Sunday, June 4, 2017

சிக்கன் கேரட் சமோசா Chicken Carrot Samosa

2009 post முன்பு உள்ள போஸ்ட் டைம் கிடைக்கும் போது ஸ்டெப் பை ஸ்டெப்  

சிக்கன் கேரட் சமோசா
சிக்கன் கேரட் சமோசா

தேவையான பொருட்கள்

பில்லிங் தயாரிக்க‌

சிக்கன் = கால் கிலோ
கேரட் =  கால் கிலோ
வெங்காய‌ம் = கால் கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு மேசை க‌ர‌ண்டி
கொத்து ம‌ல்லி த‌ழை = அரை க‌ட்டு
ப‌ச்ச‌ மிள‌காய் = இர‌ண்டு
த‌க்காளி = ஒன்று சிறிய‌து
த‌யிர் = ஒரு தேக்க‌ர‌ண்டி
உப்பு = தேவைக்கு
எண்ணை = இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
க‌ர‌ம் ம‌சாலா பொடி = அரை தேக்க‌ர‌ண்டி
மிள‌காய் தூள் = ஒரு தேக்க‌ர‌ண்டி
சீர‌க‌ தூள் = அரைதேக்க‌ர‌ண்டி

மாவு தயாரிக்க:

மைதா மாவு  = கால் கிலோ
பொடி ரவை = ஐம்பது கிராம்
டால்டா (அ) பட்டர் உருக்கியது  இரண்டு மேசை கரண்டி
உப்பு தேவைக்கு
பேக்கிங்க பவுடர் = அரை தேக்கரண்டி
சர்க்கரை = இரண்டு தேக்கரண்டி


மாவு தயாரிக்க கொடுத்துள்ளவைகளை அனைத்தையும் ஒன்று சேர்த்து மாவு குழைத்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்

தேவையான‌ பொருட்க‌ளை த‌யாராக‌ வைக்க‌வும்.

வெங்காய‌ம் ப‌ச்ச‌ மிள‌காயை பொடியாக‌ அரிந்து கொள்ள‌வும்,கேர‌ட்டை பூந்துருவ‌லாக‌ துருவி கொள்ள‌வும்.சிக்க‌னை க‌ழுவி மிக்சியில் கீமா போல் திரித்து கொள்ள‌வும். கொத்தும‌ல்லி த‌ழையை ம‌ண்ணில்லாம‌ல் க‌ழுவி ந‌ல்ல‌ பைனாக‌ சாப் செய்து கொள்ள‌வும்.
ஒரு வாய‌க‌ன்ற‌ நான்ஸ்டிக்கில் எண்ணை ஊற்றி வெங்காய‌ம் ப‌ச்ச‌மிளகாய் , கேரட் சேர்த்து வ‌த‌க்க‌வும்.அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட்  சிறிது கொத்து ம‌ல்லி, சிக்க‌ன் சேர்த்து வ‌த‌க்க‌வும். அடுத்து தூள் வ‌கைக‌ள் (மிள‌காய் தூள்,ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு தூள், சீர‌க‌ தூள்) சேர்த்து த‌யிரையும் சேர்த்து ந‌ன்கு வ‌த‌க்கி சிறிது நேர‌ம் வேக‌ விட‌வும்.
சிக்க‌ன், கேர‌ட் எல்லாமே துருவி இருப்ப‌தால் சீக்கிர‌மே வெந்துவிடும்.
க‌டைசியாக‌ கொத்தும‌ல்லி த‌ழை க‌ர‌ம்ம‌சாலா தூவி கிள‌றி இர‌க்கி ஆற‌ வைக்க‌வும்.




சமோசா ஷீட் செய்ய
பூரிக்கு உருண்டை போடும் அளவிற்கு உருண்டைகளை போட்டு மாவு தடவி வட்டவடிவமாக திரட்டவும்.
சதுர வடிவமாக நான்கு மூலையையும் வெட்டவும்.
சிக்கன் பில்லிங்கை ஒரங்களில் படாமல் வைத்து முக்கோணவடிவில் மடித்து ஓரங்களை போஃர்க் கொண்டு அழுத்தவும்.
இதே போல் சிறியது பெரியது என்று வேண்டிய அளவில் அனைத்தையும் தயார் செய்து கொள்ளவும்.
ஒரு வாயகன்ற வானலியில் பொரிக்கும் அளவிற்கு எண்ணை ஊற்றி சூடானதும், தீயின் அளவை மீடியமாக வைத்து பொரித்து எடுக்கவும்.
சுவையான ஹோம் மேட் சிக்கன் சமோசா ரெடி.

இதை பப்ஸ் போல் செய்து ஓவனில் வைப்பதாக இருந்தால் உருண்டைகளை முன்று உருண்டைகளாக எடுத்து ஒன்றன் மேல் ஒன்று வைத்து இடை இடையில் மாவு தூவி, சிறிது பட்டர் (அ) டால்டா தடவி முன்று உருண்டையையும் ஒன்றாக வைத்து உருட்டி கட்டமாக கட் செய்து பில்லிங் உள்ளே வைத்து 200 டிகிரி முற் சூடு செய்த அவனில் பத்து நிமிடம் வைத்து எடுக்கவும்.சிவறவில்லை என்றால் மறுபடி பிரட்டி வைத்து ஐந்து நிமிடம் வைத்து எடுக்கலாம்.

3 கருத்துகள்:

ராஜி said...

ஐ. எனக்கு பிடிச்ச டிஷ். ஐ டேக் டூ சமோசா

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி ராஜி

Unknown said...

excellent

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா