Friday, November 23, 2018

Cooking with Kids - Haziqah How to Prepare Perfect Agar Agar/china Grass ...

அகர் அகர் என்னும் கடல் பாசி தயாரிப்பது எப்படி?...


அகர் அகர் ஜில்லுன்னு குறிப்பு யுடியுப் ல போஸ்ட் பண்ணது பார்த்துட்டு நிறைய பேர் இன்பாக்ஸ் லிலும் வாட்ஸ் அப்பிலும் அதை புதுசாக செய்பவர்களுக்கு ஏற்றவாறு தெளிவாக சொல்லும் படி சொன்னார்கள்.

ஒரு வெள்ளி துபாயில் விருந்தினர் வந்திருந்த சமையல் இந்த 30 வகை அகர் அகர் பற்றி அவர்களிடம் என்ன எனன் ப்ளேவர் எப்படி பயன் படுத்தினேன் இதற்காக எவ்வளவு சிரமப்பட்டேன் என்று பேசி கொண்டு இருந்த சமயம், கிரேட் ஒன் படுக்கும் அஜீகாஅனஸ், இந்த புக்கை வாங்கி பார்த்த்துட்டுஎனக்கு உடனே செய்து வேணும் என்று சொல்ல நான் செய்ய ஆரம்பித்ததும் உடனே கூட வந்து நானும் உங்களுடன் இதை செய்து இந்த ஷேப்ஸ் கட் செய்வேன் என்று சொல்லு நாங்க சேர்ந்து செய்த குறிப்பு. முதல் முறையாக குழந்தைகளுடன் சமையல், குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க  ரொம்ப பொறுமை வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். கொஞ்சம் எதர்த்தமாக தான் பேச்சு வழக்கு எல்லாம் இருக்கும் பாருங்கள்

பிள்ளைகள் தானே நாம் பேசுவதை எங்க கவனிக்க போகிறார்கள் என்று நினைக்காதீர்கள் அவர்கள் விளையாடி கொண்டு இருந்தாலும் , கவனம் அனைவர் மேலும் இருக்கும். எனக்கே ஆச்சரியாமாக இருந்தது.

அகர் அகர், கடல் பாசி, சைனா கிராஸ், நோன்புகால சமையல்,


அகர் அகர் என்னும் கடல் பாசி தயாரிப்பது எப்படி?

Roo ap sha essence
Pista and ilaachi essence
Mango essence
rose milk essence


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Friday, November 16, 2018

ஜில்லுன்னு ஒரு டேஸ்ட் நாவூறும் புகைப்படங்கள் - அவள் விகடன் - jaleelakamal

தோழ   தோழியர்களே இந்த வீடியோ லிங்கை கிளிக் செய்து பாருங்கள் ஷேர் செய்து சப்போட் பண்ணுங்கள்.#agaragar#coolrecipepictures#supereyetreat#chinagrass#ஜில்லுன்னு ஒரு டேஸ்ட் அசத்தலான அகர் அகர்அகர் அகர் படங்கள் என்ன என்ன ப்லேவரில் செய்யலாம் வீடியோவை கிளிக் செய்து பாருங்கள், லைக் செய்து ஷேர் செய்யுங்கள். இது வரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து வைத்து கொள்ளுங்கள். பிடித்திருந்தால் கமெண்ட் செய்யுங்கள்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

வெந்தய கீரை சுரைக்காய் பகோடா//போட்டோ சரியா இல்ல பழைய போஸ்ட் , பிறகு நல்ல போட்டோ இணைக்கிறேன்.//


வெந்தய கீரை சுரைக்காய் பகோடா
வெந்தய கீரை வயிற்று புண்ணிற்கு மிகவும் நல்லது, கசப்பாக இருக்கும் இதை பருப்புடன் சமைப்போம் , இப்படி பகோடாவாக செய்யும் போது நீர்காயான சுரைக்காய் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து கொண்டால் அருமையாக பகோடா வாக சாப்பிடலாம்.


வெந்தய கீரை – சிறிய கட்டு
சுரைக்காய் – அரை கப் துருவியது
கடலை மாவு – 150 கிராம்
அரிசி மாவு 50 கிராம்
மிளகாய் தூள் – அரை தேக்க்ரண்டி
இஞ்சி துருவியது  -1 மேசைகரண்டி
சர்க்கரை – அரை தேக்க்ரண்டி
உப்பு – தேவைக்கு
பச்ச மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
இட்லி  சோடா – ஒரு சிட்டிக்கை (தேவைப்பட்டால்)
செய்முறை
ஒரு வாயகன்ற பேசினில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கெட்டியாக பிசையவும். தண்ணீர் சேர்க்கதேவையில்லை, சுரைக்காயில் உள்ள தண்ணீரே போதுமானது.
வானலியில் எண்ணையை காய வைத்து மிதமான தீயில் சிறிது சிறிதாக கிள்ளி போட்டு கருகாமல் பொரித்து எடுக்கவும்.
சுவையான சத்தான சுட சுட பகோடா ரெடி, மாலை நேர சிற்றூண்டி அல்லது கால நேரம் உப்புமாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

மொரு மொரு பகோடா
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, November 3, 2018

பாலக் மட்டன் பாஸ்தா - Palak Mutton Pasta

காலை உணவோ அல்லது ,லன்ச் பாக்ஸ் கோ, அல்லது இரவு உணவோ ஈசியா செய்துடலாம் பாஸ்தா, குழந்தைகளுக்கும் இந்த வடிவம் அவர்களை சாப்பிட தூண்டும். இதை மட்டன் மற்றும் சிக்கன் அல்லது இறால் போன்றவையுடன் செய்து கொடுக்கலாம். இல்லை விருப்பமான காய்கறிகள் சேர்த்தும் பனீர் சேர்த்தும் செய்யலாம்.


Ingredients 

வெந்த மட்டன் துண்டுகள் - 6
போ வடிவ பாஸ்தா - 2 கப்
பாலக் கீரை - 1 கப்
வால் நட் - 3
பச்சமிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
வெங்காயம் - 1 
பட்டர் + எண்ணை - 2 தேக்கரண்டி
உப்பு தேவைக்கு

#Pasta#Lunchboxrecipes , #பாஸ்தா #மக்ரூனி, டிபன், #இரவுஉணவு.


செய்முறை

பாஸ்தாவை தனியாக வேகவைத்து தண்ணீரை வடித்து சிறிது எண்ணை சேர்த்து பிசறி வைக்கவும்.

பாலக்கீரையை வேகவைத்து தண்ணீரைவடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி தண்ணீரை வடிகட்டவும்.

பாலக் கீரையுடன் வால்நட், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சமிளகாய், சேர்த்து அரைக்கவும்.

குக்கரில் எண்ணை+ பட்டர் சேர்த்து அரைத்த விழுது மற்றும்உப்பு சேர்த்து நன்கு  கிளறி ,மட்டன் துண்டுகளை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் வேகவைக்கவும்.

கீரை + மட்டன் ஒன்று சேர்ந்து சிறிது நேரம் வெந்ததும். வெந்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறி மேலும் 5 நிமிடம் வேகவிட்டு இரக்கவும்.காலை டிபனுக்கு ஏற்ற சுவையான சத்தான மட்டன் பாலக் பாஸ்தா ரெடி.

கவனிக்க:மட்டனில் மிளகாய் தூள்கால் தேக்கரண்டி, மஞ்சள் தூள் சிட்டிக்கை, உப்புகால் தேக்கரண்டி, இஞ்சி பூண்டுகால் தேக்கரண்டி சேர்த்து வேகவைத்து கொள்ளவும்..இதை மீதியான பொரிச்ச கறியிலும் செய்யலாம்.
குழந்தைகளுக்கு பள்ளிக்கு எடுத்துசெல்ல சத்தான பாலக் மட்டன் பாஸ்தா.https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/