Tuesday, March 1, 2011

கல்யாண பெண்ணிற்கு மருதானி இடும் போது

மருதாணி என்றாலே எல்லா பெண்களுக்கும் பிடிக்கும்.
மருதணியை விரும்பாத பெண்களே கிடையாது.
சில பெண்களுக்கு ஒத்து கொள்வதில்லை அதற்காகவே சில பேர் பயந்து வைப்பதில்லை.
சில பேருக்கு மருதாணி வைத்தால் கை கால் இழுக்கிற மாதிரி இருக்கும், ஹச் ஹச் தும்மல் வரும், தொண்டை கட்டி கொள்ளும்.சளி பிடிக்கும். தலைவலி வந்துவிடும்.


க‌ல்யாண‌ பெண்ணிற்கு அல்ல‌து ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் ம‌ருதாணி இடும் போது
மருதாணி ரெடி மேட் கோன் என்றால் கையில் கடுகு எண்ணையை தேய்த்து விட்டு. உள்ளங்கையில் கொஞ்சம் தைலம் கழுத்து நரம்பு கிட்ட கொஞ்சம் தைலம், ஒவ்வொரு ஜாயிண்ட், கை மணீ கட்டு, முழஙகை ஜாயிண்ட்டில் எல்லாம் தடவி கொண்டு வையுங்கள். இப்ப‌டி த‌ட‌வி கொள்வ‌தால் ஜ‌ல‌தோஷ‌ம் பிடிப்ப‌து குறையும்.
மருதாணியை போடுங்கள், ஒரு மணி நேரம் போதும்.நைட் தூங்கும் போது வைத்து விட்டு கை வலிக்காம‌ இருக்க‌ ஒரு டார்க் கலர் தலையணை மீது கலர் டவல் அல்லது கலர் துணி விரித்து கையை வசதியாக வைத்துகொள்ளுங்கள்.

காய்ந்ததை எடுக்கும் போது உடனே தண்ணீர் போட்டு கழுவ கூடாது ஒரு பட்டர் நைஃபால் அப்படியே வழித்தெடுங்கள் கையை கழுவ வேண்டாம்.
அப்படியே கேஸ் அடுப்பை பற்ற வைத்து குளிர் காயவது போல் கையை காட்டவும்.
இப்ப மறுபடி கொஞ்சம் தைலம் + தேங்காய் எண்ணை தடவி கொள்ளுங்கள்.



மருதாணி வைப்பது பெண்களுக்கு மிகவும் ரொம்ப நல்ல நல்ல சுறு சுறுப்பு, நல்ல ஆக்டிவ், அதை பார்க்கும் போது சோகம் கூட மறைந்துவிடும்.நல்ல ஞாபக சக்தி கூட வரும்.

மாத‌ம் ஒரு முறை வைத்து கொள்வ‌து மிக‌வும் ந‌ல்ல‌து. ம‌ருதாணி அரைத்து வ‌டை த‌ட்டி காய‌ வைத்து கூட‌ தேங்காயய் எண்ணையில் போட்டு ஊற‌வைத்து த‌லைக்கு தின‌ம் தேய்க்க‌லாம். க‌ரு க‌ரு வென‌ முடி வ‌ள‌ரும்.

எல்லா டிப்ஸும் என் சொந்த கருத்து காப்பி அடிச்சி எங்கயாவது அனுப்பினீங்க
அம்புடுதேன் சொல்லிபுட்டேன்

படங்கள் எனக்கு முதலில் மெயிலில் வந்தது,
.
கைநகம் அழுகிவிட்டதா? நகசுத்தியா?

32 கருத்துகள்:

Akila said...

wow what a wonderful and useful information... also i love the design in the picture....

Regards,
akila

Anonymous said...

நானும் இந்த தைலம் matter கேள்விபட்டு இருக்குகேன்.

உங்க ப்ளாக் பக்கம் வந்தால் நிறைய குறிப்புகள் தெரிந்துகொள்ள முடிகிறது.

நன்றி.

Jaleela Kamal said...

காப்பி அடித்தது பற்றி கீற்றுக்கு மெயில் செய்த்துக்கு பதில்

"கீற்று ஆசிரியருக்கு இதுகுறித்து தெரியப்படுத்தியபோது, அவர் சொன்னது 'நளன் என்பவர்தான் கீற்றிற்கு சமையல் குறிப்புகள் அனுப்புகிறார். சமையல் குறிப்புகளுக்கு காப்பிரைட் பிரச்சினை இல்லை என்பதால், அவர் எங்கிருந்து எடுக்கிறார் என்பதை நாங்கள் இதுவரை சரிபார்க்கவில்லை... தவறுக்கு வருந்துகிறோம். இனி கவனமாக இருக்கிறோம்.' என்று சொன்னதோடு, எனது பெயரையும் சமையல் குறிப்பில் இணைத்துள்ளார்.

R. Gopi said...

எனக்கு சகோதரிகள் கிடையாது. நான்தான் கடைக்குட்டி. வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் எனக்கு மருதாணி போட்டு விடுவார் அம்மா. எனக்குத்தான் வெட்க வெட்கமாக இருக்கும். இந்தப் பதிவு பழைய நினைவுகளைக் கிளறி விட்டது:-)

Angel said...

நல்லா அழகான குறிப்புகள் ஜலீலா .பகிர்வுக்கு நன்றி

சீமான்கனி said...

நல்ல டிப்ஸ்கள் ஜலீக்கா...வருக்காலத்துல யூஸ் ஆகும்...நன்றிகள்...

அந்நியன் 2 said...

மருதாணி குறிப்பு நல்லா இருக்கு.

இந்தப் பதிவை யாரிடம் விற்பது என்று சொல்லுங்கக்கா நானும் கொஞ்சம் ட்ரை பண்றேன்...

விற்ப்பதற்கு.

Priya said...

ஹை, எனக்கு பிடித்த மருதாணி.. குறிப்புகளுக்கு மிக்க நன்றி.

Anisha Yunus said...

//அதை பார்க்கும் போது சோகம் கூட மறைந்துவிடும்.//

100% உண்மை ஜலீலாக்கா, எனக்கும் மருதாணி ரொம்ப பிடிக்கும். ஊருக்கு போனா வெச்சுக்குவேன். டிசைன் இல்லாவிட்டாலும் சிம்பிளா பழங்காலத்து டிசைனை வெச்சுக்கவும் ரொம்ப பிடிக்கும்... ஹ்ம்ம்... :((

Menaga Sathia said...

super designs!!

Asiya Omar said...

நல்ல டிப்ஸ்.ஜலீலா ஊரில் எங்க வீட்டில் மருதாணி உண்டு,பறிப்பவங்க அரைக்கும் பொழுதெல்லாம் கொஞ்சம் பாசமாக தருவாங்க,அதை சும்மா இட்லி தோசை மாதிரியும் கைக்கு தொப்பியும் போட்டு கொள்வேன்,இப்ப மகள் வந்த பின்பு அழகாக டிசைன் போடுறா.

ஜெய்லானி said...

//எல்லா டிப்ஸும் என் சொந்த கருத்து காப்பி அடிச்சி எங்கயாவது அனுப்பினீங்க
அம்புடுதேன் சொல்லிபுட்டேன்.//

வாயாலகூட சொல்லக்கூடாதா...???

வெய்யில் நேரம் ஆரம்பிக்குது.. தலைக்கு போட ஆரம்பிச்சிட வேண்டியதுதான் :-))

படம் அழகா இருக்கு நீங்க சுட்டதா..ச்சே...நீங்க போட்ட டிஸைனா...!! :-))

ஜெய்லானி said...

யக்காவ்..கல்யாண பெண்ணிற்கு மருதாணி இடும் போது அப்படின்னு தலைப்பு இருக்கே.. அப்போ இது மத்த வங்களுக்கு இல்லையா.. ஹி..ஹி... சும்மா ஒரு சந்தேகந்தான் :-))

Chitra said...

மருதாணி..... வச்சுக்க எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்..... சூப்பர்!
beautiful photos and useful tips. :-)

தூயவனின் அடிமை said...

எனக்கு ரொம்ப தூரம்.

Anonymous said...

//ம‌ருதாணி அரைத்து வ‌டை த‌ட்டி காய‌ வைத்து கூட‌ தேங்காயய் எண்ணையில் போட்டு ஊற‌வைத்து த‌லைக்கு தின‌ம் தேய்க்க‌லாம். க‌ரு க‌ரு வென‌ முடி வ‌ள‌ரும்.//

I should try this.

ADHI VENKAT said...

மருதாணி தகவல்கள் அழகு. நானும் தேங்காய் எண்ணெய் தடவுவது உண்டு. ஆனா தைலம் பற்றி இப்ப தான் கேள்விப்படறேன். கண்டிப்பா முயற்சி செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

நட்புடன் ஜமால் said...

noted with thanks :)

'பரிவை' சே.குமார் said...

wow...

சாந்தி மாரியப்பன் said...

சூப்பர் டிசைன்ஸ்.. கொஞ்சம் எலுமிச்சைச்சாற்றில் சர்க்கரை கலந்து வெச்சிக்கிட்டு, அதை மருதாணி டிசைன்களின் மேல் அவ்வப்போது பஞ்சின் உதவிகொண்டு ஒத்தியெடுக்கணும். இப்படிச்செய்வதால் சட்ன்னு காயாது, உதிர்ந்தும்போகாது.. நல்லா சிவக்கவும் செய்யும்..

நானும் தைலத்துக்காகவே மருதாணியை வீட்டுல வளர்த்தேன்.. மழை ஆரம்பிச்சப்புறம் மறுபடியும் வளர்க்க ஆரம்பிக்கணும்.

apsara-illam said...

சலாம் ஜலீலா அக்கா...,
மருதாணி டிப்ஸ் சூப்பர்.எங்க அக்கா தைலம் இல்லாம மருதாணி போடமாட்டாங்க...அதே மாதிரி கைய்யில் மருதாணி சிகப்பு இல்லாம இருக்கவும் மாட்டாங்க...அவ்வள்வு பிரியம் அவங்களுக்கு.
எனக்கு அந்த இண்ட்ரஸ்ட் எல்லாம் போச்சு அக்கா....
மருதாணி டிஸைன்ஸ் எல்லாம் அழகாக இருக்கு.

அன்புடன்,
அப்சரா.

Malar Gandhi said...

Beautiful pictures...me too love Marudhaani, thank you so much for the tips. Last year, when I visited India..brought 3 ready made cones:)

priyamudanprabu said...

Nice

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Wow...super tips...எனக்கு மருதாணி ரெம்ப ரெம்ப பிடிக்கும்... வாய்ப்பு கிடைக்கரப்பவெல்லாம் வெப்பேன்... நல்ல பதிவு...:)

Anisha Yunus said...

////ம‌ருதாணி அரைத்து வ‌டை த‌ட்டி காய‌ வைத்து கூட‌ தேங்காயய் எண்ணையில் போட்டு ஊற‌வைத்து த‌லைக்கு தின‌ம் தேய்க்க‌லாம். க‌ரு க‌ரு வென‌ முடி வ‌ள‌ரும்.//

I should try this.//

anaamika, athu mudi irukkaRavangaLukku sonnathu. ulle veliye rendu edaththilume illathavangalukku ille hi hi

Anonymous said...

ஹேய் அனுக்கா, சைட்ல என்ன வாருறீங்களா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சுனாமி பத்தி யாருக்கும் தெரியல்லேன்னு நினைக்கிறேன். பிழைச்சுப்போங்க. ஹி ஹி.

Mahi said...

ஜலீலாக்கா,டிப்செல்லாம் சூப்பர்! எனக்கு மருதாணி ரொம்ப பிடிக்கும். இப்படி கோன்ல டிஸைன் எல்லாம் போடத் தெரியாது. :)
என் கையில் மருதாணி வச்சதும் ஒருநாள் அழகா சிவப்பு கலர்ல இருக்கும்..அன்னிக்கு ஈவினிங்-கே கருப்பா மாற ஆரம்பிச்சிடும்.அடுத்த நாளெல்லாம் கையைப் பார்க்கவே பயமம்ம்ம்மா இருக்கும் ! 'உனக்கு பித்தம் தலைக்கேறிடுச்சு'-ன்னு இங்கே ஒருத்தர் என்னை கிண்டல் பண்ணுவார். :-|

மருதாணி கருப்பாகாம சிவப்பாவே இருக்க எதாச்சும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்க.

Jayanthy Kumaran said...

very interesting tips Jaleela...love d awesome mehandi clicks...noted d designs..
Tasty appetite

ஸாதிகா said...

அருமையான டிப்ஸ்கள் கூடவே நீங்கள் வரைந்த மருதானி டிசைன்களின் படங்களைப்போட்டு இருக்கலாம்.

Jaleela Kamal said...

நன்றி அகிலா

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி என்னால் பதில் போட முடியல,

CREATIVE KHADIJA said...

i love hina..very nice designs..

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா