Aval kitchen
ராஜ்மா சாலட் / கலர் ஃபுல் ராஜ்மா சாலட் - 4தேவையான பொருட்கள்
லெட்டியுஸ் இலை ஒரு கப்
தில் இலை - கால் கப்
வேக வைத்த ராஜ்மா - 100 கிராம்
நீளவாக்கில் அரிந்த வைலட் கோஸ் -இரண்டு மேசை கரண்டி
நீளவாக்கில் அரிந்த முட்டை கோஸ் - இரண்டு மேசை கரண்டி
நீளவாக்கில் அரிந்த மூவண்ண கொடைமிளகாய் -முன்று மேசை கரண்டி
சோளம் - இரண்டு மேசைகரண்டி
டிரெஸ்ஸிங் செய்ய
உப்பு
மிளகு தூள்
ஆப்பிள் சைடர் வினிகர் - ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு மேசைகரண்டி
ஆலிவ் ஆயில் - 3 தேக்கரண்டி
தயிர் - 175 மில்லி
செய்முறை
மிளகு தூள்
ஆப்பிள் சைடர் வினிகர் - ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு மேசைகரண்டி
ஆலிவ் ஆயில் - 3 தேக்கரண்டி
தயிர் - 175 மில்லி
செய்முறை
தயிரை ஒரு மெல்லிய துணியில் வடிக்கட்டி கெட்டியான தயிராக எடுக்கவும்.
ஒரு வாயகன்ற பவுளில் முதலில் வடிகட்டிய தயிரை சேர்க்கவும்
அதில் ஆலிவ் ஆயில்,சாஸ் வகைகள் , உப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
வேக வைத்த ராஜ்மாவை சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து உப்பு , மிளகு தூள் தூவி லேசாக வறுத்து கொள்ளவும்.
பிறகு அரிந்து வைத்துள்ள சாலட் இலைகள் மற்றும் காய் வகைகள்(மூவர்ண கொடை மிளகாய் மற்றும் இரண்டு வகையான கோஸ் ,வறுத்து வைத்த ராஜ்மா ,சோளம் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறவும்.
கடைசியாக லெமன் ஜூஸ் சிறிது பிழிந்து கிளறி பரிமாறவும்.
அனைத்து சத்துக்களும் அடைங்கிய அருமையான சாலட் ரெடி.
இன்னும் கிரீமியாக வேண்டும் என்றால் ப்ர்ஷ கீரீம் அல்லது எக் லெஸ் மையானஸ் சேர்த்து கொள்ளலாம்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
No comments:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா