Wednesday, April 21, 2010

புள்சார் என்னும் ரசம்

புள்சார் என்ன பெயர் வித்தியாசமாக இருக்கா? ரசத்தை தான் இஸ்லாமியர்கள் புள்சார் என்பார்கள். புளிசாரு தான் நாளடைவில் புள்சாராகிவிட்டது.


இது அசைவ உணவு சாப்பிட்டு விட்டு கடைசியாக இந்த புள்சாரை ஒரு பிடி சாதத்தில் ஜீரணத்துக்காக சாப்பிடுவது.

பழங்காலத்தில் இஸ்லாமிய இல்லங்களில் ரசத்துக்கு முக்கியத்துவமே கிடையாது. அதை ரொம்ப கேர் எடுத்து தாளிப்பதும் கிடையாது.
இன்றும் கூட சில வீடுகளில் இப்படி தான் இதை தயாரிக்கிறார்கள்.
ரசப்பொடி இல்லா அவசர ரசம் என்று கூட இந்த புள்சார சொல்லாம்.
தேவையானவை
புளி = ஒரு பெரிய நெல்லிக்காய் சைஸ்
த‌ட்டி கொள்ள‌
மிள‌கு = கால் தேக்க‌ர‌ண்டி
சீர‌க‌ம் = அரை தேக்க‌ர‌ண்டி
ப‌ச்ச‌ மிள‌காய் = ஒன்று
க‌ருவேப்பிலை = சிறிது
பூண்டு = முன்று ப‌ல்
கொத்தும‌ல்லி காம்பு = சிறிது
தாளிக்க‌
எண்ணை = ஒரு தேக்க‌ர‌ண்டி
க‌டுகு = அரை தேக்க‌ர‌ண்டி
க‌ருவேப்பிலை = சிறிது
கொத்தும‌ல்லி த‌ழை = சிறிது க‌டைசியாக‌ மேலே தூவ‌



செய்முறை

1.புளியை சுடு தண்ணீரில் கரைத்து சுமார் இரண்டரை டம்ளர் அளவிற்கு கரைத்து வடித்து கொள்ளவும்.


2. தட்ட கொடுத்துள்ள பொருட்களை ஒரு சுத்தி எடுத்து (மண்டையில் இல்ல) பொருட்களை ஒன்றும் பாதியுமாக தட்டி வைத்து கொள்ளவும்.


3. எண்ணை கடுகு கருவேப்பிலையை சேர்த்து தாளித்து தட்டி வைத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கி, கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து உப்பு போட்டு சூடு படுத்தவும் , ரசத்தை தாளித்த பிறகு கொதிக்க விட கூடாது.

4. சூடு வந்து ஓரத்தில் நுரை கிளம்பும் போது இரக்கி கொத்துமல்லி தழை தூவி தாளித்த சட்டியில் இருந்து உடனே வேறு ஒரு சில்வர் பாத்திரத்துக்கு மாற்றி விடவேண்டும்.


5. தாளித்த சட்டியில் ரசத்தை வைக்க கூடாதுன்னு சொல்லுவாங்க. அதே போல் ரசம் கவனிக்காமல் தெரியாமல் கொதித்து விட்டால் ஒரு துளி எண்ணை (அ) தண்ணீர் சேர்க்கலாம்.

குறிப்பு


எங்க அம்மா ரசப்பொடி திரித்து அதை இன்னும் நல்ல வாசமாக பல வகையாக செய்வார்கள்.


எனக்கும் ரசத்தை ஒரே சுவையில் சாப்பிட பிடிக்காது, என் சுவைக்கு தான் ரசப்பொடியும் திரித்து கொள்வது. ரெடி மேட் ரசப்பொடி எனக்கு பிடிக்காது, நானே திரித்து செய்தால் சும்மா கும்முன்னு இருக்கும்

நானே முயற்சி செய்தது, தக்காளி ரசம் இது பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும், கருவேப்பிலை கொத்து மல்லி ரசம், இஞ்சி ரசம்,பருப்பு ரசம், (தேங்காய்பால் ரசம் இதுவும் அடிக்கடி வாய் புண் உள்ளவர்களுக்கு செய்து கொடுப்போம்) மோர் ரசம்,பூண்டு ரசம், பிளம்ஸ் ரசம், கொள்ளு ரசம் ..... இன்னும் பல வகைகளை செய்ய ஆரம்பித்து ரொம்ப நல்லவும் வந்துள்ளது.

ரொம்ப ஹெவியான சாப்பாடு என்றால் மறுநாள் ஒன்லி ரசம் தான், ஒரேயடியாக வெரும் புளி ரசம் சாப்பிடுவது உடம்பிற்கு நல்ல தல்ல அதற்கு இதுபோல் விதவிதமாக வைத்து சாப்பிடலாம்

பருப்பு ரசம் மற்றும் ஈசியான தக்காளி ரசத்தை பிறகு போடுகீறேன்.
ஏற்கனவே பல வகையான ரசம் வகைகள் கொடுத்துள்ளேன். லேபிளில் ரசம் பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

டிஸ்கி: டுடே லொள்ளு

சுதாகர் சார் ஒரு வேளை சின்ன வயதில் இப்படி இருப்பாரோ, இப்ப தான் அவர் சின்ன வயதில் உள்ள சுவாரசிய கதைகள் எழுதி இருக்கிறார்.



79 கருத்துகள்:

ஜெய்லானி said...

உங்க இன்ன வயசு போட்டோ அழகு

Starjan (ஸ்டார்ஜன்) said...

அங்கயும் (ஆசியா உமர்) ரசம் இங்கேயும் ரசமா.. நல்லாருக்கு புளியானம் புளிசாரு, புள்சார்.. ரொம்ப சூப்பர்.

Jaleela Kamal said...

ஜெய்லானிக்கு அவசரம் பதிவ இன்னொரு முறை படிங்க...


ஸ்டார்ஜன் வருகைக்கு நன்றி ஓ ஆசியாவும் ரசம் போட்டு இருக்காங்களா, இதோ பார்க்கிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

இரசம் என்பது தமிழ் வார்த்தை அல்ல.

இன்றைக்கும் புளிச்சாறு, ஆனம் (குழம்பு),ஏனம்(பாத்திரம்). அத்தா மற்றும் வாப்பா (அப்பா..தமிழ் வார்த்தை அல்ல)போன்ற இன்னும் பல புழக்கத்தில் இல்லாத அழகுதமிழ் வார்த்தைகள் மறக்காமல் இன்றைக்கும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தமிழ்தாய் மொழி இஸ்லாமியர்களின் இல்லங்களில்தான்.

சைவகொத்துப்பரோட்டா said...

ரசமும், செய்முறையில் point - 2 இல் உள்ள
லொள்ளும் நல்லா இருக்கு :))

பித்தனின் வாக்கு said...

// நானே திரித்து செய்தால் சும்மா கும்முன்னு இருக்கும் //


கொடுங்க ஜலில்லா, சும்மா கும்முனு ஒரு டம்ளரில் இந்த இரசம் தெளிவாக ஊத்திக் குடித்தால் நல்லா இருக்கும். இதில் இரண்டு சின்ன வெங்காயம் பூண்டு பல் தட்டிப் போட்டால் நல்லா இருக்கும். என் வத்தக்குழம்பு, சீரக மிளகு இரசம் அல்லது பூண்ட் இரசம் பதிவு பார்க்கவும்.

http://imsaiilavarasan.blogspot.com/2009/10/blog-post_12.html

பையன் படம் கொள்ளை அழகு , நானும் இப்படித்தான் இருப்பேன், ஆனா இவ்வளவு கலர்,குண்டு கிடையாது, பேஸ்கட் மட்டும் கொஞ்சம் மேட்ச் ஆகுது. குண்டு மூக்கா அல்லது லட்டு மூக்கா என்பது என்னை கொஞ்சும் பெண்கள் சொன்னது. (சத்தியமா அப்பத்தான் கொஞ்சுனாங்க, இப்ப என்னைப் பார்த்தாலே கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுவாங்க)

ஜெய்லானி said...

@@@ Jaleela--//ஜெய்லானிக்கு அவசரம் பதிவ இன்னொரு முறை படிங்க...//

இத பாருங்க நீங்க செய்வது கொஞ்டம்கூட சரியில்ல. வெறும் டுடே லொல்லுன்னு போட்டுவிட்டு. நான் சின்ன வயசு படமான்னு கமெண்ட் போட்டதும் இப்படி பல்டி அடிப்பது.,
...சரி...சரி.. மங்கு பாக்கல தப்பிச்சேன். அதுக்காக தொப்பையானந்தாவை நீங்க இப்படி கிண்டலடிப்பதை நான் தொப்பையானந்தா சார்பில் கண்டிக்கிறேன்,

Jaleela Kamal said...

எம்.எம். அப்துல்லா வருகைக்கு மிக்க நன்றி.

//இன்றைக்கும் புளிச்சாறு, ஆனம் (குழம்பு),ஏனம்(பாத்திரம்). அத்தா மற்றும் வாப்பா (அப்பா..தமிழ் வார்த்தை அல்ல)போன்ற இன்னும் பல புழக்கத்தில் இல்லாத அழகுதமிழ் வார்த்தைகள் மறக்காமல் இன்றைக்கும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தமிழ்தாய் மொழி இஸ்லாமியர்களின் இல்லங்களில்தான்//

நீங்கள் சொல்வதும் சரியே ,

Jaleela Kamal said...

சை.கொ.ப, அது தொப்பையானந்தா, மங்கு எல்லாம் படிக்கும் போது யாரு மண்டையல அடிக்கனுமுன்னு கேட்பாங்க அதான் முதலே சொல்லிட்டேன்,

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி/

Jaleela Kamal said...

சுதாகர் சார். இது சிம்பிள் ரசம் ,,

நீங்கள் சொல்லும் ரசம் பிரமண ஆத்து சூப்பர் ரசம், மணமே எட்டு வீட்டு கதவை தட்டும்.
வெரும் ரசம் , அப்பளமே போதும் வேறு எதுவும் தேவையில்லை.
நீஙக அங்க மாத்தி மாத்தி வாத்தி கிட்ட அடி வாங்கின கதைய எழுதல, அதான் மேலோட்டாமா சுதாகர் சார் என்று போட்டுள்ளேன்.

Jaleela Kamal said...

ஜெய்லானி சரி பார்த்து எழுதுவதற்குள், இன்னும் தமிலிஷ் கூட சம்மிட் செய்யல அதற்குள் குடு குடுன்னு வந்து கேட்டா அதுக்கு நான் பொருப்பல்ல.

மங்கு வரட்டும் நீஙக ஒரு வழி தான்..

அன்புடன் மலிக்கா said...

புளியானம் என்றுதான் நாங்களும் சொல்லுவோம்.

ஃபேஷனாகி இரசம் ரசம் ஆகிப்போனது..

அச்சோ இதுதான் ஜெய்லானியின் சின்னவயசு போட்டோவா. உங்களுக்கு எப்புடி கிடச்சது[எப்புடி ஜெய்லானி ஹி ஹி]

மங்குனி அமைச்சர் said...

//புளி = ஒரு பெரிய நெல்லிக்காய் சைஸ்///


எச்சூச்மி , ஒரு பெரிய நெல்லிக்காய் என்னா சைஸ்ல இருக்கும் மேடம்

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

உங்க இன்ன வயசு போட்டோ அழகு///


மேடம் இப்பவாவது புரிசுகங்க ஜெய்லானி உங்க பதிவு எதையும் படிபதில்ல , சும்மா முஸ்கி இல்ல கிஸ்கியா பாத்து கமண்ட் போடுறான்

மங்குனி அமைச்சர் said...

/// ஜெய்லானி said...

@@@ Jaleela--//ஜெய்லானிக்கு அவசரம் பதிவ இன்னொரு முறை படிங்க...//

இத பாருங்க நீங்க செய்வது கொஞ்டம்கூட சரியில்ல. வெறும் டுடே லொல்லுன்னு போட்டுவிட்டு. நான் சின்ன வயசு படமான்னு கமெண்ட் போட்டதும் இப்படி பல்டி அடிப்பது.,
...சரி...சரி.. மங்கு பாக்கல தப்பிச்சேன். அதுக்காக தொப்பையானந்தாவை நீங்க இப்படி கிண்டலடிப்பதை நான் தொப்பையானந்தா சார்பில் கண்டிக்கிறேன்,///


ஜெய்லானி, போன வாட்டி ஆசியா ஓமர் மேடம் தலகரி குழம்புல உன்னோட ஒரு கண்ணு தான் இருந்துச்சு , இன்னொரு கண்ணுல என்ன பிராபளம் , ஓ மாலை கண்ணா ?
அது தான் இப்படி படிக்கிற

மங்குனி அமைச்சர் said...

//// ஜெய்லானி said...

@@@ Jaleela--//ஜெய்லானிக்கு அவசரம் பதிவ இன்னொரு முறை படிங்க...//

இத பாருங்க நீங்க செய்வது கொஞ்டம்கூட சரியில்ல. வெறும் டுடே லொல்லுன்னு போட்டுவிட்டு. நான் சின்ன வயசு படமான்னு கமெண்ட் போட்டதும் இப்படி பல்டி அடிப்பது.,
...சரி...சரி.. மங்கு பாக்கல தப்பிச்சேன். அதுக்காக தொப்பையானந்தாவை நீங்க இப்படி கிண்டலடிப்பதை நான் தொப்பையானந்தா சார்பில் கண்டிக்கிறேன்,//////


ஆசிய ஓமர் மேடம் , எது செஞ்சாலும் ஒழும்கா செய்ங்க , பாருங்க தலகரி குழம்புல ஒரு கண்ண விட்டிக , மட்டன் பிரைல ஒரு கைய விட்டுக்க , கிட்னி பிரைல ஒரு கிட்னிய விட்டிக , ஏற்கனவே மூளை வேற இல்ல , இப்ப பாருங்க இந்த ஜெய்லானி பீசு கொலம்பி தள்ளுது , இனிமே ஒரே சான்சு தான் மொத்தம்மா பாக்கி இருக்க ஜெயலானிய வச்சு ஒரு பிரியாணி போட்ட்ருங்க

r.v.saravanan said...

நன்றி இந்த ரசத்தை வீட்டில் செய்ய சொல்லி சாப்பிட்டு விட்டு சொல்கிறேன்

Asiya Omar said...

ஜலீலா உங்க ரசப்பட்டியல் சூப்பர்.எல்லா ரசமும் அருமை.

GEETHA ACHAL said...

சூப்பர்ப் ரசம்...எங்கள் மாமியார் வீட்டிலும் இந்த ரசம் மிகவும் பேமஸ்...எங்க மாமியார் வீட்டில் இந்த ரசத்தினை "மொட்டை ரசம்" என்று சொல்லுவாங்க...தாளிக்காமல் செய்யும் இந்த் ரசம் மிகவும் சூப்பராக இருக்கும்...

Menaga Sathia said...

ரசம் அருமையோ அருமை....

அன்புத்தோழன் said...

எங்க வீட்டுல இத புளியானம்னு சொல்லுவாங்க.... கலரி புளியாணம் முன்னாடிலாம் வெறும் கல்யாணம் காட்சினா மட்டும் தான் கிடைக்கும்... இப்போ அடிகடி வீட்டுலே செய்றாங்க.... மூணு கறி சோறோட கலரி புளியானத்த விட்டு அடிச்சா... ச.... :-)

நட்புடன் ஜமால் said...

இரசத்துக்கே இம்பூட்டா

எங்க ஊர்ல புளியானமுன்னு சொல்வாங்க ...

Nithu Bala said...

Dear Akka, entha pulicharu engal veetilum pannuvarkal..enakum roombha pidikum..en blog pakkam oru murai vantheengha arumayana comment onnum thantheengha ana athukku appuram varey illa akka neengha..mudium podhu vangha..ungha matha kuripukal ellam enaiku parka poren athan en velaye..

syed mohammed said...

assalammu alaikkum,

naan syed muhammed, first timaa intha blog irkku varrain, pulicharu matter super. innum melapalaythil rasathay puli charu endru thaan solkiraarkal,

vaaalththukkal,
innum niraya eluthungal.

Chitra said...

அக்கா சிம்பிள் ஆ ஒரு ரசம் வைக்க சொலிக் கொடுத்தாக் கூட, கமெண்ட்ஸ் காலத்துல இந்த கும்மி அடிக்கிறாங்களே..... கலக்கல்.

ஜெய்லானி said...

@@@Jaleela--//ஜெய்லானி சரி பார்த்து எழுதுவதற்குள், இன்னும் தமிலிஷ் கூட சம்மிட் செய்யல அதற்குள் குடு குடுன்னு வந்து கேட்டா அதுக்கு நான் பொருப்பல்ல.//

அப்ப உங்க போதைக்கு நாந்தான் இன்னைக்கு ஊருகாயா.. இன்னும் யாரெல்லாம் கும்ம போறாங்கலோ ?

//மங்கு வரட்டும் நீஙக ஒரு வழி தான்..//

திரியில நெருப்பை வச்சுட்டீங்களே!!!!!!

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//அச்சோ இதுதான் ஜெய்லானியின் சின்னவயசு போட்டோவா. உங்களுக்கு எப்புடி கிடச்சது[எப்புடி ஜெய்லானி ஹி ஹி]//

ஹி..ஹி..பாத்தீங்களா தூக்கி பிடிச்சு இருக்கிற உங்க போட்டோவை கட்பண்ணிட்டு என்னைய மட்டும் போட்டுட்டாங்க!!!

அப்புறம் இதுக்கு ஒரு கவித போட்டுடாதீங்க பாட்டிமா!!

ஜெய்லானி said...

@@@ மங்குனி அமைச்சர் --//புளி = ஒரு பெரிய நெல்லிக்காய் சைஸ்///

எச்சூச்மி , ஒரு பெரிய நெல்லிக்காய் என்னா சைஸ்ல இருக்கும் மேடம்//


ஒரு ஃபுட் பால் அளவு இருக்கும் மங்கு.

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

உங்க சின்ன வயசு போட்டோ அழகு///


மேடம் இப்பவாவது புரிசுகங்க ஜெய்லானி உங்க பதிவு எதையும் படிபதில்ல , சும்மா முஸ்கி இல்ல கிஸ்கியா பாத்து கமண்ட் போடுறான்//

ஆல் இன் ஆல் ஒரு புயல் நான் ஒரு நானல் அதேங் இப்படி..ஹி..ஹி..

ஜெய்லானி said...

@@@ மங்குனி அமைச்சர் said...

//// ஜெய்லானி said...

@@@ Jaleela--//ஜெய்லானிக்கு அவசரம் பதிவ இன்னொரு முறை படிங்க...//

இத பாருங்க நீங்க செய்வது கொஞ்டம்கூட சரியில்ல. வெறும் டுடே லொல்லுன்னு போட்டுவிட்டு. நான் சின்ன வயசு படமான்னு கமெண்ட் போட்டதும் இப்படி பல்டி அடிப்பது.,
...சரி...சரி.. மங்கு பாக்கல தப்பிச்சேன். அதுக்காக தொப்பையானந்தாவை நீங்க இப்படி கிண்டலடிப்பதை நான் தொப்பையானந்தா சார்பில் கண்டிக்கிறேன்,//////


ஆசிய ஓமர் மேடம் , எது செஞ்சாலும் ஒழும்கா செய்ங்க , பாருங்க தலகரி குழம்புல ஒரு கண்ண விட்டிக , மட்டன் பிரைல ஒரு கைய விட்டுக்க , கிட்னி பிரைல ஒரு கிட்னிய விட்டிக , ஏற்கனவே மூளை வேற இல்ல , இப்ப பாருங்க இந்த ஜெய்லானி பீசு கொலம்பி தள்ளுது , இனிமே ஒரே சான்சு தான் மொத்தம்மா பாக்கி இருக்க ஜெயலானிய வச்சு ஒரு பிரியாணி போட்ட்ருங்க//

பாவி மக்கா இதை மட்டும் அந்த பிளாக்கில காப்பி பேஸ்ட் பண்ணி இருந்தா உன்னை இன்னைக்கு உப்பு கண்டம் தான்ல. அதுவும் அயோடின் கலந்ததான்னு டெஸ்ட் பண்ணிட்டுதான் வந்து போடுவேன்.

ஜெய்லானி said...

@@@ Chitra -//அக்கா சிம்பிள் ஆ ஒரு ரசம் வைக்க சொலிக் கொடுத்தாக் கூட, கமெண்ட்ஸ் காலத்துல இந்த கும்மி அடிக்கிறாங்களே.//

சித்ராக்காவ் நாங்க வெரும் அப்பளத்துக்கே துள்ளி குதிக்கிற ஆளு., ரஸம்ன்னா சொல்லவா வேனும்.

சீமான்கனி said...

இதை புளிச்சாருனு சொல்லுவாங்க அவசர ரசம்னும் சொல்லுவாங்க நல்லா இருக்கு ஜலி அக்கா...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

புள்யானம் செய்முறை கட்டுரை மிக அருமை. புளியானம் என்ற வர்த்தையை கேட்டாலே நாக்கு ஊறுது.

புளியானம்,புளிச்சாறு, புளித்தண்ணி,புள்சார்,புளிசூப் என்று இன்னும் இஸ்டத்துக்கு நம்ம பாப்புலர் 'ரசத்துக்கு' பெயர் சூட்டிக்கிட்டே போகலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில இஸ்லாமியர்கள் ஊர்களில் கலயாண விருந்துகளில்(5 கறி சாப்பட்டில்) 'ரசம்' ஒரு ஹைலைட்டான டிஸ் என்பதை அந்த ஊர் மக்கள் அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்.

டம்ளர் டம்ளரா வாங்கி வேளுத்து கட்டுவோம்லே..

athira said...

ஆ.... ஜலீலாக்கா ,,, மூச்சை கொஞ்சம் மெ..து..வா.. உள்ளே இழுத்து வெளியே அனுப்பிவிட்டு வருவதுக்குள் இத்தனை பதிவுகளா? முடியவில்லை ஜலீலாக்கா .... நான் மூச்சுவிடுவதைச் சொன்னேன்.

நல்ல ரசம்... நாளைக்கே வைத்திட யோசிக்கிறேன்.

டிஸ்கி:சார் என்கிறீங்க ஜலீலாக்கா.. படத்தில பல் இல்லையே... ஒருவேளை தாத்தாவோ? எனக்கெதுக்கு ஊர்வம்புஸ்ஸ்ஸ்...

ஊசிக்குறிப்பு:
///எச்சூச்மி , ஒரு பெரிய நெல்லிக்காய் என்னா சைஸ்ல இருக்கும் மேடம்//


ஒரு ஃபுட் பால் அளவு இருக்கும் மங்கு.///
எச்சூச்மி ஜெய்..லானி, ஒரு பெரிய ஃபுட் போல் என்னா சைஸ்ல இருக்கும்???.

Anonymous said...

அக்கா ரசம் ரொம்ப சிம்பிள்ளா சூப்பரா இருக்கு.

About aaloo tahari,

//அம்மு உருளை, பட்டாணி அதனுடன் அரிசி சேர்த்து வடித்து , அந்த தாளித்து வைத்துள்ள கூட்டில் சேர்க்கனுமா?

பார்க்க் நல்ல இருக்கு அம்மு , ஹஸுக்கு தினம் சாப்பாடு கட்ட வெஜ் தான் செய்வேன் அதில் இதையும் ஒரு டிஷ் ஆகா ஆட் பண்னிககலாம், என்று தான்//

இல்ல ஜலீலா அக்கா கிரேவி செஞ்சு அதுல உருளை,பட்டை சேர்த்து லேசா வதக்கி ஊற வைத்த rice சேர்த்து தேவையான நீர் சேர்த்து வடிக்கணும்.தனி தனியாக செய்தால் ருசி மாறி விடுகிறது.கண்டிப்பா லிஸ்ட்டில் சேர்த்துக்கோங்க.ரொம்ப நல்லா இருக்கும்.

மங்குனி அமைச்சர் said...

/;/// ஜெய்லானி said...
@@@ Chitra -//அக்கா சிம்பிள் ஆ ஒரு ரசம் வைக்க சொலிக் கொடுத்தாக் கூட, கமெண்ட்ஸ் காலத்துல இந்த கும்மி அடிக்கிறாங்களே.//

சித்ராக்காவ் நாங்க வெரும் அப்பளத்துக்கே துள்ளி குதிக்கிற ஆளு., ரஸம்ன்னா சொல்லவா வேனும்.
/////



அப்பளம் கூட வேண்டாம் மேடம் , சில்லுன்னு ஒரு கிளாஸ் பச்ச தண்ணி குடுங்க அப்புறம் பாருங்க , கமண்ட்ஸ் 200 அ தாண்டும் (ஜலீலா& ஆசியா ரெண்டு மேடமும் கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லிருக்காக , அதான் , இல்ல ....................................................)

மங்குனி அமைச்சர் said...

///athira said...
ஊசிக்குறிப்பு:
///எச்சூச்மி , ஒரு பெரிய நெல்லிக்காய் என்னா சைஸ்ல இருக்கும் மேடம்//


ஒரு ஃபுட் பால் அளவு இருக்கும் மங்கு.///
எச்சூச்மி ஜெய்..லானி, ஒரு பெரிய ஃபுட் போல் என்னா சைஸ்ல இருக்கும்???.
///////


வந்துடாங்கயா வந்துட்டாங்க எங்க ஜான்சி ராணி வந்துட்டாங்க , அப்படி கேளுங்க அப்பவாவது புத்தி வந்து தற்கொல பண்ணிகிதான்னு பாக்கலாம்

Jaleela Kamal said...

மலிக்கா புளியானம் நல்ல இருக்கா//

இந்த போட்டோவ போட்டுட்டு யார போடலாம், ஜெய்லானியா, மங்குவான்ன்னு யோசிககும் போது தொப்பையானந்தா தான் சரியாக இருக்கும் என்று அவர போட்டாச்சு.

Jaleela Kamal said...

//எச்சூச்மி , ஒரு பெரிய நெல்லிக்காய் என்னா சைஸ்ல இருக்கும் மேடம்//



மங்குக்கு சாப்பாடு சாப்பிட்டா தானே இத பற்றி தெரிய,

கொசுமுட்டை, எலி ரசம், யானை குழம்பு ( அதுவும் யானை குழம்புக்கு நெல்லிக்காய் அளவு புளி பத்தாது, புட் பால் சைஸ் புளி போட்டா சரியாக இருக்கும். போதுமா அமைச்சரே///

Jaleela Kamal said...

அமைச்சரே எப்ப பார்த்தாலும் அமைச்சரையே கவுக்குறோமே , இந்த ஒரு பதிவுல யாவது, சந்தோஷமா போகட்டுமுன்னு பார்த்தேன் உம் மதிப்பை நீரே சூனியம் வைத்து கெடுத்து கொண்டீர், இனி ஒன்னியம் பண்னமுடியாது.

Jaleela Kamal said...

//இத பாருங்க நீங்க செய்வது கொஞ்டம்கூட சரியில்ல. வெறும் டுடே லொல்லுன்னு போட்டுவிட்டு. நான் சின்ன வயசு படமான்னு கமெண்ட் போட்டதும் இப்படி பல்டி அடிப்பது.,
...சரி...சரி.. மங்கு பாக்கல தப்பிச்சேன். அதுக்காக தொப்பையானந்தாவை நீங்க இப்படி கிண்டலடிப்பதை நான் தொப்பையானந்தா சார்பில் கண்டிக்கிறேன்,//////

இத பார்த்துட்டு தொப்பையானந்தாவே ஒன்றும் சொல்லல நீங்க என்ன கண்டிக்கிறது. அங்க அடி வாங்கன பதிவ போட்டதில் இருந்து இப்ப அடி வாங்கின பீலிங் போல அதான் பதிவை சரியா பார்க்கல

Asiya Omar said...

ஜலீலா,முத்தான துவாவில் கருத்து சொல்லி இருக்கேன் பார்ர்க்கலையா?

Jaleela Kamal said...

சரவனன் குடந்தை கண்டிப்பாக செய்து பார்த்து சொல்லுங்கள், இது ஒரு சிம்பிள் ஈசி ரசம்

Jaleela Kamal said...

ஆசியா உங்களையும் கலாச்சி எழுதி இருக்காங்க என்னன்னு பாருங்க'

கீதா ஆச்சல் ஆஹா ஓவ்வொரு ஊரில் ஓவ்வொரு பேரா இந்த புள்சாருக்கு.

நன்றி மேனகா/

Jaleela Kamal said...

மொட்டை ரசம், பார்த்து ம‌ங்கு பார்த்துட்டு மொட்டை அடிச்சிட்டு இந்த‌ ர‌ச‌த்த‌ குடிக்க‌னுமுன்னு நினைச்சிக்க‌ போறார்.

Jaleela Kamal said...

அன்பு தோழன் என்ன உங்க ஊரில் புளியானமா? நீஙக் மூனு கறி சோறில் இதுவும் இடம் பெறும் என்கிறீர்கள். தாஜுதீன் ஐந்து கறி சோறுன்னு சொல்றாரே?

இத யாரவது விளக்குஙகளே என்ன முனு கறி, என்ன 5 கறி?

மனோ சாமிநாதன் said...

புள் சார் நன்றாயிருக்கிறது, ஜலீலா!

Jaleela Kamal said...

செய்யது முஹம்மது வா அலைக்கும் அஸ்ஸ்லாம் வாங்க வாங்க நீங்களும் மேலபாளையமா?

இன்னும் எங்கள் சொந்தஙக்ளும் சிலர் புள்சார் என்று தான் சொல்வார்கள்..

வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

ஜெய்லானி said...

@@@ Jaleela--// இத யாரவது விளக்குஙகளே என்ன முனு கறி, என்ன 5 கறி?//

மட்டன் பிரியானி + மட்டனுடன் கறி(பெரிய சைஸ் உருளைகிழங்குடன்) குழம்பு பிரட்டியது மாதிரி + மட்டன் கத்திரிகாய் பிரட்டியது மாதிரி + தக்காளி பச்சடி + தயிர் வெங்காய பச்சடி

தால்சா சோறாக இருந்தால் தால்சாவிலேயே மட்டன் இருக்கும் + கோழி குருமா + தக்காளி பச்சடி + தயிர் வெங்காய பச்சடி

இது எங்க ஊர் கல்யாணச் சாப்பாடு

ஜெய்லானி said...

@@@ Jaleela--//மங்குக்கு சாப்பாடு சாப்பிட்டா தானே இத பற்றி தெரிய,

கொசுமுட்டை, எலி ரசம், யானை குழம்பு ( அதுவும் யானை குழம்புக்கு நெல்லிக்காய் அளவு புளி பத்தாது, புட் பால் சைஸ் புளி போட்டா சரியாக இருக்கும். போதுமா அமைச்சரே//

அப்படி சும்மா நச்சுன்னு மண்டையில குட்டி சொல்லுங்க. ஒரே கமெண்ட நாலு இடத்துல காப்பி பேஸ்ட் பண்ணுது.

Jaleela Kamal said...

ஜெய்லானி இதே தான் எங்க வீடுகளிலும் கல்யாணச்சாப்பாடு.


நீங்க என்னவோ புதுசா என்னவோ கறி சொல்லப்போறீஙகன்னு நினைத்தேன்

Jaleela Kamal said...

இப்ப ஸாதிகா அக்கா ஜார்ஜாவுல ஆனால் ஒரு கண்டுபிடிப்பு, ஜலி நான் நினைக்கிறேன் இந்த மங்குவும், ஜெய்லாணியும் ஒரே ஆளா இருப்பாங்களோ. என்றார் கள் நானும் இருக்கலாம் இருக்கலாம் என்றேன்/

Jaleela Kamal said...

ஆமாம் சித்ரா வெளிநாட்டு நம்ம தம்பிகலுக்கு ஈசியா ஒரு சிம்பிளா ஒரு ரசத்த சொல்லி கொடுத்தா இபப்டி புளியானத்த புளிஞ்சி சாறெடுக்கிறார்கலே

Jaleela Kamal said...

தாஜுதீன் வாஙக் வாங்க புளீயானத்து இவ்வள்வு மவுசா//

நான் சாதரனமாக போட போனேன். வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

.
//அப்பளம் கூட வேண்டாம் மேடம் , சில்லுன்னு ஒரு கிளாஸ் பச்ச தண்ணி குடுங்க அப்புறம் பாருங்க , கமண்ட்ஸ் 200 அ தாண்டும் (ஜலீலா& ஆசியா ரெண்டு மேடமும் கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லிருக்காக , அதான் , இல்ல ....................................................)//


அமைச்சரே ஜில்லுன்னு பச்ச தண்ணிய கொடுத்த அப்பரம் ஜல்பு பிடிச்சிக்கும், பிறகு பல்பு பதிவு எல்லாம் போட முடியாது.

Jaleela Kamal said...

.சீமான் கனி வாங்க பெயர சொல்லும போதே நல்ல இருக்கா,

புள்சார்

ரசம்

மொட்டை ரசம்

புளியாண‌ம்

சிம்பிள் ர‌ச‌ம்

பேச்சுல‌ர்க‌ளின் அவ‌ச‌ர‌ ர‌ச‌ம்

ர‌ச‌ப்பொடி இல்லா ர‌ச‌ம்

எம்மாடி இத்த‌னை பேரா இதுக்கு..

Jaleela Kamal said...

அதிரா நாங்க எஸ், பீ பி மூச்சு விடாம பாடுவது போல் மூச்சுவிடமா சமைச்சிக்கிட்டே இருப்போம்//


அதிரா அது ஜலீலா சார் இல்லை (பித்தன் , சுதாகர் சார் என்னும் தொப்பையானந்தா//

இதுக்கு தான் டாக்டருக்கு தெரியம வந்து இருட்டுல‌

தூக்க கலக்கத்தில் படிச்சிட்டு பதிவ போடாதீங்ங்கன்னு சொலற்து/

malar said...

இன்று எங்க வீட்டில் http://allinalljaleela.blogspot.com/2010/01/prawn-fried-rice.html இந்த பிரைட் ரைஸ் தான் செய்து சாப்பிட்டும் விட்டேன் ரொம்ப நல்ல் இருந்த்து.

சமயல் பதிவுகளை பொறுத்தமட்டில் ஓட்டு போட்டுவிடுவேன்.
பினூட்டம் செய்து பார்துதான் போடுவேன்.

"புள்சார் ரசம் வைத்துட்டு சொல்றேன்.

Jaleela Kamal said...

சகோ, ஜமால் பாருங்களே ஒரு ரசத்துக்கு இம்புட்டு கும்மி.

உங்க ஊரிலும் புளியானமா?

பேஷ் பேஷ் //

நேக்கு தெலிது-- நோக்கு தெலுசா
நெனக்கு ஒத்துல்லா.

Jaleela Kamal said...

மனோ அக்கா, அம்மு நன்றி.


ஆசியா துஆ ப‌குதியில் உட‌னே ப‌தில் போட்டு விட்டேனே பார்க‌க்லையா?

ஜெய்லானி said...

@@@ Jaleela--// ஜெய்லானி இதே தான் எங்க வீடுகளிலும் கல்யாணச்சாப்பாடு.


நீங்க என்னவோ புதுசா என்னவோ கறி சொல்லப்போறீஙகன்னு நினைத்தேன்//

ஆமாங்க விட்டுபோச்சி, பெரிய சொம்புல தண்ணி தரத மறந்துட்டேன்.

ஜெய்லானி said...

@@@athira --//.எச்சூச்மி ஜெய்..லானி, ஒரு பெரிய ஃபுட் போல் என்னா சைஸ்ல இருக்கும்???.//

ஐய உங்க வீடல மன் பானை இல்லையா ? அப்ப பிரியாது நா இன்னா ஜொன்னாலும்

சசிகுமார் said...

அக்கா சூப்பர் ரசம், உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

malar said...

இது எங்க ஊர் புளி ஆனம்.....

நட்புடன் ஜமால் said...

அடிச்சி ஆடியிருக்கீங்களே மக்காஸ்

சொல்லிட்டு செய்ங்ப்பா ...

athira said...

வந்துடாங்கயா வந்துட்டாங்க எங்க ஜான்சி ராணி வந்துட்டாங்க , அப்படி கேளுங்க அப்பவாவது புத்தி வந்து தற்கொல பண்ணிகிதான்னு பாக்கலாம்/// ahh.... எம்பி எண்டால் எம்பிதான்.... என்னாமாதிரிக் கட்சி மாறிக்கொண்டிருக்கிறார்...

இனிமே ஒரே சான்சு தான் மொத்தம்மா பாக்கி இருக்க ஜெயலானிய வச்சு ஒரு பிரியாணி போட்ட்ருங்க/// ஹா...ஹா..ஹா... ஆசியாவா? ஜலீலாக்காவா? செய்வதை கொஞ்சம் கெதியாச் செய்யுங்கோ... மீ வெயிட்டிங்....யா.....

அதுவும் அயோடின் கலந்ததான்னு டெஸ்ட் பண்ணிட்டுதான் வந்து போடுவேன்./// ஜெய்..லானி ஏதும் ஹெல்ப் தேவையெண்டால் கூச்சப்படாமல் கேளுங்கோ.... இந்த உதவி கூடச் செய்யாமல் இருந்தும் என்ன பயன்?? நான் என்னைச் சொன்னேனாக்கும்..


ஜலி நான் நினைக்கிறேன் இந்த மங்குவும், ஜெய்லாணியும் ஒரே ஆளா இருப்பாங்களோ. என்றார் கள் நானும் இருக்கலாம் இருக்கலாம் என்றேன்///// ஜலீலாக்கா ரொம்ப தப்பு... இருவரும் ஒருவர் அல்ல பத்துப்பேராக்கும்.... அடம்பன் கொடியோ???

ஐய உங்க வீடல மன் பானை இல்லையா ? அப்ப பிரியாது நா இன்னா ஜொன்னாலும்/// இப்போ பிரிஞ்சிடிச்சீஈஈஈ... ரொம்ப டாஞ்சூ.... ஆமா மண்பானை எண்டால் சில்வர் கப்தானே இல்லையா ஜலீலாக்கா....

மங்குனி அமைச்சர் said...

// ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

உங்க சின்ன வயசு போட்டோ அழகு///


மேடம் இப்பவாவது புரிசுகங்க ஜெய்லானி உங்க பதிவு எதையும் படிபதில்ல , சும்மா முஸ்கி இல்ல கிஸ்கியா பாத்து கமண்ட் போடுறான்//

ஆல் இன் ஆல் ஒரு புயல் நான் ஒரு நானல் அதேங் இப்படி..ஹி..ஹி..///


ஜெய்லானி உன் மீசைல மன்னு ஒட்டல , அட ஆமாப்பா உந்தல மேல சத்தியமா

மங்குனி அமைச்சர் said...

///Jaleela said...

மொட்டை ரசம், பார்த்து ம‌ங்கு பார்த்துட்டு மொட்டை அடிச்சிட்டு இந்த‌ ர‌ச‌த்த‌ குடிக்க‌னுமுன்னு நினைச்சிக்க‌ போறார்.///


பாவம் ஜெய்லானி ஏற்கனவே மொட்டையா இருக்கான் , மொட்டைக்கே மொட்டை போட்டு சாப்பிடுவோம் . அவன் தலை எழுத்து எங்க போனாலும் அவனுக்கு தான் மொட்ட போடுறாங்க , நீங்களும் , நானும் வெறும் மொட்டையோட விட்டோம் ஆசிய மேடம் , பார்ட் பார்ட் ஆ ஜெயலானியா பிரிச்சு சமைகிறாங்க

மங்குனி அமைச்சர் said...

//Jaleela said...

அமைச்சரே எப்ப பார்த்தாலும் அமைச்சரையே கவுக்குறோமே , இந்த ஒரு பதிவுல யாவது, சந்தோஷமா போகட்டுமுன்னு பார்த்தேன் உம் மதிப்பை நீரே சூனியம் வைத்து கெடுத்து கொண்டீர், இனி ஒன்னியம் பண்னமுடியாது.///


என்னா பண்றது மேடம் , சனி பகவான் உச்சத்தில இருக்கார்ன்னு நம்ம காரமட ஜோசியர் சொல்லிருக்கார் .

மங்குனி அமைச்சர் said...

///ஜெய்லானி said...

@@@ Jaleela--// இத யாரவது விளக்குஙகளே என்ன முனு கறி, என்ன 5 கறி?//

மட்டன் பிரியானி + மட்டனுடன் கறி(பெரிய சைஸ் உருளைகிழங்குடன்) குழம்பு பிரட்டியது மாதிரி + மட்டன் கத்திரிகாய் பிரட்டியது மாதிரி + தக்காளி பச்சடி + தயிர் வெங்காய பச்சடி

தால்சா சோறாக இருந்தால் தால்சாவிலேயே மட்டன் இருக்கும் + கோழி குருமா + தக்காளி பச்சடி + தயிர் வெங்காய பச்சடி

இது எங்க ஊர் கல்யாணச் சாப்பாடு///


அத்தோட ஜெய்லானி பிங்கர் பிரை

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

@@@ Jaleela--//மங்குக்கு சாப்பாடு சாப்பிட்டா தானே இத பற்றி தெரிய,

கொசுமுட்டை, எலி ரசம், யானை குழம்பு ( அதுவும் யானை குழம்புக்கு நெல்லிக்காய் அளவு புளி பத்தாது, புட் பால் சைஸ் புளி போட்டா சரியாக இருக்கும். போதுமா அமைச்சரே//

அப்படி சும்மா நச்சுன்னு மண்டையில குட்டி சொல்லுங்க. ஒரே கமெண்ட நாலு இடத்துல காப்பி பேஸ்ட் பண்ணுது.///



அது ஒன்னும் இல்ல ஜெய்லானி உன்னோட வீர பராகிரமம் உலகம் பூராம் தெரியட்டும்னு தான்

மங்குனி அமைச்சர் said...

// ஜெய்லானி said...

@@@ Jaleela--// ஜெய்லானி இதே தான் எங்க வீடுகளிலும் கல்யாணச்சாப்பாடு.


நீங்க என்னவோ புதுசா என்னவோ கறி சொல்லப்போறீஙகன்னு நினைத்தேன்//

ஆமாங்க விட்டுபோச்சி, பெரிய சொம்புல தண்ணி தரத மறந்துட்டேன்.///


ஆமா, அப்படியே ஒரு துண்டு கொடுத்திடு , பதினெட்டு பட்டிக்கும் பஞ்சாயத்து தீர்ப்பு சொல்லட்டும்

மங்குனி அமைச்சர் said...

//நட்புடன் ஜமால் said...

அடிச்சி ஆடியிருக்கீங்களே மக்காஸ்

சொல்லிட்டு செய்ங்ப்பா ...///

எங்க சார் , ஜெலீல மேடம் லிமிடெட் பால்ஸ் தான் தற்றாக , எல்லா பாலையும் அடிக்க சொன்னா , புல்லா சிக்ஸ் தான்

மங்குனி அமைச்சர் said...

///Jaleela said...

இப்ப ஸாதிகா அக்கா ஜார்ஜாவுல ஆனால் ஒரு கண்டுபிடிப்பு, ஜலி நான் நினைக்கிறேன் இந்த மங்குவும், ஜெய்லாணியும் ஒரே ஆளா இருப்பாங்களோ. என்றார் கள் நானும் இருக்கலாம் இருக்கலாம் என்றேன்/////



ஆஆஹா , இத பார்ரா டபுள் ஆக்ட் பன்னத கண்டுபுடுசிடாக

Jaleela Kamal said...

அமைச்சரே போதும் ரொம்ப டயடா இருப்பீங்க மாங்கு மாங்குன்னு பதில போட்டு சூடா டீ வேண்ட்டா போட்டுதாரேன் குடிச்சிட்டு அன்ங்கு பூஸார் கூப்பிடுகிறார் போய் விசாரிங்க பார்த்த் போங்க வெளியில் நிறைய செகிய்ரிட்டி நிற்பார்கள்.


http://gokisha.blogspot.com/2010/04/2010.html

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஆ... ஜலீலாக்கா உண்மையிலயே வழிகாட்டியிருக்கிறீங்க மிக்க நன்றி. நல்ல வேளை... குறுக்குப் பாதையில் இறங்கிடாமல் ஒயுங்கா வந்து சேர்ந்திட்டார் காட்டிய வழியிலேயே...:).

Krishnaveni said...

rasam looks really great. My mother in law cooks like this

Kanchana Radhakrishnan said...

ரசம் அருமையோ அருமை..Jaleela

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர்--//ஆனா என்னைய மட்டும் விட்ரனும் , இதுகெல்லாம் முக்கியமா ஜெய்லானி இருக்கான் அவன்தான் இதுகெல்லாம் தலைவன் பஸ்ட்டு அவன போட்டு தள்ளுங்க//

எலேய் , உனக்கு அவ்ளோ உயிர் பயமா ? அப்ப முதல்ல எலி பாஷாணத்த உனக்கு வச்சிட வேண்டியதுதான். அரை மணி நேரம் கழிச்சிதான் தண்ணி தருவேன். அதுவரை கிடந்து உருண்டு பொலம்பிரத நான் கண் குளிர பாக்கனும் அதான் என் ஆசை.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா