Tuesday, June 5, 2018

How to Make Chikoo Agar Agar - சப்போட்டா பழ கடல்பாசி

Chikku agar agar pudding

சப்போட்டா பழ புட்டிங்
sappoottaa  pudding

கடல்பாசி என்னும் சைனா கிராஸ்(அகர் அகர்) ஒரு சைவ உணவு. இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உணவுகளில் இதுவும் ஒரு வகையாகும்.உடலுக்கு மிகவும் குளிர்ச்சி, கொளுத்தும் கோடையிலும் இதை செய்து சாப்பிடலாம். அல்சர், வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.ஜெல்லி போல் கலர் கலராக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உணவகங்களில் டெசர்ட் மற்றும் ஐஸ்கீரிம் வகைகளுக்கும் இதைசேர்த்து செய்வார்கள் .





Please Subscribe and share with your friends



 

தேவையான பொருட்கள்

அகர் அகர் (கடல் பாசி) – ஒரு கைப்பிடி
சர்க்கரை  - 6 தேக்கரண்டி
தண்ணீர் – 2 டம்ளர்  (400 கிராம்)
பால் – 1 டம்ளர்
சப்போட்டா – 4
பொடியாக நறுக்கிய பிஸ்தா  – தேவைப்பட்டால்

அகர் அகர் என்னும் கடல் பாசியை தண்ணீரில் ஊறவைத்து வடிக்கடி அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கரைய கொதிக்க விடவும்.
சப்போட்டாவை பால் சேர்த்து அரைத்து அகர் அகர் உடன் கலக்கவும்.
சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
ஒரு பெரிய தாம்பாள தட்டில் அகர் அகர் கலவையை ஊற்றி ஆறவைத்து பிரிட்ஜில் வைத்து செட்டாக்கவும்.மேலே பிஸ்தால் அல்லது உங்களுக்கு விருப்பட்ட நட்ஸ் தூவி விடவும்.இரண்டு மணி நேரம் குளிர வைத்தால் போதுமானது, வேண்டிய வடிவில் கட் செய்து பரிமாறவும்.
சூப்பரன சப்போட்டா பழ கடல் பாசி ரெடி






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா