Monday, June 8, 2015

சிக்கன் மக்லூபா Chciken Maqlooba (upside Down Arabic Biriyani)

அரேபியர்கள் தினம் செய்யும் கப்ஸா, மந்தி, மஜ்பூஸ் போன்ற உணவுகளில் இந்த மக்லூபாவும் ஒன்றாகும்.
Chciken Maqlooba (upside Down Rice)/சிக்கன் மக்பூலா/ அரபிக் பிரியாணி / Chicken Makloubeh


தேவையான பொருட்கள்

சிக்கன் ஹோல் லெக் ‍ 4 தூண்டுகள்//மட்டன் - அரை கிலோ/சிக்கன் எலும்புடன் -600 கிராம்
அரிசி ‍ 400 கிராம் ( டோனார் லாங்க் கிரைன் அரிசி)
சிக்கன் ஸ்டாக் (அ) வெஜிடேபுள் ஸ்டாக்  ( மேகி (அ) நார் பிராண்ட்) - 1


சிக்கனில் பிரட்டி கொள்ள

லெமன் ஜூஸ் - ஒரு மேசைகரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைகரண்டி
நிஹாரி மசாலா/பாஷா கிச்சன் கிங் மசாலா - 1 tbspn
உப்பு தூள்


தாளிக்க 

பட்டர் ‍ 50 கிராம்
எண்ணை ‍ 50 கிராம்
( காய்களை பொரிக்க + தாளிக்க)
காய்ந்த லெமன்
வெங்காயம்  - 2 பொடியாக அரிந்தது
அரபிக் மசாலா - ஒரு மேசைகரண்டி ( கிழே  அரபிக் மசாலா அளவு இருக்கு பார்ககவும்)
மசாலாக்கள்

இஞ்சி பொடி  - அரை தேக்கரண்டி
சீரகதூள் - 1 தேக்கரண்டி
பட்டை தூள் - அரை தேக்கரண்டி
ஏலக்காய் - விதைகள் ( 2 ஏலக்காய்)
மிளகு தூள் - அரை தேக்கரண்டி ( ஒன்றும் பாதியுமாய் திரித்தது)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
தனியாக வட்டவடிவமாக நறுக்கி பொரித்து வைத்துகொள்ளவும்.

கத்திரிக்காய் - பெரிய கத்திரிக்காய் ஒன்று
காளிப்ளவர் - 8 பூ
புரோகோலி - 8 பூ
கேரட் - 1
உருளைகிழங்கு - 2
கேப்சிகம் -  இரண்டு மேசைகரண்டி நறுக்கியது

கடைசியாக மேலே தூவ ( தேவை பட்டால்)
பிஸ்தா
பாதம் 
பைன் நட்ஸ்

செய்முறை:

சிக்கனை கழுவி தண்ணீரை வடித்து அதில் மேலே மேரினேட் செய்ய  கொடுக்கப்படுள்ள மசாலாக்களை சேர்த்து அரை மணி நேரம்  ஊறவைக்கவும்.( சிக்கன் மேரினேட் செய்வது எப்போதும் ஒரு நாள் முன் செய்தால் நல்ல இருக்கும்)
அரிசியை களைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
கத்திரிக்காயை வட்டவடிவமாக நறுக்கி அதில் சிறிதத உப்பு தூவி பிரட்டி கண்தட்டில் வைக்கவும்.
கேரட், உருளை கிழங்கை வட்டவடிவமாக நறுக்கி ஒரு வாயகன்ற வானலியில் சிறிது எண்ணை + பட்டர் சேர்த்து பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
ப்ரோக்கோலி மற்றும் காலிப்ளவரை  பூ பூ வாக பிரித்து அதையும் அதே எண்ணையில் பொரித்து எடுத்து வைக்கவும்
சிக்கன் ஸ்டாக்கை 600 மில்லி தண்ணீரில் கரைத்து கொதிக்கவிடவும்.
மீதி உள்ள பட்டர் + எண்ணையை சூடு படுத்தி அதில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து ஊறிய சிக்கனை சமமாக பரத்தவும்.
அதன் மேல் பொரித்த காய்களை பாதியை அடுக்கி வைக்கவும்
அதன் மேல் அரிசியை தண்ணீரை வடித்து சேர்க்கவும்.
அதன் மேல் பொரித்த காய்கள் மீதியை அடுக்கி வைக்கவும்.
கொதித்து கொண்டிருக்கும் சிக்கன் ஸ்டாக் தண்ணீரை இதன் மேல் ஊற்றி அப்படியே தம்மில் 20 லிருந்து 30 நிமிடம் வரை மிகக்குறைந்த தீயில் வேக விடவும்.தலை கீழாக கவிழ்த்தும் போது கை தவறி விட்டது, அதான் சாதம் உடைந்து விட்டது. இது தலைகீழாக கவிழ்த்தினால் எப்படி இருக்கும் என்று தோழி ஆசியா பதிவில் பார்த்து கொள்ளுங்கள்.


சிக்கன் சாதம் காய்கள் எல்லாம் ஒரு சேர சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். 

வெஜிடேரியன்கள் இதில் மட்டன் சிக்கனுக்கு பதில் மஷ்ரூம் சேர்த்து செய்யலாம்.

இங்குள்ள அல் தஜாஜ் ஜில் Al Tajaj /Taza வெஜ் மக்லூபா கிடைக்கும்.

தேவைப்பட்டால் நட்ஸ் வகைகளை சிறிது பட்டரில் வறுத்து தூவிக்கொள்ளலாம்.


அரேபியர்கள் தினம் செய்யும் கப்ஸா, மந்தி, மஜ்பூஸ் போன்ற உணவுகளில் இந்த மக்லூபாவும் ஒன்றாகும்.

இது அடிக்கடி செய்வது போட்டோக்கள் சரியாக இல்லாததால் பகிற முடியவில்லை..போன வருடம் போட்டு வைத்த போஸ்ட்,  
மட்டன் மக்பூலா (குக்கர் முறையில்)

Mutton Maqlooba ( Pressure Cooker Method)


கிழே உள்ள மட்டன் மக்லூபா குக்கரில் செய்தது , மேலே சொன்ன முறைப்படி எல்லாவற்றையும் தயாராக வைத்துகொண்டு , மட்டனை தாளித்து 10 நிமிடம் வேகவைத்து, மற்றபடி காய்கறிகள், அரிசியை லேயராக வைத்து குக்கரில் 3 விசில் விட்டு இரக்கவும்.

சிக்கன் ஹோல்லெக் மக்பூலா ரைஸ் குக்கர் மெதட்
Chicken Whole leg Maqlooba ( Rice Cooker Method) இது ரைஸ் குக்கரில் முன்பு செய்தது, சிக்கனை தாளித்து சிறிது வேகவைத்து விட்டு, லேயராக சிக்கன், காய்கறிகள், அரிசியை சேர்த்து ரைஸ்குக்கர் டைம் படி சமைக்கவும்.மட்டனில், போன்லெஸ் சிக்கனில், போன்லெஸ் மட்டனில் நான் இதை   அடிக்கடி செய்து இருக்கிறேன். குக்கரிலேயே 20 நிமிடத்தில் செய்து முடித்துவிடுவேன்.

இது அழகாக சட்டியில் செய்தால் அப்படியே 30 நிமிடம் மெதுவாக வேக விட்டு, பிறகு ஒரு பெரிய தாளாவில் ( தாளி தட்டில்) கவிழ்த்தினால் அப்படியே கீழே சாதம் அடுத்து காய் வகைகள், அடுத்து சிக்கன் என சூப்பராக இருக்கும். 

Titlis Busy Kitchen  - மசலாவுக்காக கொஞ்சம் யுடிப்பும் செக் பண்ணேன். இதில் அழகாக சூப்பராக போட்டு இருக்கிறார்கள்.  கத்திரிக்காய் தனியாக உப்பு சேர்த்து வேகவைக்கனும் என்று இதில் தெரிந்து கொண்டேன்.

ஆசியா செய்துள்ள மக்லூபாவும் ரொம்ப சூப்பராக இருக்கும் அவங்க ஸ்டெப் பை ஸ்டெப் போட்டு இருப்பார்கள்.
நமக்கு கொஞ்சம் மசாலாக்கள் வேண்டும் என்று  நிஹாரி மசாலா சேர்த்து மேரினேட் செய்து சேர்த்து இருக்கிறேன்.மசாலாக்கள் நம் இஷ்டத்துக்கு சேர்த்து செய்யலாம்.

அரபிக் கரம் மசாலா இதை திரித்து வைத்து கொண்டாலும் இதிலிருந்து ஒரு மேசைகரண்டி போட்டு கொள்ளலாம்.

அரபிக் கரம் மசாலா

மிளகு -  அரை தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - இரண்டு
சீரகம் - ஒரு மேசைகரண்டி
ஜாதிக்காய் - சிறிய துண்டு
பிரிஞ்சி இலை - இரண்டு

செய்முறை 

மேற்கண்ட அனைத்து பொருட்களையும் கரகரப்பாக திரித்து கொள்ளவும்


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

1 கருத்துகள்:

Asiya Omar said...

சூப்பர். பார்க்கவே அதன் அதீத ருசி தெரிகிறது.பகிர்வுக்கு மகிழ்ச்சி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா