Saturday, February 23, 2013

ஸ்ட்ராபெர்ரி பிஸ்தா கேக் - Strawberry Pista Cake




ஸ்ட்ராபெர்ரியை விரும்பாத குழந்தைகளே கிடையாது. பழங்களிலேயே எல்லா குழந்தைகளின் விருப்பமான பழ ஸ்ட்ராபெர்ரி பழம் தான். கொஞ்சமாக இப்படி செய்து குழந்தைகளுக்கு காலை உணவுக்கோ பள்ளிக்கோ கொடுத்தனுப்பலாம்.


தேவையானவை


மைதா – 3 மேசை கரண்டி
சர்க்கரை – 3 மேசை கரண்டி
பேக்கிங் பவுடர் – ½ தேக்க்ரண்டி
இட்லி சோடா – ¼ தேக்கரண்டி
முட்டை – ஒன்றில் பாதி
பால் – 1 மேசை கரண்டி
ரோஸ் எசன்ஸ் – 1 துளி
பிஸ்தா ப்ளேக்ஸ் – 1 மேசைகரண்டி
நறுக்கிய ஸ்ட்ரா பெர்ரிபழம்  - 3 தேக்கரண்டி

செய்முறை

மைதா பேக்கிங் பவுடர், இட்லி சோடா வை சலித்து கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரையையும் பட்டரையும் சேர்த்து நன்கு கிரீம் போல அடித்து கலக்கவும்.
முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து சர்க்கரை கலவையில் கலக்கவும்.
 மைதா கலவையை சிறிது சிறிதாக தூவி கலக்கி ரோஸ் எசன்ஸ் மற்றும் பாலை சேர்க்கவும்.
கடைசியாக பிஸ்தா பிலேக்ஸ் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சேர்த்து கலக்கி மைக்ரோவேவ் பவுளில் 5 நிமிடம் வைத்து எடுக்கவும.


ஆறியதும் துண்டுகளாக போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

Serves – 2 kids
Preparation Time: 7 min
Cooking time: 5 min


Linking to Faiza's Passion on plate , priya's valentine;s day recipe contest


6 கருத்துகள்:

Unknown said...

எனக்கும் பிடிக்கும்.. அப்ப நானும் குழந்தை தானே.. ஆஹா.. சூப்பராக இருக்கு அக்கா.. எனது ஈவெண்டுக்கு லிக் தந்தமைக்கு நன்றி அக்கா

Jaleela Kamal said...

பாயிஜா இங்க குழந்தை என்பது என்னை சொன்னே, ஹிஹி
இதை நானும் என் பையன் ஹனீபும் தான் சாப்பிட்டோம்

Priya Suresh said...

Super cake, strawberry and pista combo super.

ஸாதிகா said...

எனக்கு இந்த கேக் மிகவும் பிடிக்கும் ஜலி.அருமையாக வந்திருக்கு.

Asiya Omar said...

சூப்பர் ஜலீலா.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

சூப்பர் கேக்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா