Saturday, April 18, 2015

நெத்திலி மீன் ரெட் கிரேவி/Anchovies Red Gravy


நெத்திலி மீன் தொக்கு என்றாலே அனைவருக்கும் நாவை சப்புகொட்டவைக்கும். அதை நல்ல கிரிப்பாக திக் ரெடி கிரேவி போல் செய்தால் சுவை சொல்ல வார்த்தைகள் இல்லை , இதை செய்து பார்த்து உண்மையான்னு வந்து சொல்லுங்கள்.
(முன்பு செய்த பழைய குறிப்பு )தேவையான பொருட்கள்

நெத்திலி மீன் - 300 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
ட்மெட்டோ பேஸ்ட் - அரை கப்
காஷ்மீரி ரெட் சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி
பச்ச மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
கட்டியாக கரைத்த புளி - முன்று மேசைகரண்டி
உப்பு - தேவைக்கு

தாளிக்க 

எண்ணை - 3 மேசைகரண்டி
கடுகு -  அரை தேக்கரண்டி
இஞ்சி துருவியது - ஒரு தேக்கரண்டி
பூண்டு பொடியாக நறுக்கியது - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை  - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
கொத்துமல்லிதழை சிறிது

செய்முறை

நெத்திலி மீனை கிழே சொல்லி உள்ளபடி கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளைதாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய உடன் தக்காளி பேஸ்ட், மிளகாய்தூள், உப்பு தூள் , சர்க்கரை, பச்சமிளகாய் சேர்த்து நன்குகூட்டு பதத்துக்கு வதகக்கவும். கடைசியாக நெத்திலி மீனை சேர்த்து லேசாக பிரட்டி எண்ணை பிரியும் வரை கொதிக்க விட்டு இரக்கவும்.சுவையான நெத்திலி மீன் ரெட் கிரேவி ரெடி


கவனிக்க:

மீனை போட்டத்தும் சும்மா சும்மா  கரண்டிய போட்டு கிளற கூடாது.அப்படியே சட்டியை இரண்டு பக்கமும் சேர்த்து சுழற்றி விடனும்.
கூட்டு பதமாக , மிதமான தீயில் கொதிக்கவிடவேண்டும்.

இங்கு வெளி நாடுகளில் தக்காளி பேஸ்ட் டின் பாக்கெட் களில் கிடைக்கிறது

அப்படி தக்காளி பேஸ்ட் கிடைக்கவில்லை என்றால், நல்ல பழுத்த ரெட் தக்காளி ( 5) யில் , காஞ்ச மிளகாயயை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள், அப்படி இல்லை என்றால் காஷ்மீரி மிளகாய் தூள் காரம் இருக்காது கலர் ஃபுல்லாக இருக்கும் அதை பழுத்த ரெட் தக்காளியுடன் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள் மிளகாய் தூள் சேர்க்கும் போது கொஞ்சம் குறைத்து சேர்த்து கொள்ளுங்கள்.நெத்திலிமீன் கழுவும் விதம்


பெரிய அலுமினியம் கண் வடிகட்டி எடுத்துக்க்கொள்ளுங்கள்.மீனை ஒரு சட்டியில் தண்ணீரில் போட்டு லேசாக அரிசி களைவது போல் கலந்து வடுகட்டியில் போடவும்.
சிங்கில் டேபுக்கு நேரக வடிகட்டியை பிடித்து கொண்டு இரண்டு மூன்று தடவை கையால் உலசி கழுவவும்.
இப்போது அழுக்கு மண் எல்லாம் போய் சுத்தமாகி விடும்.
மீனி தலையை கிள்ளி அப்படியே வயிற்று பகுதியில் கட்டை விறலால் கீறி தலையோடு சேர்த்து முள்ளை மீனிலிருந்து பிரித்தெடுக்கவும்.
அதே மாதிரி எல்லா மீனையும் செய்யவும்.
இப்போது மீனில் சுத்தமாக முள் இருக்காது மீண்டும் ஒரு முறை கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.
இப்போது போன்லெஸ் நெத்திலி மீன் ரெடி அப்ப‌ர‌ம் என்ன‌ குழ‌ம்பு வைத்து சாப்பிட‌வேண்டது தான்.
பிள்ளைக‌ளுக்கும் அப்ப‌டியே பிசைந்து ஊட்டி விட‌லாம். இதே கிள‌ங்கா மீனிலும் எடுக்க‌லாம்
.https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, April 1, 2015

இத்தாலியன் & அரபிக் சிக்கன் சாட்டே - Italian Chicken Satay

சிக்கன் எலும்பில்லாதது - அரை கிலோ

கீரீம் - ஒரு  மேசைகரண்டி
சீஸ் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
பச்ச மிளகாய் - 2
ஆலிவ் ஆயில்- ஒரு மேசைகரண்டி
தயிர் - ஒரு  மேசைகரண்டி
ஒரிகானோ, ரோஸ்மேரி, பேசில், தைம் - 1 தேக்கரண்டி
செய்முறை

அரை கிலோ சிக்கன் எலும்பில்லாதது துண்டுகளாக வெட்டாமல் அப்படியே இங்கு கிடைக்கின்றன.
அதை முன்று இஞ்ச் நீளத்துக்கு பார்பிகியு குச்சியில் சொருகுவது போல் வெட்டி கொள்ளவேண்டியது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மசாலாக்களையும் போட்டு பிரட்டி. முன்று மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.


கபாப் குச்சிகளை அரை மணி நேரம் வெண்ணீரில் ஊறவைத்து , கழுவி அதில் மேரினேட் செய்து வைத்துள்ள சிக்கன் சாட்டேக்களை நீளமாக சொருகி பிறகு ஆங்காங்கே லேசாகா கீறி விடவேண்டும்.
.


மேலே உள்ளது பார்பிகியு அடுப்பு வீட்டில் வைத்தே செய்வது.அதில் வைத்து இரண்டு பக்கமும் கிரில் செய்து எடுத்துள்ளேன்.


நீங்கள் உங்கள் வசதி படி பார்பிகியு அல்லது கேஸ் ஓவன் , அல்லது கேக்  ஓவனில் வைத்து கிரில் செய்யவும், இல்லை கனமான தவ்வாவில் எண்ணை விட்டு மூடி போட்டு மிதமான தீயில் வேக விட்டு பொரித்தும் எடுக்கலாம்.


Chicken Lolipop

மேலே உள்ளது சிக்கன் லாலிபாப்,  அதே  பார்பிகியு அடுப்பில்  வெரும் இஞ்சி பூண்டு மிளகாய் தூள், உப்பு தூள் , லெமன் சேர்த்து பார்பிகியு செய்தது.
மேலே உள்ளது இறால் மட்டன் கீமா கபாப் ஏற்கனவே இங்கு போஸ்ட் செய்துள்ளேன். இது தவ்வாவில் வைத்து பொரித்தது.

பார்பிகியு, ஓவன் இல்லாதவர்கள் இதே மசாலாவை போட்டு தயாரித்து பொரித்தும் எடுக்கலாம்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/