Sunday, January 15, 2012

உளுந்து வடை - urad dhal vadai


தமிழ் நாட்டு மக்களு எந்த ஹோட்டலுக்கு போனாலும் உளுந்து வடை ஆர்டர் செய்யாதவர்களே கிடையாது. வீட்டிலும் சுவைபட வித விதமாக தயாரிக்கலாம்.  உளுந்து வடை , தயிர் வடை, ரச வடை, சாம்பார் வடை, கீரை வடை, கேரட் வடை, மிளகு வடை இன்னும் பல பல விதங்களில் தயாரிக்கலாம்.
பொங்கல் என்றால் அதற்கு கூட துணைக்கு வடை இல்லாமல் இருக்காது.




தேவையானவை

 உளுந்து கால் கிலோ
வெங்காயம் – 100 கிராம்
பச்சமிளகாய் – 3
கருவேப்பிலை – 3 ஆர்க்
மிளகு – அரை தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
கொத்துமல்லி தழை - சிறிது
இஞ்சி – சிறிய துண்டு


செய்முறை

 
உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு மையாக அரைக்கவும்.
வெங்காயம் ,இஞ்சி ,பச்சமிளகாயை பொடியாக அரிந்து வைக்கவும்.
கொத்துமல்லி கருவேப்பிலையை நன்கு மண்ணில்லாமல் கழுவி பொடியாக அரிந்து வைக்கவும்.
அரைத்த மாவில் வெங்காயம் பச்சமிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, உப்பு,இஞ்சி,மிளகு அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.
ஒரு வாயக்ன்ற வானலியில் எண்ணையை காயவைத்து மிதமான சூட்டில் வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.
சட்னி சாம்பாருடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
எனக்கு சர்க்கரை தொட்டு சாப்பிட ரொம்ப பிடிக்கும்.

.குறிப்பு:

உளுந்து வடையில் கீரைவகைகள், கேரட் போன்றவைகளை பொடியாக அரிந்து துருவி சேர்த்து செய்தால் மிகவும் ஆரோக்கியமான் உணவாக உண்ணலாம், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.







அரைத்த உளுத்தமாவில் பாலக் கீரை சேர்த்து செய்தால் குழந்தைகளுக்கு ஈசியாக கீரை உணவை சேர்த்து விடலாம்.

கேரட் வடை




உளுத்தமாவுடன் மற்ற பொருட்கள் ஏதும் சேர்க்காமல். பச்சமிளகாய் சேர்த்து அரைத்து கேரட் மட்டும் துருவி சேர்த்தால் பிள்ளைகளுக்கு காய் கள் கொடுத்தமாதிரியும் இருக்கும். பள்ளிக்கும் கொடுத்தனுப்பலாம் ஈசியாக சாப்பிடுவார்கள்.




கிட்ஸ் கலர் புல் தயிர் வடை





பொங்கல் , உளுந்து வடை , புதினா சட்னி, சாம்பார்.


கீரை வடை பொட்டுகடலை சட்னி








மங்கையர்உலகம் ஜனவரி மாத போட்டிக்குறிப்புக்கு. - தமிழ் நாட்டு பாரம்பரிய சமையல் உளுந்து வடை


உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

மழலை உலகம் மகத்தானது - 1
அடுத்து அடுத்து தொடர்கள் முடிந்த போது எழுதுகிறேன்...

எல்லாரும் கரும்பு மென்று பல்லை கிளீன் பண்ணிக்கங்க

23 கருத்துகள்:

கோமதி அரசு said...

ஜலீலா, வித்தியாசமாக சர்க்கரையுடன் வடை சாப்பிட பிடிக்குதே உங்களுக்கு!

மங்கையர் மலரில் இடம் பெற்றதுக்கு வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

மெத்து மெத்து என்ற அருமையான வடை.மல்லி சட்னியில் தோய்த்து சாப்பிடலாம்.

Asiya Omar said...

உளுந்து வடை இப்ப சுட்ட மாதிரி அப்படியொரு பார்க்க சூப்பர்.நல்ல குறிப்பு.

Anonymous said...

உங்களின் இந்த குறிப்பு நமது மங்கையர் உலகம் வலைப்பூவில் இணைக்கப்பட்டுள்ளது.. நன்றி

Unknown said...

பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு அக்கா.. கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்குமே..

Chitra said...

moru moru vadai. super. thayir vada class aa irukku :)

Priya Suresh said...

Yennoda most fav vada,superaa irruku..

ஹேமா said...

வடை வடை வாயூறுது !

Vikis Kitchen said...

Superb vadai. Looks delicious akka.

Umm Mymoonah said...

Migavum arumaiyaaga irukudu,kandipaaga en kids ku try panraen.

vanathy said...

super vadai. Nice phots.

Jaleela Kamal said...

ஆமாம் கோமதி அக்கா எனக்கு சர்கக்ரையுடன் தொட்டு சாப்பிட ரொம்ப ரொம்ப பிடிக்கும்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஆமாம் ஸாதிகா அக்கா வடை பஜ்ஜி அயிட்டங்கள் எனக்கு சூப்பராக வரும்
பஜ்ஜிக்கு பொட்டுகடலை சட்னி நல்ல இருக்கும்,.
உளுந்து வடைக்கு புதினா சட்னி நல்ல இருக்கும்.
வருகைக்கு மிக்க நன்றி..

Jaleela Kamal said...

ஆமாம் ஆசியா எனக்கே எப்ப இந்த போட்டோ பார்த்தாலும் உடனே மறுபடி சுடனும் போல இருக்கும்

Jaleela Kamal said...

மங்கையர் உலகம் மிக்க நன்றி

Jaleela Kamal said...

பாயிஜா ஆமாம் கொத்துமல்லி சட்னியுடனும் நல்ல இருக்கும்

Jaleela Kamal said...

வாங்க சித்ரா வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

கருத்துக்கு மிக்க நன்றீ பிரியா இது நம்ம தமிழ் நாட்டில் எல்லோருடைய பேவரிட் டும் கண்டிப்பாக உளுந்து வடையாக தான் இருக்கும்

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி ஹேமா,வாயூறுதா உடனே செய்து சாப்பிடுங்கள்

Jaleela Kamal said...

மிக்க நன்றி விக்கி

Jaleela Kamal said...

ஆயிஷா உங்கள் பிள்ளைகளுக்கு செய்து கொடுங்கள், வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்தது மிகுந்த சந்தோஷம் வானதி

Avainayagan said...

"கலர் புல் தயிர் வடை" படம் அருமையாக இருக்கிறது.சில ஓட்டல்களில் வடையை தயிரில் போட்டுக் கொடுத்தால் அதுதான் தயிர் வடை என்கிறார்கள். வடை தயிரில் நன்றாக ஊரி இருக்கவேண்டாமா?
இனி அதையும் கற்றுத்தர வேண்டும் போலிருக்கிறது
உங்கள் குறிப்புகள் அருமை

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா