Showing posts with label பீட்ரூட். Show all posts
Showing posts with label பீட்ரூட். Show all posts

Monday, October 29, 2018

Restaurant style Red Spinach and Beet Spring Roll Healthy Version by Jaleelakamal






Beetroot is a Cancer Cure Veggie and it's cures constipation problem, intake of beetroot it will increase your hemoglobin level. very good for pregnant ladies, it is also cure problems like itching and kidney stone.Normally all are using boiled potato instead we can add beetroot and carrot , it taste very different 






Please like ,comment, subscribe samaiyal attakaasam you tube channel and share with your friends and relatives .


சிவப்பு பாலக் கீரை பீட்ரூட் ஸ்ரிங் ரோல் /சைனீஸ் ஸ்பிரிங் ரோல்



சிவப்பு பாலக் கீரை பீட்ரூட் ஸ்ரிங் ரோல் /சைனீஸ் ஸ்பிரிங் ரோல்

 Restaurant style Spring Roll Healthy  Version

ஸ்பிர்ங் ரோல் செய்ய தேவையான பில்லிங்

===============================================

சிவப்பு பாலக்கீரை – பொடியாக அரிந்தது அரை கப்

பீட்ரூட் துருவியது – அரை கப் நீளவாக்கில் துருவியது

வெங்காய தாள் – அரை கப் பொடியாக அரிந்தது

கேரட் - அரை கப் நீளவாக்கில் துருவியது

ஸ்வீட் சோய் சாஸ் – ஒரு தேக்கரண்டி

வெள்ளை மிளகு தூள் – அரை தேக்கரண்டி

உப்பு – அரை தேக்கரண்டி

கருப்பு மிளகு தூள் – கால் தேக்கரண்டி

சில்லி டொமேட்டோ கெட்சப் – ஒரு தேக்கரண்டி

லெமன் ஜூஸ் – அரை தேக்கரன்டி

கார்லிக் பட்டர் – ஒரு தேக்கரண்டி

ஆலிவ் ஆயில் – ஒரு தேக்கரண்டி



ஸ்ப்ரிங் ரோலுக்கான மேல் மாவு



மைதா – ஒரு கப்

நெய் – ஒரு தேக்கரண்டி

சர்க்கரை – அரை தேக்கரண்டி

உப்பு -  அரை தேக்கரண்டி

தண்ணீர்- அரை டம்ளர் ( தேவைக்கு)




செய்முறை



முதலில் மைதாவில் நெய் , சர்க்கரை , உப்புசேர்த்து கலக்கி தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி பிசையவும், கெட்டியாக பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

ஒரு வாயகன்ற வானலியில் மேலே கொடுக்க பட்டுள்ள அனைத்து பொருட்களையும் வதக்கி முக்கால் பாகம் வேக வைத்து ஆறவைக்கவும்.

பிசைந்த மாவை சிறிய பூரிகளாக திரட்டி அதில் ஒரு மேசைகரண்டி அளவு ஆறவைத்த பில்லிங்கை வைத்து மேல்பாகத்தை லேசாக மூடி இரண்டு சைடிலும் மடித்து சிலிண்டர் ஷேப்பில் உருட்டவும்.

வானலியில் எண்ணையை காயவைத்து அதில் சிலிண்டர் ஷேப்பில் செய்து வைத்த ஸ்பிரிங் ரோலை பொரித்து எடுக்கவும்.

ஒவ்வொன்றையும் இரண்டாக வெட்டி கெட்சப் உடன் பரிமாறவும்.



Beetroot is a Cancer Cure Veggie and it's cures constipation problem, intake of beetroot it will increase your hemoglobin level. very good for pregnant ladies, it is also cure problems like itching and kidney stone.Normally all are using boiled potato instead we can add beetroot and carrot , it taste very different 









https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Wednesday, November 22, 2017

தக்காளி பீட் ரூட் ரசம் (சூப்) - Tomato Beet Indian Soup/Rasam



Key Iron Ingredients: Tomato and Beetroot
Preparation Time : 7
cooking time : 13 minutes
serve 3 or 4

சாதரண புளி ரசம் தயாரிப்பதோ அதற்கு பதில் இப்படி இரும்பு சத்து அதிகமாக உள்ள பீட்ரூ, தக்காளி சேர்த்து செய்தால் சும்மா 3 டம்ளர் அப்படியே குடிக்கலாம்.


என்ன டயட்டோஅது வெயிட் குறைக்கவோ அல்லது டயாபட்டீஸ்க்கோ வேற என்ன காரணத்துக்காக குறைக்கனும் நினைக்கிறீங்கள் .
அதுக்கு முதலாவதாக நான் சொல்லும் டயட்
சூப் தான் !! ஆமா!1
சூப்  என்றால் ஐய்யோ நமக்கு செய்ய வராதே என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீங்களா?
கவலை வேண்டாம் எளிமையாக செய்ய நான் சொல்லி தரேன்
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமான சூப் தயாரிக்கலாம்.
வாங்க

Tomato Beet Rasam (soup)
*தக்காளி பீட் ரூட் ரசம் (சூப்)*

தக்காளி பெரியது 4
பீட் ரூட் பொடியாக அரிந்தது கால் கப் அ இரண்டு மேசைகரண்டி
உப்பு தேவைக்கு
ரசம் பொடி ஆச்சி அ சக்தி
கொத்து மல்லி தழை கொஞ்சம்
புளி ஒரு சின்ன திராட்சை பழம் அளவு - தேவைபட்டால்
மஞ்சள் தூள் சிறிது
மிளகாய் தூள் கால் தேக்கரண்டி

தாளிக்க

நெய் ஒரு தேக்கரண்டி
கடுகு கால் தேக்கரண்டி
கருவேப்பிலை சிறிது பூண்டு இரண்டு பல்
பச்சமிளகாய் சின்னது ஒன்று
பெருங்காயம் ஒரு சிட்டிக்கை



செய்முறை

தக்காளி பீட் ருட் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சிறிது கருவேப்பிலை சிறிது கொத்துமல்லி தழை
இவை அனைத்தையும் முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடுங்கள்
வெந்ததும் மசித்து தண்ணீரை வடிகட்டவும்.
மறுபடி அந்த வடிகட்டிய தக்காளியில் அரை கப் தண்ணீர் ஊற்றி கலக்கி வடித்து வடிகட்டிய தக்காளி பீட் சாற்றை கொதிக்க விடவும்.
பிறகு கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொதித்து கொண்டு இருக்கும் தக்காளி சாறில் சேர்த்து கலக்கி இரக்கவும்.
இதை வாரம் ஒரு நாள் அல்லது முன்று நாட்கள்
ஒரு முட்டை மற்றும் பொரியலுடன் இரண்டு டம்ளர் அளவுக்கு குடிக்கலாம்

Liquid Diet

Linking to   #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.  

happy healthy deit,Tomato Beetroot rasam/soup


ரசம் வகைகள், சூப் வகைகள், பீட்ரூட், தக்காளி, டயட் சமையல்,

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, June 20, 2017

பீட்ரூட் கேசரி கேக் - Beet Kesari Cake


கேசரி மிக சுலபமாக செய்ய கூடிய ஒரு இனிப்பு வகை அதில் பழ சாறோ அல்லது காய்கறிகளோ சேர்த்து இன்னும் சுவையூட்டி செய்யலாம்.


பீட்ரூட்  கேசரி
  • ரவை – 200 கிராம்
  • சர்க்கரை – 100 கிராம்
  • ஸ்வீட்டன்ட் கன்டெனஸ்ட் மில்க் – 3 மேசைகரண்டி
  • நெய் – 3 மேசை கரண்டி
  • முந்திரி பாதாம் 100கிராம்
  • பீட்ரூட் துருவியது – ஒன்று
  • நெய் – 3 மேசைகரண்டி
  • பட்டர் – 1 மேசைகரண்டி
  • வெண்ணீர் – 400 மில்லி
  • உப்பு – ½ சிட்டிக்கை
  • பிஸ்தா – சிறிது அலங்கரிக்க

செய்முறை

  1. நெய் சிறிது ஊற்றி முந்திரி பாதாம் பொடியாக அரிந்து வறுத்து தனியாக வைக்கவும்.
  2. அதே சட்டியில் சிறிது பட்டர் சேர்த்து துருவிய பீட்ரூட்டை வதக்கி ரவை சேர்த்து அதையும் வறுக்கவும். அதற்குள் கொதி வெண்ணீரை ரெடியாக வைக்கவும்.
  3. வறுத்து கொண்டுள்ள ரவையில் சிறிது சிறிதாக வெண்ணீரை ஊற்றி கிளறவும்.கண்டெஸ்ட் மில்க், (மில்க் மெயிட்) சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  4. கடைசியாக நெய்யில் வறுத்து வைத்துள்ள பாதாம் முந்திரியை தூவி கிளறி தட்டி கொட்டி சிறிது ஆரவைத்து தேவையான வடிவில் கட் செய்யவும். சுவையான அருமையான பீட்ரூட் கேசரி ரெடி.


ஜலீலாவின் டிப்ஸோ டிப்ஸ்

காய் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம். பீட்ரூட்க்கு  பதில் வேறு எந்த காய் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். இது பார்க்க கலர்புல்லாக இருக்கும்எந்த கலரும் சேர்க்க தேவையில்லை. இதில் சர்க்கரைக்கு பதில் பால் கோவா + கண்டென்ஸ்ட் மில்க் மெயிட் சேர்த்தால் சுவை இன்னும் அபாரமாக இருக்கும். முந்திரி பாதாமை நெய்யில் வறுத்து பொடித்தும் போடலாம்.. குழந்தைகளுக்கு என்பதால் வாயில் தட்டாமல் போகும்.இதில் ரவை தனியாக வறுத்தும் சேர்க்கலாம். இதில் பீட்ரூட்டுடன் சேர்த்து வதக்கி சர்க்கரை + மில்க் மெயிட் சேர்ப்பதால் நல்ல ஒன்று சேர்த்து கேக் போல இருக்கும்.



Beetroot kesari cake, Red Coloured Recipe for kids
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, February 21, 2014

புற்றைக்கொள்ளும் செந்நிற பானம்

இதை முன்பு நேசம் மற்றும் உடான்ஸ் புற்று நோய் விழிப்புணர்வு போட்டிகள் வைத்து விழிப்புணர்வு செய்தார்கள், இன்னும் அதிக அளவில் கேன்சர் நோய் சிறியவர்கள் பெரியவர்கள் என்றில்லாமல் அனைவரையும் ஆட்டி படைத்து கொண்டு தான் இருக்கிறது.. இது போல் உண்ணும் உணவிலாவதுகவனம் செலுத்தி ஓரளவுக்கு நாம் தடுத்து கொள்ளலாம்.

இதற்கு முன் நான் போட்டுள்ள சில பதிவுகளின் லின்குகள் கீழே உள்ள சுட்டியை சொடுகி பார்க்கவும்.

கேன்சர் நோயாளிகளுக்கான உணவு வகைகள்

புற்றை வெல்வோம் வருமுன் காப்போம் பெண்களுக்காக

ஆயிஷாமாவின் தன்னம்பிக்கை - கதை

சிலருக்கு கேரட் ஆப்பிள், பீட்ரூட் சேர்த்து ஜூஸ் செய்து குடிக்க பிடிக்க வில்லை என்றால் சூப் போல செய்து குடிக்கலாம்.


-- புற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்

//இது முன்பு  எல்லாருக்கும் மெயிலில் வந்தது, இதை மறுபடி ஞாபகபடுத்துகிறேன்.//


முற்காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள்காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்திற்கு சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. காரட்பீட்ரூட்ஆப்பிள் போன்ற சிவப்பு நிற காய்கள் உடம்பின் வளர்சிதை மாற்றத்திற்கு மட்டுமல்லாது புற்றுநோய் செல்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதிசய சிவப்பு
தினமும் இரண்டு முறை சிவப்பு நிற பழங்களின் கொண்ட ஜூஸ் பருகுவதால் அதிசயிக்கத்த மாற்றங்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

1) 
உடம்பில் உள்ள புற்று நோய் செல்களை கட்டுப்படுத்தி புற்றுநோய்க்கான எதிர்ப்பு செல்களை அதிகரிக்கிறது.

2) 
கல்லீரல்கணையம்சிறுநீரகம் ஆகியவற்றை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதோடுஅல்சர் நோயை குணப்படுத்துகிறது.

3) 
நுரையீரலை பாதுகாப்பதோடுஉயர் ரத்த அழுத்தம்ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

4) 
மனித உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

5) 
கண் தொடர்பான நோய்களை குணமாக்குகிறது.

6) 
தசை தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது

7) 
முகப்பொலிவை அதிகரித்து இளமையை நீடிக்கிறது. தோலை பளபளப்பாக வைப்பதில் அக்கறை கொள்கிறது.

8) 
சீரணமண்டலம்தொண்டை தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

9) 
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்துகிறது.

10) 
காய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.


எப்படி தயாரிப்பது :

இந்த பானத்தை தயாரிப்பது எளிது


காரட்- 1, பீட்ரூட்– 1, ஆப்பிள்– 1



மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து நறுக்கவும். மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து ஜூஸாக்கவும். சுவைக்கு எலுமிச்சை சேர்த்துக்கொள்ளலாம்.



காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை பருகவேண்டும். ஒரு மணி நேரத்திற்குப்பின்னர் காலை உணவு சாப்பிடலாம். மாலையில் மணிக்கு முன்னர் இதனை பருகலாம். உடனுக்குடன் செய்து 

பருகுவது முக்கியம்.

தினமும் இருவேளை பருகுவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. சிறப்பு மிக்க இந்த பானத்தை உணவியல்துறை நிபுணர்களும் பரிந்துறைக்கின்றனர். இந்த பானம் எடைக்குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.


இந்த அதிசய பானத்தை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பருகியதன் மூலம் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் குணமாகியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றுமுதல் இந்த பானத்தை பருகலாம்.







இது 2 வருடம் முன்பு செய்த ஜூஸ், படங்கள் சரியாக இல்லாததால் போஸ்ட் பண்ணவில்லை. படம் சரியாக இல்லை என்றாலும் இந்த பதிவையாவது சிலர் படித்து விழிப்புணர்வு பெறவேண்டும் என்று தான் இந்த பகிர்வு.

என்னுடைய டிப்ஸ் 

இதில் பீட்ரூட்டில் பச்சை வாடை அடித்தால் சிறிது வேக வைத்து கொள்ளலாம். இல்லை இதையே பீட்ரூட், கேரட், ஆப்பிள் சேர்த்து சூப்பாக வைத்து குடிக்கலாம்.

கேக் வகைகள் செய்யும் போது கூட கலர் பொடிக்கு பதில்  பீட்ரூட்டை சாறெடுத்து ஊற்றி செய்யலாம்.

காய் கறி குருமா, பிரியாணி, சாம்பார் செய்யும் போது நான் எப்போதும் பீட்ரூட்டையும் சேர்த்து கொள்வேன். கலந்த சாதம் செய்வதற்கு பதிலாக பீட்ரூட் சாதமும் செய்து சாப்பிடலாம்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, August 29, 2013

ஓம்ம் & கர்பூரவள்ளி பீட்ரூட் சாலட் - Beetroot Salad with Thyme & Oregano




ஓம்ம் & கர்பூரவள்ளி பீட்ரூட் சாலட்
உடல் ஆரோக்கியம் மற்றும் எடை குறைப்பு ஹெல்தியான உணவுகளில் சாலட் வகைகள் மிகவும் சிறந்த்து.
இதை ஏதாவாது ட்ரெஸ்ஸிங் வகைகள் ( சாஸ்) பயன்படுத்தி சாப்பிட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
அந்த வகைகளில் இதில் ஓம்ம் மற்றும் கர்பூரவள்ளி சேர்த்துள்ளேன்.

பிரியாணி செய்தால் கண்டிப்பாக அதற்கு பக்க உணவாக தயிர் சட்னி  தயாரிப்போம், கூடவே இது போல் சாலட் வ்கைகளும் சேர்த்து கொண்டால் நல்ல செரிமானம் ஆகும். சளியையும் கட்டு படுத்தும்.கர்பிணி பெண்களுக்கும் ஏற்ற சத்தான சாலட்.



தேவையான பொருட்கள்
பீட்ரூட் – சிறியது ஒன்று
ஆலிவ் ஆயில் ¼ தேக்கரண்டி
சீரகதூள் – ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு சிட்டிக்கை
ட்ரெஸ்ஸிங் செய்ய:
கர்பூரவள்ளி (காய்ந்த்து) – ¼ தேக்கரண்டி
ஓம்ம்  (காய்ந்த்து)  - - ¼ தேக்கரண்டி
லெமன் ஜூஸ் – ¼ தேக்கரண்டி
மிளகு தூள் – ஒரு சிட்டிக்கை
உப்பு - தேவைக்கு


செய்முறை
பீட்ரூடை தோலெடுத்து இரண்டு இன்ச் நீளத்திற்கு விரல் அளவு மெல்லியதாக அரிந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு பின்ச் உப்பு சேர்த்து பிட்ரூட் முழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடிக்கவும்.
நான்ஸ்டிக் பேனை சூடு படுத்தி ஆலிவ் ஆயில் சேர்த்து சீரகதூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பரிமாறும் பவுளில் ஓம்ம், கர்பூரவள்ளி, லெமன் ஜூஸ்,உப்பு, மிளகு தூள் சேர்த்த்து நன்கு கலக்கி வெந்த பீட்ரூடை சேர்த்து மீண்டும் கலக்கவும்.
ஆரோக்கியமான மருத்துவ குறிப்பு, ஓமம் கர்பூரவள்ளி பீட்ரூட் சாலட்.



Oregano - karpuuravalli  கர்பூரவள்ளி


Thyme - Omam - ஓமம்

Linking to virunthu unna vaangka viji SYS  (Beetroot or Spinach )- hosted by Shama


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam



Tuesday, February 26, 2013

ஆளிவிதை பீட்ரூட் மீன் கட்லட் - Flaxseed Beet Fish Cutlet






ஆளிவிதை பீட்ரூட் மீன் கட்லெட்


பொதுவாக கட்லட் உருளை மட்டன் சேர்த்து அல்லது சிக்கன், மீன் , வெஜ் என்று வகையாக செய்வோம்.
நான் கட்லெட் எப்ப செய்தாலும் கொஞ்சம் கேரட்டும் சேர்ப்பேன். காய் கறிகளில் மிகவும் பிடித்த காய் பிட்ரூட். எனக்கு மட்டுமில்லை என் அம்மா , பாட்டி எல்லாருக்குமே விருப்பமான காய். இதை என் அப்பாவின் அம்மா சும்மாவே சாப்பிட வைப்பார்கள். இதை சாப்பிட்டா அவ்வளவும் ரத்தம் உடம்ம்பில் ரத்தம் சுத்தமாகும் என்பார்கள். என் பையன் களுக்கும் மோர் குழம்பு வைத்தால் பீட்ரூட் பொரியால் இல்ல்லாமல் சாப்பிட மாட்டார்கள்.
ஸ்வீட் செய்வதாக இருந்தாலும் எங்க வாப்பா முதலில் சொல்லுவது பீட்ரூட் ஹல்வா தான், பள்ளி செல்லும் காலங்களிலும் பீட்ரூட் கடலைபருப்புடன் பரோட்டா  ஒரு நாள் கண்டிப்பாக டிபன் பாக்ஸ்க்கு இருக்கும்.

நான் கட்லடில் பீட்ரூட், மற்றும் பிளஸ்சீட் சேர்த்து இதை கொஞ்சம் வித்தியாசமாக செய்துள்ளேன்.இந்த கலர் பார்க்கவே உடனே எடுத்து சாப்பிடனும் போல் இருக்கும்.இதில் முள்ளில்லாமல் எந்த மீன் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.

ஆளி விதை பற்றி ஏற்கனவே முன்பு பதிவில் சொல்லி உள்ளேன்
ஆளிவிதை சேர்த்து இது வரை இட்லி பொடி, துவையல் , ரொட்டி , அடை எல்லாம் செய்துள்ளேன்.
பிரட் கரம்ஸ் சேர்க்கும் போது  ஆளிவிதை பவுடர் செய்து இதில் சேர்க்கலாம் என்று.ஞாபகம் வந்தது கட்லட் என்றாலே சுவை அபாரமாக இருக்கும் அதுவும் இத்தன வகை சேர்ந்தால் சுவையை சொல்ல கேட்கவா வேண்டும்.


கர்பிணி பெண்களுக்கும் வாய்க்கு சுவைபடும்.சத்தான மாலை நேர சிற்றுண்டி, மதியம் பக்க உணவாக வும் சாப்பிடலாம், காலை பிரட்டுடன் சாண்ட்விச்சாகவும் சாப்பிடலாம்.










Wednesday, January 16, 2013

பீட்ரூட் பிரியாணி ( குக்கர் முறை)

 -- 
  


பீட்ரூட் பிரியாணி  ( குக்கர் முறை)



பீட்ரூட் ரத்தசோகைக்கு நல்லது, ஹிமோகுளோபின் அளவை அதிகரிக்கும். குழந்தைகளுக்கும் , கர்பிணி பெண்களுக்கும் லன்ச் பாக்ஸ்க்கும் ஏற்ற சத்தான உணவு.




பரிமாறும் அளவு - 3 நபருக்கு
ஆயத்த நேரம் - 15 நிமிடம்
சமைக்கும் நேரம் - 15 நிமிடம்

 பாசுமதி அரிசி - 300 கிராம்
பீட்ரூட் - 2 மீடியம் சைஸ்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்ச மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1/2 தேகக்ரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி, புதினா - சிறிது
பிரிஞ்சி இலை - 2
பட்டை, ஏலம் லவங்கம் தலா - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 11/2 தேக்கரண்டி
உப்பு  - தேவைக்கு  (ஒரு தேக்கரண்டி)
எண்ணை - 5 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
லெமன் ஜூஸ் - 1/2 தேக்கரண்டி
அலங்கரிக்க - அவித்த முட்டை
 செய்முறை

1.அரிசியை பத்து நிமிடம் ஊறவைக்கவும். பீட்ரூட்டை தோல் சிவி மிடியமாக சின்ன சதுர வடிவமாக வெட்டி கொள்ளவும்.

2.வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் அரிந்து வைத்து கொள்ளவும்.

3.குக்கரை காயவைத்து எண்ணை சேர்த்து அதில்பிரிஞ்சி இலை, பட்டை ஏலம் லவங்க சேர்த்து வெடிய விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4.வெங்காயம் கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்ந்து இரண்டு நிமிடம் வதங்க விடவும்.
5.கொத்துமல்லி புதினா சேர்த்து வதக்கி தக்காளி மற்றும் பச்சமிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க்கவும்.
6.அடுத்து வெட்டி வைத்துள்ள பீட்ரூட், மிளகாய் தூள், உப்பு, தயிர் சேர்த்து நன்கு வதக்கி இரண்டு நிமிடம் வேக விடவும்.
7.வெந்ததும் 1: 11/2 அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து கொதிக்க விட்டு பாதி கொதித்து வரும் போது நெய் + லெமன் ஜூஸ் சேர்த்து குக்கரை மூடி வெயிட் போட்டு இரண்டு விசில் வந்ததும் இரக்கவும்.
8. பிரஷர் ரீலிஸ் ஆனதும் நன்கு பிரட்டி வேறு பாத்திரத்தில் மாற்றி விடவும்.



சுவையான சத்தான பீட்ரூட் பிரியாணி ரெடி ,ரெய்தா, பாயில்ட் எக், சிக்கன் பிரை , கட்லட் என பிடித்த பக்க உணவுடன் சாப்பிடலாம்.
லன்ச் பாக்ஸ் க்கு ஏற்ற ஈசியான ரெசிபி.

ஹாக்கின்ஸ் ப்ரசர் குக்கர் என்பதால் 3 நிமிடத்தில் ப்ரஷர் ரீலிசாகிடும்.எனக்கு என் ஹஸுக்கு, என்பையனுக்கு எல்லாருக்குமே லன்ச் பாக்ஸ் ரெடி பண்ணுவதால் [பெரும்பாலும் வெஜ் தான் எடுத்து செல்வோம் .இப்படி வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு காய் அல்லது கீரையில் பிரியாணி செய்வதுண்டு.வேலையும் சுலபமாக முடிந்து விடும்.



நொய் உருண்டை வெல்லஞ்சோறு

பூண்டு முட்டை சாதம்(கர்பிணி பெண்களுக்கு)





linking to saras 30 minutes dish rice recipe & Priya's Valentine's day Recipe Contest


Monday, May 9, 2011

பீட்ரூட் பீனட் ரெய்தா - beetroot peanut raita

பீட்ரூட் பீனட் ரெய்தா பார்க்கவே அருமையான கலர்.
 குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் , வேர்கடலையுடன் கடித்து சாப்பிட பிரமாதமாக இருக்கும்.


தேவையானவை:

துருவிய பீட்ரூட் – 1 பெரியது
தயிர் – 200 மில்லி
பச்சமிளகாய் – 1
பூண்டு – 2 பல்
உப்பு  -தேவைக்கு
வெங்காயம் - 1
வறுத்த வேர்கடலை – ஒரு கைபிடி அளவு
கொத்துமல்லி தழை – அலங்கரிக்க

செய்முறை
பச்சமிளகாய்,பூண்டு , வேர்கடலையை கொர கொரப்பாக திரிக்கவும்( மிக்சியில் பஸ்ஸில் இருமுறை திருப்பினால் போதும்).திரித்த கலவை
 துருவிய பீட்ரூட்,பொடியாக அரிந்த வெங்காயம் தயிர் அனைத்தையும் ,  உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கொத்துமல்லி தூவி ,வெள்ளரியை வட்டவடிவமாக அரிந்து வைத்து அலங்கரிக்கவும்.

சுவையானரிச்சான கலர்ஃபுல் பீட்ரூட் பீனட் ரெய்தா ரெடி.


குறிப்பு
அருணா மாணிக்கம் ஒரு மேகஜினில் பார்த்து செய்த்தா போட்டு இருந்தாங்க அதில் பட்டர் மில்க் சேர்த்து செய்து இருந்தாங்க.
இந்த ரெசிபி மனோ அக்கா கேரட்டில் தக்காளி, சேர்த்து செய்து இருந்தார்கள்.
நான் என் சுவைக்கு ஏற்ப கலவைகளை பீட்ரூடில் செய்து இருக்கிறேன்.