Thursday, July 16, 2015

Nawab Mehboob Alam Khan's Traditional Hyderabadi Biryani in Tamil










பாரம்பரிய ஹைதராபாதி பிரியாணி

ஹைதராபாத் மட்டன்  பிரியாணி
Nawab Mehboob Alam Khan's Tradition Hyderabadi Biryani in Tamil

மேரினேட் செய்ய

1.   மட்டன் – 600 கிராம்
2.   தயிர் – ஒரு கப்
3.   ப்ப்பாளி காய் பேஸ்ட் -  இரண்டு மேசைகரன்டி
4.   வெங்காயம் -  2 பெரியது (1+1) எண்ணையில் வறுத்த்து
5.   மிளகாய் தூள் – ஒரு தேக்க்ரண்டி
6.   மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
7.   சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி
8.   மிளகுஅரை தேக்கரண்டி
9.   பச்ச மிளகாய் - நான்கு
10. பட்டை – 1 இன்ச் சைஸ்
11. ஏலக்காய் - 2
12. லவங்கம் - 2
13. பிரிஞ்சி இலை- 1
14. இஞ்சி பேஸ்ட் – ஒரு மேசைகரண்டி
15. பூண்டு பேஸ்ட் – ஒரு மேசைகரண்டி
16. கொத்துமல்லி புதினா தலா அரைகப்
17. எண்ணை – அரை கப்
18. உப்பு – தேவைக்கு
19. நெய்  - முன்று தேக்கரண்டி
20. எலுமிச்சை பழம் – அரை பழம்


அரிசி வேகவைக்க
1.   அரிசி – 500 கிராம்
2.   ஷா ஜீரா – ஒரு தேக்கரண்டி
3.   பட்டை – 1 இன்ச் சைஸ்
4.   பிரிஞ்சி இலை - ஒன்று
5.   லவங்கம்  - 2
6.   ஏலக்காய் - 2
7.   உப்பு – தேவைக்கு



சாஃப்ரான் – 1 தேக்க்ரண்டி
சூடான பால் – அரைகப்

செய்முறை

வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து அரை கப் எண்ணையில் பொன் முறுவலாக வறுத்து எடுத்துவைக்கவும்.

 மட்டனை நன்கு கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்ஒரு வாயகன்ற பவுளில் 1 லிருந்து 20 வரை உள்ள பொருட்களை சேர்த்து நன்கு கலக்கி 20 நிமிடம் ஊறவைக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ( உலைகொதிக்கவிட்டு பட்டைலவங்கம்ஏலக்காய்பிரிஞ்சி இலை , உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு அரிசியை சேர்க்கவும்.அரைபதமாக வேகவைத்து வடித்து எடுக்கவும்.

அடுப்பில் தம்போடும் கருவியை வைத்து அதில் ஒரு கனமான சட்டியில் மேரினேட் செய்த மட்டனை வைத்து சமப்படுத்தி அதில் அரை பதமாக வடித்த அரிசியை சேர்த்து மேலே எடுத்து வைத்த பொரித்த வெங்காயம்வறுத்த எண்ணையுடன் சிறிது கஞ்சி தண்ணீர் கலந்து பரவலாக ஊற்றி ,சாஃப்ரான் பாலையும் தெளித்து , தேவை பட்டால் கலர் பொடி தூவிமேலே கொத்து மல்லி புதினா சேர்த்து முடிபோட்டு மேலே கனமான பாத்திரத்தை ஏற்றி 10 நிமிடம் மிடியமான தீயில் வேகவிட்டு பிறகு சிறு தீயில் வைத்து அரை மணி நேரம் தம்போட்டு இரக்க்கவும்.
 கவனிக்க : அரிசி வடிக்கும் போது ஒன்றோடு ஒட்டாம இருக்க ஒரு ஸ்பூன் ஆயிலும்,அரை பழம் எலுமிச்சை சாறும் ஊற்றவேண்டும்.
மேரினேட் செய்யும் போது பட்டை லவங்கம் ஏலக்காய் முழுசாபோட பிடிக்கவில்லை எனில் கரம் மசாலா ( பட்டை ஏலம்,லவங்கம்பொடித்து போட்டுக்கொள்ளலாம்.

சுவையான ஹைதராபாத் மட்டன் பிரியாணி ரெடி


வீடியோவில் நிறைய சத்தம் வரும் செய்யும் போது நான் அதை கவனிக்கவில்லைபொருத்து கொள்ளுங்கள்பிறகு கடைசியாக மட்டன் பிரியாணி என்று சொல்வதற்கு பதில் சிக்கன் பிரியாணி என்று சொல்லி விட்டேன்.








Hyderabadi Biriyani


Traditional Hyderabadi Biryani - Nawab Mehboob Alam Khan Cooking Hyderabadi Biryani


ஹைதராபாத் தம் பிரியாணி , செஃப் மெகபூப் ஆலம் கான் பாரம்பரியமான பிரியாணியை மிகவும் சுலபமாக செய்து காண்பிக்கிறார். இவர் தனது 15 வயதில் இருந்து இந்த பிரியாணியை செய்து வருகிறாராம், வாரம் ஒரு முறை 200 பிள்ளைகளுக்கு சமைத்துகொடுக்கிறாராம்.

பிரியாணி அந்த காலத்தில் எங்க வீடுகளிலும் பெரிய வெண்கல பானையில் ( இதை நாங்க தேக்‌ஷா என்போம்) தான் செய்வோம்.அதுதான் உடலுக்கு ஆரோக்கியமும் கூட.
எங்க வீட்டு பெண்களுக்கு திருமணம் செய்து அனுப்பும் போது சீர் வருசையுடன் கண்டிப்பாக இந்த தேக்‌ஷா 1 படி , 3 படி , 5 படி என்ற கணக்கில் குடும்பத்தில் உள்ள நபர்களை பொறுத்து வாங்கி கொடுப்போம்.
எங்க டாடியும் எனக்கு 5 படி தேக்‌ஷா வாங்கி கொடுத்தார்கள்.இப்ப காலம் மாறி போச்சு தேக்‌ஷா யாரும் வாங்குவதில்லை.

Biriyani Dhum

How to prepare dum biriyani

 ஒரு பெரிய விஷேஷம் என்றால் தெருவில் முன்று கால் இரும்பு அடுப்பு நிறுத்தி கரி கங்காக்கி அதில் தான் செய்வோம். சின்ன சின்ன பங்ஷன் களுக்கும் வீட்டின் வெளியில் வைத்து தான்அதற்கென பிரத்யேகமாக மிகவும் அனுபவம் வாய்ந்த  சமயனாக்களை வைத்து செய்வோம். பெரிய கல்யாணங்களுக்கும் இப்படி தான் இன்னும் செய்து வருகிறோம். இதன் சிறப்பு அம்சம், தம் போடுவது தான் மெயின் கிழே கங்கு எரிந்து கொண்டு இருக்கும், சாதம் கறி எல்லாம் சேர்த்து அடுப்பில் ஏற்றி தாளித்ததும் மூடி போட்டு மேலே மூடி மேலே நல்ல வெயிட்டான கல் மற்றும் கிழே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை எடுத்து போட்டு தம் போடுவோம். கிழே அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் சாதம் வேகும்.
இதன் வாசனை கேட்கவே வேண்டாம் எட்டு தெருவுக்கு அந்த வாசனை எட்டும்.
பிரியாணிக்கு மட்டன் எலும்புடன் போட்டால் தான் அதன் ருசி அபாரமாக இருக்கும்.இதை நான் வீடியோவாக எடுத்து விட்டேன். சில தவறுகள் இருக்கு . அட்ஜஸ்ட் செய்து பார்த்துகொள்ளுங்கள்.



இதில் செஃப் சொன்ன மெதட் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு ,
சாப்ரானை ( குங்குமபூவை) பாலில் காய்ச்சி சேர்ப்பது, வெங்காயம் பொரித்த எண்ணையில் மேரினேட் செய்வது மற்றும் வடித்த கஞ்சியுடன் பொரித்த வெங்காய எண்ணையை சேர்த்து தம் போடும் போது மேலே ஊற்றுவது. சிலருக்கு அப்படியே தம் போட்டால் வேகுமா வேகாதா என்ற சந்தேகம் வேண்டாம்.  மேரினேட் செய்து போடும் தம்மிலேயே நல்ல வெந்துவிடும்,  பப்பாளி காய் அரைத்த பேஸ்ட் சேர்த்து மட்டனில் மேரினேட் செய்வதுதான் இதில் மிக முக்கியம்.

பிரியாணி செய்யும் விதம்
பிரியாணி தம் போடும் விதம்
Traditional Hyderabadi Biriyani
How to make Hyderabadi Mutton Biriyani -
பாரம்பரிய சமையல்
ஹைதராபாத் மட்டன் பிரியாணி



 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975https://www.facebook.com/Samaiyalattakaasamhttp://www.chennaiplazaki.com/

Wednesday, July 15, 2015

த்ரி மேஜிக் ரெட் கூலர்



மாதுளை பழம் கர்பிணி பெண்களுக்கு மிகவும் உகந்தது, கேன்சர் நோயை கட்டு படுத்தும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நிவர்த்தி செய்யும்.
மலட்டு தன்மை நீங்க ஆண் பெண் இருவரும் ஆறு மாதங்கள் தொடர்ந்து மாதுளை முத்துகளை சாப்பிட்டு வர குழந்தை பேறு உண்டாகும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
இரத்த சோகையை சீராக்கும். வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும்.

Pome cooler with Roo afsha & Saffron


தேவையான பொருட்கள்


தண்ணீர் - 200 மில்லி
உப்பு - ஒரு சிட்டிக்கை
சர்க்கரை - தேவையான அளவு 
மாதுளை - 4 பழங்கள்
ரூ ஆப் ஷா எசன்ஸ் - ஒரு பெரிய குழி கரண்டி
சாஃப்ரான் ( குங்குமப்பூ)  - அரை தேக்கரண்டி
ஐஸ் கட்டிகள் - தேவைக்கு




செய்முறை

மாதுளை முத்துக்களை பிரித்து எடுத்து மிக்சியில் போட்டு அதனுடன் ஐஸ் கட்டிகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடிக்கவும்.

ஜூஸை ஒரு மஸ்லின் துணி அல்லது வடிகட்டியில் வடிக்கவும்.

சாஃப்ரானை ஒரு மேசைகரண்டி சூடான வெண்ணீரில் ஊறவைக்கவும்.

வடித்த ஜூஸுடன் சாப்ரான் மற்றும் ரூஆப்ஷா எசன்ஸை சேர்த்து தேவைக்கு ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும்.




மாதுளை ஜூஸ், சாஃப்ரான் ப்லேவர் மாதுளை ஜுஸ், ரூ ஆப் ஷா மாதுளை ஜுஸ், ஹெல்தி டிரிங்,

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, July 13, 2015

கருப்பட்டி இளநீர் கடல் பாசி - Jaggery Tender Coconut Agar Agar








கடல்பாசியில் சர்க்கரை  மற்றும் கண்டெண்ட் மில்க் சேர்த்து செய்வோம், சர்க்கரை வியாதிகாரகள் அதிகமாக சாப்பிட முடியாது அதற்கு என்ன செய்யலாம். ஒரு சேன்ஞ் க்கு கருப்பட்டி சேர்த்து செய்யலாம். 


தேவையான பொருட்கள்

இளநீர்  - ஒன்னறை கப்
தண்ணீர்  - ஒன்னறை கப்
கடல் பாசி - கைக்கு ஒரு பெரிய கைப்பிடி
கருப்பட்டி வெல்லம் - 100 கிராம் ( தேவைக்கு கூட்டி போட்டுகொள்ளலாம்)
இளநீர் தேங்காய்
உப்பு - அரை சிட்டிக்கை


செய்முறை


கருப்பட்டியை சிறிது தண்ணீரில் தூள் செய்து போட்டு காய்ச்சி வடிக்கட்டி வைக்கவும்.
தண்ணீரில் கடல் பாசியை உதிர்த்துபோட்டு 10 நிமிடம் ஊறவைத்து நன்கு கரைய காய்ச்சவும்.
இளநீரையும் , கருப்பட்டியை சேர்த்து ஊற்றி காய்ச்சி ஒரு பெரிய தாம்பூல தட்டில் ஊற்றி இளநீர் தேங்காயை பரவலாக தூவி விட்டு ஆறவைத்த்து குளிரூட்டியில் வைத்து குளிர வைத்து தேவைக்கு துண்டுகள் போட்டு சாப்பிடவும்.






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, July 9, 2015

தம்மடை - Dumadai - Soji Cake




தம்ம்டை என்பது ரவை,தேங்காய் பால் ,முட்டை சேர்த்து செய்யும் கேக், பழங்காலங்களில் இதை விறகு அடுப்பில் பெரிய இரும்பு தவ்வாவில் மண்ணை சூடுபடுத்தி இந்த கலவையை ஒரு சட்டியில் வைத்து வேகவைத்து எடுப்பார்கள். இப்போது நாம் ஈசியாக ஓவனிலேயே பேக் செய்யலாம்/
இதை அரேபியர்கள் பஸ்பூசா Eggless Basbousaஎன்று சொல்வார்கள் சேர்க்கும் பொருட்கள் சிறிது வித்தியாசப்படும்.
Eggless Basbousa 

தம்மடை 

ரவை – ஒரு ஆழாக்கு
கட்டி தேங்காய் பால் – முக்கால் ஆழாக்கு
சர்க்கரை – முக்கால் ஆழாக்கு
நெய் – அரை ஆழாக்கு
முட்டை – இரண்டு
உப்பு – ஒரு சிட்டிக்கை

செய்முறை
ரவையை வறுத்து வைக்கவும். சர்க்கரையை பொடித்து கொள்ளவும்.
முட்டையை நுரை பொங்க அடித்து அதில் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
பிறகு தேங்காய் பால் சேர்த்து கலக்கி அதை ரவையை சேர்த்து கிளறி நெய் மற்றும் உப்பை சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
10 நிமிடம் முற்சூடு செய்த ஓவனில் 5 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.





குங்குமம் தோழியில் வெளியான 30 சமையல் குறிப்பில் ஒன்று இந்த தம்மடை.
சுவைத்து மகிழுங்கள் , உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொண்டாலோ அல்லது செய்து பார்த்து சமையல் புகைப்படத்தை எனக்கு (feedbackjaleela@gmail.com) அனுப்பினாலோ மிகவும் சந்தோஷப்படுவேன்.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, July 3, 2015

ரமலான் ஸ்பெஷல் 30 வகை சைவ சமையல் குறிப்புகள் குங்குமம் தோழியில்

My 30 Veg recipes for Iftar special has been published in Kunkumam Thozi Monthly Magazine (Tamil) on 30th June 2015.
Thank you very much Vaidehi Ranganathan & Farin Ahmed for giving me the opportunity

ரமலான் ஸ்பெஷல் 30 வகை சைவ சமையல் குறிப்புகள் குங்குமம் தோழியில் வெளியாகியுள்ளது. எல்லா குறிப்புகளையும் ஒவ்வொன்றாக இங்கே பகிர்கிறேன் செய்து பார்த்து என்னுடன் இங்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மிகவும் சந்தோஷப்படுவேன்.

 குங்குமம் வாங்கி விட்டீர்களா?
என்ன அடிக்கடி டீவியில் விளம்பரத்தில் வருமே... கேட்டு இருப்பீர்கள் இல்லையா?
அப்படியா என்ன விஷேசம்?
விஜய் டிவியிலிருந்து விலகுகிறார் சின்னத்திரை நடிகை டிடி
ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டினால் ருபாய் 500 அபராதம்
சென்னையில் மெட்ரோ ட்ரெயின் வெற்றிகரமாக இயக்க பட்டுள்ளது ..
உயிரை பறிக்குமா பருமன் சிகிச்சை?
எடை குறைக்க அவசியாமான பயிற்சி//
ஹிஹி அடுத்து
எல்லோரும் கொண்டாடுவோம்......
//நோன்பு நேரத்தில் இஸ்லாமியரின் சமையல் என்றாலே அசைவம் தவிர வேறில்லை என்று நினைக்கும் நான் வெஜ் பிரியர்களுக்கு முத்தான 30 நோன்புகால வெஜ் ரெசிபயை ஜலீலாவின் சமையல் அட்டகாசத்தில் இருந்து குங்குமம் தோழியில் உங்களுக்காகவே ரமலான் ஸ்பெஷல் 30 வகை வெஜ் ரெசிபிகள் பகிர்ந்துள்ளேன் .//
சுவைத்து உங்கள் பொன்னனான கருத்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.
இதன் மூலம் ஒரு அதிசயம் நடந்துள்ளது அதை பிறகு பகிர்கின்றேன்.







  1. இஞ்சி கொத்து
  2. மிக்ஸட் சுண்டல் கச்சோரி
  3. உருளை மந்தி
  4. சீனி வடை
  5. தம்மடை
  6. ஸ்வீட் ரைஸ் பால்ஸ்
  7. இனிப்பு சோமாஸ்
  8. மட்டர் தால் வடை
  9. கத்தரிக்காய் ரசம்
  10. கலர்ஃபுல் மில்க் அகர் அகர்
  11. ஏழுகறி சாம்பார்
  12. சப்ஜி பிரியாணி
  13. தக்காளி பச்சடி ( அல்வா)
  14. பலாக்கொட்டை – கஷ்கொட்டை காய் கறி புளி சால்னா
  15. தினை குதிரை வாலி தேங்காய் பால் வல்லாரை கஞ்சி
  16. வெஜ் கப்ஸா ( அரபிக் வெஜ் பிரியாணி)
  17. முட்டை வட்லாப்பம்
  18. வெஜ் சேமியா பிரியாணி
  19. இஞ்சி ரசம்
  20. தர்பூசணி ரைஸ் கீர்
  21. பாலக் ஸ்பெகடி
  22. தேங்காய் பால் வெந்தய சோறு
  23. மசாலா சாய்
  24. வெல்லம் கோடா
  25. பீட்ரூட் முர்தபா
  26. மிக்ஸட் பஜ்ஜி ப்ளேட்டர்
  27. ஜவ்வரிசி சோளம் சூப் (சைனீஸ் ஸ்டைல்)
  28. மூவர்ண கேசரி ( மூவர்ண லட்டு)
  29. பிஸ்தா ஷீர் குருமா
  30. தால்சா ( மாங்காய் தால்சா)



மிக்சட் சுண்டல் கச்சோரி - Mixed Sundal Kachori
 முட்டை வட்லாப்பம் Egg pudding


**************************************************


Facebook Group – In my Kitchen, For Food Picture Contest - Winner during February, 2015.
World Hijab 2015  competition – 5th Winner,

Radio Salam Ladies Day out Sambar Competition 4th ( Grace Price) Aachi Masala Pack - 20.03.15










The Agar Agar Specialist Hosted By Food Corner , Anamika I have been Awarded as Fifth Winner in Marine 

Chemical - The Agar Agar Recipe Contest - During December 2012 to February 2013. -  For My Indian Flag Agar Agar

https://www.facebook.com/marinechemicals?fref=ts



 Feb - 2013 I won First Prize form Spicy Chilly & cuponation  Jabong From Barathy, for My Auththur Milaku kaRi   ஆத்தூர் மிளகு கறி & Healthy Adai. Received Rs.1,500/ as award prize.  


Siman 2012 Yearly Magazine 





March - 2012
My Article Cancer Awareness for Ladies (nesan & Udanz)

4th Price (grace price) Rs.1000/ 


 My article regarding cancer and recipes in http://www.ladiesspecial.com/ Ladies Special edition. 07.02.2011




 I had took part in The master chef india 2 contest – 2011  and i won the first price for my tamil blog - samaiyalattakaasangkaL For the recipe Tutti Fruity Pancake
https://www.indiblogger.in/topic.php?topic=47








I had participated in master chef india 2 contest and won the runner up award and the recipes were Eggplant bhaji sandwich & mixed Tandoori Fish Fry.
https://www.indiblogger.in/topic.php?topic=47

My recipe published in Ananda Vidadan Deepawali Malar (ஆனந்த விகடன் தீபாவளி மலர் )
amd kilakkarai anjal monthly magazine.(2010)


Whole moong Dal Poli

My Recipe published in Dubai Thenral Monthly Magazine - 2005

Beetroot Halwa & Garlic Chicken.


My Blogs – Food Blog

My Business website

By
Jaleelakamal

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/