூட் தோசை & புதினா துவையல்




தேவையான பொருட்கள்
  1. ராகி மாவு - 100 கிராம்
  2. அரிசி மாவு - ஒரு மேசைகரண்டி
  3. ரவை - ஒரு தேக்கரண்டி
  4. துருவிய பீட்ரூட் - முன்று மேசைகரண்டி
  5. பொடியாக நருக்கிய பச்சமிளகாய் - ஒன்று
  6. உப்பு - தேவைக்கு
  7. தண்ணீர் -தேவைக்கு
  8. வெங்காயம் - இரண்டு மேசைகரண்டி பொடியாக நருகியது
  9. கொத்தும்மல்லி தழை பொடியாக அரிந்தது சிறிது
  10. நல்லெண்ணை அல்லது ஆலிவ் ஆயில் - தோசை சுட தேவையான அளவு

செய்முறை
  1. ராகி மாவுடன் எண்ணை தவிர மற்ற அனைத்துபொருகளையும் தேவைக்கு தண்ணீர்சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலக்கி 10 நிமிடம் ஊற்வைக்கவும்.
  2. பிறகு தோசை தவ்வாவில் தோசைகளாக வார்த்து சுற்றிலும் எண்ணை சிறிது ஊற்று முடி போட்டு இரணடுபக்கமும் வேக விட்டு எடுக்கவும்.
  3. இதற்கு தொட்டு கொள்ள புதினா துவையல் மற்றும் இட்லி மிளகாய் பொடியுடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.
  4. காலை டிபன் அல்லது இரவு டிபனுக்கு ஏற்றது,






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, December 27, 2015

கோக்கோ ப்ளக்சீட் மைக்ரோவேவ் கப் கேக் (Paleo Breakfast)

கோக்கோ ப்ளக்சீட் மைக்ரோவேவ் கப் கேக் (Paleo Breakfast)
தினம் காலையில் முட்டை சாப்பிட்டு போரடித்து போனவர்களுக்கு . இது போல் கப் கேக்காக செய்து சாப்பிடலாம், நிமிஷத்தில் செய்து விடலாம்
கீழே உள்ளது என் ஐடியாவில் செய்தது.




ப்ளாக்சீட் என்பது ஆளிவிதை ( சைவ பேலியோவிற்கு ஏற்றது)

ப்ளக்சீட் கோக்கோ மினி கப் கேக் ( பேலியோ டிபன் அல்லது டின்னர்)
செய்முறை
ஆளி விதை ( ப்ளாக்ஸ் சீட்) பவுடர் - ஒரு மேசைகரண்டி
டார்க் சாக்லேட் – 1 இன்ச் சைஸ் பார் 2 எண்ணிக்கை
பட்டர் – ஒரு மேசைகரண்டி அ தேங்காய் எண்ணை
முட்டை ஒன்று
பேக்கிங் பவுடர் – அரை தேக்கரண்டி
தேங்காய் பவுடர் – ஒரு மேசை கரண்டி
கோகோ பவுடர் - ஒரு தேக்கரண்டி
பால் – சிறிது
பாதாம் - 5 பொடியாக அரிந்தது




செய்முறை
முட்டையை நுரை பொங்க அடித்து வைக்கவும்
டார்க் சாக்லேட்டை உருக்கி அதில் பட்டர் சேர்த்து அடித்து முட்டை, பால் சேர்த்து கிளறவும்.
தேங்காய் பவுடர், ப்ளாக்ஸீட் பவுடர், கோக்கோ பவுடர்,பேக்கிங் பவுடர், சேர்த்து கலக்கவும்.
பொடியாக அரிந்த பாதாம்மை சேர்க்கவும்.
மைக்ரோவில் கப்பில் உருக்கிய பட்டரை தடவி கலவையை ஊற்றி இரண்டு நிமிடம் வைத்து எடுக்கவும்.




கவனிக்க:
ஓவன், மைக்ரோ வேவ் அவன் இல்லாதவர்கள்.
இதை குக்கரில் கிழே உப்பை தூவி உள்ளே பேக் செய்யும் பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு விசில் போடாமல் 20 முற்சூடு செய்து விட்டு மேலும் 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.


சைவ பேலியோவில் முட்டை சேர்க்காதவர்கள் முட்டை க்கு பதில் தயிர் சேர்த்து கொள்ளலாம்/





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, December 19, 2015

தக்காளி கேரட் சட்னி - 2


தக்காளி கேரட் சட்னி

அரைக்க

பழுத்த தக்காளி - 3 பெரியது
காரட் - ஒன்று
முழு சிவப்பு மிளகாய் - 2
ஆச்சி சிவப்பு மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
இஞ்சி - சிறியதுண்டு (கால் இன்ச் சைஸ்)
வெல்லம் - சிறியது துண்டு ( கால் இன்ச் சைஸ்)
உப்பு - தேவைக்கு
தாளிக்க 
எண்ணை - 1 தேக்கரண்டி (பேலியோ சட்னிக்கு சாதா எண்ணைக்குபதில் நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணையில் செய்து கொள்ளவும்
கடுகு - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது

செய்முறை

முதலில் அரைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியை காயவைத்த்து எண்ணை கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த கலவையை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு தண்ணீர் சிறிது வற்றியதும் இரக்கவும்.
Tomato carrot chutney - paleo diet
பேலியோ சட்னி. பக்க உணவு

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, December 16, 2015

கிரில்ட் மிக்ஸட் வெஜ்டேபுள் - Mixed Grill Vegetables for Paleo




பேலியோ வெஜ்ஜி - லன்ச் மெனு

கிரில்ட் மிக்ஸட் வெஜ்டேபுள்
Grilled Mixed Vegetables
‪#‎grill‬#vegetable#Paleo
தேவையான பொருட்கள்
...
காய் கறிகள்
காலிப்ளவர்
கத்திரிக்காய்
ஜுக்கினி
கேரட்
சிவப்பு குடமிளகாய்
பச்சை குடமிளகாய்
கோவைக்காய்
புடலங்காய்
எல்லாம் சேர்ந்தது முக்கால் கிலோ

ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மிளகு தூள், இரண்டு மேசைகரண்டி எலுமிச்சை சாறு, உப்பு ஒரு தேக்கரண்டி, ஆச்சி கபாப் மசாலா ஒரு தேக்கரண்டி., கார்லிக் பட்டர் (அ ) ஆலிவ் ஆயில் 2 மேசைரண்டி


செய்முறை
காய் கறிகளை அரிந்து கழுவி மேலே கொடுக்கப்பட்டுள்ள மசலாக்களை சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
300 டிகிரி முற்சூடு படுத்திய ஓவனில் 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
ஓவன் இல்லாதவர்கள் ஒரு நான்ஸ்டிக் தவ்வாவில் குறைவான தீயில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.
காய்கறிகள் மேலே உள்ள காய்கள் மற்றும் உங்களுக்கு விருப்பமான காய்களும் சேர்த்துகொள்ளலாம்.

கவனிக்க: இதில் மசாலா நம் விருப்பம் தான் ஜஸ்ட் பெப்பர் சால்ட், லெமன் ஜூஸ், தேங்காய் எண்ணை கலந்து வைக்கலாம்l இல்லை வெள்ளை மிளகு தூள் சோயா சாஸ், வினிகர் ஆலிவ் ஆயில் கலந்தும், வைக்கலாம்

பரிமாறும் அளவு – 3 நபருக்கு.

பேலியோ டயட் ரெசிபிகள்
Paleo veggie grill



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, November 18, 2015

பேலியோ காய்கறி கஞ்சி & முட்டை சாலட் - பேலியோ டயட் - 2




காலிப்ளவர்  ஜுக்கினி சௌ சௌ கஞ்சி
Cauliflower Zukkini Chow Chow Soup
காலிப்ளவர்  , ஜுக்கினி, சௌ சௌ - 1 கப்
சின்ன வெங்காயம் - 8 பொடியாக நருக்கியது
பூண்டு - 6 பல்
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு  - 5 எண்ணிக்கை
உப்பு - தேவைக்கு


தாளிக்க \

நெய் - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காய்ம் 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் -  கால் தேக்கரண்டி
கொத்து மல்லி கருவேப்பிலை - சிறிது



செய்முறை

காளீப்ளவர் ,ஜுக்கினி, சௌ சௌ முன்றையும் துருவி வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தும் முன்று கப் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் காலிப்ளவர், ஜுக்கினி, சௌ சௌ சேர்த்து அதில் வெங்காய்ம் பூண்டு பொடியாக அரிந்து சேர்க்கவும்.
மிளகு சீரகம் உப்பு சேர்த்து நன்கு வேக விடவும். வெந்ததும் பிளன்டரில் மசிக்கவும்.

பிறகு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து  வெந்த பேலியோ காய் கஞ்சியில் சேர்க்கவும்.

Paleo Diet Soup பேலியோ டயட்  காய் கறி கஞ்சி ரெடி /


செய்முறை:


பேலியோ டயட்டில் முட்டைக்கு தான் முதலிடம் அதை முதல் முதல் எல்லாருமே அவித்து அல்லது புல்ஸ் ஐ போட்டு சாப்பிடுவது எல்லாருக்குமே தெரியும்.

அதுவும் முறையாக பதமாக செய்தால் இன்னும் சுவை கூடும், சப்பிடும் போது மஞ்சள் கரு உடைந்து வேஸ்ட் ஆகாது.முதலில் புல்ஸ் ஐ யை பார்ப்போம்.

தேங்காய் எண்ணை அல்லது நெய் விட்டு தவ்வா சூடு வந்ததும்
முட்டையை தேவைக்கு கலங்காமல் முழுசாக ஒன்றாகவோ, இரண்டாகவோ, மூன்றாகவோ அல்லது நான்காகவோ ஊற்றி விட்டு தீயின் தனலை சற்று குறைவாக வைத்து 2 நிமிடம் வேகவிடுங்கள்.
அடுத்து லேசாக தட்டிய மிளகில் உப்பு கலந்து தூவி விட்டு ஒரு முடி போட்டு 1 நிமிடம் வைத்து அடுப்பை ஆஃப் செய்யவும்.
இப்ப எடுத்தால் மஞ்சள் கரு உடையாமல் வெந்தும் வேகமாலும் அரை பதமாக வெந்து சாப்பிட இலகுவாக இருக்கும்.


குறிப்பு: இதில் இருக்கும் கஞ்சி வெள்ளை வாயு கஞ்சி அரிசியில் செய்வதை பேலியோ காய்களில் செய்துள்ளேன்.


லெட்டியுஸ் இலை - பொடியாக அரிந்தது - அரை கப்
கேரட் - துருவயது - கால் கப்
குகும்பர் துருவது - சிறிது
புதினா கொத்துமல்லி - சிறிது

ட்ரெஸிங் செய்ய
ஆலிவ் ஆயில்
உப்பு
மிளகு தூள்

ஒரு வாயகன்ற பவுளில் சாலட் காய்களை சேர்த்து ட்ரெஸிங் செய்ய வேண்டிய பொருட்களை சேர்த்து கலக்கி , அவித்த முட்டையுடன் பரிமாறவும்.


மேலும் பேலியோ டயட் பற்றி அறிய தினமணி யில் ஞாயிறு தோறும் வெளியாகி கொண்டு வருகிறது.







https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, November 16, 2015

கேபேஜ் வறவு/தோரன் - பேலியோ டயட் ரெசிபி




கேபேஜ் வறவு/தோரன்
Cabbage Varavu/Thoran

கேரளா ரெசிபியில் ஓணம் சதியாவில் வைக்கும் 36 வகை தாளி சாப்பாடு வகைகலில் தோரனும் ஒன்று அதை எல்லா வகையான காய்கறிகளிலும் செய்யலாம். இதை நான் முட்டை கோஸ் தோரனாக செய்து உள்ளேன்.
இது டயட்க்கு ஏற்ற ரெசிபி , நார்மல் டயட் + பேலியோ டயட்டுக்கு உகந்த சமையல்

தேவையான பொருட்கள்

 .   துருவிய (முட்டை கோஸ்) கேபேஜ் – 400 கிராம்
2.   இஞ்சி துருவல் – ஒரு தேக்கரண்டி
3.   பச்சமிளகாய் – 2 எண்ணிக்கை பொடியாக அரிந்தது
4.   சின்ன வெங்காயம் – 8
5.   துருவிய தேங்காய் – கால் கப்
6.   தண்ணீர் 4 மேசை கரண்டி
7.   மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
8.   உப்பு - தேவைக்கு


தாளிக்க
1.   தேங்காய் எண்ணை – 2 மேசைகரண்டி
2.   கடுகு – அரை தேக்கரண்டி
3.   கருவேப்பிலை – சிறிது
4.   சீரகம் – அரைதேக்கரண்டி

செய்முறை

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ( முட்டைகோஸ், பச்சமிளகாய் , இஞ்சி , சின்ன வெங்காயம்,உப்பு, மஞ்சள் தூள் ) அனைத்தையும் கலக்கி வைக்கவும்.

தாளிக்கும் சட்டியை சூடு படுத்தி அதில் தேங்காய் என்னை யை ஊற்றி காயவைத்து அதில் கடுகு,கருவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளித்து கலந்து வைத்துள்ள முட்டை கோஸை சேர்த்து நன்கு பிரட்டி தண்ணீரை தெளித்து முடி போட்டு சிறு தீயில் 7 நிமிடங்கள் வேகவிடவும். வெந்ததும் கலக்கி மாற்றி பரிமாறவும்.

பேலியோ/Paleo Diet  டயட்டுக்கு உகந்த கேபேஜ் பொரியல் ரெடி.

இப்போது முன்னோர் உணவு என்று நார்மல் டயட்டில் இருந்து பேலியோ டயட் மூலம் பல கிலோ  உடல் எடை குறைகிறது, இதன் விளக்கங்கள் வார பத்திரிக்கையான தினமணியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், வாரவாரம் ஞாயிற்று கிழமை பேலியோ டயட்டை பற்றி பகிர்ந்து வருகிறாரக்ள்.

Tag:Paleo Diet Recipes, Cabbage






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, November 7, 2015

பழைய பட்டு புடவையில் புதிய பைகள்





பழைய துணியில் புதிய பைகள்



பழைய பட்டு புடவையில் புதிய கைப்பைகள்
என்ன பட்டு புடவையிலா
போன பதிவில் என் பள்ளி தோழி கவிதா குங்குமம் தோழி மூலம் கிடைக்க பெற்றேன் என்று சொன்னேன் .







போன பதிவில் என் பள்ளி தோழி கவிதாவை குங்குமம் தோழி இணைத்தது என்று எழுதி இருந்தேன்,. சரி கவிதா என்ன செய்து கொண்டிருக்கிறால் என்று விசாரித்த போது.

பெயிண்டிங் (Painting), ட்ரெக்கோட்டா ஜுவெல்லரி(Terracotta Jewellery) செய்வது மேலும் பழைய , கொஞ்சம் டேமேஜ் ஆன பட்டு புடவையை வைத்து ட்ராவல் கைப்பைகள் ( Travel Bag) தைத்து கொடுக்கிறாள், வீட்டிலும் நிறைய பிள்ளைகளுக்கு சொல்லிகொடுக்கிறாள்.





//பட்டு சேலைகள் சில கரை பட்டாலோ ஒரு சில இடங்களில் கிழிந்து விட்டாலோ அதை மறுபடி பயன் படுத்த முடியாது, சில அதை சுடிதாராகவோ அல்லது குழந்தைகளுக்கு பட்டு பாவாடையாக வோ தைப்பார்கள் நானும் அதை பற்றி முன்பே டிப்ஸில் போட்டுள்ளேன். பட்டு புடவை பயன் படுத்தாமல் முடியாமல் போனல் அதை திரை சீலையாகவும் பயன் படுத்தலாம் என்றேன்.//

அப்படியும் போய் மீதி பல்லு எல்லாம் வேஸ்ட் ஆகும் அதையும் கவிதா வேஸ்ட் செய்யாமல் ட்ராவல் பேக் , மொபைல் பவுச் போன்றவை தைக்க்கிறார்கள்.



உடனே கவியை பற்றி குங்குமம் தோழியில் ஒரு பதிவு போட்டேன். உடனே கல்யாண கிஃப்டுக்காக 200 ட்ராவல் பேக் ஆர்டர் , பட்டு சேலையில் தைக்க ஆர்டர் வந்து அதை நல்லபடியாக தைத்தும் கஸ்டர்களுக்கு அனுப்பி விட்டாள்.
ஜலீ உன் நட்பு மீண்டும் கிடைத்தது ரொம்ப சந்தோஷம்
All credit goes to you jalee Thank u de

என்று சொன்னாள் எனக்கும் ரொம்ப சந்தோஷம்,

 


படத்தில் இருப்பது ஆர்டருக்கு தைத்து அனுப்பிய பட்டு புடவை கைப்பைகள்.

கவிதா வசிப்பது கோயம்புத்தூரில் அவர்களை தொடர்பு கொள்ளவேண்டிய எண் : 00 91 9940552185


உங்கள் யாருக்கும் இது போல் தேவைப்பட்டால் சொல்லுங்கள். என்னை தொடர்பு கொள்ளுங்கள்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, October 22, 2015

குங்குமம் தோழியால் இணைந்த பள்ளி தோழிகள்






பள்ளி தோழிகளை பல வருடங்கள் கழித்து இணைத்த குங்குமம் தோழி நன்றி!!!





குங்குமம் தோழிக்கு ஜலீலா எழுதுவது


என் ரெசிபி ரமலான் இனைப்பில் பிரசுகரமானதும் நான் துபாயில் இருப்பதால் எனக்கு புக் கிடைக்கவில்லை, ஜூன் மாதம் புக் வெளியானதும் உடனே என் பள்ளி தோழி கவிதா குங்குமம் ஆபிஸ்க்கு தொடர்ந்து போன் செய்து என்னை தொடர்பு கொண்டார் கவிதா//


ஆம் பள்ளி காலத்தில் எனக்கு நிறைய நட்புகள் என்று கிடையாது எல்லாரிடமும் சமமாக தான் பழகுவேன். அதில் 4 பேர் ரொம்ப குலோஸ் சித்ரா, கவிதா, ஹசீனா, வள்ளி .  5 பேர் சேர்ந்தால் அங்கு கலகலப்பு அதிகமாக இருக்கும். பள்ளி பீச் பக்கம் என்பதால் அங்கு மரத்தடியில் மதியம் லன்ச் சாப்பிடும் போது உணவுபரிமாற்றம். வள்ளி கொண்டு வரும் பருப்பு உருண்டை குழம்பு, சித்ரா கொண்டுவரும் டபுள் பீன்ஸ் பிரிஞ்சி சாதம், ஹசீனா கொண்டுவரும் (எங்க பெரிமாவின் ஸ்பெஷல் ரொட்டி தக்காளி சட்னி) என் அம்மாவின் ஸ்பெஷல் பூரி உருளை கிழங்கு எல்லாருக்கும் பிடிக்கும். கவிதாவின் கொண்டைலை புளி சாதம் எல்லாம் கலந்து சாப்பிட்டு விட்டு பீச் காற்றில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு அங்கு விற்கு தள்ளூ வண்டியில் இருக்கும் குச்சி ஐஸ் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்த நாட்கள் இனி வருமா?
பீச் அருகிலேயே பள்ளி அருமை ஹிஹி நல்ல தூங்கலாம்..குளு குளுன்னு நல்ல காத்து வரும்.

அது ஒரு இனிய கானாக்காலாம்.



பள்ளிகாலம் முடிந்ததும் நட்புகளை மிகவும் மதிப்பவள். நாங்க பள்ளி காலம் முடியும் போதே ஒருவருக்கு ஒருவர் .. எப்படியாவது வருடம் ஒரு முறை கண்டிப்பாக சந்திக்கனும் என்று பேசி வைத்துகொண்டோம் , முதலில் என் திருமணத்துக்கு எல்லா தோழிகளூம் வந்தார்கள் கவிதா சித்ரா எனக்கு மேக்கபும் போட்டு விட்டார்கள். அடுத்து ஹசீனா , சித்ரா திருமணம் வரை சந்தித்தோம்.நான் கல்யாணம் ஆனதும்  சென்னையில் இருந்தவரை வருடம் ஒரு முறையாவது போய் தோழிகளை சந்திப்பேன்.ஆனால் துபாய் வந்ததில் இருந்து முன்பெல்லாம் 2 வருடம் ஒரு முறை தான் ஊருக்கு போக முடிந்தது , போனால் கண்டிப்பாக எல்லாரையும் மீட் பண்ணுவேன், வள்ளி எங்க வீட்டு கிட்டேயே திருவல்லி கேனியில் பிரிட்டிங் ப்ரஸில் வேலை பார்த்தாள், அடிக்கடி போய் பார்ப்பேன்.

சித்ராவும் பக்கம் தான் , ஹசீனா என் பெரிமா பொண்ணு தான் கவிதா மட்டும் பட்டினபாக்கம் தாண்டி உள்ள எஸ்டேட் , அங்கும் தவறாமல் போய் அவளையும் அவர்கள்குடும்பதாரையும் சந்திப்பேன், பிறகு கடந்த 20 வருடமாக ஹசீனாவை தவிர  யாருடனும் தொடர்பு இல்லை, முக நூல் முன்பே ஆரம்பித்தாலும் இப்ப 3 வருடமாக தான் தான் போஸ்டிங் போடுவதிலும் என் வியாபரம் சம்பந்தமாக கஸ்டமர்களை அனுகவும் பயன்படுத்தி வருகிறேன், அங்கு யாரும் என் பள்ளி தோழிகள் யாரும் இருக்கிறார்களா என்று அடிக்கடி தேடி பார்ப்பேன், இது வரை யாரும் கிடைக்கவில்லை.

 குங்குமம் தோழியில் என் சமையல் குறிப்பு வெளியானதை பார்த்து அன்றே  ஜலீயை கண்டு பிடிச்சிட்டோம் என்று என் பள்ளி தோழி கவிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை, , உடனே  குங்குமம் ஆபிஸ்க்கு போன் செய்து எனக்கு அவளுடைய நம்பரை தோழி வைதேகி மூலமாக எனக்கு முக நூலில் கொடுத்தாள் நன்றி குங்குமம் தோழி.

இப்போது குங்குமம் தோழி என்னையும் கவிதாவையும் இணைத்துள்ளது, கவிதாவிடன் நானும் இங்கு இருந்து போனில் பேசினேன் அவளும் பேசினாள்.  கவிதாவுக்கு என் பெரிமா பொண்ணு ஹசீனா நம்பரை நான் கொடுக்க மிகவும் சந்தோஷமாக ஹசீ கிட்ட பேசிட்டேன்டி ஏய் ஜலீ ரொம்ப சந்தோசம் டி என்றாள் இப்போது வாட்ஸ்அப்பில் இணைந்துள்ளோம், மற்ற தோழிகள் சித்ரா மற்றும் வள்ளியையும் இந்த குங்குமம் இணைக்கும் என்று நினைக்கிறேன்.என் முக நூல் ஐடி - jaleelakamal

என் இன்னும் பல தோழிகள் என்னை தேடுபவர்கள் இணைந்து கொள்ளுங்கள்.


நன்றி

குங்குமம் தோழி














https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, October 16, 2015

இஞ்சி கொத்து பணியாரம் / பிஸ்கேட் - Ginger Shape Biscuit





இஞ்சி கொத்து 
inji koththu biscuit
தேவையானவை
மைதா மாவு – ஒரு டம்ளர்
சர்க்கரை – ஒரு குழி கரண்டி
பட்டர் (அ) நெய் – இரண்டு மேசை கரண்டி
உப்பு – அரை சிட்டிக்கை
ஏலப்பொடி – அரை தேக்கரண்டி

செய்முறை
பட்டரை உருக்கிகொள்ளவும், சர்க்கரையை பொடித்து கொள்ளவும்.
மைதாவுடன் , பட்டர், சர்க்கரை , ஏலப்பொடி உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை முன்று உருண்டையாக பிரித்து வட்டவடிவமாக தேய்த்து நீளமாக கட் செய்து இடை இடையே சரிவலாக  ஒரு இஞ்ச் அளவுக்கு கட் செய்து லேசாக திருப்பி விடவும். இதன் வடிவம் பார்க்க இஞ்சி போல் இருக்கும். இதை  டைமன்ட், போ போன்ற வடிவிலும் கட் செய்யலாம்.
எண்ணையை காயவைத்து கட் செய்து வைத்துள்ள இஞ்சி கொத்தை போட்டு பொரித்து எடுக்கவும்.
பள்ளி விடுமுறை நேரம் குட்டீஸூக்கு ஏற்ற சுவையான இஞ்சி கொத்து பிஸ்கேட்.

கவனிக்க : இதில் முட்டை மற்றும் சிறிது பாதாம் பவுடர் கலந்து செய்தால் இன்னும் நல்ல ருசியாக இருக்கும்.






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, October 15, 2015

இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள்



உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இஸ்லாமிய வருடங்களில் முதல் வருடம் இந்த முஹரம் மாதம் தான், ஹஜ் மாதம் இஸ்லாமிய வருடங்களின் கடைசி மாதம்.
 நோன்பு, 9, 10 வைப்பது சிறப்பு.


முஹரம் மாதமும் ஆஷூரா நோன்பும்



Islamic  New Year - 1437

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, September 28, 2015

ஆட்டு ஸ்பேர் பாட்ஸ் கீரை பிரியாணி குக்கர் முறை - Goat Spare Parts Palak Biriyani


 
ஹஜ் பெருநாளுக்கு குர்பாணி கொடுத்து அதில் உள்ள் ஈரல், மண்பத்தை தில், நுரை எல்லாம் ஒரேயடியாக செய்து சாப்பிடமுடியாது அதை இப்படி ஸ்பேர்பாட்ஸ் புலாவாக செய்தால் எல்லா சத்துக்களும் அடங்க்கிய பிரியாணி ரெடி. ஏற்கனவே ஆட்டு ஈரல் பிரியாணி இங்கு கொடுத்துள்ளேன்.

பெருநாள் முன்பே இந்த ரெசிபியை கொடுக்கனும் என்று இருந்தேன் , கொஞ்சம் லேட்டாகி விட்டது. லேட்டானா என்ன எப்ப வேணுமானாலும் சமைத்து சாப்பிடலாமே.
 
 
ஆட்டு ஸ்பேர் பாட்ஸ் கீரை புலாவ் ( அ) ஸ்பேர் பாட்ஸ் கீரை பிரியாணி
Goat Spare Parts Biriyani/Pulav
கடலை பருப்பு தேங்காய் பால் பாலக் கீரை பிரியாணி/புலாவ்
 
 
தரமான பாசுமதி அரிசி – 300 கிராம்
மட்டன் – கால் கிலோ
(நுரை,ஈரல்,கிட்னி,தில்)- கால் கிலோ
எண்ணை – 75 மில்லி ( நெய்யில் செய்பவர்கள் பாதி எண்ணை பாதி நெய் போட்டு கொள்ளலாம்)
பட்டை, ஏலம்,கிராம்பு, பிரிஞ்சி இலை - தலா இரண்டு இரண்டு
வெங்காயம் – முன்று
தக்காளி – முன்று
கொத்துமல்லி தழை – சிறிது
பச்ச மிளகாய் – இரண்டு
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் – ஒரு தேக்க்ரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு (2tps) ( ருசிக்கு தகுந்தவாறு )
தேங்காய் பவுடர்  – மூன்று மேசை கரண்டி
பாலக் கீரை – அரை கட்டு
கடலை பருப்பு – 50 கிராம்
கேரட் -50 கிராம், வாழக்காய் பாதி, கத்திரிக்காய் - 1
செய்முறை
 
 
 
 
 

1. அரிசியை களைந்து ஊறவைக்கவும்,கடலை பருப்பையும் ஊறவைக்கவும். தேங்காய் பவுடரை கரைத்து வைக்கவும் (அரை முறி தேங்காய் அரைத்து பாலெடுக்கவும்.) மட்டனை , ஸ்பேர்பாட்ஸ் வகைகளை தனியாக கழுவிவைக்கவும்.வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.கேரட் ,வாழைக்காய், கத்திரிக்காயை பெரிய துண்டுகளாக போட்டு வைக்கவும்.



3..வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
 
4. தக்காளி ,பச்சமிளகாய், கொத்துமல்லி கீரை சேர்த்து 5 நிமிடம் வதக்கி மிளகாய் தூள்,தனியாதூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
 

5.மட்டனை சேர்த்து கிளறி 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
6. ஈரல் வகைகள்,கத்தரி வாழை ,கேரட் சேர்த்து வதக்கவும்.


7.மசலா வகைக்ள் கிரிப்பாக தீயின் தனலை 5 நிமிடம் சிம்மில் வைத்து மூடி போடவும்.
8.க்கரில் இரண்டு விசில் விட்டு இரக்கவும்

10.தேங்காய் பால் + தண்ணீர்  அரிசிக்கு ஒன்றுக்கு ஒன்னறை மடங்கு வீதம் ஊற்றவும்.நன்கு கொதிக்க விடவும்.
11 ஊறிய அரிசி + கடலை பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.
12 கழுவி வைத்துள்ள பாலக் கீரையை சேர்க்கவும் . (அரைக்கீரை கிடைத்தால் அதுவும் போடலாம்)

13. குக்கரை மூடி மிதமான தீயில் இரண்டு விசில் விட்டு இரக்கவும்.
 
14.வையான ஸ்பேர் பாட்ஸ் புலாவ் ரெடி.

 குறிப்பு:
இது ஒரு வகையான வித்தியாசமான புலாவ். இதை  (  ஸ்பேர் பாட்ஸ் மட்டனை தாளித்து வேகவைத்து ) அடுத்து தேங்காய் சாதம் போல் செய்து தம் போடும் போது இந்த தாளித்த கூட்டு, கடலை, பருப்பு அரிசி சேர்த்துதம்போட்டு கடைசியாக கீரையும் சேர்த்து சிறிது நேரம் தம்மில் விடலாம்) இரண்டு விதமாக செய்யலாம்.
ரொம்ப சத்தானது, கர்பிணி பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எல்லோரும் செய்து சாப்பிடலாம்.

இது இஸ்லாமிய இல்லங்களில் எஙக் வீடுகளில் செய்யும் பல வகை பிரியாணிகளில் இதுவும் ஒன்று.
 

 இதில் பாலக்கீரைக்கு பதில் சிறுகீரை மற்றும் வேறு எந்த கீரையும் சேர்த்து செய்யலாம்.
 
 
//பேலியோ டயட் செய்பவர்கள், இதில் அரிசி, கடலை பருப்பு சேர்த்து தம் போடாமல் அப்படியே கட்டியாக கூட்டாக செய்து ஒரு வேளை உணவிற்கு சாப்பிடலாம்.//
 
Tags: Hemoglobin , Paleo Diet, Palak Vegetable Biriyani, Liver Biriyani,
 
 




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/