Saturday, August 29, 2009

உளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை







உளுந்து வடை டிப்ஸ்


1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும்.
இடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள் செய்வார்கள், சிலருக்கு வடை , கருப்பு உளுந்து சுண்டல் தவிர வேறு எதுவும் பிடிக்காது.அதற்கு இப்படி வடையாக செய்து கொடுக்கலாம் (இடுப்பெலும்பு பலம் பெற என்பதைதான் விழுந்து போன இடுப்பையும் பலப்படுத்தும் என்றேன்)
காலை டிபனுக்கு அதில் மிளகு தட்டி போட்டு, இஞ்சி,பச்சமிளகாய் சேர்த்து வடை செய்து அதற்கு புதினா துவையலும்,குழந்தைகளுக்கு சர்க்கரையும் தொட்டு சாப்பிட்டால் ரொம்ப சூப்பர். வயிறும் திம்முன்னு ஆகிடும்.
விழுந்து போன இடுப்பையும் தூக்கி நிறுத்தும் உளுந்து.


2. உளுந்து வடைக்கு அரைக்கும் போது கலவை தண்ணியாக போய் விட்டால் பொரிக்கும் போது அதிக எண்ணை குடிக்கும்.


3. உளுந்து வடைக்கு அரைக்கும் போது கொஞ்சமா தண்ணீர் தெளித்து அரைக்கனும், மிக்சி பிளேட் நடுவில் சிறிது எண்ணை விட்டால் சிக்காமல் அரையும்.


4. அரைக்கும் போது அப்ப ஒரு கத்தி கொண்டு வழித்து விட்டு அரைக்கலாம்.
ஐஸ் வாட்டரில் ஊறவைத்தால் மாவு நல்ல காணும்.


5. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது பச்சமிளகாய், இஞ்சியை அரைத்து விட்டால் காரம் வாயில் உரைக்காது, அவர்களுக்கு சிறிது துருவிய கேரட் (அ) பீட்ரூட் கலந்து சுட்டு கொடுக்கலாம்.


6.பொடியாக‌ கீரையும் அரிந்து போட்டு கீரை வ‌டையாக‌ சுட‌லாம்.


7.ந‌ல்ல‌ பெரிய‌தாக ஹோட்ட‌ல் போல் வ‌ர‌வேண்டும் என்றால் சிறிது ஈஸ்ட் ஊறவைத்து சேர்த்து பொரிக்க‌லாம்.


8. வ‌டைக்கு அரைத்து விட்டு அந்த‌ மிக்சியை அப்ப‌டியே வைத்து விட்டால் காய்ந்து மிக்சியில் ஒட்டி கொள்ளும். ஆகையால் அரைத்த‌ உட‌னே சிறிது த‌ண்ணீர் ஊற்றி சுழ‌ற்றி அரைத்து விட்டால் சுத்த‌மாக‌ க‌ழுவி எடுத்த‌து போல் ஆகிவிடும்.


9.பூபெய்திய‌ பெண்க‌ளுக்கு உளுந்து வ‌டை, உளுந்து சுண்ட‌ல், உளுந்து க‌ளி, உளுந்து அடை, உளுந்து பால், உளுந்து வட்லாப்பம் என்று செய்து கொடுக்க‌லாம்.


10. உடல் சூட்டை தணிக்க தயிர் வடை செய்தும் சாப்பிடலாம்.



11.குழ‌ந்தைக‌ளுக்கு மினி த‌யிர் வ‌டை செய்தும் கொடுக்க‌லாம்.


கிட்ஸ் கலர் புல் தயிர் வடை










வடைக்கு



உளுந்து பருப்பு =‍ அரை டம்ளர்
உப்பு = கால் தேக்கரண்டி
இஞ்சி ஒரு சிறிய‌ துண்டு
ப‌ச்ச‌ மிளகாய் = ஒன்று
ஆலிவ் ஆயில் ‍ = அரை தேக்க‌ர‌ண்டி


த‌யிர் தாளிக்க‌



ஒரு க‌ப் = த‌யிர்
பால் ‍ = சிறிது
எண்ணை ‍ அரை தேக்க‌ர‌ண்டி
க‌டுகு = அரை தேக்க‌ர‌ண்டி
க‌ருவேப்பிலை = சிறிது
பெருங்காய‌ம் = ஒரு பின்ச்
மோர் = வ‌டை தோய்க்க‌


அல‌ங்க‌ரிக்க‌



க‌ல‌ர் புல் = காரா பூந்தி (தேவைக்கு)
வேர்க‌ட‌லை = சிறிது
வ‌ருத்த‌ முந்திரி = (தேவை ப‌ட்டால்)
கேர‌ட் ‍ ‍= அரை துண்டு

செய்முறை

1. உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

2. ஊறிய உளுந்தை தண்ணீரை வடித்து அதில் உப்பு, ஆலிவ் ஆயில்,இஞ்சி , பச்ச மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். ஆலிவ் ஆயில் சேர்ப்பதால் ஈசியாக அரையும்

3. அரைத்த மாவை எண்ணையை காயவைத்து சிறிய ஒரு ரூபாய் காயின் அள‌விற்கு குட்டி குட்டி மினி வடைகளாக தட்டி போடவும்.

4. வடைகளை திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.



5.சூடான வடைகளை எடுத்து மோரில் நனைக்கவும்.


6.தனியாக சட்டியில் எண்ணை ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து தயிர் நன்கு கலக்கி சிறிது பால் சேர்த்து கொள்ளவும்.தேவைக்கு உப்பு சேர்த்து கொள்ளவும்.மோரில் ந‌னைத்த‌ வ‌டைக‌ளை தாளித்த‌ த‌யிர் க‌ல‌வையில் சேர்க்கவும்.


7.சிறிய கிண்ணத்தில் இரண்டு இரண்டு வடைகளாக வைத்து அதில் வேர்கடலை, கேரட், கலர் ஃபுல் காரா பூந்தியை தூவி பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்கவும்.



குறிப்பு



இந்த கலருக்கே உங்கள் குழந்தைகள் நல்ல சாப்பிடுவார்கள்.நீங்களும் அடிக்கடி செய்ய வேண்டி வரும். பெரிய‌வ‌ர்களுக்காக‌ இருந்தால் ந‌ல‌ல் கார‌ம் தேவைக்கு சேர்த்து தாளிக்கும் போது சின்ன‌ வெங்காயம் சேர்த்து தாளித்து கொத்தும‌ல்லி தூவி சாப்பிட‌வும்.கோடைக்கு ஏற்ற‌ குளு குளு கிட்ஸ் க‌ல‌ர் ஃபுல் த‌யிர் வ‌டை ரெடி.இது நோன்பு கால‌த்திலும் செய்து சாப்பிட‌லாம்.

21 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

தயிர் வடை கலர்ஃபுல்லா இருக்கு. உளுந்து வட்லாப்பம் செய்முறை கொஞ்சம் சொல்லுங்க சகோதரி.

நட்புடன் ஜமால் said...

பருப்பு வடைப்பற்றி போடுங்கோ அக்கா

எனக்கு ரொம்ப பிடித்தது அது தான்

அதே போல் வாழைப்பூ வடையும்.

மின்னுது மின்னல் said...

வித்தியாசமா இருக்கு
செய்து பார்க்கலாம்

Menaga Sathia said...

வடை டிப்ஸ் அருமை!!

dharshini said...

நேற்று வந்து பார்தேன் நான்வெஜ் போட்டிருந்தீங்க... சொல்லாமலே எஸ்கேப் ஆயிட்டேன்... வடை இன்று ஈவ்னிங் டிஃபனுக்கு எடுத்துக்கறேன்..
சுடச் சுடச் ஃபோட்டோ எடுத்துட்டீங்களா?! :)

Unknown said...

அக்கா தயிர் வடை எனக்கு மிகவும் பிடித்திருக்கு. செய்து பார்க்கிறேன்

குறை ஒன்றும் இல்லை !!! said...

//விழுந்து போன இடுப்பையும் தூக்கி நிறுத்தும் உளுந்து (அதை வடையான செய்து சாப்பிடலாம்). //

புரியலேங்க.. யார் இடுப்ப எடுத்து வடை தட்டணும்?

சீமான்கனி said...

கலர் புல் தயிர் வடை...
வித்யாசமா இருக்கு அக்கா....
நன்றி...

Jaleela Kamal said...

ஆஹா கவுண்டர் கிட்ட மாட்டிக்கிட்டேனா அது இரண்டு குறிப்பு, போஸ்ட் பண்ணும் போது எரர் வந்ததால் அப்படியே பப்ளிஷ் பண்ணிட்டேன் இதோ மாத்திட்டு வரேன்.நினைச்சேன் இப்படி எடக்கு மடக்கு வருமேன்னு

Jaleela Kamal said...

நவாஸ் கருத்துக்கு மிக்க நன்றி, உளுந்து வட்லாப்பம், முட்டை வட்லாப்பம் மாதிரி செய்வார்கள், அது முன்பு ஒருத்தங்க செய்து கொடுத்தார்கள், நான் இன்ன்ம் செய்யல செய்து பார்த்தால் குறிப்பு உடனே போடுகிறேன்.

Jaleela Kamal said...

நட்புடன் ஜமால் பருப்பு வடை தானே நோன்பில் பருப்பு வடை டேன் வரும் போது கன்டிப்பா போடுகிறேன், ரசம் சாதத்திற்கு வெரும் பருப்பு வடை போதும். வாழை பூவும் முடிந்த போது போட்டு விடுகிறேன்.
தவறாமல் கருத்து தெரிவித்து வருவதற்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

மின்னுவது மின்னல் வித்தியாசமா இருக்கா எப்படி இருந்தது என்று செய்து பார்த்து சொல்லுங்கள்

Jaleela Kamal said...

பாயிஜா இந்த தயிர் வடை என் பெரிய பையனுக்காக சம்மரிலும், நோன்பு காலத்திலும் செய்வேன், ஆனால் இப்ப அவன் இங்கு இல்லை, காலேஜில் இருகிறார். அதான் தினம் கவலை பையன் என்ன சாப்பிட்டான் தெரியலையே என்று

Jaleela Kamal said...

ராஜ் இப்ப பாருங்கள் புரியும் என்று நினைக்கிறேன்.

Jaleela Kamal said...

சீமான் கனி உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. செய்து பார்த்து சொல்லுங்கள். உங்களுக்காகவே பிளெயின் கடல் பாசி ஈசியா போட்டுள்ளேன்.

சீமான்கனி said...

thanks akka....kandippa seiven....

Jaleela Kamal said...

ok, gani

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ராஜ் இப்ப பாருங்கள் புரியும் என்று நினைக்கிறேன்.//

ஹா ஹா ஹா.. நன்றிங்க!!

Unknown said...

naanthen first

enakuthan mudal vadai..

Unknown said...

அருமை

Unknown said...

அருமை

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா