Saturday, December 26, 2009

உப்பு நெல்லிக்காய் மற்றும் இனிப்பு நெல்லிக்காய்



// ஜுரம் வந்து வாய் கசப்பிற்கும் இது நல்ல இருக்கும், சளி அதிமாகி ஆன்டிபயாட்டிக் எடுத்து கொள்ளும் போது அந்த மருந்து நாக்கு மறத்து போய், என்ன சாப்பிட்டாலும் ருசி தெரியாது. அப்படி உள்ளவ்ர்களும் இது சாப்பிட்டால் பலன் உண்டு இது என் அனுபவம்... //



கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதரபிக்கு பிற்கு ஏற்படும் சுவையின்மைக்கும் இந்த நெல்லிக்காய இப்படி செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் = ப‌த்து
ச‌ர்க்க‌ரை = கால் கப்
தேன் = ஒரு மேசைக‌ர‌ண்டி
உப்பு = ஒரு சிட்டிக்கை

செய்முறை

நெல்லிக்காயை சைடில் கீறி விட்டு (அ) ஒரு ஃபோர்கை கொண்டு எல்லா பக்கமும் குத்தி விடவேண்டும்.
ஒரு பெரிய‌ வாய‌ன்ற‌ ச‌ட்டியில் த‌ண்ணீரை கொதிக்க‌ விட்டு நெல்லிக்காயை போட்டு உட‌னே அடுப்பை அனைக்க‌வும்.

சர்க்கரையை கால் கப் தண்ணீரில் ஒரு சிட்டிக்கை உப்பு போட்டு காய்ச்சி அதில் நெல்லிக்காயை சேர்த்து தேனையும் ஊற்றி ஊறவிட்டு சாப்பிடவும்.

கவனிக்க:

நெல்லிக்காய் உட்கொள்வது முடி உதிர்வதை தவிர்க்கும், இதை வேக வைத்து இனிப்பு ஊறுகாய்,கார ஊறுகாய் போட்டும் சாப்பிடலாம்.பொடியாக அரிந்து நெல்லிக்காய் சாதம் செய்தும் சாப்பிடலாம்.





உப்பு நெல்லிக்காய்

முழு நெல்ல்லிக்க்காய் பத்து
பச்சமிளகாய் - நான்கு
உப்பு
சிட்டிக்கை சர்க்கரை
வினிகர் - ஒரு டிராப்

நெல்லிக்காயை நாலாபக்கமும் கீரி விட்டுகொஞ்ச்மா தண்ணீரில் மைக்ரோ வேவில்
இரண்டு நிமிடம் வைத்து எடுத்து அதில் உப்பு சர்க்கரை, பச்ச மிககாயை கிறி சேர்த்து வினிகர் ஊற்றி வைக்கவும்.
ஸ்ஸ்ஸ் ரொமப் யம்மியாக இருக்கும்.




//க‌ர்பிணி பெண்க‌ளுக்கு ம‌ச‌க்கையின் போது வாய்க்கு ருசி ப‌டும், கேன்ச‌ர் நோயாளிக‌ளுக்கு கீமோ த‌ர‌பி செய்த‌தும், வாயிக்கு எந்த‌ ருசியுமே தெரியாது, கொம‌ட்டலாக‌வே இருக்கும் அந்த‌ ச‌மய‌த்தில் இதை போட்டு அவ‌ர்க‌ளுக்கு கொடுக்க‌லாம். இதில் விட்டமின் சி சத்து அதிகம் இருக்கிறது. //

44 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

உப்பு நெல்லிக்காயும், நெல்லிக்காய் ஊறுகாயும் ரொம்ப பிடிக்கும்.

SUFFIX said...

//கேன்ச‌ர் நோயாளிக‌ளுக்கு கீமோ த‌ர‌பி செய்த‌தும், வாயிக்கு எந்த‌ ருசியுமே தெரியாது//

சில பேர் புளிப்பு மிட்டாய், விக்ஸ் போன்றவற்றை உபயோகிப்பார்கள், தாங்கள் சொலவது நெல்லிக்காய் ஆரோக்கியமானதும், சுவையானதும் கூட. நல்ல தகவல்.

நட்புடன் ஜமால் said...

நெல்லிக்காயை காய வைத்தும் செய்யலாம்.

நீங்கள் சொன்ன முறை நாக்கில் ஜொள்ளு ஊத்துது ...

hamid kaashif said...
This comment has been removed by the author.
சாருஸ்ரீராஜ் said...

வீட்ல நெல்லிக்காய் இருக்கு செய்து பார்கிறேன்

Jaleela Kamal said...

ஆமாம் நவாஸ் எல்லோருக்கும் பிடித்த நெல்லிக்க்காய், பள்ளி நாட்களில் வெளியில் வித்து கொண்டு இருப்பார்கள், அரை நெல்லிக்காய் தான் ரொமப் பிடிக்கும்.

பெரிய நெல்லிக்காய் , முதலில் புளிக்கும், இப்படி செய்தால் ம்ம் சூப்பரா சாப்பிடலாம்..

Jaleela Kamal said...

ஷபிக்ஸ் கேன்சர் உள்ளவர் வாய் கசப்பினால் படும் அவஸ்தையை நேரி பார்த்ததால் இந்த குறிப்பு.

எவ்வளவோ புளிப்பு சால்னா, வாய்க்கு ருசியா சாப்பிடாலும், உடனே ஒரு மாதிரி ஆகிவிடும் என்பார்கள்

Jaleela Kamal said...

சகோ.காயவைத்து செய்வது எனக்கு தெரியாது, நெல்லிக்காய் என்று யாரிடம் சொன்னாலும், சப்பு கொட்ட வைக்கும் நாக்கு ... உடனே சாப்பிடனும் போல் இருக்கும்.

Jaleela Kamal said...

சாருஸ்ரீ செய்து பாருங்கள், கருத்தை தெரிவியுங்கள்.

ஸாதிகா said...

கடைகளில் தேனில் ஊறவைத்து பதப்படுத்திய நெல்லிக்காய்கள் கிடைக்கிறது.செய்முறையே சொல்லித்த்ந்த ஜலிக்கு நன்றி.

சீமான்கனி said...

ச்ச்சச்ச்ச்ஸ்.....அக்கா படிக்கும்போதே நாக்கில் தண்ணி வருது....ரென்ப நாள் ஆச்சு கா இங்க நெல்லிக்காய் கிடைக்குமா தெரியல...கிடைத்தாலும் நம்ம ஊர் ருசி இருக்குமாதேரியல...

Vijiskitchencreations said...

ஜலீ எனக்கும் அரு நெல்லிகாய் ரொம்ப பிடிக்கும் இங்கு ப்ரோசன் நெல்லிகாய் கிடைக்கிறது. போன மாதம் தான் நெல்லி காய் ஊறுகாய் போட்டேன்.உடலுக்கும் நாவுக்கும் ரொம்ப நல்ல ருசியோட சாப்பிட நன்றாக இருக்கும். அதிலும் நெல்லி பச்சடி ம்.. சொல்லும் போதே நா ஊறுகிறது.

மாதேவி said...

நெல்லிக்காய் என்றாலே சுவைதான்.
இதைவிரும்பாதவர் உண்டோ.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா பதப்படித்தியது கிடைக்குதா?

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.

Jaleela Kamal said...

சீமான் கனி ஆமாம் எல்லோருக்கும் இத பார்த்ததும் நாவில் நீர் ஊறூம். வாங்கி செய்து பாருங்கள் ரொமப் சுலபமா தானே சொல்லி இருக்கேன்.

Jaleela Kamal said...

விஜி நெல்லிக்கா ஊறூகாயா இன்னும் நாவை சப்பு கொட்ட வைக்கிறீர்கள்.
எனக்கு அருநெல்லிக்காய் தான் ரொம்ப பிடிக்கும்.

Jaleela Kamal said...

ஆமாம் மாதேவி நெல்லிக்காயை விரும்பதவர் யாருமே கிடையாது. கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

shirin said...

ஜலீலா அக்கா நெல்லிக்காய் ரொம்ப நல்லா இருக்கு இது ஒரு சீசன்லதான கிடைக்கும் இதை குழந்தைக்கு 3 1/2 கொடுக்க்லாமா அதை எப்படி செய்து கொடிக்க்லாம் உங்க ஸ்மைய்ல் எல்லாம் ரொம்ப் அருமை அக்கா எனக்கு உங்க் சமைய்ல் ரொம்ப பிடிச்சி இருக்கு உங்க்ள் பார்க்க்னும் ரொம்ப ஆசையா இருக்கு அக்கா உங்க் மெயில் ID விருப்பம் இருந்தால் கொடுங்கள் அக்கா அப்படியே உங்க் photo என் மெயிலுக்கு pls அனுப்புங்க்க அக்கா sfarvinshirin@gmail.com i love u r recepies jalella sister u r my favourite sister

Jaleela Kamal said...

பர்வீன், முனறை வயது குழந்தைக்கு பச்சை நெல்லிக்கா கொடுக்க வேன்டாம் . அதை நன்கு வேக வைத்து பதப்படுத்தி சர்க்கரை பாகு காய்ச்சி சிறிது தேன் சேர்த்து ஊறவைத்து கொடுங்கள்.


இதில் போட்டுள்ளது நாம் சாப்பிடுவது போல். மெயில் ஐடி நோட் பண்ணி கொண்டேன், முடிந்த போது மெயில் பண்றேன்,

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி, எனக்கு தெரிந்ததை இங்கு போடுகீறேன் அவ்வளவு தான்.

அண்ணாமலையான் said...

அவ்வை கொடுத்தது அப்போ
ஜலீலா திருப்பி கொடுக்கறது இப்போ..
நல்லாருக்கு ...

Anonymous said...

நா நோம்பு! எனக்கு வாய் ஊருதே!

சரி நெல்லிக்கா எங்க வாங்குறது? லுலு?

Jaleela Kamal said...

ஆமாம் நானும் நோன்பு தான் நேற்றும் இன்றும். லூ லூ, வெஸ்ட் ஜோன் போன்ற கடைகளில் பாருங்கள்.

Jaleela Kamal said...

அண்ணாமலையான் அவ்வையை ஞாபகப் ப்டுத்தி விட்டது இந்த நெல்லிகனி இல்லையா?

க‌ருத்து தெரிவித்த‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி.

Anonymous said...

Hi Jaleela,

U know what I like the most in ur recipes...ur vadai...... recipe.

please write how to make paniyaram.

பாத்திமா ஜொஹ்ரா said...

உப்பு நெல்லிக்காயும், நெல்லிக்காய் ஊறுகாயும் ரொம்ப பிடிக்கும்.

Anonymous said...

uppu nellikkai arumai

suvaiyaana suvai said...

akka looks super!!

Jaleela Kamal said...

அனானி யாருன்னு தெரியலப்பா பெயரை சொல்லுங்கள்.

பணியாரம் என்ன பணியாரம் வேண்டும். அப்பம் தான் செய்து வைத்துள்ளேன் போஸ்ட் பண்ண டைம் இல்லாததால் போடல,

Jaleela Kamal said...

பாத்திமா நெல்லிக்காய் ஊறுகாய் என்றதும் இப்பவே வாய் ஊறு கிறது. கருத்து தெரிவித்தமைக்கு நன்றி

Jaleela Kamal said...

அனானி பெயரை போட்டு இருக்கலாம்.

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி

Jaleela Kamal said...

சுஸ்ரீ கருத்து தெரிவித்தமைக்கு நன்றி. உங்கள் மகளின் கை வண்ணம் சூப்பர் இப்ப தான் அருசுவையில் பார்த்துட்டு வரேன்.

Malar Gandhi said...

Very mouthwatering pickle/relish for sure'...its hard to find nellikkai here:( Makes me nostalgic...personally like 'salted ones very much':)

Happy Holidays...

Enjoy the last few days of 2009, soon we are going to step into 2010:)

riswanarafeek said...

andha anai nandhan samayal attakasathin pudhu varavu sorry i dont know how to type in tamil

Jaleela Kamal said...

http://www.arusuvai.com/tamil_help.html

ரிஸ்வானா இந்தலிங்கில் போய் தமிழ் டைப்பிங் பழகி கொள்ளுங்கள்

அன்புடன் மலிக்கா said...

அம்மாடி நெல்லிகாய்யின்னா இந்த மலிக்காவுக்கு ரொம்ப இஸ்டம் அதிலும் உப்புபோட்டு ஸ்ஸ்ஸ் சப்புக்கொட்டி திம்பேனே.

சூப்பர்க்கா இந்த நெல்லிக்கா
குறிப்புதந்த ஜலீலாக்கா..

Jaleela Kamal said...

மலர் காந்தி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்


மலிக்கா ஆமாம் பா எல்லோருக்கும் நெல்லிக்கா என்றால் ஸ்ஸ்ஸ்ச்ச்ச்ச்ச்ச் சப்பு கொட்ட வைக்கும்.

வாங்க மா அடிக்கடி.

Unknown said...

பார்க்கும் பொழுதே நாவில் நீர் ஊறுகிறது அக்கா

Unknown said...
This comment has been removed by the author.
suvaiyaana suvai said...

அக்கா நீங்க நினைக்கிற சுஸ்ரீ நான் இல்ல! என் பொண்ணுக்கு இப்ப தான் 2 1/2 வயது ஆகிறது அவ எப்போ கிராப்ட் செய்யுறது:) இப்ப தான் அங்க போய் பார்த்தேன் அவங்க வேற நான் வேறா!! எல்லோரும் இப்படி தான் கேக்குறாங்க:( முதல்ல என் பேர மாத்தனும் என்னுடைய முதல் எழுத்து ஸ்ரீ ல் ஆரம்பிக்கும்

riswanarafeek said...

அக்கா மிகவும் நன்றி உங்கள் உதவியால் தமிழில் டைப் செய்ய தெரிந்துகொண்டேன்ம் நன்றி. உங்கள்சாதனைக்குஎன்பாராட்டுகள் உங்கள் சேவை தொடர எல்லாம் வல்லவனிடம் தூஆ செய்கின்றோம்

riswanarafeek said...

அக்கா மிகவும் நன்றி உங்கள் உதவியால் தமிழில் டைப் செய்ய தெரிந்துகொண்டேன்ம் நன்றி. உங்கள்சாதனைக்குஎன்பாராட்டுகள் உங்கள் சேவை தொடர எல்லாம் வல்லவனிடம் தூஆ செய்கின்றோம்

பனித்துளி சங்கர் said...

புதுமையான சமையல் முதல் முறை அறிந்துகொண்டேன் . அப்படியே இதில் இரண்டு நெல்லிக்காய் தந்தாள் நல்ல இருக்குமே !?

Jaleela Kamal said...

நன்றீ பாயிஜா
ஒகே சுவையான சுவை தவறாக புரிந்து கொண்டேன்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ ரிஸ்வானா

Jaleela Kamal said...

நன்றி பனித்துளி சங்கர்,

வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா