Thursday, July 9, 2015

தம்மடை - Dumadai - Soji Cake




தம்ம்டை என்பது ரவை,தேங்காய் பால் ,முட்டை சேர்த்து செய்யும் கேக், பழங்காலங்களில் இதை விறகு அடுப்பில் பெரிய இரும்பு தவ்வாவில் மண்ணை சூடுபடுத்தி இந்த கலவையை ஒரு சட்டியில் வைத்து வேகவைத்து எடுப்பார்கள். இப்போது நாம் ஈசியாக ஓவனிலேயே பேக் செய்யலாம்/
இதை அரேபியர்கள் பஸ்பூசா Eggless Basbousaஎன்று சொல்வார்கள் சேர்க்கும் பொருட்கள் சிறிது வித்தியாசப்படும்.
Eggless Basbousa 

தம்மடை 

ரவை – ஒரு ஆழாக்கு
கட்டி தேங்காய் பால் – முக்கால் ஆழாக்கு
சர்க்கரை – முக்கால் ஆழாக்கு
நெய் – அரை ஆழாக்கு
முட்டை – இரண்டு
உப்பு – ஒரு சிட்டிக்கை

செய்முறை
ரவையை வறுத்து வைக்கவும். சர்க்கரையை பொடித்து கொள்ளவும்.
முட்டையை நுரை பொங்க அடித்து அதில் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
பிறகு தேங்காய் பால் சேர்த்து கலக்கி அதை ரவையை சேர்த்து கிளறி நெய் மற்றும் உப்பை சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
10 நிமிடம் முற்சூடு செய்த ஓவனில் 5 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.





குங்குமம் தோழியில் வெளியான 30 சமையல் குறிப்பில் ஒன்று இந்த தம்மடை.
சுவைத்து மகிழுங்கள் , உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொண்டாலோ அல்லது செய்து பார்த்து சமையல் புகைப்படத்தை எனக்கு (feedbackjaleela@gmail.com) அனுப்பினாலோ மிகவும் சந்தோஷப்படுவேன்.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

1 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

நாங்களும் செய்து பார்க்கிறோம் சகோதரி... நன்றி...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா