Showing posts with label புரோக்கோலி. Show all posts
Showing posts with label புரோக்கோலி. Show all posts

Friday, September 5, 2014

ஹெல்தி காய்கறி குருமா/ சால்னா


ஹெல்தி காய்கறி குருமா/ வெஜ் குருமா./ காய்கறி  சால்னா, பரோட்டா சால்னா/ 



மைதா பரோட்டா,இங்கு சென்று பார்க்கவும், மைதா பரோட்டா இதற்கு சூப்பரான காம்பினேஷன், பரோட்டா உடம்பிற்கு அவ்வளவாக நல்ல தில்லை ஆகையால் ஆசைக்கு எப்பவாவது செய்து சாப்பிட்டு கொள்ளலாம், படத்தில் இருப்பது கோதுமை ரொட்டி

காய்கறி வகைகள்

உருளை - பாதி
கேரட் சிறிய துண்டு
கருனை கிழங்கு  - 50 கிராம் சிறிய துண்டு
பீன்ஸ் - எட்டு
பட்டாணி - கால் கப் ( இரண்டு மேசை கரண்டி)
ஸ்வீட் கார்ன் - கால் கப்

புரோக்கோலி - முன்று பூ
காலிப்ளவர் - 6 பூக்கள்
பச்ச மிளகாய் 3
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு தேவைக்கு


தாளிக்க

எண்ணை - 2 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
பிரிஞ்சி இலை -  2
பட்டை - 1 இன்ச் சைஸ் - 1 
கிராம்பு - 2
ஏலக்காய் - 1

வெங்காயம் -  ஒன்று பொடியாக அரிந்தது 
இஞ்சி பூண்டு பேஸ்ட்  - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி தழை - சிறிது 

அரைக்க
தக்காளி - 1
தேங்காய் பத்தை - 2 (அ) தேங்காய் பவுடர் - 1 மேசை கரண்டி
முந்திரி - 5
சோம்பு - 1 தேக்கரண்டி




செய்முறை 

1. அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து வைக்கவும்.

2. காய் கறி வகைகளை பொடியாக அரிந்து அத்துடன் ,புரோக்கோலி,காலிப்ளவர், கார்ன் சேர்த்து நன்கு அலசி , இரண்டு முன்று தண்ணீரில் அலசி வடித்து வைக்கவும். ( முடிந்தால் லேசான வெது வெதுப்பான நீரில் சிறிது உப்பு போட்டு அலசவும்)

அடுப்பில் சட்டியை ஏற்றி காயவிட்டு, தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக கருகாமல் தாளித்து காய்கறிகளை சேர்த்து நன்கு பிரட்டவும்.

அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், உப்பு தூள் சேர்த்து கிளறி 1 நிமிடம் சிம்மில் வைத்து இரண்டு  டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக விட்வும்.

வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.

இது பரோட்டா, ஆப்பம், பூரி, தோசை, இடியாப்பம் போன்றவைக்கு ஏற்ற பக்க உணவு.
இது வரை காய்கறி/வெஜ் குருமா, எல்லாரும் பொதுவாக செய்வது தானே என்று  இங்கு போஸ்ட் பண்ணதில்லை.என் ஸ்டைல் குருமாவையும் ருசித்து பாருங்கள்.
மறக்காமல் செய்து பாருத்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/