Pages

Thursday, August 17, 2023

பீர்க்கங்காய் கத்திரிக்காய் சால்னா ( ஆட்டு குடல் கத்திரிக்காய் சால்னா) Veg Version








பீர்க்கங்காய் கத்திரிக்காய் சால்னா ( ஆட்டு குடல் கத்திரிக்காய் சால்னா)

 

தேவையான பொருட்கள்

 

பீர்க்கங்காய் – 200 கிராம்

கத்திரிக்காய் – 200 கிராம்

பலாக்கொட்டை  – 6 வெந்தது

வெங்காயம் – ஒன்று பெரியது

இஞ்சி – துருவியது ஒரு தேக்கரண்டி

பூண்டு – துருவியது ஒரு தேக்கரண்டி

தக்காளி – ஒன்று பெரியது

பச்சமிளகாய் – 2

கொத்து மல்லி புதினா – சிறிது

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

தனியாத்தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

உப்பு – தேவைக்கு

தேங்காய் பால்  - ஒரு கப்

வெந்த கடலை பருப்பு – ஒன்னறை மேசை கரண்டி

பட்டை ஏலம் கிராம் – தலா ஒன்று

எண்ணை + நெய் – 4 தேக்கரண்டி

 



செய்முறை

 

கடலை பருப்பை 10 நிமிடம் ஊறவைத்து வெந்து எடுத்து வைக்கவும்.

பீர்க்கங்காயை தோல் சீவி வட்ட வடிவமாக வெட்டி வைக்கவும்.

கத்திரிக்காயை நான்காக அரிந்து வைக்கவும்.

சட்டியை காயவைத்து அதில் எண்ணை + நெய்யை சூடு படுத்தி

பட்டை லவங்கம் ஏலம் சேர்த்து வெடிய விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு துருவியதை சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளியை பொடியாக அரிந்து சேர்த்து வதக்கி கொத்துமல்லி புதினா , மிளகாய் தூள் , மஞ்சள் தூள் , தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கி தக்காளி குழைய வேகவும் வரை குறைந்த தீயில் வைக்கவும்.

கத்திரிக்காய் ,வெந்த பலாகொட்டை மற்றும் பீர்க்கங்காயை சேர்த்து நன்கு கிளறி வேக விடவும்.

வெந்த கடலை பருப்பு மற்றும் தேங்காய் பால் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்.

 

சுவையான கத்திரிக்காய் பீர்க்கங்காய் சால்னா ரெடி.

 

 

இது இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் ஆட்டு குடல் கத்திரிக்காய் சால்னாவை பீர்க்கங்காய் கத்திரிக்காய் சால்னாவாக செய்துள்ளேன்.

 



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

No comments:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா