Showing posts with label கேக் ரெசிபி. Show all posts
Showing posts with label கேக் ரெசிபி. Show all posts

Wednesday, February 10, 2016

ப்ளக்சீட் கோக்கோ மினி கப் கேக் ( பேலியோ டிபன் அல்லது டின்னர்)



 ப்ளக்சீட் கோக்கோ மினி கப் கேக் ( பேலியோ டிபன் அல்லது டின்னர்)

தினம் காலையில் முட்டை சாப்பிட்டு போரடித்து போனவர்களுக்கு . இது போல் கேக்காக செய்து சாப்பிடலாம்,
இதையே மைக்ரோ வேவில் வைக்கலாம்.அதையும் அடுத்த பதிவில் போடுகிறேன்.
கீழே உள்ளது என் ஐடியாவில் சேர்த்த பொருட்கள், டேஸ்ட் ரொம்ப நல்ல இருந்தது.
...
ப்ளாக்சீட் என்பது ஆளிவிதை ( சைவ பேலியோவிற்கு ஏற்றது)
ப்ளக்சீட் கோக்கோ மினி கப் கேக் ( பேலியோ டிபன் அல்லது டின்னர்)



தேவையான பொருட்கள்
டார்க் சாக்லேட் 1 இன்ச் சைஸ் 5 பார்
முட்டை - ஒன்று
பட்டர் – இரண்டு மேசைகரண்டி
காபி பவுடர் – அரை தேக்கரண்டி
பைனாப்பிள் எசன்ஸ் – ஒரு துளி ( தேவைப்பட்டால்)
பேக்கிங் பவுடர் – அரை தேக்கரண்டி
கோக்கொ பவுடர் – ஒரு மேசை கரண்டி
தேங்காய் பவுடர் - ஒரு மேசைகரண்டி
ப்ளக்சீட் பவுடர் – இரண்டு மேசைகரண்டி
வால் நட் – பொடியாக அரிந்தது – ஒரு மேசை கரண்டி




செய்முறை
டார்க் சாக்லேட்டை உருக்கி அத்துடன் பட்டர் சேர்த்த்து நன்கு கலக்கவும்.
முட்டையை சேர்த்து நுரை பொங்க அடித்து பட்டர் சாக்லேட் கலவையுடன் சேர்க்கவும்

ப்ளாக்சீட் பவுடர், கோகோ பவுடர், காபி பவுடர்,பேக்கிங் பவுடர் எல்லாவற்றையும் நன்கு மிக்ஸ் செய்யவும்.
மிக்ஸ் செய்து முட்டை கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்.
பொடியாக அரிந்த வால்நட்டை சேர்த்து கலக்வும்.

கலவையை கப் கேட் மோல்டில் ஊற்றி 250 டிகிரி செல்சியத்தில் 20 நிமிடம் முற்சூடு படுத்திய ஓவனில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

கவனிக்க: ஓவன், மைக்ரோ வேவ் அவன் இல்லாதவர்கள்.
இதை குக்கரில் கிழே உப்பை தூவி உள்ளே பேக் செய்யும் பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு விசில் போடாமல் 20 முற்சூடு செய்து விட்டு மேலும் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்


 Paleo Diet - Flax seed choco Mini Cap Cake



என் குறிப்பை இங்கும் கானலாம்
முன்னோர் உணவு




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, December 27, 2015

கோக்கோ ப்ளக்சீட் மைக்ரோவேவ் கப் கேக் (Paleo Breakfast)

கோக்கோ ப்ளக்சீட் மைக்ரோவேவ் கப் கேக் (Paleo Breakfast)
தினம் காலையில் முட்டை சாப்பிட்டு போரடித்து போனவர்களுக்கு . இது போல் கப் கேக்காக செய்து சாப்பிடலாம், நிமிஷத்தில் செய்து விடலாம்
கீழே உள்ளது என் ஐடியாவில் செய்தது.




ப்ளாக்சீட் என்பது ஆளிவிதை ( சைவ பேலியோவிற்கு ஏற்றது)

ப்ளக்சீட் கோக்கோ மினி கப் கேக் ( பேலியோ டிபன் அல்லது டின்னர்)
செய்முறை
ஆளி விதை ( ப்ளாக்ஸ் சீட்) பவுடர் - ஒரு மேசைகரண்டி
டார்க் சாக்லேட் – 1 இன்ச் சைஸ் பார் 2 எண்ணிக்கை
பட்டர் – ஒரு மேசைகரண்டி அ தேங்காய் எண்ணை
முட்டை ஒன்று
பேக்கிங் பவுடர் – அரை தேக்கரண்டி
தேங்காய் பவுடர் – ஒரு மேசை கரண்டி
கோகோ பவுடர் - ஒரு தேக்கரண்டி
பால் – சிறிது
பாதாம் - 5 பொடியாக அரிந்தது




செய்முறை
முட்டையை நுரை பொங்க அடித்து வைக்கவும்
டார்க் சாக்லேட்டை உருக்கி அதில் பட்டர் சேர்த்து அடித்து முட்டை, பால் சேர்த்து கிளறவும்.
தேங்காய் பவுடர், ப்ளாக்ஸீட் பவுடர், கோக்கோ பவுடர்,பேக்கிங் பவுடர், சேர்த்து கலக்கவும்.
பொடியாக அரிந்த பாதாம்மை சேர்க்கவும்.
மைக்ரோவில் கப்பில் உருக்கிய பட்டரை தடவி கலவையை ஊற்றி இரண்டு நிமிடம் வைத்து எடுக்கவும்.




கவனிக்க:
ஓவன், மைக்ரோ வேவ் அவன் இல்லாதவர்கள்.
இதை குக்கரில் கிழே உப்பை தூவி உள்ளே பேக் செய்யும் பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு விசில் போடாமல் 20 முற்சூடு செய்து விட்டு மேலும் 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.


சைவ பேலியோவில் முட்டை சேர்க்காதவர்கள் முட்டை க்கு பதில் தயிர் சேர்த்து கொள்ளலாம்/





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, December 23, 2014

வாழைப்பழ கேக் - Banana Cake


ஆயிஷா மலேசியா - ஏற்கனவே சிறப்பு விருந்தினர் பதிவில் குறிப்பு அனுப்பி பேக் பண்ணுவது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் சிறு வயதில் இருந்தே கேக், பிஸ்கேட் போன்றவைகளை செய்கிறேன் என்றார்கள், இனி இங்கு உங்களுக்காக கேக் வகைகளை கொடுக்க இருக்கிறார்கள்.

ஆயிஷா என்ன சொல்லுகிறார்கள் என்று கேளுங்கள்.. 
நான் 13 வருடங்களா கேக் மற்றும் பிஸ்கட் செய்து வருகின்றென். எனக்கு 16 வயசுல எனது தந்தை ஒவன் வாங்கி தந்தார்கள். அப்பொழுது நான் ஸ்கூல் படித்து கொண்டுருந்தேன். எனக்கு கேக் செய்து காமிக்கிற சமயல் நிகழ்ச்சி பார்க்க ரொம்ப ஆர்வாக இருந்தது. ஒவன் வாங்குநதும்,நோன்பு பெருநாள் மற்றும் வீட்டில் உள்ள எல்லாம் விஷேசத்துக்கும் நான்தான் கேக் மற்றும் பிஸ்கட் செய்வேன். கல்யாணத்துக்கு அப்புரம் மாமியார் வீட்டுலயும்இப்ப நான் தான் எல்லோருக்கும் கேக் செய்து குடுப்பேன். பல தடவை எனக்கும் கேக் நன்றாக வராமல் இருந்திருக்கு. எனது கணவர்தான் மறுபடியும் செய்ய சொல்வார்கள். மறுபடியும் செய்யும் பொழுது,ஏற்கனவே செய்த தவறை மறுபடியும் செய்யமாட்டேன்.  

இப்போது என் செல்ல மகனுக்காகவும் கேக்களை தயாரிக்கிறேன்.

        எனக்கு தெரியும் ஒரு சில கேக் செய்யும் டிப்ஸை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பேசிக் கேக் செய்வதுக்கு மைதா மாவுமுட்டைசக்கரை மற்றும் எண்ணெய் அல்லது பட்டர் தேவைப்படும். இந்த பொருட்கள் பயன் படுத்தி வித விதமான கேக் செய்து பார்க்கலாம்.


கேக் பேக்கிங்  டிப்ஸ்:
Cake Baking Tips

1. முதலில்பட்டரை சிறிது நேரத்துக்கு முன்பாகவே ஃபிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து வைக்க வேண்டும். அப்பதான் நாம் பட்டருடன் சக்கரைசேர்த்து பீட் செய்யும் பொழுது கிரீமி பதம் வரும். இல்லா விட்டால் கேக் நன்றாக பொங்கி வராது. ஒவனில் இருந்து வெளியே எடுத்ததும் கேக் பஞ்சு போல் இருக்காது. அதனால்பட்டரையும் சக்கரையும் நன்கு பீட் செய்றது ராெம்ப முக்கியம்.

2. முட்டையை ஒன்று ஒன்றாக சேர்த்து அடிக்க வேண்டும். அப்பொழுதுதான்கேக் பஞ்சு போல் பொங்கி வரும். எல்லாம் முட்டையையும் ஒன்றாக சேர்த்து பீட் செய்யக் கூடாது.

3. ஒரு 10 நிமிடம் ஒவனை ப்ரிஹீட் பன்னுனவுடன் தான் கேக்கை வேக வைக்க வேண்டும்.

4. கேக் தட்டை ஒவன் நடு தட்டில் வைத்து பேக் பன்னவும். அப்பொழுதுதான் ஒவன் சூடு கேக் மேல சரி சமமாக படும்.
5. பட்டர்சர்க்கரைமற்றும் முட்டை சேர்தத கலவையுடன் மாவு சேர்த்து அடிக்கும் பாெழுது ராெம்ப நேரம் அடிக்க கூடாது. மாவு நன்றாக கலக்கும் வரை அடித்தால் பாேதும். ராெம்ப நேரம் மாவை சேர்த்து அடித்தால் கேக் கட் பன்னும் பாெழுது உதிரியாகும்.
6. கேக் மாவை 3/4 அளவுதான் கேக் தட்டில் ஊத்த வேண்டும். இதுக்கு அதிமாக ஊத்தினால் கேக் பாெங்கி கீழே வழிந்திடும்.
7. கேக் வெந்ததும் சிறிது நேரம் ஆர வைத்துதான் கேக்கை கட் பன்னும்


என் பிளாக்கில் அவ்வளவாக கேக் ரெசிபிகள் இல்லை, செய்ய ஆசை  தான் ஆனால் பட்டர் , மைதா போன்றவை அதிகமாக சேர்ப்பதால் ஆரோக்கியம் கருதி அவ்வளவாக செய்வதில்லை. ஆனால் டயட் கேக்வகைகள் செய்யலாம் என்று இருக்கிறேன்.இங்கு வந்து கேக் ரெசிபிகள் தேடுபவர்களுக்காக ஆயிஷா ஒரு சில கேக் ரெசிபிகளை இங்கு கொடுக்க இருக்கிறார்.சுவைத்து மகிழுங்கள்.
இது வரை ஆயிஷா செய்த கேக் வகைகள்




வாழைப்பழம் கேக் - Banana Cake


தேவையான பொருட்கள்:

4 முட்டை
2 கப் மைதா மாவு
1 கப் சர்க்கரை (அரைத்து)
1 கப் வாளைய்ப்பழம் (பிசைந்து)
3/4 கப் சோளம் எண்ணெய்/உருக்கிய பட்டர்
1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
1 தேக்கரண்டி சோடா பைகார்பனேட்
1 தேக்கரண்டி வண்ணிலா/வாழைப்பழம் சாரம்

செய்யும் முறை
1. ஒரு கிண்ணத்தில்சர்க்கரை மற்றும் முட்டைகள் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.
2. அதில் பிசைந்த வாழைப்பழம்சோளம் எண்ணெய் மற்றும் வண்ணிலா சாரம் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
3. வேர கிண்ணத்தில் மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மறறும் சோடா பைகார்பனேட் சேரத்து சலித்து வைக்கவும். இதை மேலே செய்த கலயையுடன் ஒன்றாக கலக்கவும்.
4. 7 அங்குல கேக் தட்டில் பட்டர் அல்லது எண்ணெய் தடவி ஒவனை 175C, 10 நிமிடம் preheatசெய்து சுமார் (30 - 45 நிமிடங்கள்) வரை பேக் பன்னவும்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, February 24, 2013

நியுடெல்லா சாக்லேட் மக் கேக் - Nutella Chocolate Mug Cake






இந்த குறிப்பு வல்லமையில் வெளியாகி உள்ளது 


குழந்தைகள் டிபன் பாக்ஸ்க்கு இப்படி கொஞ்சமாக அவசரத்துக்கு செய்து கொடுத்தனுப்பலாம்.
Linking to  virunthu unna vaangka viji' & Getssamaiyal show  your Style to world, piriya's valentine's day recipe contest, Faiza's passion on plate , lemon curry ramya's Innovative recipes


Saturday, February 23, 2013

ஸ்ட்ராபெர்ரி பிஸ்தா கேக் - Strawberry Pista Cake




ஸ்ட்ராபெர்ரியை விரும்பாத குழந்தைகளே கிடையாது. பழங்களிலேயே எல்லா குழந்தைகளின் விருப்பமான பழ ஸ்ட்ராபெர்ரி பழம் தான். கொஞ்சமாக இப்படி செய்து குழந்தைகளுக்கு காலை உணவுக்கோ பள்ளிக்கோ கொடுத்தனுப்பலாம்.


தேவையானவை


மைதா – 3 மேசை கரண்டி
சர்க்கரை – 3 மேசை கரண்டி
பேக்கிங் பவுடர் – ½ தேக்க்ரண்டி
இட்லி சோடா – ¼ தேக்கரண்டி
முட்டை – ஒன்றில் பாதி
பால் – 1 மேசை கரண்டி
ரோஸ் எசன்ஸ் – 1 துளி
பிஸ்தா ப்ளேக்ஸ் – 1 மேசைகரண்டி
நறுக்கிய ஸ்ட்ரா பெர்ரிபழம்  - 3 தேக்கரண்டி

செய்முறை

மைதா பேக்கிங் பவுடர், இட்லி சோடா வை சலித்து கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரையையும் பட்டரையும் சேர்த்து நன்கு கிரீம் போல அடித்து கலக்கவும்.
முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து சர்க்கரை கலவையில் கலக்கவும்.
 மைதா கலவையை சிறிது சிறிதாக தூவி கலக்கி ரோஸ் எசன்ஸ் மற்றும் பாலை சேர்க்கவும்.
கடைசியாக பிஸ்தா பிலேக்ஸ் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சேர்த்து கலக்கி மைக்ரோவேவ் பவுளில் 5 நிமிடம் வைத்து எடுக்கவும.


ஆறியதும் துண்டுகளாக போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

Serves – 2 kids
Preparation Time: 7 min
Cooking time: 5 min


Linking to Faiza's Passion on plate , priya's valentine;s day recipe contest


Monday, October 31, 2011

மார்பிள் கேக் - Marble Cake

கலர் ஃபுல் மார்பிள் கேக்


தேவையானவை

மைதா - 150 கிராம்
சர்க்கரை - 150 கிராம்
பட்டர் - 150 கிராம்
முட்டை - 3
பேக்கிங் பவுடர் - அரை ஸ்பூன்ஆரஞ்சு கலர்  – 1 ட்ராப்
கோக்கோ - 25 கிராம்
சாக்லேட் எசனஸ் - 1 ட்ராப்
பச்சை(பிஸ்தா) எசன்ஸ் - 1 டிராப்
உப்பு – ஒரு சிட்டிக்கை

Monday, February 15, 2010

கரம் மசாலா சாக்லேட் ந‌ட்ஸ் கேக் - garam masala chocolate nuts cake



மைதா = அரை ஆழாக்கு (100 கிராம்)
பொடித்த ச‌ர்க்க‌ரை = அரை ஆழாக்கு
முட்டை = இரண்டு
ப‌ட்ட‌ர் = 100 கிராம்
ந‌ட்ஸ் (முந்திரி,பாத‌ம்,பிஸ்தா) இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி
பேக்கிங் ப‌வுட‌ர் = கால் தேக்க‌ர‌ண்டி
இட்லி சோடா = அரை சிட்டிக்கை
உப்பு = அரை சிட்டிக்கை
சாக்லேட் எஸ‌ன்ஸ் = அரை தேக்க‌ர‌ண்டி
கொக்கோ ப‌வுட‌ர் = ஒரு மேசை க‌ர‌ண்டி
க‌ர‌ம் ம‌சாலா = கால் தேக்க‌ர‌ண்டி ( ப‌ட்டை, ஏல‌ம், கிராம்பு தூள்)




மைதா பேக்கிங் பவுடர்,உப்பு, இட்லி சோடாவை சலித்து கொள்ளவும்.பட்டர், சர்க்கரை சேர்த்து நன்கு பிளெண்டரால் அடிக்கவும்.

கலர் மாறியதும் முட்டையை நுரை பொங்க அடித்து சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.அடுத்து மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.
அடுத்து கரம் மசாலா,கொக்கோ பவுடர், எஸன்ஸையும் சேர்த்து கிளறி மேலே நட்ஸ் வகைகளை தூவி மைக்ரோவேவ் ஓவனின் 7 நிமிடம் வைத்து எடுக்கவும்.
ஆறியதும் துண்டுகள் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

ரொம்ப மணமா இருந்தது உடனே தட்டு காலி.






//நேற்று ஹனீப் பிறந்த நாளுக்கு ஸ்கூல் போய் சாக்லேட் எல்லாம் கொடுத்து விட்டு கொஞ்சம் சோகமா வந்தார்.
என்னன்னு கேட்டா ஒரு பையன் பர்த்டே வா அப்ப கேக் வெட்ட மாட்டியா? இல்ல, பிரண்ஸ் கூட வெளியில் போக மாட்டீயா? இல்ல அப்ப யாரும் கிஃப்ட் கொண்டு வர மாட்டாங்களா? இல்ல.
இப்படின்னு சொல்லி ஒரு பையன் உசுப்போத்தி விட்டுட்டான், சரி கொஞ்சமா கேக்காவது செய்து கொடுப்போம் என்று மதியம் கிடைத்த ஒரு மணி நேர கேப்பில் எல்லாம் மிக்ஸிங் எல்லாம் செய்து விட்டு கேக் ஓவனில் வைக்க போனா, ஓவன் வொர்க் ஆகல ஆஹா இவ்வளவு ரிச்சா கலக்கி வைத்து விட்டோம் வொர்க் ஆகலையே என்று மைக்ரோவேவில் வைத்தேன்.அதுவும் சூப்பரா தான் வந்தது. அதுவும் அவனுக்கு பிடித்த சாக்லேட் வேறு
கேக் சாப்பிட்டதும் பையனுக்கு ரொம்ப சந்தோஷம்.
அடுத்து இரவு வந்து ஷாப்பிங் பெஸ்டிவலுக்கு இதுவரை எங்கும் போகல. அப்ராவில் தினம் நடக்கும் பையர் வொர்ஸ் கூப்பிட்டு போய் காண்பித்து வந்தாச்சு,
அப்பாடா வெளியில் கூப்பிட்டு போய் வந்ததும் ஹனீபுக்கு பிறந்த நாள் முழுமை அடைந்த மாதிரி ஆகிவிட்டது