Tuesday, February 16, 2016

சீஸ் கேக் தயாரிக்க பயன்படுத்தும் ஜெலட்டின் சைவமா?



My Article published in Kungumam thozi monthly magazine15.02.16 .No Bake Party Dessert.

(Agar Agar, china Grass picture) (substitute for gelatin agar agar) For Preparing Cheese Cake advisable for agar agar instead of gelatin.

 சீஸ் கேக்கு ஜெலட்டினுக்கு பதில் அகர் அகர் பயன்படுத்தலா?

 கடல்பாசி என்னும் அகர் அகர் பற்றின பதிவு இந்த மாதம் 15.02.16 குங்குமம் மாத இதழில் வெளியாகி உள்ளது.



இப்போது செய்கின்ற பார்டி மெனுவில் அதிகமாக இடம்பெறுவது சீஸ் கேக் என்னும் ஜப்பான் நாட்டு டெசர்வகை. 
இதில் கிரீம் சீஸ் பழங்கள் கலந்து கேக் போல ஓவனில் பேக் செய்யாமல் குளுரூட்டியில் வைத்து குளிர வைத்து செட் செய்வது இதில் அது குழைந்து விழாமல் கெட்டியாக கிரிப் கொடுக்க இதில் ஜெலட்டின் பவுடரை பயன் படுத்துகிறார்கள்.
 இதில்  அசைவ பொருட்கள் சேர்த்து செய்கிறார்கள் என தெரிய வருகிறது. எதிலிருந்து தயாரிக்கிறார்கள் நாம் சாப்பிடலாமா கூடாதா என்று சந்தேகப்படும் சைவ உணவு சாப்பிடுபவர்கள் , 

அகர் அகர்/கடல் பாசி/சைனாகிராஸ் - (Agar Agar, china Grass picture)


(substitute for gelatin agar agar) 
For Preparing Cheese Cake advisable for agar agar instead of gelatin.
ஜெலட்டினுக்கு பதிலாக நோன்புகாலங்களில் நாங்க செய்யும் கடல் பாசி என்னும் அகர் அகரை பயன்படுத்தி செய்யலாம். இது உடல் நலத்திருக்கு மிகவும் நல்லதும் கூட எந்த செயற்கை பொருளும் கலந்து இருக்கிறதோ என்ற சந்தேகம் இல்லாமல் இதை பயன் படுத்தி செய்துகொள்ளலாம்.
உடல் நலத்துக்கு மிகவும் நல்லது குழந்தைகளுக்கும் பயமின்றி கொடுக்கலாம்.
ஜெலட்டின் சேர்த்து பயன் படுத்தும் ரெசிபிகளுக்குபதில் அகர் அகரை பயன் படுத்தலாம்.
 கடல்பாசி என்னும் சைனா கிராஸ்(அகர் அகர்) ஒரு சைவ உணவு. இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உணவுகளில் இதுவும் ஒரு வகையாகும்.உடலுக்கு மிகவும் குளிர்ச்சி, கொளுத்தும் கோடையிலும் இதை செய்து சாப்பிடலாம். அல்சர், வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.ஜெல்லி போல் கலர் கலராக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உணவகங்களில் டெசர்ட் மற்றும் ஐஸ்கீரிம் வகைகளுக்கும் இதைசேர்த்து செய்வார்கள் .




சீஸ் கேக்
புட்டிங்
பழ புட்டிங்
கேக் வகைகளும்
சாக்லேட் மௌஸ்
இது போல பல டெசர்வகைகளுக்கு அகர் அகரை பயன் படுத்தாலாம்.
 அகர் அகர் பவுடரும் கலர் கலராக ப்ளேவரில் கிடைக்கிறது.
சீஸ் கேக் ரெசிபி அடுத்த பதிவில் போடுகிறேன்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

3 கருத்துகள்:

பானு said...

வாழ்த்துகள் அக்கா.. ஜெலட்டினுக்கு நல்ல ரீப்ளேஸ்மன்ட்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தகவல் பயனுள்ளது...
நன்றி!

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் அக்கா...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா