Saturday, December 10, 2011

மேத்தி ரொட்டி, காலி பிளவர் பீஸ் குருமா- methi rotti & cauliflower peas kurma







மேத்தி ரொட்டி காலிப்ளவ்ர் பீஸ் குருமா




மேத்தி ரொட்டிக்கு தேவையானவை

கோதுமைமாவு – அரை கிலோ

எண்ணை – 1 மேசைகரண்டி

உப்பு – முக்கால் தேக்கரண்டி

வெந்தயகீரை(மேத்தி) – ஒரு கட்டு

எண்ணை – சுட தேவையான அளவு.

கரம் மசாலா பொடி – கால் தேக்கரண்டி

மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி

காலிப்ளவர் பீஸ் குருமாவுக்கு.

காலிப்ளவர் – கால் கிலோ

பட்டாணி – 100 கிராம்

வெங்காயம் தக்காளி – தலா ஒன்று

இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி

கொத்துமல்லி ,புதினா – சிறிது

தேங்காய் பவுடர் – ஒரு மேசை கரண்டி

மிள்காய் தூள் – ஒரு தேக்க்ரண்டி

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

உப்பு தேவைக்கு

முந்திரி – 5

தாளிக்க

எண்ணை – நெய் – 1 மேசை கரண்டி

பட்டை,ஏலம், கிராம்பு – தலா ஒன்று

பிரியாணி இலை – ஒன்று சிறியது.



செய்முறை \

வெந்தயகீரையை அலசி ஆய்ந்து அத்துடன் கோதுமை மாவு, கரம் மசாலா பொடி ,மிளகாய் தூள்,உப்பு,எண்ணை கலந்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.



குருமாவுக்கு

காலிப்ளவர் பூவை தனித்தனியாக பிரித்தெடுத்து உப்பு கலந்த வெண்ணீரில் இரண்டு நிமிடம் ஊறவைத்து கழுவி எடுக்கவும்.



எண்ணையை காயவைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம் அரிந்து சேர்த்து வதக்கவும், வெங்காயம்கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சைவாடை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்க்கவும்.

தக்காளி மடங்கியதும் மசாலாவகைகள், உப்பு கலந்து காலிப்ளவரியையும் பட்டாணியையும் சேர்த்து கிளறி சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

கடைசியாக முந்திரியை பொடித்து அத்துடன் தேஙகாய் பவுடர் சேர்த்து மிக்சியில் அரைத்து குருமாவில் சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்.


ரொட்டிமாவை 10 ரொட்டிகளாக பிரித்து சதுரவடிவ்மாக திரட்டி மாவில் எண்ணை தடவி குறுக்கும் நெடுக்குமாய் சதுரவடிவாக மடித்து மீண்டும் திரட்டி ரொட்டிகளாக சுட்டெடுக்கவும்.

சுவையான மேத்தி ரொட்டியும், காலிப்ளவர் பீஸ் குருமா ரெடி.


24 கருத்துகள்:

Vijiskitchencreations said...

நல்ல காம்பினேஷன்+என்னோட பேவரிட் ஜலீ.

நீண்ட நாட்களுக்கு பின் இங்கு வர முடிந்தது. நான் மெயில் அனுப்புகிறேன்.

Aruna Manikandan said...

delicious combo akka....

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

சூப்பர் ஜலீலாக்கா....

நீங்க புதுத்தலைப்பு போட்டால் மெயிலில் வரும் என இருந்தேன், ஆனா அங்கும் இல்லை... என்னலும் கண்டுபிடிக்க முடியவில்லை:(.

Mahi said...

சூப்பரா இருக்கு ஜலீலாக்கா!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை!
பகிர்வுக்கு நன்றி சகோதரி!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

ஸாதிகா said...

அருமையான ரொட்டி,அட்டகாசமான குருமா..காம்பினேஷன் சூப்பர்ப்.

ஹேமா said...

சூப்பரா இருக்கும்போல இருக்கே
ஜலீலா !

Unknown said...

சுவையாக இருக்கு

Asiya Omar said...

அருமை ஜலீலா.வாழ்த்துக்கள்.

Priya Suresh said...

Super combination yennaku romba pidichathu..

ஸ்ரீராம். said...

செய்து பார்க்கும் ஆவல் வருகிறது. நன்றி.

Vardhini said...

Nice combo. Kurma sounds yummy. Thx for linking to the event.

Vardhini
Event: Sinful Delights
Event: Stuffed Paratha

Jaleela Kamal said...

வாங்க விஜி எப்ப்டி இருக்கீஙக ரொம்ப நாட்க்ள்க்கு பிறகு , உட்ல நில்ை எப்படி இருக்கு, நான்உங்கள் மெயிலுக்காகவெயிட்டிங்/

Jaleela Kamal said...

மிக நன்ி அருனா

Jaleela Kamal said...

என்ன செய்வது அதிரா என்னபிரச்சனை எனதெரியல அதிரா.

தேடி வந்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி மகி

Jaleela Kamal said...

உங்கள்தொடர் ஊக்கத்துக்கு மிக்க ந்னறி திணடுக்கல் தன்பாலன்.முடிந்தபோது உங்கள் பதிவு பகக்ம் வ்ர்ுகிரேன்

Jaleela Kamal said...

ஆமாம் ஸாதிகா அக்கா இது அருமையான காம்பினஷன். கருத்த்க்க்ுமிக்க நன்றி

Jaleela Kamal said...

்வாங்கஹேமா வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

மிக்க நன்றி சிநேகிதி

மிக்க நன்றி ஆசியா

Jaleela Kamal said...

கருத்து தெரிவிதட்தமைக்கு் மிக்க நன்றி பிரியா எல்லோருக்கும் பி்டித்த காம்பினேஷன் இது

Jaleela Kamal said...

ஸ்ரீராம் செய்து பார்த்து சொல்லுங்கள்

Jaleela Kamal said...

thank you for comment vardini

மாதேவி said...

ரொட்டியும் குருமாவும் என்றால் கேட்கவா வேண்டும். எங்கள் வீட்டிலும் பிடித்த உணவு. அருமை ஜலீலா.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா