Tuesday, February 3, 2015

ப்ளைன் உருளை மந்தி - அரபிக் ப்ளைன் பிரியாணி - Plain Potato Mandi/Arabic Plain Biriyani





பிளைன்ஈஉருளை மந்தி - Plain Potato Mandi


தேவையானவை
அரிசி வேகவைக்க
தரமான பாஸ்மதி அரிசி – 2 டம்ளர்
உப்பு- தேவைக்கு
பச்சமிளகாய் – 2 பெரியது அல்லது 4 சிறியது இரண்டாக கீறியது
சீரகம் – 2 தேக்கரண்டி
எண்ணை – 2 ஸ்பூன்
கிராம்பு - 3
முழு மிளகு – அரை தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு

தம் போடுவதற்கு
எண்ணை – இரண்டு மேசைகரண்டி
வெங்காயம் – 2 பெரியது
மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி
வட்டவடிவமாக அரிந்த உருளை கிழங்கு – 2
ரெட் கலர் பொடி – ஒரு சிட்டிக்கை

செய்முறை

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் கிராம்பு, மிளகு, சீரகம், பச்ச மிளகாய், எண்ணை , உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதி வந்தததும் ஊறவைத்த அரிசியை தட்டி கொதிக்க விட்டு முக்கால் பதத்தில் வடிக்கவும்.


தனியாக வேறு பாத்திரத்தில் எண்ணை விட்டு வெங்காயத்தை சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வறுத்து வைக்கவும்.



வதக்கிய வெங்காயத்தை தனியாக எடுத்து விட்டு அதே சட்டியில் வட்ட வடிவமாக அரிந்து வைத்துள்ள உருளை கிழங்கை பரவலாக வைத்து சிறிது எண்ணை தெளித்து லேசாக வதக்கி கொள்ளவும் எண்ணையுடன் முக்கால் பதமாக வடித்து வைத்துள்ள சாதததை சேர்க்கவும்.



வறுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து லேசாக கிளறி விட்டு, கலர் பொடி தண்ணீரில் கலக்கி தெளித்து 10 நிமிடம் தம் போட்டு இரக்கவும்.

சுவையான ப்ளைன் மந்தி ரெடி,

இதை மட்டன் , சிக்கன் , மீன் , இறால் மந்தியாக தயாரிக்கலாம்.

வடித்த சீரகம் கலந்த கஞ்சி நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும் இதை சூப் செய்ய பயன்படுத்திக்கலாம்.
எங்கவீட்டில் என் மகனுக்காக மாதம் இரண்டு முறை கப்ஸா, மஜ்பூஸ், மக்லூபா, மந்தி இது போல் ஏதாவது ஒரு டிஷ் பிரியாணி , பகாறாவுக்கு பதில் செய்வேன்.











இது முகநூலில் சைனுதீன் ஈசியாக மந்தி தயாரிக்கும் முறையை போட்டு இருந்தார், நான் அதை சிறிது மாற்றத்துடன் செய்து இருக்கிறேன்,
https://www.facebook.com/photo.php?fbid=882769105076092&set=gm.589783824481847&type=1&theater
நன்றி ஜெய்னுதீன்.

கிழே உள்ளது அவர் குறிப்பு

தேவையான அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும்

-
வடிப்பதற்கு தேவையான தண்ணீரில் உப்பு, ஜீரகம், பச்சமிளகு (பெரியது, இரண்டாக கீறி போடவும்) இரண்டு ஸ்பூன் ஆயில் சேர்த்து கொதிக்க விடவும்.... 

-
கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்த அரிசியை சேர்த்து முக்கால் பாகம் வெந்ததும் வடித்து எடுக்கவும்.

-
தம் போடும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும். பெரிக்கும் போது அரை டீ ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும்

-
இந்த கலவையை ஆயிலுடன் வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிவிட்டு (கொஞ்சம் ஆயில் பாத்திரத்தில் மீதம் இருக்கட்டும்)

-
வடித்து வைத்திருக்கும் ரைஸ்- இந்த பாத்திரத்தில் நிரப்பி அதன் மேல் பெரித்தெடுத்த எண்ணெயிட்ன் இருக்கும் வெங்காய கலவையை மேல்பாகம் தெளித்து ஐந்து நிமிடம் தம் போட்டு இறக்கவும். 

(
இதுவே சுவையானவும் மணமாகவும் இருகும் - இதை மட்டன் மந்தியாக மாற்ற மட்டன் வேகவைத்த தண்ணீர் இருந்தால் அதை ஆயில் கலவை சேர்க்கும் முன் கொஞ்சம் சேர்த்து ஒரு கிளறு கிளரி விட்டு அதன் மேல் கலவையை தெளிக்கவும்.) 

குறிப்பு; இரண்டு கப் அரிசிக்கு ஒரு பெரிய வெங்காயம் 2 டேபிள் ஸ்பூன் ஆயில் போதுமானது.இதில் சில மசலா வகைகளும் , உருளை கிழங்கும் சேர்த்து கொண்டேன்.

Tag:How to Make Arabic Mandi, Arabic Plain Biriayni,Mandi Rice,Potao Mandi,Arabic Biriyani,Cookery Video, வீடியோ சமையல்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

4 கருத்துகள்:

Menaga Sathia said...

வித்தியாசமாவும்,பார்க்கவும் அருமையாக இருக்கு.

திண்டுக்கல் தனபாலன் said...

நாளை இது போல் செய்வதாக வீட்டில் சொல்லி விட்டார்கள்... நன்றி சகோதரி...

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய பகிர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2015/02/Book-Reading.html

'பரிவை' சே.குமார் said...

வித்தியாசமாக இருக்கிறது அக்கா...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா