Blood increase food
என் சமையல் அட்டகாசம் பிலாக் பார்த்து சப்போட் செய்து கொண்டு இருக்கும் அனைவரும், என் சேனலையும் பார்த்து சப்ஸ்கிரைப் செய்து லைக் கமெண்ட் செய்து சப்போர்ட் செய்யும் படி கேட்டு கொள்கிறேன்
ஆத்தாடி எம்புட்டு ருசி இப்படியும் இத செய்யலாமா?#hemoglobinincreasefood
வறுத்து அரைத்த மிளகு சோம்பு ஈரல்
#Bloodincreasefood
• An Usual Daily R...
#liverfryrecipe #iiraleppadiseyvathu #liverfry #samaiyal_attakaasambyjaleelakamal
இது ஹிமோ குளோபின் அளவு கம்மியாக உள்ளவர்கள் இந்த ஈரல் ம அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கூடிய விரைவில் ஹிமோ குளோபின் குறைவாக உள்ள ஆண்களும் பெண்களும் சாப்பிடலாம் கண்டிப்பா ஹிமோகுளோமபின் அளவு அதிகரிக்கும்.
ஈரல் 150 கிராம்
பச்ச மிளகாய் ஒன்று
வெங்காயம் சிறிது
சோம்பு ஒரு டீஸ்பூன்
மிளகு முக்கால் டீஸ்பூன்
சீரகம் முக்கால் டீஸ்பூன்
உப்பு ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை முன்று மேசைகரண்டி
கரம் மசாலா கால் டீஸ்பூன் (பட்டை லவங்கம் ஏலம்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
சோம்பு சீரகம் மிளகு கருவேப்பிலையை வறுத்து ஆறவைத்து கொர கொரப்பாக திரிச்சி கொள்ளவும்.
பச்ச மிளகாய் வெங்காயத்தை அரைத்து வைத்து கொள்ளவும்.
முன்று டீஸ்பூன் நல்லெண்ணை அல்லது சன்ப்ளவர் ஆயில் அரைத்த வெங்காயம் பச்சமிளகாய் சேர்த்து இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
ஈரல் சேர்த்து வதக்கி மஞ்சள் பொடி உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும்.
பொடித்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு கலக்கி 7 நிமிடம் வேகவைக்கவும்.
நன்கு கூட்டு பதம் வந்ததும் கிளறி கடைசியாக கொத்துமல்லி கீரை கருவேப்பிலை தூவி இரக்கவும்
No comments:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா