Tuesday, April 24, 2018

Suvarotti /சுவரொட்டி என்னும் மண்பத்தை - Goat Spleen Fry

உடலில் உள்ள இரத்ததின் அளவை உடனே அதிகரிக்கனுமா வாங்க இந்த சமைத்து சாப்பிடுங்கள் கண்டிப்பாக உட்னே ஹிமோகுலோபின் லெவல் கூடும்.

சுவரொட்டி என்னும் மண்பத்தை, இது ஆட்டு உறுப்புகளில்  மட்டன் , கால் பாயா, குடல் போல இதுவும் ஒரு பகுதி ரொம்ப அருமையான இரத்தத்தின் அளவை அதிகரிக்க சூப்பரான உணவு இது.




மன்பத்தை / சுவரொட்டி - Spleen Fry
சுவரொட்டி – கால் கிலோ
சில்லி பவுடர் – ஒரு மேசைகரண்டி
உப்பு – தேவைக்கு
மிளகு தூள் - அரைதேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் –ஒரு தேக்கரண்டி
தக்காளி – ஒன்று
கொத்துமல்லி தழை
பச்ச மிளகாய் – ஒன்று பொடியாக அரிந்தது
நல்லெண்ணை – ஒரு மேசைகர்ண்டி
நெய்- ஒரு தேக்கரண்டி

செய்முறை
சுவரொட்டியை சுத்தம் செய்து அதில் மிளகாய்தூள்:மஞ்சள் தூள், உப்பு தூள், தக்காளி, பச்சமிளகாய், கொத்துமல்லிதழை, இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லா மசாலாக்களையும் சுவரொட்டியில் சேர்த்து ஊறவைக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியைகாயவைத்து ஊறவைத்த சுவரொட்டியை சேர்த்து சிறு தீயில் வேகவைக்கவும்.
வெந்ததும் சுருள கிளறி நெய்விட்டு ஒரு நிமிடம் வதக்கி இரக்கவும்.
கவனிக்க ஹிமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு வாரம் முன்று நாட்கள் வீதம் ஒரு மாதத்திற்கு செய்து கொடுக்கவும்.
கண்டிப்பாக இரத்ததின் அளவு அதிகரிக்கும்.
ஆக்கம்
ஜலீலாகமால்
சமையல் அட்டகாசங்கள்




-- 
லைக்.பன்னுங்க ஷேர் செய்யுங்கள்
சப்ஸ்கிரைப் செய்யுங்கள்
#hemoclobin level கம்மியானாலே பல உடலில் பிரச்சனைகள் தலை தூக்கும்
சோர்வு,எலும்பு வலி,மயக்கம் இது போல அதுக்கு அசைவத்தில் சுவரொட்டி என்னும் மன்பத்தையை தொடந்து சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஹிமோகுலோபின் லெவல் அதிகரிக்கும்.
#foodblogger#heathrecipe#increasehemeclobinleval#spleen#suvarotti#


My You tube channel please visit and like , comment, subscribe and share with your friends/

மேலே உள்ள லின்க் என் யுடியுப் சேனல் யார் யார் பார்க்கிறீங்கன்னு தெரியல என் சேனல் ஓப்பன் செய்ததும் பக்கத்தில் சிவப்பு கலரில் சப்ஸ்கிரைப்ன்னு இருக்கும் அதை கிளிக் செய்து சப்ஸ்கிரைப் செய்து விட்டு அதற்கு பக்கத்தில் இருக்கும் பெல் பட்டனையும் கிளிக் பண்ணிடுங்கள். இப்படி செய்தால் நான் போடும் பதிவுகள் உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்கும்.

மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் , எப்படி இருக்கு சரியா பேசி இருக்கேனான்னும் தெரியல , சில பேர் என் குரல் மெதுவாக இருக்கு என்று சொல்கிறார்கள், எனக்கு கேட்டா கரெக்டா இருக்கமாதிரி தான் தெரியுது.
நீங்க பார்த்து கமெண்டில் நிறை குறைகளை சொன்னால் தான் எனக்கு சரி செய்து கொள்ள முடியும்.

தொடர்ந்து இந்த பிலாக்குக்கு வருகைதந்து ஆதரளித்தது போல என் சேனலுக்கும் தொடர்ந்து வந்து லைக் , கமென்ட் , சப்ஸ்கிரைப் செய்து ஆதரவளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, April 19, 2018

வல்லாரை கீரை சூப் /வல்லாரை கீரை தண்ணீ சாறு


வல்லாரை கீரை சூப் /வல்லாரை கீரை தண்ணீ சாறு

Old Post (19.4.18)
வல்லாரை கீரை - Pennywort Soup(Centella asiatica)
கீரை வகைகளில் வல்லாரை கீரைக்கு  ஞாபகசக்தியை அதிகரிக்ககும் தன்மை உடையது.
படித்ததெல்லாம் மறந்து போதுமான்னு உங்கள் செல்ல குழந்தைகள் சொல்கிறார்களா? அன்றட உணவுடன் இந்தவல்லாரை கீரையை உங்கள் வீட்டு செல்லங்களுகு கொடுத்து வர ஞாபகசக்தியை அதிக படுத்தும். குழந்தைகள் மட்டுமல்ல நாமும் குடிக்கலாம்.

வல்லாரை கீரையில் சூப், கஞ்சி, சாலட், அடை , சட்னி, மினி கேக் என பல வகைகளாக செய்யலாம்.

வல்லாரை கீரை சூப்

வல்லாரை கீரை  - 2 கட்டு
வெங்காயம் – ஒன்று
பூண்டு – 8 பல்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
சோம்பு – அரை தேக்கரண்டி
ஒரிகானோ  - கால் தேக்கரண்டி
தண்ணீர் – 4 டம்ளர்
உப்பு – தேவைக்கு
பட்டர் (அ)  நெய் – கால் தேக்கரண்டி

செய்முறை

வல்லாரை கீரை நன்கு அலசி தண்ணீரை வடிகடவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மேலே கொடுக்கப்படுள்ள அனைத்து பொருட்களையும் ( கீரை, வெங்காயம் பொடியாக அரிந்தது, சீரகம், மிளகுதூள், உப்பு, சோம்பு , ஒரிகானோ, பட்டர், தண்ணீர் சேர்த்து 10 லிருந்து 15 நிமிடம் வரை வேகவிட்டு கொதிக்கவிட்டு தண்ணீரை வடிகட்டவும்.
சூடான பிரட்டுடன் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.
குறிப்பு: இதில் ரெடிமேட் புரோக்கோலி சூப் அல்லது வெஜ் சூப்மற்றும் ஸ்வீட் கார்ன் சேர்த்து கொதிக்க வைத்தும் கொடுக்கலாம்


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, April 1, 2018

ஈசி பரோட்டா டிப்ஸ் - How To Store Parotta , chappathi, Rotti

தினம் ரொட்டி சப்பாத்தி சுட முடியலையா? என்ன செய்யலாம் சூப்பரான 5 ஈசி டிப்ஸ் வாங்க என்னனு பார்க்கலாம்.

இல்லத்தரசிகளுக்கு சூப்பரான டிப்ஸ் கையெல்லாம் மாவாகமல் எப்படி மாவு பிசைவது?


லைக் பண்ணுங்கள் , பயனுள்ளதாக இருந்ததான்னு கமெண்டில் சொல்லுங்கள், சப்ஸ்கிரைப் செய்து உங்கள் நண்பர்களுக்கு அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் அனைவரும் பயனடையட்டும்.







 #easyparatha#Parotta#
http://createyoutube.com/fb/QZT1gKuMMxs
How to Store Paratha, roti , chappathi
https://youtu.be/QZT1gKuMMxs













1. ரொட்டி சப்பாத்தி செய்யும் போது சிறிது கேழ்வரகு மாவு, அல்லது சத்துமாவு கலந்து செய்யுங்கள் சூப்பர் ஷாப்டாகவும் வரும். அதே நேரம் ஹெல்தியான சப்பாத்தி ரொட்டியும் ஆச்சு.

https://youtu.be/QZT1gKuMMxs



2.பிளைன் பரோட்டா செய்யாமல் அதில் பேலேவருக்கு கசூரி மேத்தி அல்லது கருஞ்சீரகம், அல்லது இஞ்சி துருவல் காய்கறிவகைகள் இது போல சேர்த்து செய்யலாம்/



3. பரோட்டா அடுக்கு போட்டு வைத்ததை தேவைக்கு போக மீதியை ஒரு தட்டில் இடைவெளிவிட்டு அடுக்கி வைத்து ஃபீரிஜரில் வைத்தால் தேவைக்கு காலையில் பள்ளி செல்லும், காலேஜ் செல்லும், ஆபிஸ் செல்பவர்களுக்கு எடுத்து சுலபமாக உடனே சுட்டு கொடுக்கலாம்.



4. முன்று நாளைக்கு தேவையான பரோட்டாக்களை அடுக்கு போட்டு அதை திரட்டி லேசாக மாவு மறவது போல தவ்வாவில் இரன்டு பக்கமும் திருப்பி போட்டு அதை ஆறவைத்து பிரிட்ஜில் ஒரு வட்டவடிவ பாக்ஸில் போட்டு வைத்து கொள்ளலாம்.



5.இன்னும் சுலபமாக்க பரோட்டாவை திரட்டில் பட்டர் பேப்பரில் அடுக்ககாக ஒன்றன் கீழ் ஒன்றாக போட்டு அடுக்கி வைத்து  வைத்து கொண்டால் ரொட்டி செய்வது சுலபம். ( அதாவது பட்டர் பேப்பர் திரட்டிய பரோட்டா , அடுத்து பட்டர் பேப்பர் திரட்டிய பரோட்டா. இப்படி)



6. மாவு குழைக்கும் போது வேற வேலை பார்த்து கொண்டி இருந்தால் கையை அடிக்கடி கழுவ வேண்டி வரும் அதற்கு ஒரு வாயகன்ற பேசினில் குழைக்க வேண்டிய மாவு தண்ணீர் உப்பு எல்லாம் சேர்த்து ஒரு போர்கால் நல்ல கிளறி 5 நிமிடம் வைத்து விட்டு கையில் எண்ணையை தடவி கொண்டு குழைத்தால் ரொம்ப ஈசியாக குழைத்து விடலாம்.



7. ரொட்டி சுட்டு வைத்த ரொட்டி சப்பாத்தி கடக்குனு போய்விட்டால் அதை சாப்பாடு செய்து முடித்ததும் அந்த பாத்திரத்தில் சூடான  சோற்றின் மேல்  அதை வைத்தால் போதும் சூப்பர் ஷாப்ட் சப்பாத்தி ரொட்டி பரோட்டா முதலில் செய்து வைத்தது போலவே இருக்கும்.





அன்பு உள்ளங்களே மேலே உள்ள யுடியும் பதிவுகளை பார்த்து ஒரே ஒரு லைக் கமெண்ட் செய்து சப்ஸ்கிரைப் செய்து நீங்கள் பயடைந்ததை உங்கள் சொந்தஙகளுக்கு மற்றும் நண்பர்களுடன் ஷேர் செய்யுங்கள்.










https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/