Saturday, July 23, 2016

மஞ்சள் பூசணி போளா (Pudding) Pumpkin Pola


மஞ்சள் பூசணி போளா 
Yellow Pumpkin Pudding
கேரளா ஸ்பெஷல் நோன்புகால ரெசிபி 

தேவையான பொருட்கள்

மஞ்சள் பூசணி – கால் கிலோ ( துருவிகொள்ளவும்)
முட்டை – 4
ஏலக்காய் – 3
ஸ்வீட்டண்ட் கண்டென்ஸ்ட் மில்க்  - 4 மேசைகரண்டி
மில்க் – கால் கப்
மைதா – இரண்டு மேசைகரண்டி
நெய் – இரண்டு மேசைகரண்டி
முந்திரி – 50 கிராம்
பிஸ்தா ப்ளேக்ஸ் – ஒரு மேசைகரண்டி

செய்முறை
துருவிய மஞ்சள் பூசனியை சிறிது நெய்யில் வதக்கவும்.

மிக்சியில் வதக்கிய மஞ்சள் பூசணி, கண்டென்ஸ்ட் மில்க், ( மில்க் மெய்ட்) முட்டை , ஏலக்காய் மைதா அனைத்தையும் சேர்த்து ப்ளன்ட் செய்யவும்.

ஒரு வாயகன்ற தவ்வாவில் நட்ஸ்வகைகளை வறுத்து எடுத்து வைக்கவும்.
அதே தவ்வாவில் நெய்விட்டு மிக்சியில் ப்ளென்ட் செய்த கலவையை ஊற்றி சிறு தீயில் முடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
இடையில் வறுத்த நட்ஸ் வகைகளை தூவி மீண்டும் 5 நிமிடம் வேக விடவும்.
வெந்த புட்டிங்கை மற்றொரு பேனில் அப்படியே கவிழ்த்து மேல் பாகத்தை வேகவிடவும்.
5 நிமிடம் வேகவைக்கவும். சுவையான மஞ்சள் பூசணி தவ்வா புட்டிங் (கேக்) ரெடி.

கவனிக்க: வேகவைக்கும் போது சிறு தீயில் வைத்து வேகவிடனும். தவ்வாவில் திருப்பும் போது மிக கவனமாக புட்டிங்க் சிதறாமல் விண்டு போகாமல் கவிழ்த்தனும்.

போளா என்பது கேரள மக்கள் நோன்பு காலங்களில் தவ்வாவில் செய்யும் கேக் (புட்டிங்) . கேரட் போளா, சிக்கன் போளா, தரி போளா, பிரட் போளா, என பலவகைகளில் செய்வார்கள்.
நான் இதில் மஞ்சள் பூசணி சேர்த்து செய்து உள்ளேன்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

2 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு குறிப்பு. நன்றி.

ஹுஸைனம்மா said...

ரெண்டு நாள் முன்னதான், ஒருத்தங்க இப்படி கேக் செய்ற முறையைப்பத்திச் சொன்னாங்க.. எனக்கு நம்பிக்கையே இல்லை... இப்ப வந்துடுச்சு... :-)

ஆனாலும், இப்பவும் சில சந்தேகங்கள் இருக்கு.... :-)

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா