அவித்த முட்டை = 4
டொமேட்டோ பேஸ்ட் = 135 கிராம் பாக்கெட்
சிவப்பு மிளகாய் தூள் = முக்கால் தேக்கரண்டி
தனியா(கொத்துமல்லி) தூள் = ஒன்னறை தேக்கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
தாளிக்க
எண்ணை = 4 தேக்கரண்டி
கடுகு = அரை தேக்கரண்டி
மிளகு = 7
வெந்தயம் = கால் தேக்கரண்டி
பூண்டு = முன்று பல்
வெங்காயம் = ஒன்று பெரியது
கருவேப்பிலை = முன்று ஆர்க்
பச்ச மிளகாய் = ஒன்று
கொத்துமல்லி தழை கடைசியாக மேலே தூவ
1.முட்டையை கழுவி ஒரு பத்திரத்தில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 7 லிருந்து பத்து நிமிடத்தில் வேகவைத்து ஓட்டை பிரித்து (வீட்டு ஓட்டை இல்லை) முழுசா நாலா பக்கமும் கீறி வைக்கவும்.
தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கத்திரிக்காயை கழுவி அதையும் முழுசாக நாலாபக்கமும் கீறி சேர்த்து வதக்கவும்.
2.லேசாக வதஙகியதும் தக்காளி பேஸ்ட்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு தூள்,தனியாதூள் சேர்த்து நன்கு கிளறிதேவைக்கு தண்ணீர் சேர்த்து முடி போட்டு வேக விடவும்.
3.வெந்ததும் அவித்த முட்டையையும் சேர்த்து கொதிக்கவிட்டு இரக்கவும்.
கொத்து மல்லி தழை தூவி பரிமாறவும்.
Tweet | ||||||
54 கருத்துகள்:
arumai .. sema superaa ezhudhareenga .. recipe vida atha neenga solli irukkara vitham thaan enakku pudichirukku ...
try pannidren indha muttai kootai . different combination illa .. neenga kandupuduchada illa kaalam kaalam aa panra dish thaana ...
I just loved reading ur every post..
kaNdu pidissathu thaan
கத்திரிக்காயில் முட்டை ரொம்ப வித்தியாசமா நல்லாயிருக்குக்கா!!
நல்ல பதிவு அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
சூப்பர்ப் ரெஸிபி...எனக்கு மிகவும் பிடித்த ஒன்று...அருமை...கத்திரிக்காய் + முட்டை காம்பினோஷன் சூப்பர்ப்...
முட்டையும் கத்திரிக்காயும் - வித்தியாசமான ஜோடி. பாராட்டுக்கள், அக்கா!
மிக சுலபமாக இருக்கிறது!
வரும் சன்டே பிரியாணிக்கு இதான் சைடு டிஷ்:)
நன்றி!
அன்புள்ள ஜலீலா!
முட்டை கத்தரிக்காய் காம்பினேஷன் நன்றாக இருக்கிறது. அடுத்த முறை பிரியாணி செய்யும்போது செய்து பார்க்க நினைத்துள்ளேன்.
வித்யாசமான கூட்டு.. சாப்பிட ரொம்ப டேஸ்டா இருக்கும் போல..
வித்யாசமான சமையல்குறிப்பு.. கூட்டு ரொம்ப சூப்பரா இருக்குதே.. ஒருதடவை செய்து பார்க்கவேண்டியதுதான்.
ஜலீலா,பார்க்க ரெட் ஆக அழகாக இருக்கு.
ஈசியா இருக்கு அக்கா இங்கு வங்காளதேசத்து நண்பர்கள் கத்திரிக்காய் முழுசா நெருப்புல சுட்டு இப்டித்தான் குழம்பு வைப்பாங்க நன்றி அக்கா...
இது வெஜ்ஜா நான் வெஜ்ஜா! இரண்டும் கலந்த வித்தியாசமான ரெஸிபி. சரிதான்....
"முழு கத்திரிக்காய் முட்டை கூட்டு" - பெயரே அசத்தலா இருக்கு.சீக்கிரம் டெஸ்ட் செஞ்சு டேஸ்ட் பார்த்திரவேண்டியதுதான்...
ஆமா அந்த போட்டோல யாரு? கா..
அது சரி முதல் படத்தில பூமேல ஒரு போட்டோ குத்தி வச்சிருக்கீங்கலே அது யாரு ( பேக்ரவுண்ட் சிவப்பு கலர் பாஸ்போட் சைஸ் போட்டோ) .அந்த போட்டோவை நா ஆட்டைய போட்டாச்சி
சூப்பர் குறிப்பு ஜலீலாக்கா... பார்க்கவே ஆசையைத் தூண்டுது. கத்தரி + முட்டை இரண்டுமே என் பேவரிட்.
அதுசரி ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில கண்ணாக இருக்கிறீங்கள்:). இடையில விளையாட்டையும் காட்டி, பின்னர் சமையல் குறிப்பையும் ஒழுங்காகப் போட்டுவிடுறீங்கள். நன்றாக இருக்கு நீங்கள் புளொக்கை கொண்டுசெல்லும் விதம் தொடருங்கோ.... All the best jalilaakka....
//ஜெய்லானி said...
இது வெஜ்ஜா நான் வெஜ்ஜா! இரண்டும் கலந்த வித்தியாசமான ரெஸிபி. சரிதான்....//
என்னா மூளை ஜெய்லானி உனக்கு , எப்படியெல்லாம் கேள்விகேட்டு மடக்குற ?
// athira said... பார்க்கவே ஆசையைத் தூண்டுது. கத்தரி + முட்டை இரண்டுமே என் பேவரிட்.//
காதல் கவிதை போடும்போதே இன்னைக்கு நெனச்சேன்.அதுல கத்திரிகாவும் ..ம்..முட்டையும்....ஹையோ...
(பூஸ் வரதுகுள்ள மீ.எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Aaha arumai,nalla combination.entha weekend try pannida vendiyathuthan
ஜலீலாக்கா இனிமே குறிப்புல படங்கள்லாம் போடாதீங்க... நாக்கை கட்டுப்படுத்த முடில... கம்ப்யுட்டர்லாம் ஈரமாவுது.. :))
அக்கா அருமை, சிம்பிளான மேடரா இருக்குது அப்ப நாளைக்கு நம்ம சமையல் தான், அக்கா உங்கள நம்பி களமிரங்குகிறேன். நல்ல பதிவு அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி மேனகா, கத்திரிக்காயில் ஏதாவது வித்தியாசமாக செய்யனும் என்று தான் செய்து பார்த்தது.
சசி குமார் பதிவுகளை திருடுவது சகஜமாகி விட்டது.
இந்த விஷியத்தில் முன்பு ரொம்ப ஆதங்கப்பட்டது நான் தான். உடனே உங்கள் பதிவில் லிங்குடன் ஒரு மெசேஜ் கொடுங்கள்.
சசி குமார் பதிவுகளை திருடுவது சகஜமாகி விட்டது.
இந்த விஷியத்தில் முன்பு ரொம்ப ஆதங்கப்பட்டது நான் தான். உடனே உங்கள் பதிவில் லிங்குடன் ஒரு மெசேஜ் கொடுங்கள்.
கீதா ஆச்சல் ஆமாம் ரொம்ப நல்ல இருக்கும். கத்திரிக்காய் கூட எது சேர்த்தாலும் நல்ல இருக்கும்.
சித்ரா அதற்குள் ஜோடி வேறு சேர்த்து விட்டீர்களா? ஆனால் முட்டையும் கத்திரிக்காயும், அந்த ரெட் கலரும் செய்யும் போது பார்க்க கலர் காம்பினேஷன் ரொம்ப நல்ல இருந்தது, சும்மா டிரை பண்ணது தான்..
தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
பிரியா பிரியாணிக்கு செய்யும் எண்ணை கத்திரிக்காய் வேற, இது அவசரடிக்கு செய்தது ஆனால் அதை விட இது சூப்ப்பர்.
வருகைக்கு மிக்க நன்றி பிரியா/
மனோ அக்கா நிச்சயம் செய்து பாருங்கள்.
நல்ல இருக்கும், காரம் நாங்க கம்மியா சாப்பிடுவோம் ஆகையால் கொஞ்சம் காரத்தை கூட்டுவதா இருந்தால் கூட்டி கொள்ளுங்கள்.
வருகைக்கு மிக்க நன்றி.
மின்மினி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
.
ஜெய்லாணி வெஜ்ஜா நான் வெஜ்ஜா பட்டி மன்றம் தான் வைக்கனும், கூப்ப்பிடுஙக்ள் சாலமன் பாப்பையாவை.....
துபாய் ராஜா உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.
இது ஈசியாக பேச்சுலர்கள் செய்யும் சூப்பர் குறிப்பு. தக்காளி பேஸ்ட் கொதிக்கும் போது மேலே தெரிக்கும், நீங்கள் இதை செய்து பார்ப்பாதாக இருந்தால். உஷாராக எட்ட நின்று கிளறி விட்டு உடனே முடி போட்டு சிம்மில் வைத்து விடவும்.
சீமான் கனி போட்டோவில் இருப்பது இரண்டாவது மகன் ஹனிஃப்
அண்ணன் போட்டோ தான் வைக்கனும் என்றால் கொண்டு வருவதற்குள் எடுத்துட்டேன். அடுத்த குறிப்பில் வைக்கலாம் என்றேன்.
சீமான் கனி போட்டோ எடுக்கும் வரை பொறுமை இல்லை,
( பேக்ரவுண்ட் சிவப்பு கலர் பாஸ்போட் சைஸ் போட்டோ) .அந்த போட்டோவை நா ஆட்டைய போட்டாச்சி..///
ஹாஅ ஹா ஜெய்லானி ஆட்டைய போட்டு அடுத்த மேடைக்கா?
அதிரா வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
முன்பெல்லாம் துபாயில் பெரிய கத்திரிக்காய் தான் கிடைக்கும். ஒன்று வாங்கினா மாதம் புஃல்லா வைத்து சாப்பிடலாம்.
இப்ப நிறைய வித விதமா கத்திரிக்காய் கிடைக்குது.
அமைச்சரே எப்போதும் கலாக்கும் ஜெய்லாணியை முத முறையா பாராட்டி இருக்கீங்க.
வருகை தந்தமைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஸ்டார்ஜன், பேச்சுலர்கள் ஈசியாக செய்திடலாம்.
மிக்க நன்றி ஆசியா, பார்த்ததும் சாப்பிட தூண்டும்.
மை கிச்சன் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி. செய்து பார்த்து சொல்லுங்கள்.
நாஞ்சிலாரே பார்த்து கீபோர்டு உங்களை பார்த்து அழ போகுது.
ஏன் என்னை ஈரமாக்கினாய் என்று. இனி குறிப்ப பார்க்கும் போது ஒரு கர்சீப் கட்டி கொள்ளுங்கள், என்ன ஈசியாக தானே இருக்கு செய்து பார்ககலாமே///
பவித்தரா வருகைக்கும் என் எழுத்தை வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி
சசிகுமார் நம்பி களமிரஙக்லாம் துபாய் ராஜாவிற்கு சொன்னது தான் உங்களுக்கும்.
//இது ஈசியாக பேச்சுலர்கள் செய்யும் சூப்பர் குறிப்பு. தக்காளி பேஸ்ட் கொதிக்கும் போது மேலே தெரிக்கும், நீங்கள் இதை செய்து பார்ப்பாதாக இருந்தால். உஷாராக எட்ட நின்று கிளறி விட்டு உடனே முடி போட்டு சிம்மில் வைத்து விடவும்.//
பார்ஸல் அனுப்பியாச்சுங்க... :-)
இப்புடி டாக்டர்... ஆராய்ச்சியாளர்... அழகுகளை நிபுணர்..... குழந்தை வளர்ப்பு ஆலோசகர்..... இன்னும் பற்பல டைட்டில் வெச்சுகிட்டு எப்புடித்தான் மேநேஜ் பண்றீங்களோ.... புது கண்டுபுடிப்பு சூப்பர்... அம்மிணி வரட்டும் படிக்க சொல்லி செஞ்சு கேப்போம்ல.... அப்பறம் சொல்றேன்... எப்புடின்னு... :-)
ஆஹா இன்னைக்கும் நம்மளுக்கு பிடித்த சமையல்தான் .
கலக்கல் !
உங்களின் ஒவ்வொரு குறிப்புகளும் அருமை .
நீங்கள் இவை அனைத்தையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டால் . இன்னும் கணினி அறிவு இன்றி வாழும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் . புரிதலுக்கு நன்றி !
அன்பு தோழன் கண்டிப்பா உங்கள் அம்மணிக்கு இது ரொம்ப பயன் படும்,
//நீங்கள் இவை அனைத்தையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டால் . இன்னும் கணினி அறிவு இன்றி வாழும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் //
பனித்துளி சங்கர் நீங்கள் சொன்னதை தான் எல்லோரும் சொல்கீறார்கள் எப்படி என்று தான் ததொடர் வருகைக்கும் கருத்து தெரிவித்தமக்கும் மிகக் நன்றி.
நாஞ்சிலார் கமெண்ட் டெலிட் ஆகி உள்ளது என்று யாரும் யோசிகக் வேணாம் ஒரே பதிவே நாலைந்து முறை வந்துள்ளது அதான் டெலிட் பண்ணிட்டேன்.
கத்தரிகாயில் முட்டை அட..வித்தியாசமாக உள்ளதே!
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா