Thursday, June 29, 2017

சிக்கன் சால்னா - Chicken Salnaசிக்கன் சால்னா

அஸ்ஸலாமு அலைக்கும் ஈத் ஸ்பெஷல் சாப்பாடு வகைகள் போடனும் என்று ஆனால் இங்கு துபாயில் சரியான வெயில் நோன்பு நேரத்தில் பிஸியாகிவிட்டது போஸ்ட் பண்ண முடியவில்லை

அனைவருக்கும் ஈத் வாழ்த்துக்கள் & அட்வான்ஸ் ஆறு நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.
ஆறு நோன்பு என்பது 30 நாள் ரமலான் நோன்பு முடிந்து அடுத்து வரும் ஆறு நோன்பு, இதை முடிந்தவர்கள் வைக்கலாம்.

ஈத் க்கு எப்போதும் கறி சேமியாதான் போடுவது வழக்கம், இப்ப பிள்ளைகளுக்காக சிக்கன் சால்னா பூரி, ஷீர் குருமா.


( மெயிலில் சிலர் சிக்கன் சால்னா கேட்டு இருந்தனர் அவர்களுக்காக )சிக்கன் குருமா/ சால்னா - 1

 • சிக்கன்1 கிலோ
 • வெங்காயம் - 500 கிராம்
 • தக்காளி - 400 கிராம்
 • தயிர் - கால் கப்
 • மிளகாய் தூள் - ஒன்னறை மேசைகரண்டி
 • தனியாத்தூள் – ஒரு தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
 • உப்பு - தேவைக்கு
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் - மூன்று மேசைகரண்டி
 • கொத்தமல்லி, புதினாஒரு கைபிடி
 • பச்சை மிளகாய் - 6
 • பட்டை, லவங்கம், ஏலம் - தலா ஒன்று
 • எண்ணை (அ) நல்லெண்ணைஅரை கப்
 • நெய்  - முன்று தேக்கரண்டி
 • தேங்காய் பால்இரண்டு டம்ளர் திக் பால் (அ) ஒரு முடி அரைத்து ஊற்றவும்.
 • முந்திரி 50 கிராம்
 • கசகசா - சிறிது
 • லெமன் சாறு – இரண்டு தேக்கரண்டி

 • கோழியில் வினிகர், எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து சுத்தம் செய்து ஏழு முறை கழுவவும்.கழுவி தண்ணீரை வடிக்கவும்.
 • எண்ணெயை காய வைத்து பட்டை, லவங்கம், ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
 • வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச வாடை போகும் வரை கிளறவும்.
 • கிளறி கொத்தமல்லி, புதினா சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி மிளகாய் தூள், உப்பு தூள், மஞ்சள் தூள் போட்டு தீயை சிம்மில் வைத்து வேக விடவும்.
 • தக்காளி வெந்ததும் சிக்கனை சேர்த்து கிளறி தயிரும் சேர்த்து ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விட்டு இறக்கி தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு கடைசியில் சிறிது
 • கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

சாதம், நெய் சோறு, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவைக்கு தொட்டு சாப்பிடலாம். விஷேசங்களுக்கு செய்வதாக இருந்தால் முந்திரி, கசகசா அரைத்து ஊற்றவும். தேவைப்பட்டால் உருளைக்கிழங்கும் சேர்க்கலாம். நல்லா இருக்கும். கோழியை தக்காளி வெந்ததும் கடைசியில் போடனும். ஏனென்றால் கோழி சீக்கிரம் வெந்து விடும்

சிக்கன் சால்னா - 2
இது நார்மலாக செய்யும் அளவு முறை  இதையே இன்னும் கொஞ்சம் ஈசியாக 

 • கோழியில் வினிகர்எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து சுத்தம் செய்து ஏழு முறை கழுவவும்.கழுவி தண்ணீரை வடிக்கவும்.தண்ணீர் வடிந்ததும் கோழியில்   பாதி இஞ்சி பூண்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் தயிர், தக்காளி பிழிந்து விட்டு 3 பச்சமிளகாய், உப்பு, கொத்துமல்லி தழை,சிறிது வெங்காயம் போட்டு நன்கு பிரட்டி மெரினேட் செய்யவும்.  •  
  வாயகன்ற சட்டியை காயவைத்து நல்லெண்ணை + நெய்யை சேர்த்து காய வைத்து அதில் பட்டை ஏலம் கிராம்பு சேர்த்து பொரிய விட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து வதக்கவும், வதக்கி பொன்னிறம் ஆனதும் மீதி உள்ள இஞ்சி  பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பச்சவாடை போனதும் அதில் கொத்துமல்லி புதினா சேர்த்து வதக்கவும்.இப்போது மேரினேட் செய்த சிக்கனை இதில் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் கொதிக்க விட்டு சிறிது வெந்ததும் தேவைப்பட்டால் ஒரு உருளை கிழங்கை நாலாக வெட்டி போட்டு தேங்காய் முந்திரி சேர்த்து அரைத்து ஊற்றி தேவைக்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு வேகவைத்து இரக்கவும்.

  ரொம்ப்  ஈசியான சிக்கன் சால்னா. சிம்பிள் மசாலா வகைகளை கொண்டு ஈசியாக தயாரிக்கலாம்.
   Eid Special, Friday Special Recipe, Sunday Special Recipe , Easy chicken salan/ kurma. Tradtional Muslim Home Salna  •  ரொட்டி பூரி சப்பாத்தி , ப்லைன் ரைஸ், கீ ரைஸ், பகாரா கானா, தோசை , ஆப்பம் , இட்லி அனைத்துக்கும் பொருந்தும் இந்த சால்னா.


இதில் இரண்டு முறை போட்டுள்ளேன் . ஒன்று பிரியாணி போல சட்டியில் அல்லது குக்கரில் தாளித்து அப்படியே செய்வது/
மற்றொன்று மேரினேட் செய்து சிம்பிளாக ஈசியாக செய்வது

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

1 கருத்துகள்:

ராஜி said...

super

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா