Saturday, September 22, 2012

பாலக் ஹமூஸ் - Palak Hamuus



     பாலக் ஹமூஸ்

தேவையானவை

பாலக் கீரை - அரை கப்
வெங்காயம் - மீடியம் சைஸ் - 1
வெள்ளை மிளகு தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி (தேவைக்கு)
Del Monte Chickpeas - டெல் மாண்டோ  கொண்டைகடலை - 25 கிராம் (25gram)
லெமன் ஜூஸ் - ஒரு மேசை கரண்டி
வறுத்த வெள்ளை எள் - தேக்கரண்டி
பூண்டு - ஒரு சிறிய பல்
ஆலிவ் ஆயில் - தேவைக்கு




செய்முறை


பாலக் கீரையை சுத்தம் செய்து பூண்டுவெங்கயாம் வேகவைத்த கொண்டை கடலை சேர்த்து வதக்கவும்.மிக்சியில் முதலில் வெள்ளை எள்ளை பொடித்து கொண்டு அதில் வதக்கியவறறை சேர்த்து அரைக்கவும்.உப்புமிளகு தூள் லெமன் ஜூஸ் கலக்கி பவுளில் ஊற்றவும்.
மேலே ஆலிவ் ஆயில் ஊற்றி பரிமாறவும்.


ஹமூஸ் அரபு நாடுகளில் குபூஸ் ரொட்டிநான் அயிட்டங்களுக்கு ஏற்ற சைட் டிஷ். 

பாலக் சேர்த்தது என் ஐடியா.கீரை சேர்ப்பதால் சத்து அதிகம்,சாண்ட்விச்களுக்கும் ஏற்ற ஸ்ப்ரெட். குழந்தைகளுக்கு நல்லது 




Linking to Del Monte Blogger Recipe Carnival and worldfoody

4 கருத்துகள்:

Avargal Unmaigal said...



ஜலீலா மேடம், மசாலா மிக்ஸ் அருமை, எனது பதிவை படித்தது அல்லாமலும் எனது தளத்தை அறிமுகம் செய்து வைத்ததற்கு மனமார்ந்த நன்றி. வலைதளத்தில் பதிவுகல் இடுவது என்பது மிக எளிது ஆனால் வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்து ஒவ்வோரு நாளும் பலரை அறிமுகப்படுத்தி பதிவு இடுவது என்பது மிக கடினம். அதையும் நீங்கள் மிக அழகாக செய்திருக்கிறிர்கள் என்பதை நினைக்கும் போது மனம் மகிழ்கிறது. உங்களது முயற்சிக்கும் உழைப்புக்கும் தலை வணங்கி வாழ்த்துகிறேன். என்றென்றும் வாழ்க வளமுடன்

Asiya Omar said...

அருமை.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

அவர்கள் உண்மைகள் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

மிக்க நன்றி ஆசியா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா