Showing posts with label குழம்பு. Show all posts
Showing posts with label குழம்பு. Show all posts

Wednesday, June 20, 2018

பாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை





பாராகோட மீன் சால்னா மீன் ஃப்ரை -- Barracuda Fish
பார கோட என்ற மீன் சீலா மீன் போல இருக்கும் ஆனால் ஒரு முழ நீளம் சின்ன மீனாக இருக்கும், அதில் செய்த குழம்பு செய்து பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள், முடிந்தால் செய்த போட்டோக்களை அனுப்பினால் இங்கு பகிர்வேன்.

பாரகோடா மீன் சால்னா & மீன் ப்ரை

பாரகோடா மீன் – 1 கிலோ
எண்ணை – 25 கிராம் (நல்லெண்ணை) 
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – ½ தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – 15 இதழ்
சின்ன வெங்காயம் – 6
பூண்டு  - 4 பல்

அரைக்க

வெங்காயம் – 3
பூண்டு – 4 பல் பெரியது
பழுத்த தக்காளி – 6 மீடியம்

மசாலாக்கள்

காஷ்மீரி சில்லி பொடி  - 1 மேசைகரண்டி
தனியா(கொத்துமல்லி தூள் ) – 2 ½ மேசை கரண்டி
மஞ்சள் தூள்  - ½ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு

புளி  - இரண்டு லெமன் சைஸ் பால்ஸ்
தேங்காய் பவுடர் - 2 மேசைகரண்டி
























செய்முறை:
மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதில் சிறிது வினிகர் சேர்த்து 5 நிமிடம் ஊறவைத்து மீண்டும் கழுவ்வும்.
அரைக்க கொடுத்துள்ள வெங்காயம் தக்காளி, பூண்டை விழுதாக அரைக்கவும்.
பூண்டு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும்.
வாயகன்ற பாத்திரதில் எண்ணை ஊற்றி சூடாக்கி, கடுகு, வெந்தயம், சீரகம், கருவேப்பிலை, பூண்டு சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
 அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலக்கி கொதிக்க விடவும்.
அரைத்த அதே மிக்சியில் சேர்க்கவேண்டிய மசாலாவகைகளை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.
கொதித்து கொண்டிருக்கும் மீன் சால்னாவில் சேர்க்கவும்.
மசாலாவாடை அடங்கியதும் புளியை கட்டியாக கரைத்து சேர்த்து கொதிக்க விடவும்.

புளி மசாலா வகைகள் ஒரு சேர நன்கு கொதித்ததும் மொத்த முன்றில் ஒரு பகுதியை போடவும், தேங்காய் பவுடரை வென்னீரில் கரைத்து ஊற்றவும்.
நன்கு கொதிக்க விட்டு கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.

பாரகோட என்பது  ஒரு முழ நீளத்தில் சிறிய மீன் சீலா மீன் போலவே இருக்கும்.
இங்கு துபாயில் இந்த மீன் அதிகமாக கிடைக்கும்.

மீதமுள்ள மீனை ஃப்ரைக்கு பயன் படுத்தவும்
பரிமாறும் அளவு - 5 நபர்களுக்கு


கடல் உணவு. Barracuda fish

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, January 14, 2018

ஏழு காய் பொங்கல் குழம்பு Seven Veggie Pongal Kuzambu


பொங்கல் காய் குழம்பு




வறுத்து திரிக்க வேண்டிய பொருட்கள்

கடலைபருப்பு ( சென்ன தால்) – 1 மேசைகரண்டி
முழு தனியா – 1 மேசைகரண்டி
முழு சிவப்பு மிளகாய் – 7 எண்ணிக்காய்
முழு கருப்பு மிளகு – 7
கருவேப்பிலை – சிறிது
துருவிய தேங்காய் – 2 மேசைகரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி



வேகவைக்க

துவரம் பருப்பு – 2 மேசைகரண்டி
வேர்கடலை – 2 மேசைகரண்டி

ஏழு காய் கறிகள் – அரைகிலோ

உருளை கிழங்கு
வாழக்காய்
சர்க்கரை வள்ளி கிழங்கு
அவரைக்காய்
பூசணிக்கா (அ) கத்திரிகாய்
கேரட்
பீன்ஸ்

தாளிக்க
எண்ணை –  ஒரு மேசைகரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
கருவேப்பபிலை - சிறிது
பெருங்காயம் – கால் தேக்கரண்டி


புளி  லெமன் சைஸ் அல்லது புளி கியுப் – 2  எண்ணிக்கை

வறுத்து பவுடர் செய்ய கூடிய பொருட்களை ஒவ்வொன்றாக வறுத்து கடைசியாக சீரகம் சேர்த்து, ஆறவைத்து பொடிக்கவும்.

காய்கறி வகைகளை நன்கு கழுவி தோலை சீவி விட்டு மீடியமாக கட் செய்து வைக்கவும்.

துவரம் பருப்பையும் வேர்கடலையையும் கழுவி தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

துவரம் பருப்பு, வேர்கடலை, அரிந்து வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து  வேகவைக்கவும்.
தனியாக தாளிக்கும் சட்டியில் எண்ணை விட்டு அதில் கடுகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளித்து புளி கியுப் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பவுடர் செய்த பொடியையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
கடைசியாக வெந்து வைத்துள்ள பருப்பு , காய் வகைகளை சேர்த்து  மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.

சுவையான பொங்கல் குழம்பு ரெடி.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, May 3, 2017

கேரளா ஸ்பெஷல் மீன் கறி ( கப்ப மீங்கறி)



கேரளா ஸ்பெஷல் மீன் கறி ( கப்ப மீங்கறி)




கேரளா மக்கள் செய்யும் சுவையான மீன் கறியை நான் மரவள்ளி கிழங்கு ( கப்ப ) யில் செய்துள்ளேன். ( குங்குமம் தோழியில் வெளியான 30 குறிப்புகளில் ஒரு குறிப்பு இது.)
இது மீனில் செய்வதை விட இந்த மரவள்ளி கிழங்கில் சுவை அபாரகமாக இருந்தது, மிகவும் ருசித்து தொடர்ந்து திரும்ப திரும்ப செய்ய தூண்டியது இந்த ரெசிபி ருசி அப்படியே நாவில் நிற்கிறது. 


கப்ப கிழங்கு (மர வள்ளி கிழங்கு)  - கால் கிலோ



தாளிக்க
தேங்காய் எண்ணை  - 4 தேக்கரண்டி
கடுகு – அரைட் தேக்கரண்டி
சோம்பு – கால் தேக்கரண்டி
கருவேப்பிலை – 2 ஆர்க்
பூண்டு  - முன்று பல்
இஞ்சி  - பொடியாக நறுக்கியது இரண்டு தேக்கரண்டி



வெங்காயம் – ஒன்று பெரியது
தக்காளி  - ஒன்று
பச்ச மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
தேங்காய் துருவல் – அரை கப்
கொத்துமல்லி தழை – சிறிது
கொடம்புளி – 4



செய்முறை

கொடம்புளியை கழுவி சிறிது தண்ணீரில் ஊறவைக்கவும்.
மரவள்ளி கிழங்கை தோல் சீவி பெரிய துண்டுகளாக கட் செய்து சிறிது உப்பு மிளகாய் தூள் , மிளகு தூள் சேர்த்து  வேகவைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தேங்காய் எண்ணை ஊற்றி தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து மசாலாவகைகள் மற்றும் குடம்புளி சேர்த்து மசலா வாடை அடங்கியதும் வெந்த கிழங்கு சேர்த்து நன்கு சுருள கிளறவும்.சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
தேங்காயை அரைத்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.

கவனிக்க: கேரள மக்கள்  புளிக்கு பதில் கொடம்புளி பயன் படுத்துவார்கள்.
இதில் தேங்காய் எண்ணையில் தாளிப்பதும் கொடம்புளி சேர்ப்பதும் மிக முக்கியம்.
டிப்ஸ் : கொடம்புளி மற்றும் கொள்ளு சேர்த்து தொடர்ந்து ரசம் வைத்து சாப்பிட்டால் உடல் எடை குறை வாய்ப்பு இருக்கிறது.




( இந்த குறிப்பு  அறுசுவை தோழி ஏஞ்சலினுக்காக)




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, August 27, 2015

கேரளா காய்கறி சாம்பார் - Kerala Specila veggie Sambar


கேரளா சாம்பார்
 

தென்னிந்திய உணவுகளில் குழம்புவகைகளில் முதலிடம் வகிப்பது சாம்பார் தான். இட்லி,தோசை, பொங்கல், உப்புமா,அடை, மைதா தோசை , பிளைன் சாதம் அனைத்துக்கும் பொருந்தும், இங்கு பரோட்டாவுடன் சாம்பாரை  ஊற்றி சாப்பிட்டால் ஒன்று சாப்பிட்டாலும் நல்ல பசிதாங்குமாம். என் பையனுக்கு பூரி, சப்பாத்தியுடன் சாப்பிட பிடிக்கும்.

 

இங்கு ஏற்கனவே சாம்பார் வகைகள் போஸ்ட் செய்துள்ளேன்.
கேரளாவில் கொண்டாடும் ஓணம் பண்டிகையில் தாளி சாப்பாடு பல வகையாக வாழையில் பரிமார படும் அதில் முதன்மையான ஒரு பக்க உணவு  கேரளா ஸ்பெஷல் காய்கறி சாம்பார்.
இதற்கென்றே இங்குள்ள குராசரி ஸ்டோர் மற்றும் லுலு  ஹைப்பர் மார்கெட்டில் அரை கிலோ , 1 கிலோ பாக்கெட்டுகளாக காய்கறிகளை மிக்ஸ் ஆக வைத்து பேக் செய்து வைத்திருப்பார்கள். அதில் நான் ருசித்த சுவையில் இதை இங்கு பகிர்ந்துள்ளேன்.
நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளூங்கள்.
 

தேவையானவை
வேகவைக்க
துவரம் பருப்பு – 125 கிராம்
மஞ்சள் தூள்
வெந்தயம் – கால் தேக்கரண்டி

 
காய்கறி வகைகள்

சேனை
பூசனிக்காய்
பீன்ஸ்
கேரட்
கோவைகாய்
கத்திரிக்காய்
மாங்காய்
பெரிய வெள்ளரிக்காய்
முருங்கக்காய்
வாழைக்காய்
பாவைக்காய்

எல்லா காய்கறிகளும் சேர்த்து அரை கிலோ
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
தனியாத்தூள் – அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம் சிறியது – 1
பச்சமிளகாய் – 2
தக்காளி – 2
குடம்புளி – 3

தாளிக்க
எண்ணை ( தேங்காய் எண்ணை (அ) சன்ப்ளவர் ஆயில் – 4 ஸ்பூன்
நெய் – இரண்டு ஸ்பூன்
காஞ்ச மிளகாய் – 3
கடுகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் – 3 சிட்டிக்கை (அ) சிறிய துண்டு
பூண்டு – 4 பல்
கருவேப்பில்லை
சாம்பார் பொடி (Eastern Sambar pwd) – இரண்டு ஸ்பூன்

Method

முதலில் பருப்பை மஞ்சள் தூள் வெந்தயம் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
 
குடம்புளியை கழுவி வெண்ணீரில் ஊறவைக்கவும்.
குக்கரில் எண்ணையை காயவைத்து ஒரு ஸ்பூன் எண்ணை மற்றும் சிறிது கடுகு கருவேப்பிலை , ஒரு பல் பூண்டு சேர்த்து தாளித்து வெங்காயம் பச்சமிளகாய் தக்காளி சேர்த்து வதக்கவும்.





 


 
வதங்கியதும் எல்லா காய்கறிகளையும் சேர்த்து கிளறி மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு தூள் சேர்த்து நன்கு ஒரு சேர கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இரக்கவும்.


ஒரு வாயகன்ற சட்டியை காயவைத்துஅதில் எண்ணை + நெய் சேர்த்து சூடு வந்ததும் கடுகு, காஞ்சமிளகாய், கருவேப்பிலை, பூண்டு , பெருங்காயம், வெங்காயம் , சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறி தாளிக்கவும்.
அதில் வெந்த பருப்பை மசித்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.


பிறகு வெந்த காய்கறிகளை சேர்த்து ஊறவைத்த குடம்புளியையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இரக்கவும்.
Onam Recipes
 

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, April 18, 2015

நெத்திலி மீன் ரெட் கிரேவி/Anchovies Red Gravy


நெத்திலி மீன் தொக்கு என்றாலே அனைவருக்கும் நாவை சப்புகொட்டவைக்கும். அதை நல்ல கிரிப்பாக திக் ரெடி கிரேவி போல் செய்தால் சுவை சொல்ல வார்த்தைகள் இல்லை , இதை செய்து பார்த்து உண்மையான்னு வந்து சொல்லுங்கள்.
(முன்பு செய்த பழைய குறிப்பு )



தேவையான பொருட்கள்

நெத்திலி மீன் - 300 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
ட்மெட்டோ பேஸ்ட் - அரை கப்
காஷ்மீரி ரெட் சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி
பச்ச மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
கட்டியாக கரைத்த புளி - முன்று மேசைகரண்டி
உப்பு - தேவைக்கு

தாளிக்க 

எண்ணை - 3 மேசைகரண்டி
கடுகு -  அரை தேக்கரண்டி
இஞ்சி துருவியது - ஒரு தேக்கரண்டி
பூண்டு பொடியாக நறுக்கியது - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை  - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
கொத்துமல்லிதழை சிறிது

செய்முறை

நெத்திலி மீனை கிழே சொல்லி உள்ளபடி கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளைதாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய உடன் தக்காளி பேஸ்ட், மிளகாய்தூள், உப்பு தூள் , சர்க்கரை, பச்சமிளகாய் சேர்த்து நன்குகூட்டு பதத்துக்கு வதகக்கவும். கடைசியாக நெத்திலி மீனை சேர்த்து லேசாக பிரட்டி எண்ணை பிரியும் வரை கொதிக்க விட்டு இரக்கவும்.சுவையான நெத்திலி மீன் ரெட் கிரேவி ரெடி


கவனிக்க:

மீனை போட்டத்தும் சும்மா சும்மா  கரண்டிய போட்டு கிளற கூடாது.அப்படியே சட்டியை இரண்டு பக்கமும் சேர்த்து சுழற்றி விடனும்.
கூட்டு பதமாக , மிதமான தீயில் கொதிக்கவிடவேண்டும்.

இங்கு வெளி நாடுகளில் தக்காளி பேஸ்ட் டின் பாக்கெட் களில் கிடைக்கிறது

அப்படி தக்காளி பேஸ்ட் கிடைக்கவில்லை என்றால், நல்ல பழுத்த ரெட் தக்காளி ( 5) யில் , காஞ்ச மிளகாயயை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள், அப்படி இல்லை என்றால் காஷ்மீரி மிளகாய் தூள் காரம் இருக்காது கலர் ஃபுல்லாக இருக்கும் அதை பழுத்த ரெட் தக்காளியுடன் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள் மிளகாய் தூள் சேர்க்கும் போது கொஞ்சம் குறைத்து சேர்த்து கொள்ளுங்கள்.



நெத்திலிமீன் கழுவும் விதம்


பெரிய அலுமினியம் கண் வடிகட்டி எடுத்துக்க்கொள்ளுங்கள்.மீனை ஒரு சட்டியில் தண்ணீரில் போட்டு லேசாக அரிசி களைவது போல் கலந்து வடுகட்டியில் போடவும்.
சிங்கில் டேபுக்கு நேரக வடிகட்டியை பிடித்து கொண்டு இரண்டு மூன்று தடவை கையால் உலசி கழுவவும்.
இப்போது அழுக்கு மண் எல்லாம் போய் சுத்தமாகி விடும்.
மீனி தலையை கிள்ளி அப்படியே வயிற்று பகுதியில் கட்டை விறலால் கீறி தலையோடு சேர்த்து முள்ளை மீனிலிருந்து பிரித்தெடுக்கவும்.
அதே மாதிரி எல்லா மீனையும் செய்யவும்.
இப்போது மீனில் சுத்தமாக முள் இருக்காது மீண்டும் ஒரு முறை கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.
இப்போது போன்லெஸ் நெத்திலி மீன் ரெடி அப்ப‌ர‌ம் என்ன‌ குழ‌ம்பு வைத்து சாப்பிட‌வேண்டது தான்.
பிள்ளைக‌ளுக்கும் அப்ப‌டியே பிசைந்து ஊட்டி விட‌லாம். இதே கிள‌ங்கா மீனிலும் எடுக்க‌லாம்
.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, February 10, 2015

சிறப்பு விருந்தினர் பதிவு -பாசிப்பருப்பு காய்கறி தேங்காய் பால் ஆணம் - பத்ரியா

சிறப்பு விருந்தினர் பதிவு - அரசர்குளம்   ஸ்பெஷல் பாசிபருப்பு ஆணம்.




பாசிப்பருப்பு ஆணம்
இது பத்ரியா Sirajudeen னுடைய குறிப்பு


பத்திரிக்கையாகட்டும், முகநூலாகட்டும், ஒரு டீக்கடை பெஞ்ச் இல்லாமல் இருக்காது, பலடீக்கடைகளில் தம்பி சிராஜ் வைத்து டீக்கடை ஒரு வித்தியாசமானது 
சமையல்,பொது அறிவு, மார்க்க சம்பந்த பட்ட வினாவிடைகள் பல போட்டிகளை நடத்துகிறார்.பல பேர் பரிசுகளும் வாங்கி இருக்கிறார்கள்.
அதில் நபி மொழி ஸஹீஹ் புகாரி ஹதீஸ் தமிழ் குர் ஆன் டாட் காமில் இருந்து  மாதம் இருமுறை வினா விடைகள் கேட்கப்படும். நிறைய போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை ஆகையால்   கொஞ்சம் இஸ்லாம் மார்க்க அறிவையும் வளர்த்துகொள்ளலாம் என்று இது ஒன்றில் மட்டும் மாதம் இரண்டு முறை கலந்து கொள்கிறேன். 

8 கேள்விகள் கொடுக்கப்படும். ஆனால் 20 நிமிடத்துக்குள் முடிக்கனும். அதில்  ஒரு முறை மட்டும்   எனக்கு ரூபாய் 100 க்கான புத்தகம் பரிசாக கிடைத்தது.

சமையல் போட்டியில் முன்றாம் பரிசும் கிடைத்தது , இதிலும் ரூபாய் 100 க்கான புத்தகம் பரிசாக கிடைத்து.




சிராஜ் நான் ஊரில் இருக்கும் போது குடும்பத்துடன் எங்க சென்னை ப்ளாசா கடைக்கு இரண்டு முறை வந்து புர்கா எடுத்து சென்றார். சிராஜுக்கு ஒரு மகன் , ஒரு மகனார் செம்ம வாலு.
சிராஜ் மனைவி பத்ரியா கடைக்கு வந்த கொஞ்ச நேரம் பழக்கம் தான், அருமையான தங்கை, அவங்க டீக்கடைசமையல் போட்டிக்கு போஸ்ட் பண்ண குறிப்பை தான் நான் இங்கு செய்து பதிந்துள்ளேன்.
அவங்க சொந்த ஊர் அரசர் குளம். பாசிப்பருப்பை அவரவர் ஊர் வழக்கப்படி பல வகைகளில் செய்வார்கள், அதில் இது பத்ரியாவின் ஊரானா அரசர்குளத்து ஸ்பெஷல் பாசிப்பருப்பு ஆணம்.





வடை பஜ்ஜி என்ற வலைதளத்தை எழுதி வரும் சிராஜின் மனைவி பத்ரியாவின் குறிப்பு இது. 
ஆணம் என்றால் குழம்பு/சால்னா. 
பாசிப்பருப்பு ஆணம்.
எல்லாரும் சுலபமாக செய்து பார்க்கலாம்.
பாசிபருப்பு முட்டை ஆணம்
பாசிப்பருப்பு காய்கறி ஆணம்
பாசி பருப்பு தேங்காய் பால் ஆணம்

எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்

நாங்க வெரும் பாசிப்பருப்பு கிச்சிடி, பாசிப்பருப்பில் முட்டையை பொரித்து போட்டு செய்வோம்.ஆனால் இது சற்று வித்தியாசம், இதன் மகிமையே தின் தேங்காய் பாலில் பருப்பை வேகவைத்தது தான் அவ்வளவு ருசி.
அடுத்து அதில் முட்டை சேர்ந்தால் இன்னும் நல்ல இருக்கும்.
இன்னும் தேங்காயை கீறி சேர்த்தால் சாப்பிடும் போது சுவை இன்னும் நல்ல இருக்கும்.


பாசிப்பருப்பு ஆணம்.


தேவையான பொருட்கள் :

1. பாசி பருப்பு - 3 கைப்பிடி அளவு
2. சின்ன வெங்காயம் - 20
3. தக்காளி - 2
4. மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
5. தேங்காய் பால் - முழு தேங்காயின் திக்கு பால் மற்றும் தண்ணி பால் 2 முறை எடுத்துக்கொள்ளவும்.
6. முருங்கைக்காய் - 1
7. கத்தரிகாய் - 2
8. கேரட் - 2
9. இளம் தேங்காய் - 10 கீறல்கள் ( கிடைத்தால் மட்டும் போடலாம் )
10. முட்டை - ஒரு ஆளுக்கு ஒன்னு வீதம்
11. உப்பு - தேவையான அளவு

தாளிக்க :

12. நெய் - தேவையான அளவு ( எண்ணெயும் பயன்படுத்திக் கொள்ளலாம்)
13. கடுகு மற்றும் உளுந்து - ஒரு டீ ஸ்பூன்
14. கறிவேப்பிலை - தேவையான அளவு
15. காஞ்ச மிளகாய் - 3 
16. சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் - தேவையான அளவு
17. மிளகாய் தூள் - ஒரு டீ ஸ்பூன்


செய்முறை

பாசிபருப்பை லேசாக வறுத்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

குக்கரில் ஊறவைத்த பாசிப்பருப்பை சேர்த்து தண்ணீயாக எடுத்த தேங்காய் பால் சேர்த்து மஞ்சள் பொடி, வெங்காயம் , தக்காளியை சேர்த்து 3 விசில் விட்டு இரக்கவும்.


வெந்ததும் . அதில் மீதி இருக்கும் தண்ணீ தேங்காய் பால், கேரட், முருங்கக்காய், கத்திரிக்காய் ,உப்பு இளம் கீரல் தேங்காய் சேர்த்து குக்கரை முடிபோடாமல் திறந்தே வைத்து வேக விடவும். மூடி போட்டு ஒரு விசில் விட்டால் கத்திரிக்காய், முருங்கக்காய் உடைந்து விடும்.



காய்கள் வெந்ததும் முட்டைகளை உடைத்து முழுசாக அதில் ஊற்றி கிளறாமல் தீயின் தனலை சிம்மில் வைத்து வேக விடவும். முட்டை வெந்ததும் கடைசியாக திக்கான தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்.,
 தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பருப்புடன்  சேர்த்து கலக்கி இரக்கவும்.


மிக அருமையான ருசியான பாசிபருப்பு காய்கறிதேங்காய் பால் ஆணம் ரெடி.

வெரும் சாதம் ரொட்டி, பூரிக்குஇந்த சைட் டிஷ் அருமையாக இருக்கும்.


Non vegetarian Thali Menu
Plain Rice
Bindi/Okra/Vendaikaay/Ladies Finger  Stir Fry /poriyal
Rasam
Moong Dhal Veg & Coconut Milk Salna
King Fish Fry



கவனிக்க: இது நான் செய்து பார்த்ததில் , நான் ப்ரஷ் தேங்காய் பால் எடுக்கல , தேங்காய் பவுடர் தான் கரைத்து ஊற்றினே, கடைசியாக முட்டையும் ஊற்றவில்லை, , இளம் தேங்காய் கீறியதும் போடவில்லை, இதெல்ல்லாம் போடமலே சட்டி காலியாகிவிட்டது, ஆனால் இதெல்லாம் சேர்த்து இருந்தால் நீங்க திரும்ப திரும்ப நிறைய செய்யவேண்டியதாக இருக்கும்.

நாங்க வெரும் பாசிப்பருப்பு கிச்சிடி, பாசிப்பருப்பில் முட்டையை பொரித்து போட்டு செய்வோம்.ஆனால் இது சற்று வித்தியாசம், இதன் மகிமையே தின் தேங்காய் பாலில் பருப்பை வேகவைத்தது தான் அவ்வளவு ருசி.
அடுத்து அதில் முட்டை சேர்ந்தால் இன்னும் நல்ல இருக்கும்.
இன்னும் தேங்காயை கீறி சேர்த்தால் சாப்பிடும் போது சுவை இன்னும் நல்ல இருக்கும்.

நான் இதில் ஒரு பச்ச மிளகாயை சேர்த்து கொண்டேன். மற்றும் தாளிக்கும் போது இரண்டு பல் பூண்டை பொடியாக நறுக்கி சேர்த்து கொண்டேன்.

மொத்ததில் பதிரியா சிராஜின் குறிப்பு சூப்பரோ சூப்பர்.






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/