Tweet | ||||||
Friday, March 7, 2014
கிட்ஸ் கலர்ஃபுல் தயிர் வடை - Kids Colourful Dahi Vada
வடையை எண்ணையில் பொரித்து சாப்பிடுவதை விட இப்படி தயிர் வடையாய் சாப்பிட்டால் ஒரு கம்பிலீட் மீலாக பில்லிங்காக இருக்கும்.
தயிர் வடை குறிப்பு பெரியவர்களுக்காக போட்டு இருந்தேன். குழந்தைகளுக்கு அவர்களுக்கு ஏற்றார் போல் கலர் ஃபுல்லாகவும் அதே நேரம் வடை போடும் பச்ச மிளகாய் இஞ்சி எதுவும் வாயில் தட்டாமல் சுலபமாக சாப்பிட இந்த முறையில் செய்து கொடுக்கலாம்.
Kids Colourful Dahi Vada
வடைக்கு
உளுந்து பருப்பு = அரை டம்ளர்
உப்பு = கால் தேக்கரண்டி
இஞ்சி ஒரு சிறிய துண்டு
பச்ச மிளகாய் = ஒன்று
ஆலிவ் ஆயில் = அரை தேக்கரண்டி
தயிர் தாளிக்க
ஒரு கப் = தயிர்
பால் = சிறிது
எண்ணை அரை தேக்கரண்டி
கடுகு = அரை தேக்கரண்டி
கருவேப்பிலை = சிறிது
பெருங்காயம் = ஒரு பின்ச்
மோர் = வடை தோய்க்க
அலங்கரிக்க
கலர் புல் = காரா பூந்தி (தேவைக்கு)
வேர்கடலை = சிறிது
வருத்த முந்திரி = (தேவை பட்டால்)
செய்முறை
1. உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஊறிய உளுந்தை தண்ணீரை வடித்து அதில் உப்பு, ஆலிவ் ஆயில்,இஞ்சி , பச்ச மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். ஆலிவ் ஆயில் சேர்ப்பதால் ஈசியாக அரையும்
3. அரைத்த மாவை எண்ணையை காயவைத்து சிறிய ஒரு ரூபாய் காயின் அளவிற்கு குட்டி குட்டி மினி வடைகளாக தட்டி போடவும்.
4. வடைகளை திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
5.சூடான வடைகளை எடுத்து மோரில் நனைக்கவும்.
6.தனியாக சட்டியில் எண்ணை ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து தயிர் நன்கு கலக்கி சிறிது பால் சேர்த்து கொள்ளவும்.தேவைக்கு உப்பு சேர்த்து கொள்ளவும்.மோரில் நனைத்த வடைகளை தாளித்த தயிர் கலவையில் சேர்க்கவும்.
7.சிறிய கிண்ணத்தில் இரண்டு இரண்டு வடைகளாக வைத்து அதில் வேர்கடலை, கேரட், கலர் ஃபுல் காரா பூந்தியை தூவி பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
குறிப்பு
இந்த கலருக்கே உங்கள் குழந்தைகள் நல்ல சாப்பிடுவார்கள்.நீங்களும் அடிக்கடி செய்ய வேண்டி வரும். பெரியவர்களுக்காக இருந்தால் நலல் காரம் தேவைக்கு சேர்த்து தாளிக்கும் போது சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து கொத்துமல்லி தூவி சாப்பிடவும்.கோடைக்கு ஏற்ற குளு குளு கிட்ஸ் கலர் ஃபுல் தயிர் வடை ரெடி.இது நோன்பு காலத்திலும் செய்து சாப்பிடலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
6 கருத்துகள்:
அடடா... "தக தக" என தயிரிலே ஜொலிக்குதே...! ஹிஹி...
வாழ்த்துக்கள்...
சர்வதேச பெண்கள் தினத்திற்கு என்ன செய்து தரப் போறீங்க சகோதரி...?
பார்க்க செம ஜோரா இருக்குங்க ஜலீலா!
வாவ்... சூப்பர்...
அருமை. மகளிர்தினவாழ்த்துகள்!
கலர்ஃபுல் தயிர் வடை சூப்பர்ப்!
பார்க்கவே ஜோரா இருக்கு...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா