இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும்.
சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில்.
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
கலந்த கலவையை நான்கு பாகமாக நான்கு பவுளில் பிரிக்கவும்.
ஒரு பவுளில் நியுட்டெல்லாவை ஒரு மேசைகரண்டி அளவு கலக்கவும்
மற்றொரு பவுளில் பச்சை மற்றும் சிவப்பு நிறத்தைக்கலக்கவும்.
ஒரு பவுளில் வண்ணங்கள் எதுவும் கலக்க வேண்டாம்
இதை ஜஸ்ட் ஒரு ட்ரேவில் தேசிய கொடி போல ஸ்பூனால்
எடுத்து ஊற்றி தட்டையாக வைக்கவும்..
200 டிகிரி முற்சூடு படுத்திய ஓவனில் 10 நிமிடம்
வைத்து எடுக்கவும்.
மீதி உள்ள கலவையை ஒரு பெரிய டீ கப்பில் மார்பிள்
போல பச்சை, வெள்ளை , சிவப்பு , ப்ரவுன் கலர் அடுக்காக ஊற்றவும் கலக்க தேவையில்லை வேகும்
போது பரவலாகி அதுவே கலந்து விடும்.
Pressure cooker cake, Tri colour cooker cake
குக்கரில் அடியில் உப்பை போட்டு ஓவன் போல 10 லிருந்து
15 நிமிடம் குக்கரை சூடு படுத்தவும்.
பிறகு டீ கப்பில் ஊற்றிய கேக் கலவையை குக்கரில்
வைத்து மூடி ஓவனில் பேக் செய்வது போல பேக் செய்து எடுக்கவும் . இதில் முக்கியமான விஷியம்
கவனிக்க வேண்டியது குக்கரில் வாசர் ( உள்ளே ரப்பர் ) போட கூடாது , வெயிட்டும் போட கூடாது)
குக்கரை அப்படியே வைக்கிறோமே என்ன ஆகுமோ என்று பயப்படவேண்டாம்
இந்த லின்கில் எல்லாவகையான பொங்கல் ரெசிபிகளும் இருக்கின்றன கிளிக் செய்து பார்க்கவும்.
அரிசிகளின் அரசி. கவுனி அரிசி
இது கருப்பு ரெட் கலரில் இருக்கும்
கவுனி அரிசி - அரை கப்
பாசிப்பருப்பு - கால் கப்
வெல்லம் - அரை கப் ( தேவைப்பட்டால் சிறிது கம்மி பண்ணிக்கலாம்)
நெய் - இரண்டு மேசைகரண்டி
சுக்கு பொடி - அரை தேக்கரண்டி ( நான் இனிப்பு பொங்களுக்கு சுக்கு சேர்ப்பேன்)
உப்பு - அரை சிட்டிக்கை
முந்திரி - 6 எண்ணிக்கை
செய்முறை
முந்திரியை ஒரு தேக்கரண்டிநெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும்.
கவுனி அரிசியையும் பாசிபருப்பையும் ஊறவைத்து முன்று டம்ளர் தண்ணீர் சிறிது பால்சேர்த்து வேகவைக்கவும்,இடையில் வெல்லத்தை மண் போக சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து இளக்கி வடித்து வெந்து கொண்டிருக்கும் கவுனி அரிசியுடன் சேர்த்து உப்பு சுக்கு தூள் நெய் ஒரு மேசைகரண்டி சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
வெந்தததும் முந்திரி சேர்த்து மேலும் சிறிது நெய் சேர்த்து கிளறி இரக்கவும்.
இது சிறப்பு விருந்தினர் பதிவில் முன்பு மனோ அக்கா செய்து இங்க நான் போஸ்ட் பண்ணி இருக்கேன்.
இது நான் இப்ப ஊருக்கு சென்றிருந்த சமயம் கவுனி அரிசி வாங்கி வந்தேன்.
உடனே செய்து பார்த்தாச்சு
இது வேக லேட் ஆகுது நான் ஒரு மணி நேரம் தான் ஊறவைத்தேன்.
மனோ அக்கா இரவே ஊற போட சொல்லி இருக்கிறார்கள்.நீங்கள் செய்வதாக இருந்தால் அரிசியை நன்கு ஊறவைத்துகொள்ளுங்கள்.
சரியாக வேக வில்லை என்றால் மீண்டும் தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விட்டு இரக்கவும்.
சுவையான சத்தான கவுனி அரிசி ( kavuni arisi) பொங்கல் ரெடி
வீடியோ வாக எடுத்துள்ளேன் பிறகு போஸ்ட் பண்ணுகிறேன்
கிழே உள்ளது ப்ளைன் உளுந்து வடையும் , கேபேஜ் உளுந்து வடையும்.
இங்க பிலாக்கில்நிறைய உளுந்து வடை தயிர் வடை , உளுந்து வடை டிப்ஸ் நிறைய கொடுத்துள்ளேன் அந்த லின்ங் எல்லாம்
கிழே கொடுக்கிறேன்.
வறுத்து பவுடர் செய்ய கூடிய பொருட்களை ஒவ்வொன்றாக வறுத்து கடைசியாக சீரகம் சேர்த்து, ஆறவைத்து பொடிக்கவும்.
காய்கறி வகைகளை நன்கு கழுவி தோலை சீவி விட்டு மீடியமாக கட் செய்து வைக்கவும்.
துவரம் பருப்பையும் வேர்கடலையையும் கழுவி தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
துவரம் பருப்பு, வேர்கடலை, அரிந்து வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
தனியாக தாளிக்கும் சட்டியில் எண்ணை விட்டு அதில் கடுகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளித்து புளி கியுப் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பவுடர் செய்த பொடியையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
கடைசியாக வெந்து வைத்துள்ள பருப்பு , காய் வகைகளை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.
பிள்ளைகளுக்கு தினபப்டி சாப்பாட்டை விட பிட்சா என்றால் முச்சு பேச்சு இல்லாமல் சாப்பாடு உள்ளே போகும்.
Pizza
அதற்கு நாம சுலபமாக வீட்டிலேயே பிரட்டில், தோசையில் தினப்படி செய்யும் சப்பாத்தியிலும் வீட்டில் தயாரிக்கும் கூட்டு , பொரியல் , சிக்கன் , மட்டன், கீமாவை வைத்து செய்து கொடுக்கலாம்.
How to Make Chicken Pizza Bread
How to prepare Bindy Pizza
How to Prepare yummy yummy pizza variety
பிள்ளைகளுக்கு தினபப்டி சாப்பாட்டை விட பிட்சா என்றால் முச்சு பேச்சு இல்லாமல் சாப்பாடு உள்ளே போகும்.
அதற்கு நாம சுலபமாக வீட்டிலேயே பிரட்டில், தோசையில் தினப்படி செய்யும் சப்பாத்தியிலும் வீட்டில் தயாரிக்கும் கூட்டு , பொரியல் , சிக்கன் , மட்டன், கீமாவை வைத்து செய்து கொடுக்கலாம்.
இதற்கு தேவையானவை
வீட்டில் செய்து வைத்துள்ள ஏதேனும் பொரியல் அல்லது சிக்கன் கூட்டு மட்டன் கூட்டு வகைகள்
ஆலிவ் காய்கள்
மொசெரல்லா சீஸ்
டொமெட்டோ கெட்சப் அல்லது பிட்சா சாஸ்
பிரட் , பன் அது உங்கள் விருப்பம்
பிரட்டாக இருந்தால் அதை 4 ஆக கட் செய்து அதில் சிறிது கெட்சப் தடவி நாம் செய்து வைத்துள்ள பில்லிங்கை வைத்து முன்று வகையான குட மிள்காயை வதக்கி சேர்த்து மேலே சீஸ் மற்றும் கெட்சப் தடவி முற்சூடு படுத்திய ஓவனில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும். சுவையான பிரட் பிட்சா தயார்.
இதே ஓவன் இல்லாதவர்கள் இதை தோசை தவ்வாவில் மிதமான சூட்டில் வைத்து இரண்டு பக்கமும் ப்ரட்டைபொரித்து எடுத்து மேலே கூற பட்ட அனைத்து பில்லிங்கையை யும் வைத்து மூடி போட்டு சிறிது தனலில் 7 நிமிடம் வைத்து எடுத்தால் போதுமானது. இதே போல தோசை பிட்ஸா, மினி தோசை பிட்சா என செய்து கொடுக்கலாம்.
என் யுடியுப் சேனலில் சில குறிப்புகள் போட்டு கொண்டு இருக்கிறேன். ரொம்ப ப்ர்பஷனால இல்லை என்றாலும் உங்களும் புரியும் அளவிற்கு பதிவுகள் இருக்கும் , என் சேனலை லைக் செய்து சப்ஸ்கிரைப் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
வீடியோ சமையல், Jaleela's cookery video
How to make Bread Pizza
சுரக்காய் சூப்
சூப் செய்வது பெரிய வேலை மலைப்பாக நினைக்கிறீர்களா வாங்க இது போல கூட சிம்பிளாக தினம் ஒரு காயில் செய்து சாப்பிடலாமே.
இன்னும் பயனுள்ள பல கிச்சன் ரகசியங்களுடன் பதிவுகள்வரும். அதுக்கு முதலில் என் சேனலை சப்ஸ்கிரைப் செய்து தொடர்ந்து பார்க்கவும். சமையலே செய்யதெரியாதவர்களும் ஈசியாக இதை பார்த்து செய்துவிடலாம்.
ஆறு மாத குழந்தைகளுக்கு முதல் முதலில் என்ன சூப் செய்யலாம் என்று ஒரே குழப்பமாக இருக்கும்.
இது சுரைக்காயில் செய்துள்ளேன் இதே போல தினம் ஒரு காயில் கேரட், முல்லங்கி, கீரை பீட்ரூட் , உருளை என இதே போல செய்து கொடுக்கலாம், தேவைப்பட்டால் இதில் சிக்கனை வெந்து சேர்த்து கொள்ளலாம்.
வியட்நாமில் தினப்படி சமையலில் இந்த சூப் கண்டிப்பாக இடம் பெறும்,
தேவையான பொருட்கள்
சுரைக்காய் அ முட்டை கோஸ் அ கேரட் அ கீரை வகைகள் போன்றவைகளில் ஒரு காய் எடுத்து கொள்ளவேண்டும் - 200 கிராம்
வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவைக்கு
செய்முறை
ஒரு பெரிய வாயகன்ற சட்டியில் 3 டம்ளர் தண்ணீரை கொதிக்கவிட்டு அதில் துருவிய சுரைக்காய் , பொடியாக நறுக்கிய வெங்காயம் , உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வெந்தததும் நன்கு மசித்து வெந்த சூப்பை வடிகட்டவும்.
இது குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சிறிது நெய் விட்டு தேவைபட்டால் மிளகு தூள் தூவி சாப்பிடலாம்.
வெயிட் குறைக்க இதை தினம் செய்து குடிக்கலாம்.
ஆப்ரேஷன் செய்து இருப்பவர்களுக்கு சூப் கொடுக்க சொல்வார்கள் அப்ப என்ன செய்வது என்று தெரியாது ,
அந்த நேரத்தில் இது போல சூப் செய்து குடிக்கலாம்.
கிட்னி பிராப்ளம் இருப்பவர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம். நல்ல பலன் தெரியும்.
சுரைக்காயை வடிகட்டிட்ட்டு மீதி உள்ள காயை லேசாக தாளித்து தேங்காய் சேர்த்து பொரியல் போலவும் சாப்பிடலாம்/
செய்து பார்த்து உங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதை செய்பவர்கள் என் அந்த சமையலை ஒரு போட்டோ எடுத்து என் மெயில் ஐடிக்கு அனுப்பினால் முகநூலில் ஷேர் செய்வேன்.
மறக்காம என் சேனலை சப்ஸ்கிரைப் பன்ணிடுங்கள் , அப்ப தான் உடனுக்குடன் நான் இங்கு பதியும் குறிப்புகள் உடனே உங்களுக்கு கிடைக்கும்.
//அருமையான இஸ்லாமிய இல்ல விஷேஷ சமையல். கல்யாணம் அல்லது விஷேசம் மாப்பிள்ளை தஸ்தரில் . இவை அனைத்தும்செய்வோம் (பகறா கானா, ஆலு கோஷ் குருமா. தால்...
About Me
Jaleela Kamal
சமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.
தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.