Sunday, September 20, 2015

கார்ன் ஃப்ளேக்ஸ் குக்கீஸ் - Cornflakes cookies

ஆஃபர் போட்டங்கன்னு தெரியத்தனாமாக இரண்டு பாக்கெட் கானர்ன் ஃப்ளேக்ஸ வாங்கிட்டு அதை காலி செய்ய நான் பட்ட பாடு இருக்கே அடேங்கப்பா?



என் ரங்ஸ் காலையில் கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிட்டு விட்டு ஆபிஸ் போவார் ஆகையால் மாதம் ஆனால் லிஸ்டில் அதுவும் உண்டு.

ஆஃபர் என்று வாங்கியது அந்த கார்ன் ஃப்ளேக்ஸ் ப்ளேவரே வே டேஸ்டும் இல்லை. எல்லாத்தையும் பார்த்து பார்த்து வாங்குவேன், இதில் கோட்டை விட்டுட்டேன் கண்ண மூடிட்டு எடுத்து வந்துட்டேன்.

கட்லட், ஐஸ்கிரீம் மேலே தூவி சாப்பிட என்று நிறைய பயன் படுத்தியாச்சு.
நம்ம மகி தான் பேக்கிங் அயிட்டம் விதவிதமாக செய்வார்களே, அங்க போய் தேடியதில் கார்ன்ஃப்ளேக்ஸ்குக்கீஸ் கிடச்சுது , அவர்களும் அவங்க வாங்கிய கார்ன் ஃப்ளேக்ஸ் பாக்கட்டில் உள்ள படி செய்து இருந்தார்கள்
இவ்வளவு கார்ன் ப்ளேக்ஸ் காலி பண்ண முடிதே யாதே என்று மகி பிளாக்கை பார்த்தேன், ஓ இதில் கார்ன் ப்ளேக்ஸ் பிகெட் செய்யலாம என்று உடனே செய்தாச்சு.













கார்ன்ப்ளேக்ஸ் குக்கீஸ் செய்யலாம் என்ற ஐடியா மகி அருன் பிளாக் பார்த்ததும் தோனியது ,அளவுகள் மற்றும் தேவையான பொருட்கள் என் முறைப்படி செய்து கொண்டேன்.




கார்ன் ப்ளேக்ஸ் பிஸ்கட்
Ingredients

கோதுமை மாவு - அரை கப்
பொடித்த ஓட்ஸ் - அரைகப்
பேங்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி
முட்டை ஒன்று
சாக்லேட் பவுடர் - 100 கிராம்
கார்ன் ப்ளேக்ஸ்  - 2 கப்
பைனாப்பிள் எசன்ஸ் - மூக்கால் தேக்கரண்டி
பால் - சிறிது
உப்பு - அரை சிட்டிக்கை
ப்ரவுன் சுகர் - அரை கப்
செய்முறை
கருப்பு மற்றும் மஞ்சள் ரெய்சின்ஸ் - இரண்டு தேக்கரண்டி
Method
கோதுமை மாவு, பொடித்த ஓட்ஸ், பேக்கிங் சோடா, பேங்கிங் பவுடர், உப்பு  அனைத்தையும் நன்கு மிக்ஸ் பண்ணவும்
ப்ரவுன் சுகர், முட்டை , பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

இப்போது கலந்து வைத்துள்ள மாவு வகைகளை முட்டை சர்க்கரை , ரெயிசின்ஸ் கலவையில் சேர்த்து நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக பிரித்து  கார்ன்ஃப்ளேக்சில் நன்கு பிறட்டி எடுத்து வைக்கவும்.

பேங்கிங் ட்ரேயில் சிறிது பட்டர் தடவி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வைக்கவும்
200 டிகிரி 20 நிமிடம் பிரீ ஹீட் செய்த ஓவனில்   12 நிமிடம் பேக்  செய்து எடுக்கவும்.

Cornflakes Cookies, Kids Special


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

1 கருத்துகள்:

Unknown said...

Very nice cookies

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா