Tuesday, February 9, 2010

மாங்காய் சாலட் வித் சாட் மசாலா - Green Mango salad

தேவையான பொருட்கள்



மாங்காய் = ஒன்று

கேரட் = ஒன்று
குகும்பர் = ஒன்று
ரெட் (கேப்சிகம்)பெப்பர் = கால் துண்டு
கிரீன் (கேப்சிகம்)பெப்பர் = கால் துண்டு
யொல்லா (கேப்சிகம்) பெப்ப‌ர் = கால் துண்டு
கேபேஜ் = கால் கப்
சாட் ம‌சாலா = அரை தேக்க‌ர‌ண்டி
தேன் = அரை தேக்க‌ர‌ண்டி
எலுமிச்சை சாறு = அரை தேக்கரண்டி






செய்முறை


மேலே குறிப்ப்பிட்ட‌ அனைத்து காய்க‌ளையும் பைனாக‌ பொடியாக‌ சாப் செய்து உப்பு, சாட்ம‌சாலா,தேன்,லெம‌ன் சாறு சேர்த்து கிள‌றி சாப்பிடலாம்.

இது பார்டியில் வைத்தால் க‌ல‌ர்ஃபுல்லாக‌வும் ரிச்சாக‌வும் இருக்கும்.


மாங்காய் சேர்த்து இது போல் சால‌ட் சாப்பிட்டால் இந்த‌ சுவையை விட‌வே மாட்டீர்க‌ள்.

குறிப்பு
இது கர்பிணி பெண்கள் வாய்க்கு ரொம்ப ருசிபடும், கேன்சர் வியாதி உள்ளவர்கள், கீமோ தரபி செய்ததும் ஏற்படும் வாய்கசப்பிற்கும் ஏற்றது.

ஜ‌லீலா

39 கருத்துகள்:

வேலன். said...

மாங்காய் சாலட் சூப்பர். ஆனால் எங்கள் ஊரில்தான் இப்போது மாங்காய் கிடைக்காது.வாழ்க வளமுடன்,வேலன்.

Anonymous said...

Super

ஸாதிகா said...

நல்ல புளிப்பான சாலட்.டிரை பண்ணியுவோம்.

Chitra said...

akka, ரெசிபியும் குறிப்பும் அருமை.

தாஜ் said...

நாங்க அக்கம் பக்கம் பார்க்காம இத அப்படியே சாப்பிடுவோமுல்ல

ஜெய்லானி said...

மாங்காய்ல ஒட்டு மாங்காயா இல்லை புளிப்பு மாங்காயா ? சொல்லவே இல்லை!!!!!!. (கேரட் இருப்பதால்)

அன்புடன் மலிக்கா said...

இதெல்லாம் ரொம்ப நல்லவேயில்லக்கா தன்னால இப்படியா திங்கிறது என்னைய உட்டுபுட்டு..


கலக்குறீங்கக்கா புதிய டெம்ளேட்
மாங்கா சாலட் கலக்குறீங்க..

கிருது said...

SUPEROOOOOOO SUPER

Unknown said...

ஆஹா புள்ப்பானா சாலட்

ஹுஸைனம்மா said...

நல்ல கலர்ஃபுல் காம்பினேஷன்.

கேப்ஸிகம்லாம் வதக்காம அப்படியே போட்டுடுவீங்களாக்கா? நறுக் நறுக்னு கடிபடுமே?

Menaga Sathia said...

இதெல்லாம் நான் யாருக்கும் கொடுக்காம அப்படியே சாப்பிடுவேன் எவ்வளவு புளிப்பான மாங்காயா இருந்தாலும்..டெம்ப்ளேட் நலலயிருக்கு ஜலிலாக்கா

malar said...

புதிய டெம்ளேட் கலக்குறீங்க..
சூப்பர்....

டவுசர் பாண்டி said...

இது தாம்பா சூப்பர் !! அடுப்புல வேலையே இல்ல !! இப்பிடி தான் இருக்கணும் , பாக்க சொல்லவே !! தூளா கீதே !!

Jaleela Kamal said...

இங்கு என்னேரமும் எல்லா சீசனிலும் புளிப்புமாங்காய் இருக்கும். சீசன் வரும் போது நல்ல கிளி மூக்கு மாங்காய் ரொம்ப நல்ல இருக்கும்.உங்கள் பாராட்டுக்கு நன்றி வேலன் சார்.

Jaleela Kamal said...

நன்றி நாஸியா

Jaleela Kamal said...

ஆமாம் புளிப்பு கலந்த இனிப்பு சுவை நல்ல இருக்கும் செய்து பாருங்கள்.

Jaleela Kamal said...

சித்ரா ரெசிபியும் குறிப்பும் சூப்பரா. செய்து பாருங்கள்.

Jaleela Kamal said...

தாஜ் நானும் அக்கம் பக்கம் பார்க்கல சும்மா சாப்பிட சாப்பிட உள்ளே போய் கிட்டே இருக்கும்.

Jaleela Kamal said...

ஜெய்லாணி இதில் உள்ளது புளிப்பு மாங்காய், எனக்கு கிளி மூக்கு மாங்காய் தான் ரொம்ப பிடிக்கும். இனிப்பு, புளிப்பு, கார சுவையுடன் நல்ல இருக்கும்

Jaleela Kamal said...

அட மலிக்கா யார் வேணாமுன்னு சொன்னது வாங்களே சேர்ந்தே சாப்பிடுவோம் . புதிய டெம்ப்ளேட் நல்ல இருக்கா, நன்றி + ரொம்ப சந்தோஷம்.

Jaleela Kamal said...

கிருது வாங்க வருகைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

பாயிஜா கர்பிணி பெண்கலுக்கு ஏற்ற புளிப்பு சாலட்

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மா வதக்க மாட்டேன் அப்படியே தான் கறுக் மொறுக்குன்னு கடிச்சி சாப்பிடனும். கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

//இதெல்லாம் நான் யாருக்கும் கொடுக்காம அப்படியே சாப்பிடுவேன் எவ்வளவு புளிப்பான மாங்காயா இருந்தாலும்..//

எனக்கு வடு மாங்காய், கிளிமூக்குமாங்காய் தான் பிடிக்கும், புளிப்பு மாங்காய். மீனுக்கும், தால்சாவிற்கும் பயன் படுத்துவோம்.

ஆனால் இதில் போட்டுள்ளது புளிப்பு மாங்காய்

டெம்ப்லேட் நல்ல இருக்கா? ரொமப் சந்தோஷம்

Jaleela Kamal said...

மலர் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி,

Jaleela Kamal said...

அட அண்ணாத்தைக்கே புச்சு போச்சா?

அண்ணாத்தே அடுப்பாண்டையே போவத்தேவல, அப்ப்டியே டீவி பார்த்தமா, காய நருக்குனமா? நாலு வாய் சாப்பிட்டோமா வேல முடிஞ்சிது...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

வசந்தமுல்லை said...

அருமையான ரெசிபி! எங்கள் வீட்டில் சாட் மசாலா இருப்பதால் ட்ரை செய்தேன்.அருமை! அருமை! அருமை!

செந்தமிழ் செல்வி said...

ஹாய் ஜலீலா,
புதிய டெம்ப்லேட் முன்னை விட அழகா இருக்கு.
பதிவு எதுவும் போடலைன்னாலும் பார்த்துக் கொண்டு தான் உள்ளேன். இந்த ரெசிபி நல்லா இருக்கு. முர்தபா தான் செய்து பார்கணும். இப்பல்லாம் அதிக வேலைன்னாலே பயமா இருக்கு. ட்ரை பண்ணிட்டு சொல்றேன். அதுக்கு இங்க ஒரு ஹோட்டல்ல கீமா லாப்பான்னு பேர் சொல்வாங்க.
உங்க ஃபாலோயர்ஸ் லிஸ்ட்டை பாருங்க.

அண்ணாமலையான் said...

உண்மையிலே சமையல் அட்டகாசம்தான்

இலா said...

Nice Template akka... i like it now... I also like the idea of adding mango to the salad.. what an idea.. will try ( when i get mango) and tell you soon :))

malar said...

உங்கள் பதிவில் குறிப்பிட்ட ரெசிபி தேடி எடுக்க சிரம்மாக உள்ளது.அதனால் மீன் வகை,சூப் வகை,சாதம் வகை இப்படி தனி தனியாக லேபிள் போடுங்க மீன் எத்தனை வகையொ அத்தனையியும் மீன் வகையின் கீழ் வந்து விடும்.மீன் வகையை சொடிகினால் மீன் வகை ரெசிபி முழுதும் பார்து விடலாம்.

malar said...

ஹமூர் மீன் திக் கிரேவி ரெசிபி போட்டிருக்கிரீர்களா?இருந்தால் லிங் தரவும்...நன்றி.....

SUFFIX said...

சிம்பிள் & யம்மி....

Jaleela Kamal said...

வசந்த முல்லை வாங்க வருகைக்கும் பாராட்டுக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றீ, தொடர்ந்து முடிந்த போது வாங்க‌

Jaleela Kamal said...

செல்வி அக்கா வாங்க இவ்வளவு நாள் கழித்து இப்ப தான் உங்களுக்கு வழி தெரிந்ததா?
நானும் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன்,

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. கருத்து தெரிவித்தமைக்கும் நன்றி, முர்தபா, நான் செய்ய்ய்ம் ஸாபெஷல் டிபன் அது, இஸ்லாமிய இல்ல ரிச் டிபன், செய்து பாருங்கள், நேர‌மில்லாத‌தால் ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ள் ப‌திவை ப‌டிக்க‌ முடிய‌ல‌,

டைம் கிடைக்கும் போது க‌ண்டிப்பா வ‌ரேன்.

Jaleela Kamal said...

அண்ணாமலையார் உண்மையிலேயே அட்டகாசமா , இல்லை என் அட்டகாசம் தாங்க முடியலையா?
ஹி ஹி
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க‌ நன்றி.

Jaleela Kamal said...

வாங்க இலா குட்டி , வருகைக்கு ரொம்ப சந்தோஷம்.

என் சாலட் உங்களை இங்கு கூப்பிட்டு வந்து விட்டதா?
பாராட்டுக்கு நன்றி.

Jaleela Kamal said...

மலர் ஆமாம் புதிய டெம்லேட் மாற்றியதும் தான் பார்த்தேன். நான் இது வரை லேபில் சரியா கொடுத்ததில்லை.

இப்ப கொஞ்சம் கொஞ்சமா மாற்றி வருகிறேன். மாற்றியதில் ஒரு நல்ல ரெசிபி டெலிட் ஆகிவிட்டது.


மீன் நீங்கள் கேட்பது எது என்று தெரியல. தொக்கு போல் என்றால் நெத்திலி மீன் கொடுத்து இருக்கேன், அதே போல் எல்லாவகையான மீனையும் சமைக்கலாம்.
உங்களுக்காக மீன் சமையல் என்று எல்லாத்துக்கு லேபிள் போட்டு இருக்கேன் பாருங்கள்.
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி மலர்

Jaleela Kamal said...

ஷபி நன்றி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா