Tuesday, May 22, 2018

இள‌நீர் க‌ட‌ற்பாசி Tender Coconut Agar Agar








இளநீர் ற்பாசி Tender Coconut Agar Agar

கடல் பாசி நோன்பு காலத்தில் செய்யும் பலவகை பதார்த்தங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு சைவ உணவு

தேவையானவை



  • கடல் பாசி - 10 கிராம்

  • தண்ணீர் - இரண்டு டம்ளர்
  • இளநீர் = ஒன்று முழுவதும்

  • இளநீரில் கிடைக்கும் தண்ணீர் - அரை (அ) முக்கால் டம்ளர்

  • சர்க்கரை - தேவையான அளவு

  • இளநீரில் இருக்கும் வழுக்கை தேங்காய்

  • பாதா‌ம் - ஒரு மேசைக்க‌ர‌ண்டி (பொடியாக‌ அரிந்த‌து தேவைப்ப‌ட்டால்)





  • செய்முறை


    ஒரு வாய் அகலமாக உள்ள சட்டியில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கடல்பாசி மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும்



    நன்கு கொதித்து கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும் போது சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்




    இறக்கி வைத்திருக்கும் கடல்பாசி கலந்த தண்ணீரை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டியில் தங்கும் கடல் பாசியை மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்



    சதுரமாக உள்ள இரண்டு பாத்திரங்களில் வடிகட்டிய தண்ணீரை ஊற்றி அதில் இளநீரை சேர்த்து அதில் உள்ள வழுக்கையை கரண்டியால் சுரண்டி மேலே தூவி விடவும். பாதாமை மேலே தூவவும்.




    சூடு அறியதும் லேசாக கெட்டி ஆகும். இப்போது அந்த இரண்டு பாத்திரங்களையும் ப்ரிட்ஜில் வைக்கவும்


    கடல் பாசி நன்கு கெட்டியாக மாறி குளிர்ச்சியடைந்ததும் எடுத்து விரும்பிய வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.


    இது சாப்பிடசாப்பிடநிறையசாப்பிடனும்போல் தோன்றும் அவ்வவுருசியாகஇருக்கும்

    Note:

    கடல் பாசி நோன்பு காலத்தில் செய்யும் பலவகை பதார்த்தங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு சைவ உணவு. இதை ஜெல்லியை போல் ஹோட்டல்களில் பாலுடா மற்றும் விதவிதமான ஸ்வீட் வகைகளில் பயன்படுத்துவார்கள். இது நோன்பு பிடிக்கும் போது ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும். கடல் பாசியை பல வகையாக செய்யலாம், ப்ளைனாக செய்து அதில் வேண்டிய புட்கலர் சேர்த்து நட்ஸ் தூவி கொள்ளலாம். இல்லை பழ வகைகளை நறுக்கி போட்டு செய்யலாம். பால், ஜவ்வரிசி, கடல்பாசி சேர்த்து காய்ச்சி செய்து சாப்பிடலாம். ரூ ஆப்ஷா மற்றும் டேங்க் பவுடர், தேங்காய் உடைத்த தண்ணீரிலும் செய்யலாம்






    linking to Agar Agar Recipe contest sponsored by Marine Chemicals , Kochi. www.Indiaagar.com hosted at Food Corner



    Saturday, May 19, 2018

    Mango Cocktail மேங்கோ காக்டெயில்



    மேங்கோ காக்ட்யில் ஒரு பழமா நாம ஜூஸ் போட்டு குடிப்பதை விட மிக்ஸ் கலவையாக ஜூஸ் அடித்து குடித்து பாருங்கள் அதன் சுவையோ தனி தான்..
    Please click above video and watch full, like and share your comments.







    https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
    https://www.facebook.com/Samaiyalattakaasam
    http://www.chennaiplazaki.com/

    Thursday, May 17, 2018

    ஈசியான முன்று வகை மாலை நேர சிற்றுண்டி - Quick and easy Evening Snacks for kids




    எல்லா அம்மா மார்களுக்கும் பள்ளிவிட்டு வரும் பிள்ளைகளுக்கு மற்றும் பள்ளி விடுமுறையில் ஆட்டம் போட்டு வரும் பிள்ளைகளுக்கு என்ன டிபன் செய்து கொடுப்பது என்று மண்ட காயுதா, வாங்க சுலபமாக முன்று வகையான ஈசி மாலை நேர சிற்றுண்டியை சமையல் அட்டகாசங்கள் யுடியுப் சேனலில் பார்க்கலாம்,.

    இது வரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து பக்கத்தில் உள்ள பெல் பட்டனையும் கிளிக் செய்து கொள்ளுங்கள்.





    ரெசிபி - 1
    சால்டட் பிஸ்கேட் சாண்ட்விச்
    சால்டட் பிஸ்கேட் – 6
    கேபேஜ் – 3 மேசைகரண்டி துருவியது
    கேரட் – இரண்டு மேசைகரண்டி துருவியது
    கேப்சிகம் – ஒரு தேக்கரண்டி
    மையன்ஸ்  அ ஏதாவது ஒரு ஸ்ப்ரெட் – முன்று மேசைகரண்டி
    பெப்பர் – ஒரு பின்ச்
    சால்ட் - சிறிது
    லெமன் – அரை டீஸ்பூன்
    சுகர் – அரை டீஸ்பூன்
    மில்க் – ஒரு தேக்கண்டி

    செய்முறை
    பிஸ்கேட் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பவுளில் கலந்து பிஸ்கேட்டில் வைத்து பிள்லைகளுக்கு சாண்ட்விச் போல செய்து கொடுக்கவும்.
    ரெசிபி - 2
    கார்ன் வேகவைத்தது அல்லது ரெடி மேட் டின் 100 gram
    பட்டர் – ஒரு தேக்கரண்டி
    பெப்ப்ர் சால்ட்
    ஒரிகனோ – அரை தேக்கரண்டி
    சில்லி பொடி – கால் தேக்கரண்டி
    சால்ட்

    கார்னில் மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்த்து கலக்கி பிள்ளைகளுக்கு கொடுக்கவும்.

    ரெசிபி - 3
    ஹனி பிளேவர் நெஸ்ல் கிரீம்
    புரூட் டின் (அ) ப்ரஷ் ப்ரூட்
    சாப்ரான்

    தேன்
    சீசன்களில் கிடைக்கும் பழங்கள் (மாம்பழம், ஆப்பிள், அன்னாசி ,வாழைபழம் செர்ரி) போன்றவைகளை பொடியாக நறுக்கி அதில் நெஸ்ஸில் கிரீம், சாப்ரான் தேன் கலந்து கொடுக்கவும்.

    முன்று விதமான ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு ரெடி.

    https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
    https://www.facebook.com/Samaiyalattakaasam
    http://www.chennaiplazaki.com/

    Tuesday, May 15, 2018

    திப்பிலி டீ, மிளகு , அதிமதுர டீ


    திப்பிலி டீ,ஹெர்பல் டீ
    நோன்புகாலத்தில் அதிக ஜூஸ் , பழங்கள் குடிப்பதால் ஏற்படும் தொண்டை கர கரப்புக்கும் இதை குடிக்கலாம்.
    விடியோவை முழுவதும் பார்த்து அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்
    sukku , milaku athimathura Tea 3
    அதிமதுரம் ஆங்கில பெயர் என்ன?
    திப்பிலி ஆங்கில பெயர்
    அதிமதுரம் ஆங்கில பெயர்


    சுக்கு -  Dry ginger power

    திப்பிலி – long pepper

    அதிமதுரம் –  Liquorice




    Thippli MIlaku Tea for cough










    https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/