Tuesday, June 20, 2017

பீட்ரூட் கேசரி கேக் - Beet Kesari Cake


கேசரி மிக சுலபமாக செய்ய கூடிய ஒரு இனிப்பு வகை அதில் பழ சாறோ அல்லது காய்கறிகளோ சேர்த்து இன்னும் சுவையூட்டி செய்யலாம்.


பீட்ரூட்  கேசரி
  • ரவை – 200 கிராம்
  • சர்க்கரை – 100 கிராம்
  • ஸ்வீட்டன்ட் கன்டெனஸ்ட் மில்க் – 3 மேசைகரண்டி
  • நெய் – 3 மேசை கரண்டி
  • முந்திரி பாதாம் 100கிராம்
  • பீட்ரூட் துருவியது – ஒன்று
  • நெய் – 3 மேசைகரண்டி
  • பட்டர் – 1 மேசைகரண்டி
  • வெண்ணீர் – 400 மில்லி
  • உப்பு – ½ சிட்டிக்கை
  • பிஸ்தா – சிறிது அலங்கரிக்க

செய்முறை

  1. நெய் சிறிது ஊற்றி முந்திரி பாதாம் பொடியாக அரிந்து வறுத்து தனியாக வைக்கவும்.
  2. அதே சட்டியில் சிறிது பட்டர் சேர்த்து துருவிய பீட்ரூட்டை வதக்கி ரவை சேர்த்து அதையும் வறுக்கவும். அதற்குள் கொதி வெண்ணீரை ரெடியாக வைக்கவும்.
  3. வறுத்து கொண்டுள்ள ரவையில் சிறிது சிறிதாக வெண்ணீரை ஊற்றி கிளறவும்.கண்டெஸ்ட் மில்க், (மில்க் மெயிட்) சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  4. கடைசியாக நெய்யில் வறுத்து வைத்துள்ள பாதாம் முந்திரியை தூவி கிளறி தட்டி கொட்டி சிறிது ஆரவைத்து தேவையான வடிவில் கட் செய்யவும். சுவையான அருமையான பீட்ரூட் கேசரி ரெடி.


ஜலீலாவின் டிப்ஸோ டிப்ஸ்

காய் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம். பீட்ரூட்க்கு  பதில் வேறு எந்த காய் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். இது பார்க்க கலர்புல்லாக இருக்கும்எந்த கலரும் சேர்க்க தேவையில்லை. இதில் சர்க்கரைக்கு பதில் பால் கோவா + கண்டென்ஸ்ட் மில்க் மெயிட் சேர்த்தால் சுவை இன்னும் அபாரமாக இருக்கும். முந்திரி பாதாமை நெய்யில் வறுத்து பொடித்தும் போடலாம்.. குழந்தைகளுக்கு என்பதால் வாயில் தட்டாமல் போகும்.இதில் ரவை தனியாக வறுத்தும் சேர்க்கலாம். இதில் பீட்ரூட்டுடன் சேர்த்து வதக்கி சர்க்கரை + மில்க் மெயிட் சேர்ப்பதால் நல்ல ஒன்று சேர்த்து கேக் போல இருக்கும்.



Beetroot kesari cake, Red Coloured Recipe for kids
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

3 கருத்துகள்:

ராஜி said...

இனிப்பு சாப்பிடனும்போல இருக்கும் நேரத்துல இப்படி ஒரு பதிவு. என்னை வெறுப்பேத்தவே இந்த பதிவை போட்டிருக்கீங்க போல. ஒழுங்கு மரியாதையா கொஞ்சம் அல்வாவை பார்சல் பண்ணிவிடுங்க ஜலீலாக்கா.

Jaleela Kamal said...

ஹா ஹா ராஜி உங்களுக்கு எல்லாம் இது பெரிய வேலையா நீங்க நினச்சா 10 நிமிடத்தில் ரெடி பண்ண்டலாமே. கொரியர் ல அனுப்பிடுறேன்..

ஆன்மீக மணம் வீசும் said...

ஜலீலாக்கா (!)

நீங்க தான ’அன்பான கருத்துக்களை தெரிவிக்கவும்............... என்றும் உங்கள் ஜலீலாக்கா’ அப்படின்னு போட்டிருக்கீங்க. அதுதான்.

இந்த மாதிரி கேசரிய கூட அப்டியே ஸ்டைலா கேக் மாதிரி செஞ்சு போட உங்களால தான் முடியும்.

செஞ்சுடுவீங்க..

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா