கேரளா ஸ்பெஷல் மீன் கறி ( கப்ப மீங்கறி)
கேரளா மக்கள் செய்யும் சுவையான மீன் கறியை நான் மரவள்ளி கிழங்கு ( கப்ப ) யில் செய்துள்ளேன். ( குங்குமம் தோழியில் வெளியான 30 குறிப்புகளில் ஒரு குறிப்பு இது.)
இது மீனில் செய்வதை விட இந்த மரவள்ளி கிழங்கில் சுவை அபாரகமாக இருந்தது, மிகவும் ருசித்து தொடர்ந்து திரும்ப திரும்ப செய்ய தூண்டியது இந்த ரெசிபி ருசி அப்படியே நாவில் நிற்கிறது.
கப்ப கிழங்கு (மர வள்ளி கிழங்கு) - கால் கிலோ
தாளிக்க
தேங்காய் எண்ணை - 4 தேக்கரண்டி
கடுகு – அரைட் தேக்கரண்டி
சோம்பு – கால் தேக்கரண்டி
கருவேப்பிலை – 2 ஆர்க்
பூண்டு - முன்று பல்
இஞ்சி - பொடியாக நறுக்கியது இரண்டு தேக்கரண்டி
வெங்காயம் – ஒன்று பெரியது
தக்காளி - ஒன்று
பச்ச மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
தேங்காய் துருவல் – அரை கப்
கொத்துமல்லி தழை – சிறிது
கொடம்புளி – 4
செய்முறை
கொடம்புளியை கழுவி சிறிது தண்ணீரில் ஊறவைக்கவும்.
மரவள்ளி கிழங்கை தோல் சீவி பெரிய துண்டுகளாக கட் செய்து சிறிது உப்பு மிளகாய் தூள் , மிளகு தூள் சேர்த்து வேகவைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தேங்காய் எண்ணை ஊற்றி தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து மசாலாவகைகள் மற்றும் குடம்புளி சேர்த்து மசலா வாடை அடங்கியதும் வெந்த கிழங்கு சேர்த்து நன்கு சுருள கிளறவும்.சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
தேங்காயை அரைத்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.
கவனிக்க: கேரள மக்கள் புளிக்கு பதில் கொடம்புளி பயன் படுத்துவார்கள்.
இதில் தேங்காய் எண்ணையில் தாளிப்பதும் கொடம்புளி சேர்ப்பதும் மிக முக்கியம்.
டிப்ஸ் : கொடம்புளி மற்றும் கொள்ளு சேர்த்து தொடர்ந்து ரசம் வைத்து சாப்பிட்டால் உடல் எடை குறை வாய்ப்பு இருக்கிறது.
Tweet | ||||||
2 கருத்துகள்:
ஆஹா !! தாங்க்யூ ஜலீ ..வீட்டில் குடம்புளி இருக்கு சீக்கிரமே செய்து ப்லாக்கில் பகிர்கிறேன்
ஆஹா... வித்தியாசமா இருக்கு அக்கா...
கொடம்புளினா என்ன அக்கா எப்படி இருக்கும்?
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா