Tuesday, July 26, 2011

ஃப்ரவுன் அரிசி இட்லி , சிவப்பு மிளகாய் சட்னி - brown rice idly with red chilly chutney



(உலகத்திலேயே உள்ள உணவு வகைகளில் லைட்டான ஆகாரம்இட்லி தான் எந்த உபாதையும் செய்யாது, எண்ணையில்லாத அயிட்டம், எல்லாவகையான் சட்னி வகைகளும், குழம்பு வகைகளும் இதுக்கு பொருந்தும்.)
ப்ரவுன் அரிசியில் செய்துள்ளதால் இன்னும் சத்து



ப்ரவுன் இட்லிக்கு

ப்ரவுன் ரைஸ் – 200 கிராம்
பச்சரிசி – 200 கிராம்
உளுந்து – 100 கிராம்
ஜவ்வரிசி – ஒரு மேசை கரண்டி
வெந்தயம் – அரை தேக்கரண்டி

செய்முறை
இரண்டு அரிசியுடன் ஜவ்வரிசி சேர்த்து , உளுந்துடன் வெந்தயம் சேர்த்து தனித்தனியாக 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
அரிசியை சற்று கொர கொரப்பாகவும்.உளுந்தை மையாகவும் அரைத்து ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு க்லவையை கலக்கி வைக்க்வும்.
8 மணி நேரம் புளிக்கவிடவும்/
பிறகு இட்லியாக வார்க்கவும்.



சிவப்பு மிளகாய் ,பொட்டு கடலை சட்னி

சிவப்பு மிளகாய் – 3
பொட்டு கடலை 50 கிராம்
தேங்காய் – 4 பத்தை
உப்பு சிறிது
பூண்டு – ஒரு பல்
வெங்கயாம் – அரை தேவைப்பட்டால்
தாளிக்க
எண்ணை – ஒரு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு -  அரை தேக்கரண்டி
கருவேப்பிலை – ஆறு இதழ்
நீட்டு மிளகாய் – ஒன்று

செய்முறை
சிவப்பு ( காஞ்ச மிளகாயை) லேசாக தீயில் சுட்டு கொள்ளவும்
அத்துடன் தேங்காய் பொட்டுகடலை சேர்த்து அரைக்கவும்.
கடைசியாக உப்பு, பூண்டு வெங்காயம் சேர்த்து அரைத்து வழிக்கவும்.
வழித்த மிக்சியில்  அரை கப் தண்ணீர் விட்டு கழுவிவைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கழுவி வைத்துள்ள தண்ணீரை ஊற்றி அடுப்பை அனைக்கவும்.
கட்டியாக அரைத்து வைத்துள்ள கலவையில் தாளித்த கலவையை ஊற்றி கலக்கி வைக்கவும்.





டிபன் பாக்ஸ்க்கு கொண்டு செல்ல இட்லியை நான்காக வெட்டி அதில் நல்ல இட்லி முழ்கும் அளவுக்கு சட்னியை ஊற்றவும், சாப்பிடும் போது சட்னி இட்லியில்  ஊறி அருமையாக இருக்கும்.

b

45 கருத்துகள்:

ஸாதிகா said...

இந்த முறையில் இட்லிவார்த்தால் சாஃப்டாக இருக்குமா?

Lifewithspices said...

i normally love to fill the box with chutney and soak idlies am a big fan of any chutney..these r so so good..

Mahi said...

நல்லா இருக்கு ஜலீலாக்கா! ப்ரவுன் ரைஸ்ல நான் இட்லி செய்ததில்ல,தோசைதான் செய்வேன்.சட்னியில் கொஞ்சம் புளியும் சேர்த்துப்பேன். தாளித்து தண்ணீரை ஊற்றி கலக்குவதும் புதுசா இருக்கு,அடுத்தமுறை செய்துபார்க்கணும்! :)

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஜலீலாக்கா வித்தியாசமான இட்லியோட களமிறங்கியிருக்கிறீங்க. எனக்கு ரவ்வை இட்லி தவிர வேறேதும் நல்லாவே வருவதில்லை. குறிப்புக்கள் செய்து பார்த்து தோத்துப்போய் இப்போ முயற்சிப்பதில்லை.

பொட்டுக்கடலை சட்னிக்காக வாங்குவேன், ஆனா சும்மாவே, நானே சாப்பிட்டுவிடுவேன் அவ்வ்வ்வ்வ்வ்:)).

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

குறிப்பு வித்தியாசமா இருக்குக்கா!!

நட்புடன் ஜமால் said...

டிபன் பாக்ஸ்க்கு கொண்டு செல்ல இட்லியை நான்காக வெட்டி அதில் நல்ல இட்லி முழ்கும் அளவுக்கு சட்னியை ஊற்றவும், சாப்பிடும் போது சட்னி இட்லியில் ஊறி அருமையாக இருக்கும்.]]


aaga aaga aaga!

GEETHA ACHAL said...

ரொம்ப நல்லா இருக்கு...நானும் அடிக்கடி ப்ரவுன்ரைஸ் இட்லி தான் செய்வது...உடலிற்கு நல்லது...

சட்னியுடன் இட்லி சேர்த்து சாப்பிட ரொம்ப பிடிக்கும்...

Prema said...

Very healthy recipe,thanks for sharing...

Thenammai Lakshmanan said...

கோதுமை ரவையில் இதுபோல் இட்லி செய்வேன் ஜலீலா..:)) ரெசிபி நல்லா இருக்கு சட்னிக்கு:)

கோமதி அரசு said...

ப்ரவுன் இட்லி செய்து பார்க்க வேண்டும் ஜலீலா.

சிவப்பு மிளகாய் சட்னி செய்வேன் மிளகாயை சுட்டது இல்லை.

வித்தியாசமாய் இருக்கிறது சிவப்பு மிளகாய் சட்னி,செய்து பார்க்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள்.

Jaleela Kamal said...

ஸாதிகா செம்ம ஷாப்ட்டா வரும்.

Jaleela Kamal said...

கல்பனா எனக்கு இட்லி தொட்டுக்க நல்ல இட்லியில் ஊறினால் தான் பிடிக்கும்.
கருத்து தெரிவித்தமைக்கு நன்றி

Jaleela Kamal said...

அதிரா இந்த முறையில் செய்து பாருங்கோ, உளுந்தை நல்ல மையா அரைத்து விட்டு அரிசி சிறி து கொர கொரப்பாக அரக்கனும்.பொட்டு கடலை சட்னி வீட்டில் எல்லோர்க்கும் பிடிக்கும்.

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம் ஆமீனா, குறிப்பு வித்தியாசமா அதான் சமையல் அட்டகாசம்.

Jaleela Kamal said...

ஆமா ஜமால் டிபனில் இட்லியுடன் சட்னி ஊறி சாப்பிட பிரமாதமாக இருக்கும்.

Jaleela Kamal said...

வாங்க கீதா ஆச்சால் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

thaks for u r comment prema

Jaleela Kamal said...

மகி இட்லி செய்து பாருங்கள்,

சட்னி தாளித்து அந்த சட்டியில் அப்படியே ஊற்றினால் சில நேரம் பசை போல் ஆகிடும், இப்படி செய்தால் ரொம்ப நல்ல இருக்கும்.

Jaleela Kamal said...

வாங்க தேனக்கா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

கோமதி அரசு மிளகாய் சுட்டு செய்வது என் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும்.

Menaga Sathia said...

ப்ரவுன் ரைஸ் இட்லியும்+சட்னியும் சூப்பர் காம்பினேஷன் அக்கா..

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா! ஹெல்தி இட்லி, அதுவும் சட்னியில் ஊறவைத்து... அருமை!

சம்பாலுக்குதான் மிளகாயை சுட்டு செய்வோம். சட்னிக்குமா? ஜலீலாக்கா சொல்லிட்டா ட்ரை பண்ணிப் பார்த்துட வேண்டியதுதான் ;)

Vimitha Durai said...

That looks so delicious and tempting.. Nice healthy combo...
Thanks for dropping by... U have a lovely space.. Happy to follow...

Unknown said...

சிவப்பு சட்னி கண்டிப்பாக செய்து பார்க்கணும். பிரவுன் ரைஸ்ன்னா நீங்க சிகப்பு சம்பா அரிசியை சொல்றீங்களா?
கேரளா ஸ்பெஷல் அரிசிதான அது?

Unknown said...

உங்களை இந்த தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரம் இருக்கும்போது தொடருங்கள்.

http://vaarthaichithirangal.blogspot.com/2011/07/blog-post_28.html

Unknown said...

Mudhal muraiya unga blog ku varren. Idly recipe romba nalla irukku. Naan idhu varaikum oru vatti kooda soft a idly panninathu illa. Unga recipe super.

Cheers,
Uma

M.R said...

இன்று தான் முதன் முதலாக தங்கள் தளம் வந்தேன் . வந்த முதல் நாளே ப்ரவுன் ரைஸ் இட்லி செய் முறை.அருமை எனது மனைவியிடம் தங்களின் தளம் பகிர்ந்து கொண்டேன். அருமையான தளம் .சுவையான சமையல் குறிப்புகள்.நன்றி

Torviewtoronto said...

delicious with the idly

dhakshina said...

ஜலீலா அக்கா! அப்பாடா உங்க ப்ளாகை பார்த்துட்டேன். நான் உங்க பரம ரசிகை உண்மையிலெயே.உங்கள ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கு பதிவு போட தான் அருசுவைக்கு சைன் இன் பண்ணினேன். ஆனா உங்கள அங்க காணூம்.பரவாயில்ல அதான் இங்க பார்த்துட்டென்ல? இப்ப கூட இத நீங்க பார்ப்பீங்களோ இல்லையோ தெரியல ஆனா உங்க லேட்டஸ்ட் பிரொன் இட்லி குறிப்பு பார்த்தேன். செய்து பார்த்துட்டு சொல்ரேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா. உங்க கறி உருளை சால்னா, ஆத்தூர் மிளகு கறி, பிரியாணி எல்லா டைப்பும் ,மீன் குழம்பு, இன்னும் நிறைய குறிப்புகளும் செய்து பார்த்து இருக்கேன். எல்லாமே சூப்பர். நன்றி அக்கா. என் கூடயும் பேசுங்க அக்கா.

தக்ஷிணா

சாந்தி மாரியப்பன் said...

சுவையான இட்லி, சட்னி..

ஜெய்லானி said...

இந்த டைப்பில வீட்டில செய்ததில்லை .டிரை பண்ண சொல்கிறேன் :-)

ஜெய்லானி said...

//பொட்டுக்கடலை சட்னிக்காக வாங்குவேன், ஆனா சும்மாவே, நானே சாப்பிட்டுவிடுவேன் அவ்வ்வ்வ்வ்வ்:)).//

அது சரி வீட்டுக்கு வீடு இப்படிதானா...!!! ஹி...ஹி.. நான் மட்டுதான் இப்படின்னுல்ல நினைச்சிகிட்டு இருந்தேன் :-))

Umm Mymoonah said...

Nalla combination, super healthy idli. Kalakeetinga poonga.

Jaleela Kamal said...

அன்பு தக்ஷிணா

என்னை தேடி இங்கு வந்தமைக்கு மிகுந்த சந்தோஷம். என் ரெசிபிகளை செய்து பார்த்து இங்கு வந்து சொன்னது அதை விட சந்தோஷம்,

// என் கூடயும் பேசுங்க அக்கா.//

கண்டிப்பா உங்களிடமும் பேசுவேன்.
கொஞ்சம் பிசியாக இருப்பதால் உட்னே கமெண்ட் போட முடியல

Jaleela Kamal said...

ஜிஜி தொடர் பதிவா அப்பா நான் தப்பிச்சேன்ன்னு நினைத்தேன், சமையல் குறீப்பு என்றால் கை நொடிக்கும் நேரத்தில் போட்டுடுவேன் இது பெரிய தேர்வாச்சே எப்படியும் இந்த வருடத்துக்குள் எழுதிடுறேன்.

Jaleela Kamal said...

ப்ரவுன் அரிசி சம்பா அரிசி இல்லை இங்கு பிலிப்பைனிகள் சாப்பாட்டுக்கே இந்த ப்ரவுன் அரிசி தான் பயன் படுத்துறாஙக்.

Jaleela Kamal said...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மேனகா

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம்
அஸ்மா
சட்னி வகைகளுக்கு உம்மா வீட்டில் சுட்டு தான் அரைப்பார்கள் , வாப்பாக்கு அப்படி தான் பிடிக்கும்.

Jaleela Kamal said...

விமிதா வாங்க உஙக்ள் பாராட்டுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

உமா வாங்க உஙக்ள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீ

Jaleela Kamal said...

வாஙக் மிஸ்டர் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றீ

Jaleela Kamal said...

thanks for your comment torveiw

Jaleela Kamal said...

மிக்க நன்றி அமைதிச்சாரல்

Jaleela Kamal said...

ஜெய்லானி எல்லோருக்கும் பொட்டுகடலைய சும்மா சாப்பிட பிடிக்கும், உங்கள் தங்கமணி கிட்ட சொல்லி செய்து பார்க்கசொல்லுங்கள்.

Jaleela Kamal said...

உங்கள் பாராட்டுக்குமிக்க நன்றி உம்மு மைமுனா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா